ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது என்ன? எனது அஹ்லுல் பைத்தா அல்லது எனது சுன்னாவா?


ஹதீஸ் விற்பன்னர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஹதீஸுத் தகலைன் கிரந்தத்தில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பின் வரும் ஹதீஸ் ஒன்று உள்ளது.

உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு பொருட்களை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது எனது சந்ததியினர். நீங்கள் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வழி தவர மாட்டீர்கள்.

எவ்வாராயினும் சில அறிவிப்புகளில் எனது சந்ததியினர் என்பதற்கு பதிலாக எனது சுன்னா (நடை முறைகள்) என சொல்லப் பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு அறிவிப்புகளில் எது சரியானது? என்பது ஒரு கேள்வியாக உள்ளது. இவ்விடயம் தொடர்பாக பல அறிஞர்கள் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளனர். அவற்றுள் மிகச் சுருக்கமானது கெய்ரோவில் பிரசுரிக்கப்பட்ட தாருத் தக்ரீப் பைனல் மதாஹிபில் இஸ்லாமிய்யா என்பதாகும். அண்மையில் ஷாபி மத்ஹபைச் சேர்ந்த நவீன கால ஹதீஸ் கலை விற்பன்னர்களில் ஒருவரான ஷெய்க் ஹஸன் பின் அலி சக்காப் என்ற ஜோர்தானிய அறிஞர் ஒருவர் இக் கேள்விக்கு விடையளித்துள்ளார். ஆந்த கட்டுரை ஆய்வு அடிப்படையில் அநை;துள்ளதால் அதன் மொழி பெயர்ப்பை நாம் உங்களுடன் பகிரந்து கொள்கின்றோம்.

கேள்வி: ஹதீஸுத் தகலைனில் வரும் அந்த இரண்டு கூற்றுகளுள் எது சரியானது ? என என்னிடம் கேட்கப் படுகிறது. அது எனது சந்ததி - எனது அஹ்லுல் பைத் என்ற சொல்லமைப்பா அல்லது எனது சுன்னா என்ற சொல்லமைப்பா? துயவு செய்து அந்த ஹதீஸின் மூலத்தைப் பற்றி சிறிது விளக்குங்கள்.

பதில்: இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த சரியானதும் நம்பகமானதுமான ஹதீஸ் எனது அஹ்லுல் பைத்தும் என்ற பதத்தையே கொண்டுள்ளது. எனது அஹ்லுல் பைத் என்பதற்கு பதில் எனது சுன்னா என்றிருந்தால் அதன் ஸனத் (அறிவிப்பாளர் வரிசை) கருத்தோட்டத்தின்படி அது பிழையானதாகும்.



நாம் இந்த இரு கூற்றுகளினதும் அறிவிப்பாளர் வரிசையை சற்று அவதானித்தால் எனது சந்ததி என்ற கூற்று முற்றிலும் நம்பகமானதும் செல்லுபடியானதுமாகும் என்பதும் ஏனைய கூற்றுகள் முற்றிலும் பிழையானதும் ஏற்றுக் கொள்ள முடியாததுமாகும் என்பதும் நன்கு விளங்கும்.

எனது அஹ்லுல் பைத்தும் என்ற கூற்றின் ஸனத்

எனது அஹ்லுல் பைத்தும் என்ற சொற்றொடரைக் கொண்ட ஹதீஸை இரண்டு பிரபல ஹதீஸ் விற்பன்னர்கள் மேற் கோள் காட்டியுள்ளனர்.

1) இமாம் முஸ்லிம் தனது சஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் ஒரு நாள் இறைத் தூதர்(ஸல்) அவர்கள் மக்காவுக்கும் மதினாவுக்கும் இடையிலுள்ள கதீர் கும் என்ற இடத்தில் ஒரு பிரசங்கம் நிகழ்த்தினார்கள் என ஸயித் பின் அர்க்கம் கூறியதாக குறிப்பிடுகிறார் அப்பிரசங்கத்தில் அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்துரைத்த பின் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.

மக்களே! நான் நிச்சயமாக ஒரு மனிதப் பிறவியே. இறைவனின் பணியாளர் (மரணத்தை ஏற்படுத்தும் மலக்கு) என்னிடம் வருவார். நான் அவருக்கு பதிலளிக்க வேண்டும். எனவே உங்களுக்கு மத்தியில் நான் இரண்டு பெறுமதி மிக்க பொருட்களை விட்டுச் செல்கிறேன். அவற்றில் முதலாவது வழிகாட்டியாகவும் ஒளியாகவும் விளங்கும் அல்லாஹ்வின் அருள் மறை (குர்ஆன்) எனவே அதனைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

அவர்கள் தொடர்ந்து அல்லாஹ்வின் அருள் மறை பற்றிய விளக்கங்களை வழங்கிய பின், அத்துடன் எனது அஹ்லுல் பைத் எனக் கூறிய அன்னார் எனது சந்ததியனரைப் பொறுத்தவரையில் அல்லாஹ்வை உங்கள் மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். எனவும் கூறினார்கள்.

இந்த வாசகங்கள் சஹீஹ் முஸ்லிம் பகுதி 4, அப்துல் பாக்கி பதிப்பு, பக்கம் 3,18 ஹதீஸ் 8, 34 இலும் , சுனன் அத் தாரமி பகுதி 2 , பக்கம் 431,432 இலும் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த இரண்டு பதிவுகளினதும் ஸனத் மிகவும் தெளிவானதும் எவ்வித பிரச்சினைகளும் பலவீனங்களும் அற்றதுமாகும்.

2) அதே ஹதீஸை அத்திரிமிதி கூட பின்வரும் வார்த்தைகளில் பதிவு செய்தள்ளார். வ இத்ரத்தீ அஹ்லுல் பைத்தீ எனது குடும்பம் எனது சந்ததியினர்.

நான் உங்கள் மத்தியில் (ஒரு மரபுரிமைச் சொத்தை) விட்டுச் செல்கின்றேன். நீங்கள் அதனைப் பற்றிப் பிடித்தால் எனக்குப் பின் வழிகேட்டில் செல்ல மாட்டீர்கள். அவற்றுள் ஒன்று மற்றதை விட உயர்வானது. ஒன்று சுவனத்திலிருந்து பூமிக்கு நீட்டப் பட்ட கயிரான அல்லாஹ்வின் திருமறை மற்றது எனது சந்ததியினர், எனது குடும்பம் (நியாய தீர்ப்பு நாளில்) அவை கௌஸருக்கு அருகில் என்னிடம் வரும் வரை இரண்டும் ஒன்ரை விட்டு ஒன்று பிரியாது. ஆகவே இவ்விடயத்தில் நீங்கள் எவ்வாறு என்னை கண்ணியப்படுத்துகிறீர்கள் என்பதையிட்டு ஜாக்கிரதையாயிருங்கள் . சுனன் அத்திர்மிதி பகுதி 5 பக்கம் 663

இந்த இரண்டு கூற்றுகளிலும் அஹ்லுல் பைத் என்ற சொற்றொடர் வலியுறுத்தப் படுவதால் அதுவே எமது நோக்கத்தைப் பூர்த்தி செய்யப் போதுமானவையாகும். அத்துடன் அவ்விரண்டினதும் ஸனத் பிரச்சினைகள் ஏதுமற்ற பூரணத்துவம் பெற்றதாகும். இவற்றைப் பதிவு செய்தவர்கள் பிரபலமான ஹதீஸ் கிரந்தங்களை எழுதியவர்களுல் பெரும் நம்பிக்கைக் குறியவர்களாகக் கருதப் படுகின்றனர்.

எனது சுன்னாவும் என்ற கூற்றின் ஸனத்

எனது அஹ்லுல் பைத் என்பதற்குப் பதிலாக சுன்னத்தீ எனது சுன்னா என்ற சொற்றொடரைக் கொண்ட அறிவிப்பு பலவீனமான ஸனதைக் கொண்டதும் உமைய்யா அனுதாபிகளால் இட்டுக் கட்டப் பட்டதுமாகும். எனவே நாம் இதன் அறிவிப்பாளர் வரிசையைக் கவணிப்போம்.

1 முதலாவது அல் ஹாக்கிம் நைஸாபுரியின் ஸனத்

மேற்குறிப்பிட்ட கூற்றைக் கொண்ட ஹதீஸை அல் முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் என்ற கிரந்தத்தில் அல் ஹாக்கிம் நைஸாபுரி பின் வரும் ஸனதுடன் குறிப்பிட்டுள்ளார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், இக்ரிமாவிடம் கூறியதாகவும் அன்னார் தவ்ர் பின் ஸயித் அத் தைலமியிடம் கூறியதாகவும் அன்னார் அபூ உவைஸிடம் கூறியதாகவும் அவர் தனது மகனான இப்னு அபீ உவைஸிடம் கூறியதாகவும் பின் வரும் ஹதீஸ் பதியப் பட்டுள்ளது.

ஓ மக்களே உங்களுக்காக நான் இரு விடயங்களை விட்டுச் செல்கிறேன் நீங்கள் அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டால் ஒருபோதும் நீங்கள் வழி கேட்டில் செல்லமாட்டீர்கள். ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை , மற்றது அவனது திருத்தூதரின் சுன்னா. அல் ஹாக்கிம் அலஸ் ஸஹீஹைன் பாகம் 1 பக்கம் 93

பிரச்சினை என்னவென்றால் இங்கு அறிவிப்பாளர் வரிசையில் இறுதியாக குறிப்பிடப் பட்டுள்ள தந்தையும் மகனும் பிரச்சினைக்குறியவர்கள். இஸ்மாயீல் இப்னு அபீ உவைஸும் இப்னு அபீ உவைஸும் நம்பத்தகுந்தவர்கள் அல்லர், என்பது மட்டுமின்றி இட்டுக் கட்டுபவர்கள் என்ற குற்றச்சாட்டின் பாற்பட்டவர்களுமாவர்.

இல்முர் ரிஜார் ( ஹதீஸ் அறிவிப்பாளர் அறிவியியல்) நிபுணர்கள் கொடுத்துள்ள பின்வரும் கருத்துரைகளைக் கவனியுங்கள்:

ஹாபிஸ் மாஸி தனது தஹ்தீபல் கமால் என்ற நூலில் ரிஜால் நிபுணர்களின் அபிப்பிராயங்களை குறிப்பிட்டுள்ளார். அபூ உவைஸ் என்பவரும் அவரது மகனும் (அறிவிப்புகளில்) மிகவும் பலவீனர்கள். அவர்கள் ஹதீஸைத் திருடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். மகனைப் பொருத்தவரையில் அவரை நம்பவே முடியாது, என யஹ்யா பின் முயீன் என்பவர் குறிப்பிடுகிறார். மகனைப் பற்றிக் குறிப்பிடும் அந்நஸாயி என்பவர் அவர் பலவீனர் மட்டுமல்ல நம்ப முடியாதவரும் கூட என்கிறார். இவரைப் பற்றி அதிகமாக குறிப்பிடும் அந்நஸாயி , லால்காயி என்போர் இவரால் அறிவிப்பு செய்யப்பட்ட ஹதீஸ்கள் புறக்கணிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடுகின்றனர்.

ஓருவராலுமே ஏற்றுக் கொள்ளப் படாத வியப்பக் குறிய ஹதீஸ்களை தமது மாமனார் மாலிக் மூலம் இப்னு அபீ உவைஸ் பயன் படுத்தியுள்ளார் என இப்னு அதி குறிப்பிட்டுள்ளார்.

ஹாபிஸ் இப்னு மாஸி, தஹ்தீபுல் கமால் பாகம் 3 பக்கம் 127

இப்னு ஹஜர் என்பவர் பத்ஹுல் பாரி என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் இப்னு அபீ உவைஸுக்கு எதிராக உள்ள அப கீர்த்தி காரணமாக அவர் அறிவிப்பு செய்த எந்த ஒரு ஹதீஸையும் உபயோகப் படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். இப்னு ஹஜர் அல் அஸ்கலானி முகத்திமா பத்ஹுல் பாரி, தாருல் மஆரிப் பதிப்பு, பக்கம் 391

மதீனத்து மக்கள் இரு கூறாக பிளகு படும் போதெல்லாம் நான் ஹதீஸ்களை உருவாக்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன் என இஸ்மாயீல் பின் அபீ உவைஸ் கூறுவதை நான் கேட்டிருக்கின்றேன் என ஸலாமா பின் ஸஹாபிப் என்பவரை மேற்கோள் காட்டி ஹாபிஸ் செய்யத் அஹ்மத் பின் அஸ்ஸாதிக் தனது பத்ஹுல் மலிக்கில் அலி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஹாபிஸ் செய்யத் அஹ்மத் , பத்ஹுல் மலிக்கில் அலி பக்கம் 15

எனவே இஸ்மாயீல் பின் அபி உவைஸ் என்பவரைப் பொருத்தவரையில் அவர் ஹதீஸ்களை இட்டுக் கட்டுபவர் எனவும் குற்றம hட்டப் பட்டுள்ளார். மேலும் அவரது அறிவிப்புகள் ஸஹீஹ் முஸ்லிம் , ஸஹீஹ் அத்திர்மிதி போன்ற ஸஹீஹான கிரந்தங்களில் இடம் பெறவுமில்லை.

தந்தையான அபூ உவைஸைப் பற்றி அறிவதாயின் அபூஹாத்தம் அர்ராஸி தனது ஜராவத் தாதில் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளவை போதுமானதாகும். ஆவரது கூற்றுப்படி அபு உவைஸின் ஹதீதுகளை எழுதலாம் ஆனால் எநத விவாதத்துக்கும் அதனைப் பயன்படுத்த முடியாது. அவரது அறிவிப்புகள் உறுதியானதோ, திடமானதோ அல்ல என்பதோடு இப்னு முயீனின் கருத்துப் படி அவர் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் அல்ல., அபூ ஹாத்தம் அர் ராஸி அல் ஜராவத் தாதில் பகுதி 5 பக்கம் 92 ,எனவும் குறிப்பிடுகிறார். முடிவாக இவ்விருவரினதும் ஸனத் சரியானதோ செல்லுபடியானதோ அல்ல என்றே எம்மால் கூற முடியும்.

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இதை அறிவிப்பு செய்த அல் ஹாக்கிம் என்பவரே இந்த ஹதீஸ் பலவீனமானது என ஏற்றுக் கொண்டமையாகும்.அதனாலேயே அதன் செல்லபடியாகும் தன்மையை உறுதிப் படுத்தம் முயற்சிகளில் அவர் ஈடுபட வில்லை. எவ்வாறாயினும் அவர் இப்னு அபீ உவைஸின் அறிவிப்பின் உள்ளடக்கத்துக்கு ஆதரவாக இன்னொரு ஹதீஸையும் முன்வைத்துள்ளார். அந்த ஹதீஸைப் பின் வருமாறு பகுப்பாய்வு செய்யலாம்.

2 அல் ஹாக்கிமின் இணை;டாவது ஸனத்

அல் ஹாக்கிம் (முழுமையற்ற ஸனதுடன்) அபூ ஹுரைராவைப் பின்வருமாறு மேற்கோள் காட்டுகிறார்.

நீங்கள் வழி கேட்டில் செல்லாமலிருக்க உங்கள் மத்தியில் இரண்டு பொருட்களை விட்டுச் செல்கிறேன். அல்லாஹ்வின் அருள் மறை ஒன்று, மற்றது எனது சுன்னா. இரண்டும் கௌஸருக்கருகில் என்னை வந்தடையும் வரை ஒன்றை ஒன்று பிரியாது, என இறைத் தூதர் கூறியுள்ளார். ஹாக்கிம், அல் முஸ்தத்ரக் பகுதி 1 பாக 93

அல் ஹாக்கிம் பின் வரும் ஸனத் மூலம் இதனை அறிவிப்பு செய்கிறார். அத் தப்பி, சாலிஹ் பின் மூஸா அல் தலாஹியிடமிருந்தும் அவர் அப்பல் அஸீஸ் ராபியிடமிருந்தும் அவர் அபூ ஹுரைராவிடமிருந்தும் இத்தகவலை பெற்றதாகக் கூறப்படுகிறது.

இந்த ஹதீஸ் முன்னயதைப் போலவே இட்டுக் கட்டியதொன்றாகும். அறிவிப்பாளர்களுள் ஒருவரான சாலிஹ் பின் மூஸா அத் தலாஹியைப் பற்றி இல்முர் ரிஜால் நிபுணர்கள் என்ன கருத்துக் கொண்டுள்ளனர் எனப் பார்ப்போம்.

சாலிஹ் பின் மூஸா நம்h முடியாதவர் என யஹ்யா பின் முயீனும், அவரது ஹதீஸ் பலவீனமானதும் நம்ப முடியாத துமாகும். அத்துடன் அவர் பல நம்ப முடியாத அஹாதிஸ்களுக்கு நம்பிக்கைக்குறியவர்களை ஆதாரமாகக் காட்டியுளளார் என அபூ ஹாத்தம் அர் ராஸியும், அவரது ஹதீஸ்களை பதிவு செய்யப் படாது புறக்கணிக்க வேண்டும் என அந்நஸ்ரியும் கூறியுள்ளனர். ஹாபிஸ் மாஸி, தஹ்தீபுல் கமால் பாகம் 13 பக்கம் 96

சாலிஹ் பின் மூஸா தமது விடயங்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களின் கூற்றுகளை ஆதார மூலமாக கொண்டார். அவை எவ்விதத்திலும் அவர்களது கூற்றுகளுக்கு ஒத்ததாக அமையவில்லை. அவரது ஹதீஸ்கள் எவ்வித விவாதத்துக்கும் உதவாது, என இப்னு ஹப்பான் கூறியதாக இப்னு ஹஜர் தஹ்தீபுத் தஹ்தீப் என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார்.

அவரது ஹதீஸ் புறக்கணிக்கப் பட்டவை. அத்துடன் அவர் அடிக்கடி நம்ப முடியாத ஹதீஸ்களை அறிவிப்பு செய்துள்ளார் என அபூ நுஅய்ம் குறிப்பிடுகிறார். இப்னு ஹஜர் தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 4 பக்கம் 355

இப்னு ஹஜர் மீண்டும் அத் தக்ரீப் என்ற நூலில் சாலிஹ் உடைய ஹதீஸ்களை புறக்கணிக்கப்பட்டவை எனக் குறிப்பிடுகிறார். இப்னு ஹஜர் அத் தக்ரீப் குறிப்பு இலக்கம் 2891 அவரது ஹதீஸ்கள் பலவீனமானவை என அத் தஹபி , அல் காஷிப் என்ற நூலில் எழுதியுள்ளார். அத் தஹபி அல் காஷிப் குறிப்ப இலக்கம் 2412 அவர் மேலும் மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் அவரது ஒரு ஹதீஸ் குறிப்பிட்டு இது அவரது நம்ப முடியாத அஹாதீஸிலிரு ந்து பெறப்பட்டது என்கிறார். அத் தஹபி மீஸானுல் இஃதிதால் பாகம் 2 பக்கம் 302

3 எனது சுன்னாவின் மூன்றாவது ஸனத்

அப்துர் ரஹ்மான் பின் யஹ்யா, அஹ்மத் பின் சயீத் இடமிருந்தும் அவர் முஹம்மத் பின் இப்ராஹீம் அத் துபைலி இடமிருந்தும் அவர் அலி பின் ஸயீத் அல் பராஇதி இடமிருந்தும் அவர் அல் ஹுஸைனியிடமிருந்தும் அவர் காதிர் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அவ்பிடமிருந்தும் அவர் அவரது தந்தை அப்துல்லாஹிவிடமிருந்தும் அவர் அவரது பாட்டணார் அம்ர் பின் அவ்பிடமிருந்தும் எனது சுன்னா என்ற வார்த்தையுடனான ஹதீஸை பெற்றுக் கொள்ளப் பட்டதாக இப்னு அப்துர் ராப், அத் தம்ஹித் என்ற நூலின் பாகம் 24 பக்கம் 334 இல் குறிப்பிடுகிறார்.

இந்த அறிவிப்பாளர்களுள் கதீர் பின் அப்துல்லாஹ் என்பவரைப் பற்றி குறிப்பிடுகையில் இமாம் ஷாபி , அவர் ஒரு பிரபல்யமான பொய்யர்களுல் ஒருவர். இப்னு ஹஜர் , தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 8, தாருல் பிக்ர் பதிப்பு , பக்கம் 377 , தஹ்தீபுல் கமால் பாகம் 24 , பக்கம் 138 , எனவும் , அபூதாவூத் அவர் பொய்யர்களுல் ஒருவர் மட்டுமல்ல ஹதீஸ்களை இட்டுக்கட்டியவர்களுள் ஒருவருமாவார் எனவும் கூறியுள்ளார். இப்னு ஹஜர் , தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 8, தாருல் பிக்ர் பதிப்பு , பக்கம் 377 , தஹ்தீபுல் கமால் பாகம் 24 , பக்கம் 138 , இட்டுக்கட்டப் பட்ட ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு அவரது தந்தையாலும் பாட்டனாலும் உருவாக்கப்பட்ட ஹதீஸ் கிரந்தம் ஒன்றையே கதீர் பின் அப்துல்லாஹ் மேற்கோள் காட்டுகிறார். விமர்சன,பகுப்பாய்வு நோக்கத்தைத் தவிர ஏனைய விடயங்களில் அவை தடை செய்யப்பட்டது. என இப்னு ஹிப்பான் குறிப்பிடுகிறார். இப்னு ஹிப்பான் அல் முஜ்ருஹீன் பாகம் 2 , பக்கம் 221, அவரது ஹதீஸ் புறக்கணிக்கப் பட வேண்டியது என அந்நஸாயியும் தார குத்னியும் குறிப்பிடுவதோடு இமாம் அஹ்மத் என்பவர் அவர் ஹதீஸ் விடயங்களில் நம்பத்தகுந்தவர் அல்ல எனவும் கூறுகிறார். இப்னு முயீன் என்பவரும் இந்த கருத்தை அதரிக்கிறார்.

இப்னு ஹஜர் தமது அத் தக்ரிபில் காதிர் பின் அப்துல்லாஹ்வின் ஆக்கங்களைப் பற்றிக் கூறிப்பிடுகையில் பலவீனமானது என ஒரே வார்த்தையில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஏனையோரின் பொய்யுரைகளை காதிர் மீது சாட்டுவது முறையற்றது எனவும் சாடுகிறார். இது எமக்கு அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. ஏனெனில் இல்முர் ரிஜால் நிபுணர்கள் அவர் பொய்யர் என்றும் ஹதீஸை இட்டுக்கட்டுபவர் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். அத்துடன் அவரது கருத்துக்கள் அர்த்தமற்றது எனவும் கலவீனமானது எனவும் அத் தஹபி கூட குறிப்பிட்டுள்ளார்.

4 ஸனத் ஏதுமற்ற இரண்டாவது கூற்று

இமாம் மாலிக் தமது முஅத்தாவில் எவ்வித ஸனதுமின்றி முர்ஸல் ஆனமுறையில் அறிவிப்பு செய்துள்ளார்.(இந்த சந்தர்ப்பத்தில் , இதன் கருத்து ஒரு ஹதீஸ் இறைத் தூதருடன் தொடர்பில்லாதது என்பதே) அத்துடன் இவ்வாரான ஹதீஸ் மதிப்புமற்றது என்பதையும் நாமரிவோம். மாலிக் முஅத்தா பக்கம் 889 ஹதீஸ் 3

முடிவுரை

இந்தப் பகுப்பாய்வு எனது சுன்னா என்ற வாசகத்தை கொண்ட ஹதீஸ் உமைய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த பொய்யர்களால் சோடிக்கப்பட்ட ஒன்று என்பதைத் தெளிவாக்குகின்றது. எனவே அந்த வாசகம் எனது அஹ்லுல் பைத் என்ற உண்மையான வாசகத்துக்கு எதிராகக் கண்டு பிடிக்கப்பட்ட வாசகமாகும்.

ஆகவே தொழுகை நடத்தபவர்களும், மத போதகர்களும் இறைத்தூதரிடமிருந்து வராத அந்த ஹதீஸை கைவிட்டு அதற்கு பதிலாக சஹீஹ் முஸ்லிமிலும் , அத்திரிமிதியிலும் குறிப்பிடப்படும் அஹ்லுல் பைத் என்ற வாசகங்களைக் கொண்ட சரியான ஹதீஸை மக்களிடையே பிரமல்யமாக்க வேண்டும். ஹதீஸ் அறிவியலைக் கற்கும் மாணவர்களுக்கு சரியான அஹாதீஸ்களையும் பிழையானவற்றையும் இனம் காண இது அவசியமாகும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் சந்ததியினரான பாத்திமா, ஹஸன், ஹுஸைன் என்போர் அஹ்லல் பைத் என்ற வாசகத்தில் உள்ளடக்கப்பட்டவர்கள். ஏனெனில் முஸ்லிமின் சஹீஹ் கிரந்தத்திலும் அத்திர்மிதியின் சுனனிலும் ஆயிஷா நாயகியை மேற்கோள் காட்டி பின் வருமாறு குறிப்பிடப் படுகிறது.

உம்மு சல்மாவின் வீட்டில் வைத்து இறைத்தூதருக்கு பின் வரும் குர்ஆன் வசனம் இறங்கியது. (நபியுடைய) வீட்டினரே! உங்களை விட்டும் சகல அசுத்தங்களையும் நீக்கி உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கி விடவே அல்லாஹ் விரும்புகிறான். 33:33

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பாத்திமா, ஹஸன், ஹுஸைன், என்போரை அழைத்து ஒரு போர்வையைப் போர்த்திக் கொண்டார்கள். பின்னர் தனக்குப் பின்னாலிருந்த அலியையும் போர்வைக்குள் அழைத்துக் கொண்டார்கள். பின்னர் ஓ அல்லாஹ்வே! இவர்களே எனது அஹ்லுல் பைத் எனவே தீய செயல்களிலிருந்து அவ்களை நீக்கி அவர்களைத் தூய்மைப் படுத்துவாயாக! ஏன்றார்கள். இறைத்தூதரின் மனைவியாகிய உம்மு ஸல்மா ஓ இறைத் தூதரே! நானும் அதில் ஒருவரா? என வினவ நீங்கள் உங்கள் இடத்திலேயே இருங்கள் (போர்வைக்குள் வர வேண்டாம்) நீங்கள் நல்லவர் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

சஹீஹ் முஸ்லிம் பாகம் 4 பக்கம் 1883 , ஹதீஸ் இலக்கம் 2424 , சுனன் அத்திரிமிதி பக்கம் 663



கருத்துகள் இல்லை: