கர்பலா நிகழ்வும் அது கற்றுத்தரும் பாடங்களும்

இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. பெருமானார் முத்தமிட்ட அதரங்களில் கொடியோர்கள் பிரம்பால் அடித்த அகோர நிகழ்வு அது. மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹ{சைன் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா சன்டாளர்களால் இம்சிக்கப்பட்டு கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.
 நபி பெருமானாரினதும் அன்னவர்களது தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம், உமையா சன்டாளர்களால் மாசுபடுத்தப்பட்டது. குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அச்சன்டாளர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன. அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபிபெருமானாரின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹ{சைன் அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் “நான் சமூகத்தில் குளப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ள வில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்” எனக் கூறினார்கள். பொருமானாரின் மார்க்கம் யசீதியர்களால் குளிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத இமாம் ஹ_சைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள்.

முஹர்ரம் மாதத்தின் ஆஷ_ரா நிகழ்வை முன்னிட்டு இக்கற்றுரை எழுதப்படுவதால் பொருமானாரின் பேரர் இமாம் ஹ_சைன் மற்றும் கர்பலா நிகழ்வு பற்றிய சில விடயங்களை இதில் நோக்குகின்றோம்.
நபிபெருமானாரின் பேரரான இமாம் ஹ{சைன் அவர்கள் அன்னை பாத்திமா நாயகி அவர்களுக்கும் ஹஸரத் அலி அவர்களுக்கும் ஹிஜ்ரி 4ம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை மூன்றில் புனித மதீனா நகரில் பிறந்தார்கள். இவ் உலகில் 57 வருடங்கள் வாழ்ந்த அவர்கள் கலீபா முஆவியாவின் மரணத்திற்குப் பின் கிலாபத் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்ட யசீதிற்கு பைஅத் பிரமானம் செய்ய மறுத்ததன் காரணமாக யசீதின் பணிப்புரைக்கமைய ஷிம்ர் பின் தில்ஜவ்ஷனினால் ஹிஜ்ரி 61ம் ஆண்டு கர்பலா களத்தில் படுகொலை செய்யப்பட்டார்கள்.

 இமாம் ஹ_சைன் அவர்கள் தனது வாழ்நாளின் ஒரு பகுதியை பெருமானார் (ஸல்) அவர்களுடன் வசிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள். நபியவர்களின் உம்மத்தில் வீரமுள்ள ஒருவராக காணப்பட்ட அவர்கள் சிறந்த அறிஞரும் ஆன்மீக வழிகாட்டியுமாவார். நபியவர்களின் முழு அன்பையும் குறைவில்லாமல் பெற்றிரந்தார். இதனால் நபியவர்கள் “ஹ_சைன் என்னில் நின்றும் உள்ளவர். நான் ஹ_சைனில் நின்றும் உள்ளவன் ஹ_சைனை நேசிப்பவரை அல்லாஹ் நேசிக்கின்றான்” என கூறினார்கள். ஹிஜ்ரி 50ம் ஆண்டு நஞ்சூட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட தனது சகோதரர் இமாம் ஹஸனுக்கு அடுத்ததாக இஸ்லாமிய சமூகத்தின் வழிகாட்டியாக இமாம் ஹ_சைன் நோக்கப்பட்டார்கள். 20 வருடங்கள் ஆட்சி புரிந்து ஹிஜ்ரி 60ம் ஆண்டு மரணித்த கலீபா முஆவியா அவர்கள் இமாம் ஹசனுடன் செய்து கொண்ட ஒப்பந்தந்திற்க மாறாக தனக்குப்பின் தனது கிலாபத் சிம்மாசனத்தில் தனயன் யசீதை அமரவைத்தார். யசீத் பகிரங்கமாகவே இஸ்லாமிய விரேதச்செயல்களில் ஈடுபடலானான். பகிரங்கமாக மது அருந்துதல், இஸ்லாத்தின் தூய்மையை மாசுபடுத்தும் விடயங்களில் ஈடுபடல் போன்றவற்றில் மூழ்கிகாணப்பட்டான். இவனது துர்நடத்தையைக் கண்ணுற்ற இமாம் ஹ_சைன் அவர்கள் அவனை ஆரம்பமுதல் வெறுத்தே வந்தார்கள். தனது தந்தையின் கிலாபத் சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்ட யசீத் தனக்கு பைஅத் செய்யுமாறு இமாம் ஹ_சைனைத்தினித்தான். ஹ_சைனிடம் தனக்காக பைஅத் வேண்டும் படியும் மறுக்கும் பட்சத்தில் ஹ_சைனைக் கொல்லுமாறும் யசீத் கட்டளை பிறப்பித்து மதீனா கவர்னர் வலீத் பின் உத்பாவுக்கு மடலென்றை எழுதினான். யசீதுக்கு பைஅத் செய்ய மறுத்த இமாமவர்கள் தனது குடும்பத்தாருடன் மதீனாவிலிருந்து மக்காவுக்குச் சென்றார்கள். இதனிடையே கலீபா முஆவியாவின் மரணச்செய்தியை செவியுற்ற (ஈராக்) கூபாவாசிகள் இமாமை கூபாவுக்கு வரும்படியும் முஸ்லிம்களின் கிலாபத்தை ஏற்கும்படியும் கூபாவுக்கு வந்தால் அவர்களுக்கு பைஅத் செய்ய காத்திருப்பதாகவும் பல்லாயிரக்கணக்கான மடல்களை இமாமுக்கு வரைந்தார்கள். இமாமவர்கள் முதற்கட்டமாக கூபாவாசிகளின் நிலை அறிந்து வர தனது பரதிநிதியான முஸ்லிம் பின் அகீலை கூபாவுக்கு அனுப்பினார்கள் . முஸ்லிம் பின் அகீலின் வருiகையைக்கண்ட கூபாவாசிகள் அவருடன் இணைந்துகொண்டனர்.

முஸ்லிம் பின் அகீல் கூபாவுக்கு வருகை தந்த செய்தி யசீதின் கூபா கவர்னரான உபைதுல்லாஹ் பின் சியாத் என்பவனுக்கு கிடைக்கவே பல சதிமுயற்சிகளை மேற்கொண்டு முஸ்லிம் பின் அகீலை பிடித்து கொலைசெய்துவிட்டான். கூபாவாசிகளின் ஒத்துழைக்காமையும் முஸ்லிம் கொல்லப்படுவதற்குரிய இன்னுமொரு காரணமாகும். முஸ்லிம் கொல்லப்படுவதற்கு முன் கூபாவாசிகளின் வரவேற்பைக்கண்டு கூபாவுக்கு வரும்படி இமாமுக்கு முஸ்லிம் கடிதம் எழுதி இருந்தார். கடிதம் கிடைத்ததும் இமாமவர்கள் தனது குடும்பம் மற்றும் தோழர்களுடன் கூபாவை நேக்கி வந்தார்கள். கூபாவை அண்மித்துக் கொண்டிருக்கும் வேளையில் முஸ்லிம் பின் அகீல் கொல்லப்பட்ட செய்தியும் கூபாவாசிகளின் துரோகச்செயலின் செய்தியும் இமாமுக்கு கிடைக்கிறது.
முஸ்லிமைக் கொண்று, கூபாவாசிகளுக்கு மத்தியில் பீதியை உருவாக்கி கூபாவை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த உபைதுல்லாஹ் பின் சியாத் இமாம் ஹ{சைனை வழிமறித்து வலுக்கட்டாயப்படுத்தி பைஅத் எடுக்க ஹ_ர் பின் ஸியாத் என்பவரின் தலைமையில் படையொன்றை அனுப்பினான். இமாமைக்கண்ட ஹ_ர் பெருமானாரின் பேரரைக் கொல்லவா நான் அனுப்பப்பட்டேன் என சிந்தித்து அதனை மகாதவறாக எண்ணி மனமாற்றம் பெற்று இமாமுடன் இணைந்து கொண்டார். இதன் காரணமாக உபைதுல்லாஹ் பின் சியாத் பிரிதொரு படையை உமர்பின் ஸஃத் என்பவனின் தலைமையில் அனுப்பினான். ஹ_சைனை கொண்றால் “ரெய்” எனும் பிராந்தியத்தின் ஆட்சியை உமர்பின் ஸஃத்திற்கு தருவதாக வாக்களித்திருந்தான் உபைதுல்லாஹ் பின் சியாத். ஆட்சிமோகத்தில் மூழ்கி இருந்த உமர்பின் ஸஃத் இமாம் ஹ_சைனையும் அவர்களது உறவுகளையும் கர்பலா எனும் இடத்தில் வழிமறித்து முற்றுகையிட்டு சொல்லொனா அநீதிகளையும் அட்டூழியங்களையும் புரிந்தான். பெருமானாரின் (அஹ்லுல்பைத); குடும்பத்தைச்சேர்ந்த குழந்தைகள்,பெண்கள்,ஆண்களை மூன்று நாட்களாக நீர் அருந்த விடாமல் தடுத்தான். முஹர்ரம் பத்தாம் (ஆஷ_ரா) நாள் இமாம் ஹ_சைனையும் அவர்களின் 71 தோழர்களையும் மிக அபாயகரமானமுறையில் கொன்றெழித்தான். பெருமானாரின் குடும்பத்தினர், சிறார்கள், பெண்கள், வயோதிபர்கள் எனப்பாராமல் கொடுமைகள் புரிந்து துன்புருத்தி கொலைசெய்தான். பறவைகளும் மிருகங்களும் இறைநிராகரிப்பாளர்களும் நீர்; அருந்தும் புறாத் நதியிலிருந்து பெருமானாரின் குடும்பத்தினர் நீர் அருந்த அனுமதிக்கப்படவில்லை. குடிப்பதற்கு பாலில்லாமலும் நீர் இல்லாமலும் நாவு வரண்டு பரிதவித்த இமாம் ஹ_சைனின் ஆறுமாத குழந்தையை கையிலேந்திய அவர்கள் “ஓ மனிதர்களே! என்னுடன்தான் உங்களுக்கு பிரட்சினையெனில் இந்த குழந்தை உங்களுக்கு எத்தவறைப்புரிந்துள்ளது? அதற்காகயாவது சொட்டு நீர் கொடுங்கள் எனக்கேட்டார்கள். அதற்கு அச்சன்டாளர் கூட்டத்தைச் சேர்ந்த ஹர்மலா எனும் கயவன் நஞ்சு கலந்த அம்பை எய்து அக் குழந்தையைப் பதம்பார்த்து கொன்றான்.
கர்பலா முற்றுகையில் சிக்கிய பிரதான மனிதர்களை கொன்றுவிட்டு எஞ்சிய பெண்களையும் சிறுவர் சிறுமியர்களையும் கைது செய்தான். கர்பலாவிலிருந்து யசீதின் தர்பார் அமைந்திருந்த சிரியாவுக்கு கேவலமாக நடாத்திச் சென்று அவமானப்படுத்தினான். இமாம் ஹ_சைனின் துண்டிக்கப்பட்ட தலையை யசீதின் மாளிகைக்கு எடுத்துச் சென்றான். யசீத் இமாமின் புனித தலையிலும் அதரத்திலும் பிரம்பால் அடித்து ஏலனம் செய்தான்.. நபிபெருமானாரின் உறவுகளுக்கு இன்னோரென்ன கொடுமைகளைப்புரிந்தான்.
இமாம் ஹ_சைன் அவர்கள் தனது இறுதி மூச்சுவரை யசீதியரின் எந்த அடாவடித்தனத்திற்கு முன்னும் தலை சாய்க்க வில்லை. வீரத்துடனும் கண்ணியத்துடனும் போரிட்டு யசீதியரின் முகத்திரையை கிழித்து அவர்களின் உள்தோற்றத்தை உலகிக்கு அம்பலப்படுத்தினார்கள். தனது உதிரத்தை ஊட்டி நபிபெருமானாரின் மார்க்கத்தைப்பாதுகாத்தார்கள். கர்பலா நிகழ்வானது ஒரு சிறிய கால எல்லைக்குள் நடந்த நிகழ்வானாலும் அதன் ஒவ்வொரு வினாடிப் பொழுதிலும் பல பல பாடங்களும் படிப்பினைகளும் பொதிந்திருக்கின்றன. இஹ்லாஸ்,தியாகம், சமயப்பற்று,தலைமைத்துவத்திற்கு கட்டுப்படல், பலமானஈமான்…போன்ற இன்னோரென்ன பாடங்களைக் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக காட்சி தருகிறது கர்பலா. சிறார்கள் தொடக்கம் பெரியார்கள் வரைக்கும் உள்ள பெருமானாரின் அன்பு உறவுகளின் உதிரங்கள் மிகவும் துர்ய்மையானவை. அவைகள் இஸ்லாத்தைத் தூய்மைப்படுத்துவதில் மிகவும் தொண்டாற்றியுள்ளன. இனிமையான மழலை மொழி கொண்ட சிறார்களும் முடி நரைத்துப்பழுத்த வயோதிபர்களும் உலகில் எந்த அடக்குமுறை ஆட்சியாளருக்கும் அநீதியாளருக்கும் அடிபணியாமல் சுதந்திரத்துடன் வாழும் பாடத்தை கற்றுத்தந்துள்ளனர். இஸ்லாத்தை புத்துயிர் கொடுத்து அதனை பாதுகாத்துள்ளனர். வாட்களை வெற்றி கொண்ட தமது உதிரங்கள் மூலம் உமையா சன்டாளர்களின் ஆட்சியையும் அதிகாரத்தையும் உலகிலிருந்து என்றைக்குமே துடைத்து வீசிவிட்டார்கள்.
கர்பலாக் களத்தில் தன் சகோதரரோடு உயிர் நீத்த வீரத்தியாகி ஹஸரத் அபுல்பழ்ல் அப்பாஸ், குமாரர்களான அலி அக்பர்,அலி அஸ்கர், தனது சகோதரர் இமாம் ஹஸனின் மக்களான காசிம், அப்துல்லாஹ், எதிரியாக வந்து உற்ற நண்பனாக மாறிய ஹ_ர் பின் சியாத் ரியாஹீ, கறுப்பு நிற அடிமை அவ்ன்…போன்ற தியாகிகள் இங்கு நினைவுகூறப்படவேண்டியவர்கள். கர்பலா கொடூரங்களை தம் கண்களினால் மிகப்பொறுமையோடு பார்த்து சகித்து, வெந்து போன உள்ளத்துடன் கைதிகளாக பிடிபட்டு யசீதின் தர்பாருக்கு கொண்டுவரப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட வீரமங்கை செய்னப் அவர்களும் ருகையா, உம்முகுல்தூம், சகீனா போன்றோரும் இங்கு ஞாபகப்படுத்தப்படவேண்டியவர்கள். கர்பலாவின் தூதூ இவர்கள் மூலமாகத்தான் உலகிற்கு எடுத்துச் சொல்லப்பட்டது.
நபி பெருமானார்(ஸல்) அவர்களிடம் ஸஹாபா தோழர்கள் வந்து “ நாயகமே தாங்கள் இச்சத்திய மார்க்கத்தை பல தியாகங்களுக்கு மத்தியில் எமக்கு போதித்த வகையில் எவ்வகையான கூலியை எம்மிடம் எதிர்பார்க்கின்றீhகள்;? ஏனக்கேட்க உடனே அல்லாஹ்வுத்தஆலா பின்வரும் வசனத்தை நபிகளாருக்கு இறக்கிவைத்து கூறுகின்றான்.
(நபியே!) நீர் கூறும்; "உறவினர்கள் மீது அன்பு கொள்வதைத் தவிரஇ இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை!"(42:23)
அஹ்லுல்பைத்துகளான நபிகளாரின் குடும்பத்தை நேசிக்கும் படி இவ்வசனம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. அத்துடன் ஹசனும் ஹ_சைனும் சுவனத்து வாலிபர்களின் தலைவர்கள் என புனித நபிமொழி கூறிக் கெண்டிருக்கையில் ஹ_சைனையும் ஹ_சைனில் குடும்பத்தாரையும் கொலைசெய்து அட்டூழியம் புரிவது எவ்வகை நேசமாகும்!?
ஆஷ_ரா நிகழ்வு இருளும் ஒளியும்; கொண்ட ஒரு நிகழ்வாக காட்சியளிக்கிறது. கர்பலா நிகழ்வின் இவ்விரு பக்கங்களும் வரலாற்றில் தன்னிகரற்றவைகளாகும்.
கர்பலாவின் இருள் நிறைந்த பக்கம்
இது அநீதியும் அட்டூழியமும் நிறைந்து காட்சி தரும் ஒரு பகுதி. இதில் நபி பெருமானாரின் குளந்தைகளுக்கு நீர் கொடுக்க மறுத்தல், அவர்களை கொல்லுதல், கசையினால் அடித்து வதைத்தல், கடிவாளம் இல்லாத குதிரை மீது ஏற்றி குதிரையை ஓடச்செய்தல், நடப்பட்டிருந்த கூடாரங்களுக்கு தீவைத்தல், சின்னஞ்சிறு பாலகர்களை உடலிலிருந்து துண்டிக்கப்பட்ட தலைகளைக்காண்பித்து பீதியை ஏற்படுத்தல், உலகில் சிறந்த பெண்மணிகளை மானபங்கப்படுத்தல் போன்ற பல அகோரங்கள் உள்ளன. இத்தனை அநீதிகளையும் பெருமானாரின் குடும்பத்தாருக்கு புரிந்தோர் பட்டியலில் முஆவியாவின் மகன் யசீத், உபைதுல்லாஹ் பின் சியாத், உமர் பின் ஸஃத், ஷிம்ர் பின் தில்ஜௌஷன், கவ்லீ, ஹர்மலா போன்ற சன்டாளர்கள் கானப்படுகின்றார்கள். தொன்று தொட்டு இன்று வரை உலக வரலாற்றில் பல யுத்தங்கள் உதாரணமாக சிலுவை யுத்தம், அந்தலுஸில் ஐரோப்பியர்கள் மேற்கொண்ட போர், வியட்னாம் போர்… போன்றவை நடந்துள்ளன. ஆனால் இவைகள் எதிலும் நபிபெருமானாரின் குடும்ப உறவுகள் கர்பலா களத்தில் அநீதிக்குட்படுத்தப்பட்டது போன்ற எந்த கொரூரமும் இடம்பெறவில்லை.
கர்பலாவின் ஒளிமயமான பக்கம்
இதில் பெருமானாரின் குடும்ப உறவுகள் நபிகளாரின் மார்க்கத்தைப் பாதுகாப்பதற்தாக களமிறங்கி இக்லாஸ், தியாகம், அக்லாக், தலைவருக்கு அடிபணிதல், ஆன்மீகம், தொழுகையை நிலைநிறுத்தல், துஆ ,முனாஜாத், உலகில் எந்த அநீதிக்கும் அடக்குமுறைக்கும் எந்த அனாச்சாரத்திற்கும் தலைசாய்க்காமை, இஸ்லாமிய வழிப்புணர்வு கொண்டு வாழவேண்டும் என்ற இன்னோரென்ன பாடங்களை எமக்கு கற்பிக்கின்றார்கள்;.

உமையா சண்டாளர்கள் இமாம் ஹ{சைனைக் கொன்ற தவறின் மகாபயங்கரத்தை பின்னர்தான் உணர்ந்தார்கள். ஹ_சைனின் தலையில்லா உடல் ஹ{சைனைக் கொள்லுவதற்கு முன்னிருந்ததை விடவும் மிக ஆபத்தாக உமையா பரம்பரையினருக்கு ஆகிப்போனது.
கர்பலா நிகழ்வை நினைவு கூறுவதால் இஸ்லாமிய உள்ளங்கள் வழிப்புணர்வு பெற்று இன்றைய யசீதியர்களுக் கெதிராக போர்கொடி தூக்கலாம் என்ற அச்சத்தால் அந்நிகழ்வை மறைத்தொழிக்க பலவகை பிரயத்தனங்கள் எடுக்கப்படுகின்றன. நபிபெருமானாரினதும் அவர்களின் தோழர்களினதும் தியாகங்களை நினைவு கூறும் அதேவேளை கர்பலா கற்றுத்தரும் பாடங்களையும் படிப்பினைகளையும் முன்னுதாரணமாகக் கொள்ளும் போதுதான் இஸ்லாமிய புரட்சிகளும் ஹிஸ்புல்லாக்களும் ஹமாஸ்களும் தோன்றும் அப்போதுதான் இஸ்லாமும் முஸ்லிம்களும் இஸ்லாமிய பூமிகளும் முழு விடுதலை பெரும்.

ஒவ்வொரு புமியும் கர்பலாவாக மாறி ஒவ்வொரு நாளும் ஆஷ_ராவாக திகழட்டும்;

கருத்துகள் இல்லை: