என் வலிகளை போலிகளாக

என் வலிகளை போலிகளாக நினைத்தாலும் இறை மொழிகளையும் நபி வழிகளையும் சிந்திப்பீர்கள் என்ற எதிர் பார்ப்போடு…

கடிதமுமல்ல
கட்டுரையுமல்ல
கவிதையுமல்ல

உடம்பில் உவர் நீரில்லை
உருகிய கண்ணீராகி
உங்களோடு எழுகிறது…
மனிதன் எப்போதும் தன்னை மற்றவர்கள் மதிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ளவனாகவே இருப்பது மனித நியதி. மதிக்கப்பட்ட வேண்டும் கண்ணியப்படுத்தப்பட வேண்டும் நல்லவார்த்தைகளால் தன்னை பலரும் அழைக்க வேண்டும் தகாத வார்த்தைகளால் என்னை யாரும் அழைக்கவோ தூற்றவோ கூடாது என்றும் ஆசையும் ஆர்வமும் கொண்ட மனிதன் அதற்கு எற்றவாறு தன் செயல்களை அமைத்து நடைமுறைப்படுத்துவதில்தான் தவறிழைக்கின்றான். தௌய்வீக கோட்பாடுகளும் நபி மொழிகளும் தன்னை இறையச்சம் கொண்ட நற் பண்புள்ள நல்லடியானாக வாழ எத்தனையோ நந்நெறிகளை கற்று கொடுத்திருக்கிறது.? எத்தனை இறை வசனங்கள் ஆசை ஊட்டுகிறன.? எத்தனை இறை வசனங்கள எச்சரிக்கின்றன.? எத்தனை வசனங்கள் படிப்பினை சொல்கின்றன.? எத்தனை இறை வசனங்கள் ஆலோசனை வழங்குகின்றன.? இதனை நடைமுறை செய்தவாறு நபி மொழிகளும் செயற்பாடுகளும் எம்மை ஏங்கி எதிர்பார்த்து நிட்கின்றன. ஆனால் அதனையெல்லாம் கண்டும் காணாத மனிதன் தன்னை மற்றவர்கள் மதிக்க எதிர்பார்ப்பது வேடிக்கையிலும் வேடிக்கை. இவர்களை அவதானித்த குர்ஆனின் செய்தி:

எவர் தாம் செய்த (சொற்பமான)தைப்பற்றி மகிழ்ச்சி கொண்டும் தாம் செய்யாததை (செய்ததாகக் காட்டிக்) கொண்டு புகழப்படவேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்கள் வேதனையிலிருந்து வெற்றியடைந்து விட்டார்கள் என்று ஒரு போதும் எண்ணாதீர். அவர்களுக்கு நோவினை தரும் வேதனையுண்டு (ஆல இம்ரான் 188)

இரவு பகல் மாறி மாறி வருவது போல் தன்னை தவறிலும் தப்பிலும் மூழ்கி வைத்திருக்கும் மனிதனை எப்படி மனிதன் மதிப்பான் இல்லை இறைவன்தான் எப்படி மதிப்பான்.? என்பதை இறைவன்; வசனம் தெளிவாக சொல்லி விட்டது. நாம் செய்கின்ற நீர்த்துளி போன்றதை மழையாக்கி, கடலை ஓடையாக்க நினைப்பது தவறனாதல்லவா? முடியாத விடயமல்லவா? இதையே இறைவசனம் எச்சரித்ததாக சொல்லியது.

திரும்பும் திசையெல்லாம் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் மூல காரணமாய் அமைவது தக்வா என்னும் இறையச்சமின்மையே! காரணம் தவறு செய்யும்போது இறைவன் என்னை கோபிப்பான் அவன் என்னை தண்டிப்பான். என்ற அச்சணர்வு ஆழ மனதில் பதிந்தாலே மனிதன் தன் செயலை ஒரு முறைக்கு இருமுறை பரிசீழிப்பான்.

மேலும் ஒரு இறை செய்தி
நீங்கள் பொறுமையாகவும் இறையச்சமுடையவர்களாகவும் இருந்து கொள்ளுங்கள். ஏனெனில் இவை அனைத்து விடயங்களை விடவும் கண்ணியமுடையதாக இருக்கும். (அல் குர்ஆன் 3:186)


நபிமொழி
ஆதமின் மகனே! நீ உன் விருப்படி உறங்கும் நிலையிலும் அல்லாஹ்வைப் பயந்து கொள்!

பொறுமையும், இறையச்சமும் கண்ணியம் பெற்றுத் தரும் பொக்கிஷம். அவ்விரண்டையும் உடையவர்களே வெற்றி பெற்றவர்கள். இவை இரண்டும் இருந்தாலே பகைவனின் சூழ்ச்சியோ ஷைத்தரின் சதிகளோ எதுவுமே செய்ய முடியாது. இவை இரண்டுமே பலமும் உதவியும் என்பதை எவரால் மறுக்க முடியும்.? இவைகளே கண்ணியமும் பெருமையும் என்பதை மனிதன் விளங்கியும் விளங்காதவனாக இருக்கிறான். மனித கண்ணியமெல்லாம் அற்பாமானவை என்பதை உணர வேண்டும். எமது எந்த நிலையிலும் தக்கவாவை பேணிக் கொள்ள வேண்டும். சிறு சிறு விடயமென்று நாம் பொடு போக்காக இருப்பதனால் தான் தவறுகள் தப்பாகி மனக் கசப்பும் விரக்தியும் மனிதனுக்குள் ஏற்பட்டு இறைவனிடம் பாவமாக சென்றடைகிறது. இதையே நபி மொழி அழகாக கற்றுத் தருகிறது. உலகமே இருளாகி மனிதர்கள் வழிமூடி நீயும் விழிமூடும் நேரத்திலும் தன்னை யாரும் பார்க்கமாட்டார். என்ற நிலையிலும் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும் என்றால் ஏனைய எமது நேரங்களில் நாம் எவ்வளவு பேணுதலாக இருக்கவேண்டும்.

மேலும் ஒரு நபிமொழி
ஒரு முஃமினுக்கு இந்த உலகம் சிறைச்சாலை காபிர்களுக்கு சுவர்க்கமாகும். தினமும் மூஃமின் கவளையடைகின்றான். இறைவன் பாவம் செய்தால் நரகத்தில் நுளைவிப்பான் என்று வாக்களித்திருக்கும் போது அவனால் எப்படி கவளையின்றி வாழ முடியும்.
(பிஹாருல் அன்வார்.ஆமாலி தூஸி)
இந்த நபி மொழி அழகான பல வியடத்தை கற்று தருகிறது. இறைவனுடன் வாழ நினைக்கின்ற மனிதனுக்கு கஷ்டம் ஏற்படும். அதனை சகித்து கொண்டும் அவன் வாழ்கிறான். மேலும் தான் தவறு செய்தால் அல்லாஹ் தண்டிப்பான் என்ற பயத்தோடு பேணுதலாக தனது செயலை அமைத்து கொள்வான். என்பதோடு இந்த நபி மொழி சொல்கிறது. சொகுசான வாழ்க்கையும், நினைப்பதெல்லாம் செய்ய வேண்டும், ஆசைப்படுவதெல்லாம் செய்யவேண்டும் என நினைப்பவன் நிச்சயமாக ஒரு மூஃமினாக இருக்கமாட்டான் என்பதையும் தெளிவு படுத்துகிறது. சிறைச்சாலையில் யாரும் சந்தோஷமாய் இருப்பதில்லை. எப்போது எனக்கு இந்த தண்டனையிலிருந்த விடுதலை? என்று ஏங்கி தவித்தவர்களாகவே இருப்போம்.
எப்போதுமே
மனிதனுக்கு பயப்படாதே!
மன்னவனுக்கு பயப்படு
மாறாத மனிதனாக
மண்ணில் வாழ்கிறேனா ?...என்று

மேலும் ஒரு இறை செய்தி
நிச்சயமாக எவர்கள் உண்மையாகவே பயபக்தியுடையவர்களாக இருக்கிறார்களோ அவர்களுடனும். எவர்கள் தம் செயல்களை அழகாக்கி வைக்கிறார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான். (அல் குர்ஆன் 16:128)

தக்வா என்பது இறைவன் வெறுப்பதை வெறுப்பதும் அவன் விரும்புவதை விரும்புவதுமேயாகும்.
இறையச்சமுடையவர்களோடு அல்லாஹ் இருக்கும் போது எங்கிருந்து எந்த பிரச்சனைகளுக்கும் இறைஉதவியும் அன்பும் கிடைக்கும். தங்களது செயல்களை அல்லாஹ்வுக்கு பொறுத்தமானதாக செயற்படுத்தும் போது அல்லாஹ்வின் அன்பும் மனிதனின் அன்பும் கிடைக்கும். சில நேரங்களில் நாம் இறைவனுக்கு பொறுத்தமான செயற்பாடுகளை நடைமுறை செய்யும்போது எம்மைச் சுற்றியுள்ள சுயநல மனிதர்கள் பாதிக்கபடலாம் அதனை ஒருபோதும் நாம் கவளைப்பட வேண்டி அவசியமில்லை. மாறாக தங்களது நம்பிக்கையற்ற செயல்களால் மற்றவரும் பாதிக்கப்பட அல்லாஹ்வும் கோபிக்க எமது செயல்களை அமைத்து கொண்டால் அதன் விளைவு மிக கடுமையானது.
மேலும் ஒரு இறை செய்தி
விசுவாசிகளே ! நீங்கள் அல்லாஹ்வை பயந்து ( உண்மையான நேர்மையான ) பொருத்தமான வார்த்தைகளை கூ றுங்கள். அவன் உங்களுடைய காரியங்களை உங்களுக்கு சீர் படுத்தி தருவான். (அல் குர்ஆன் 33:71)
மேலும் ஒரு நபிமொழி
இறையச்சத்தின் மூலமாகவே உள்ளமும், உடலும் அமைதியாகிறது. ( தபரானி)

அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் எப்போதுமே தமக்கு பொருத்தமான தங்களால் செயற்படுத்த முடியுமான வார்த்தைகளைதான் பயன்படுத்துவார்கள். வாக்களிப்பார்கள். நாம் ஒருவருக்கு ஒரு வாக்களிப்பதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டுமுறை சிந்திக்க வேண்டும் எம்மால் இதனை தடங்கள் இல்லாமல் செய்ய முடியுமா? நாம் இருக்கின்ற சூழ்நிலையில் இந்தவாக்களித்தலை பாதுகாக்க முடியுமா? என்று சிந்தித்த பின் நாம் வாக்களிக்கவேண்டும் இதனையே இறைவன் பார்த்து கொண்டு சாட்சியாலனாக இருக்கின்றான். நேரத்தை சிந்திப்பதற்கும் ஆலோசனை பொருவதற்கும் சந்தர்ப்பம் எடுத்து வாக்களித்து மாறு செய்யும் மனிதனை அல்லாஹ் மறப்பதில்லை என்பதை மறக்ககூடாது. தக்வாயுடையவர்களை அல்லாஹ் நேசிக்கின்றான். அவர்களுக்கு அவனது உதவிகள் எப்போதுமே எதிர் பார்த்த நிலையில் இருக்கும். கஷ்டங்கள் துன்பங்கள் ஏற்படும் நேரம் இறைவனே பொறுப்பெடுக்கிறான். உண்மையை பேசுமாறும், நம்பிக்கையாக நடந்து கொள்ளுமாறும் அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.
மேலும் ஒரு நபிமொழி
நோய் ஏற்பட்டிடக் கூடாதென்று அஞ்சி உணவுக்கு முக்கியத்துவமளிக்கின்றவன். நரகத்திற்கு பயந்து பாவத்திற்கு (அதை தடுப்பதற்கு) முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கின்ற மனிதனை பார்த்து நான் ஆச்சரியப்படுகின்றேன். என்றார்கள் நபிகளார் (ஸல்) அலைகி வாலிஹி வஸல்லம் அவர்கள்.

உடலில் ஏற்படும் துன்பத்தை உணர்கிறோம், வைத்தியரை தேடி போகிறோம், நிவாரணி எடுக்கிறோம். நோய்க்கு ஏற்றவாறு எமது உணவு செய்பாடுகளை அமைத்து கொள்கிறோம். ஆனால் இறையோடு சேர்க்க வேண்டிய உள்ளத்தை தனிமை படுத்தி அசிங்கப்டுத்தி நோவினை படுத்தி அதன் இயற்கை நிலையையே மாற்றி விடுகிறோம். ஏன் நாம் உள்ளத்தை கவனிப்பதில் இந்த அக்கரைகளை அமைத்துக் கொள்வதில்லை. அதனை ஏன் இறையோடு சேர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை. உள்ளமும், உடலும் தக்வா எனும் பயத்தை தவிர, அதன் ஞாபகத்தை தவிர எதனாலும் அமைதிகாக்க முடியாது. அல்லாஹ் தாஆலா உள்ளத்தையே பார்க்கிறான். அவன் உடலையோ சதைகளையோ பார்ப்பதில்லை. என்பதை ஏன் நாம் உணராதவர்களாக வாழ்கிறோம். அதற்காக உங்களை சாப்பிடக்கூடாது குடிக்கக் கூடாது என்று சொல்ல வில்லை. மாறாக உடலுக்கு அது சரி. இது சரியில்லை என்று பேணுதலாக நடந்த கொள்வது போல் உள்ளத்திற்கு இறைஞாபகம் மட்டுமே சரி என்பதை ஏன் நாம் நடைமுறைப்படுத்தக் கூடாது.?




மேலும் ஒரு நபிமொழி
யார் பாவம் நடக்கின்ற இடத்தில் இறைவனை பயந்தாரோ அவரை இறைவன் நியாயத் தீர்ப்பு நாளன்று நரக நெருப்பை நெருங்க விடாதீர்கள் என அல்லாஹ் கட்டளையிடுவான். இறுதி நபி சொன்னார்கள் (திர்மதி)

மனிதன் தன்னை நற்பண்புள்ள மனிதனாக மாற்றிக் கொள்ள முதலில் இறையச்சம் அடித்தலாமாகும். அவன் பாவம் நடக்கின்ற இடத்திலும் தன்னை பாது காத்து கொள்வான். சங்டகமான நிலையில் பிரிந்து சென்றிடுவான், நிட்பந்த நிலையில் தவறுடன் தன்னை கட்டுப்படுத்திக் கொள்வான். இவ்வாறான நேசர்களை அல்லாஹ் நரக நெருப்பை நெருங்க விடாதீர்கள்.என கட்டளையிடுவான்.

மேலும் ஒரு நபிமொழி
குற்றம் எதனால் உண்டாகும் என பயப்படுகிறாரோ அதையும், எதனால் குற்றம் உண்டாகாதோ என பயப்படுகிறாரோ அதனையும் தவிர்ந்து கொள்வதே தக்வாவாகும் (திர்மிதி)

மேலும் ஒரு நபிமொழி
பெருமனார் (ஸல்) அறிவித்ததாக இமாம் அலி அறிவிக்கிறார்.
எவன் அல்லாஹ்வை பயந்து தன் செயற்பாடுகளை அமைத்து கொள்கிறாரோ அவர் சக்தி மிக்கவனாகவும், ஊரில் அச்சமற்றவனாகவும் வாழ்வான்.
அதாவது எமது செயற்பாடுகளை செய்யுமுன் நாம் சிந்திக்க வேண்டும் அதனால் தவறு ஏற்படுமா? இவ்வாறு செய்வதால் இறை இதயங்கள் பாதிக்கபடுவார்களா? என அதை சிந்தித்து பயந்தால் அதனை தவிர்ந்து கொள்வதையும், பிரச்சனை, குற்றம், தவறு நடக்கும் என சந்தேகம் ஏற்படும் விடயத்தையும் தவிர்ந்து கொள்வதையே அல்லாஹ் விரும்புகிறான். மேலும் அவர்கள் ஊரில் எதிர் பார்க்காத கண்ணியமும் மதிப்பும் அவர்களை தேடி வரும். அவர் அல்லாஹ்வுக்கு மட்டும் அச்சமுடையவராக இருப்பார். வேறு எந்த சக்திக்கும் அவர் பயப்படமாட்டார்.
மேலும் ஒரு இறை செய்தி
நிச்சயமாக அடியார்களில் அதகமானவர்கள் தக்வா உடையவர்கள் அறிவுடையவர்களே! (35:28)

நாம் எந்த அறிவை பெற்றிருந்தாலும் சரி,எத்தனை தொழில் நுட்பங்களை கண்டுபிடித்தாலும் சரி அந்த அறிவு இறைக்கு பிரயோசனமான பொருத்தமான அறிவாக இருந்தாலே தவிர. நாம் அறிவாளி,நீதியரசர், முகாமையாளர், தொழிலதிபர் என்று சொல்வதிலெல்லாம் எந்த அறிவும் கண்ணியம், பெருமையும் பெறப்போவதில்லை. எந்த அறிவை பெற்றிருந்தாலும் அல்லாஹ்வை பயப்படுபவனே உண்மையான அறிவாளி என்பதை குர்ஆன் தெளிவு படுத்தியது. அறிவற்றவர்களாக நீங்கள் இருப்பதால்தான் அவனை பயந்து தங்களது செயல்களை அமைத்து கொள்வதில்லை என்பதையும் கோடிட்டு காட்டுகிறது.

வாழ்க்கை ஒவ்வொரு விஷயங்களிலும் அர்த்தம் இருக்கிறது. இவ்வறான இலக்கு கொண்ட வாழ்க்கையை அர்த்தத்தோடு வாழ்வதில்தான் சிறப்பும் வெற்றியும் இருக்கிறது. பெற்றோர், மனைவி.குழந்தைகள்,சொந்தங்கள்.,நண்பர்கள்,சமூகம், சமூதாயம் என்று வாழ்வு அர்த்தம் பெற வேண்டும். அதுதான் வளமான வாழ்வோடு அல்லாஹ்வின் திருப் பொறுத்தத்தை பெற்று தரும். ஏனோ பிறந்தோம்,வாழ்ந்தோம் மறைந்தோம்; என்றால் அது வாழ்வாக இருக்காது. இவர்களைச் சுற்றி எமது அன்றாட கொடுக்கல் வாங்கள் தொழில் போக்கு வரத்து பேச்சு போன்ற செயற்பாடுகளில்தான் தக்வா பொதிந்து இருக்கிறது.

கண்ணியமது
தக்வாவுடையவர்களுக்கே இருக்க
மனிதன்
பணத்திற்கு கண்ணியம் செய்வானா?
தக்வா அது
மூஃமினிடமிருக்க
ஏமாற்றுபவன் மூஃமீனாக இருப்பானா?

பெற்றோர் :
பெற்று வளர்த்து நற்பண்புடையவர்களாக எம்மை பயிற்றுவித்து எதிர் காலத்தை நோக்கிய கனவோடு தங்களை அர்ப்பணிப்பவர்கள் பெற்றோர்கள். வியர்வை ஓட்டி கண்ணீர் சிந்தி உயிரையும் உடலையும் தங்களோடு சுமந்து காப்பீடு செய்யும் உலக பொக்கிஷங்கள். எமது விருப்பு வெறுப்பு விடயத்தில் கவனமாக அவதானித்து எமது சந்தோஷத்திற்காக அவர்களின் சந்தோஷங்களை இழப்பவர்கள். எமது முகத்தையும் கண்களையும் கணிப்பீடு செய்து தேவைகளை பூர்த்தி செய்து ரசித்து பார்ப்பவர்கள். இவர்களுடனான எமது வாழ்வில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம். இவர்களை எவ்வாறு புரிந்தவர்களாக இருக்கின்றோம் என்பதை கவனித்தே எமது நாளையே நாள் நகரப்பபோகிறது.
இறைவசனங்களும் நபிமொழிகளும் பெற்றோர் விடயத்தில் கண்ணியமாக கருணை பேசுகிறது. கண்டு கொள்ளா நேரம் கண்டித்ததாக ஏசுகிறது. என்றுமே பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சமூகத்தில் நாளை நல்லதொரு பிரஜையாக எழுந்து இறைக்கு பொருத்தமான நற்பண்புள்ளவர்களாக வாழ்வதையே ஏங்கி தவிக்கிறார்கள்.
மேலும் ஒரு இறை செய்தி
அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள் 'எதை, (யாருக்குச்) செலவு செய்யவேண்டும்" என்று நீர் கூறும்: நன்மையை நாடி நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன் வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான் ( 2:215)
மேலும் ஒரு இறை செய்தி
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. (4: 36)

தாய் தந்தை பெற்றோர் விடயத்தில் குர்ஆன் என்ன கூறியது என்று கவனித்தீர்கள். எப்போதும் பிள்ளைகளின் வாழ்க்கைக்காக தங்களை இழப்பவர்கள். நாம் தவறு செய்யும் நேரம் சரி செய்து கற்றுக் கொடுப்பார்கள், தப்பு செய்யும் போது தண்டிப்பார்கள். பொடு போக்காய் உள்ள நேரம் விரக்தியடைவார்கள். இறை மறுப்போடு செய்தால் திட்டுவார். சாபமிடுவார்கள். இவைகள் கூட அவர்களின் அன்பு இல்லாமல் இல்லை.மாறாக இதுவே அவர்களின் வேதனை இறுதி போதனையாக வருகிறது. திருத்தம் பெற. மேலும் இறை வசனம் அவர்களை சீ என்று கூட சொல்ல வேண்டாம் என்றும், நபி மொழி தாயின் பாதத்தின் கீழ்தான் சுவனம் இருப்பதையும் சூஷகமாக சொல்கிறது. கண்டித்தாள்,தண்டித்தாள் மனம் வெறுத்தாள், சாபமிட்டாள் இதற்காக தாய் வேண்டாமென்றால் வெற்றி நமக்கா? அவர்களுக்கா? தோல்வி எமக்கு என்பதை நாம் உணர்நது கொள்ள வேண்டும். அவர்கள் அன்பு வைத்தத போல் அடக்கமாக இல்லை நாம், அவர்கள் எம்மீது அனுதாப்படுவது போல் அணுசரித்து போகவில்லை நாம் அதனால் அவர்களின் வேதனை எரிந்து வார்த்தைகளாக வருகிறது. எனவே பெற்றோர் விடயத்தில் நாம் எப்போதும் கண்ணியமாக ,கவனமாக நடந்து கொள்வதையே எம்மை நற்பண்புள்ள நல்லடியார்களாக்கும். அவர்கள் வயது முதிர்ந்து விட்டால் அவர்களுக்கு எப்போதும் எமது உதவிகளை முன்னிலை படுத்த வேண்டும். அவர்கள் இறந்த காலத்தில் எமக்காக எமது முன்னேத்திற்காக எவ்வளவு துன்பப்பட்டார்களோ அதை நாம் அறிவோமா? அவைகளை விட அவர்களுக்கு நாம் கடைமைப்பட்டிருக்கிறோம் என்பதை நிச்சயமாக ஒரு மூஃமீன் மறந்து வாழ மாட்டான். மனசாட்சியுள்ள மனிதனும் மறுத்து வாழ்வதிற்கில்லை.

பாசமிட்டது போல்
வேஷமிடுவாள் நேசமில்லாமலல்ல
நொருங்கி நெருங்க வேண்டுமென்று.

1986 ம் ஆண்டு
ஆர்மீயா பூகம்பம்பம்
அகப்பட்டது தாயும்
குழந்தை மூன்று வயதோடும்.

மீளவும் முடியவில்லை
மீட்டெடுக்கவும் முடியவில்லை
ஒரிரு நாட்களாகியும்.

அழும் குழந்தைக்கு
ஆறுதல் சொல்வாள்
இரத்தத்தை தாய்பாலாக்கி
அவள்தானே தாய்.

பால் சுரக்கா நேரமது
பசியால் துடித்த நேரமது
பசிபோக்க என்ன செய்தாலோ?

ஒன்று இரண்டு நாட்களல்ல
ஓர் வாரமும் ஓர் நாட்களும்

தனது உதிரத்தை
உணவாக கொடுத்தாள்
எட்டு நாட்கள்
பாசக்கார அன்னையவள்.
நெஞ்சமே வலிக்கிறது
அவள் ஏற்றிய ஊசி
ஏறிய உடல்
எப்படி வலித்திருக்கும்?
அவள் தாய்
நாங்களெல்லாம் பிள்ளை

தந்தை:
வாழ்வாதாரம் தன்னுடைய கட்டாய பொறுப்பாக சுமந்து இரவு பகலாய் தன்னை குடும்பத்திற்காக அர்ப்பணிக்கும் அருமைச் செல்வம் தந்தை. தன் வீடும் குடும்பமும் ஒரு நல்லதொரு சமூகத்தின் உறைவிடமாக உயர்வதையே ஏங்கி நிட்பவன். தன்னை தொடர்ந்து ஆண்மீக ஆளுமை கொண்ட ஒரு சமூதாயத்தை உருவாக்கி அதனுடாக தேசமாக்கத்தை ஆசை கொள்பவன். இன்று முடிவதற்கு முன் நாளை நானிருந்தால் என் குடும்பத்திற்கு எது செய்லாம் என்ற முன்னேற்பாட்டையும் நானில்லாது போனால் எது செய்யனும் என்ற அறிவுருத்தலையும் பட்டியலிட்டு எற்பாடு செய்யும் வீட்டு அதிபர். எல்லாவற்றும் போக தன்னை இறையோடு அழுல் படுத்தி அதே பாதையில் பயணிக்கச் செய்யும் வழிகாட்டி. நற்பண்புகளையும் நேறிய வழிகாட்டலையும் தவறிடும் நேரம் தண்டிக்கும் வீட்டு பொலீஸ். தன் சமூகத்தில் சந்தோஷம் மகிழ்ச்சி இடம் பெரும் நேரம் பரஸ்பர அன்பை பாசத்தை பகிர்ந்து கொள்ள அமைக்கும் ஆனந்த மேடை. துன்பமும் பிரச்சனைகளும் ஏற்படும் நேரம் தோல் சுமந்து தீர்க்க முயற்சிக்கும் வீட்டு நீதிபதி. அவருடனான எமது வாழ்வை நாம் எவ்வாறு அர்த்தமுள்ளாதாக்கி இருக்கிறோம். என்பதை பொருத்தே எமது குடும்ப வாழ்வு செயற்படப்போகிறது.
மேலும் ஒரு இறை செய்தி
(ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள். எந்தப் பெண்கள் விஷயத்தில் அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள். (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான். (4: 34)

தந்தை என்பவர் வீட்டு அதிபர் என்பதை குர்ஆன் தெளிவாக சொல்லியது. எப்போதும் ஆண்களே வீட்டில் பெண்களை நிர்வகிப்பவர்கள்.அவர்களின் பொறுப்பே வீட்டின் செலவீனங்களை கவனிக்க வேண்டிது. அது போல் தந்தை விடயத்தில் மேற் பெற்றோர் பற்றி வசனங்கள் அவர்களின் உரிமையை பேசியது. அவருக்குறிய மதிப்பும் கண்ணியமும் நாம் எத்தனை தலைமுறைகளை கண்டாலும் மறந்திடமுடியாது. அனுபவம் நிறைந்த வாழ்வில் அழகான ஆலோசனைகளை தந்தையிடம் கேட்பதில் நாம்; தோல்விகளை தவிர்க்க முடியலாம். அவர்களுடனான எமது வாழ்வில் எதை செய்கிறோம்.

இந்த பிரபஞ்சமே
எனக்கு தேவையில்லை
வஞ்சகமில்லாத நெஞ்சோடு
மறு பிரபஞ்சத்திற்காக
தன்னை அர்ப்பணிக்கிறேன்.

அன்பு நேசமெல்லாம்
யாருக்கு?...
என் வீட்டுக்கே
அதுவும் இறை கோட்டுக்கே!

வாழ்வில்
நீங்கள் வெற்றி பெரும்
நானின்று தோற்றாலும்
நாளை எனக்கு வெற்றிதான்
நான் தந்தை
நீங்கள் பிள்ளைகள்.

உறவு வயிற்றில் ஓரிடத்தில் இருந்தோம். உலகத்தில் உள்ளத்தில் குடியிருப்போம் வாருங்கள் எனும் இரத்தம். நானும் நீங்களும் வேறல்ல நாமெல்லாம் ஒன்றெனும் ஒற்றுமை ஒன்றியம். உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் என்று புரிந்துணர்வுடனும் விட்டு கொடுப்புடனும் வாழ அழைக்கும் ஆனந்த அரங்கம். பாசத்தை பகிர்வதற்கும், சங்கடங்களை தீர்ப்பதற்கும் எம்மால் முடிந்ததை அவர்களுக்கும் அவர்களால் முடிந்ததை எங்களுக்கும் பரிமாறிக் கொள்கின்ற அழகான பாசபூங்காவனம். இவர்களுடனான எமது உறவில் நாம் எதனை வளர்த்திருக்கின்றோம் என்பதை கணக்கு செய்தே எமது எதிர்கால உறவு வளரப் போகிறது.

மேலும் ஒரு இறை செய்தி
உங்கள் அனைவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து உண்டாக்கிருப்பின் (உங்கள் தந்தையிடம்) தங்க வைத்து, (பின்னர் கர்ப்பத்தில்) ஒப்படைப்பவனும் அவனே. சிந்தித்து விளங்கிக் கொள்ளக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நம் வசனங்களை விவரித்துள்ளோம். (6 : 98)
மேலும் ஒரு இறை செய்தி
ஆகவே, உறவினர்களுக்கு அவர்களுக்குறிதை கொடுத்து வருவீராக. அவ்வாறே ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (அவரவர்க்குரியதை கொடுத்து வருவீராக). எவர்கள் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடுகிறார்களோ அவர்களுக்கு இது மிக்க நன்மையுடையதாகும் அவர்கள்தாம் (அவ்வாறு கொடுத்து வருபவர் தாம்) வெற்றியாளர்களாவார்கள். (30:38)
மேலும் ஒரு இறை செய்தி
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர்களும், உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருங்கள். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன். அன்புடையவன். ( 24: 22)
மேலும் ஒரு இறை செய்தி
இதன் பின்னரும், எவர்கள் ஈமான் கொண்டு, தம் ஊரைத்துறந்து, உங்களுடன் சேர்ந்து (மாhக்கத்திற்காகப்) போர் புரிகின்றார்களோ, அவர்களும் உங்களை சேர்ந்தவர்களே. இன்னும் அல்லாஹ்வின் வேதவிதிப்படி உங்கள் உறவினர்களே; ஒருவர் மற்றொருவருக்கு மிக நெருக்கமுடையவர்களும் ஆவார்கள் நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். ( 8:75)

மேற் குறிப்பிட்ட வசனங்கள் உறவினரை பற்றி பேசியதை கவனித்திருப்பீர்கள். அவர்களுடன் சேர்ந்து நடக்கும் படியும்,அவர்களின் உரிமைகளை கொடுத்து விடுமாறு ஏவுகிறது. சிறு சிறு கருத்து வேறுபாட்டில் நாம் பிரிந்து நின்றால் அது பலயீனமே! இன்று இருப்பவர்கள் நாளை இல்லை நாளை என்ன நடக்குமென்று எமக்குத் தெரியாது. எனவே நான் பெரிது நீ பெரிது என்று வாழவந்த உலகம் இதுவல்ல. ஒற்றுமையே பலம் ஒன்று பிரி;ந்தாலும் அதுவே பலயீனம். எனவே உறவுகளுக்குள் எற்படுகின்ற முரண்பாடுகளை எப்படி உடன்பாடு கொள்வது என்பதை தெளிவாக பின் தருகிறோம்.

உங்களுடன் பிறந்தவர்
என்னுடன் பிறந்தவர்கள் நீங்கள்.
பிரியத்தை கொண்டு அணைத்திடுவோம்
பிரிவினை கண்டு உணர்ந்திடுவோம்.

நான் நேசிக்க வில்லையோ
நீங்கள் என்னை நேசியுங்கள்
நீங்கள் நேசிக்க வில்லையோ
நான் உங்களை நேசிப்பேன்.

உறங்கும்போதும் உடனிருங்கள்
உள்ள போதும் உடனிருங்கள்.
எமது உறவுகள்
உறைந்திருக்கும் நெஞ்சுகளோடு…

சொந்தம் தூரமென்றாலும் துயரமென்றாலும் தூதனுப்பியோ நலம் கேட்டு நலம் சொல்லிடும் பந்தம் சொந்தம். நன்மைக்கும் தீன்மைக்கும் செய்தி சேர்த்திடும் தகவலறைகள். இன்பத்தில் சந்தோஷப்படவும் துன்பத்தில் ஓடிவந்து ஆறுதல் கூறவும் ஏங்கும் கதவுகள். உள்ளதே போதுமென்று வாழ்வோம். தாழ்வானவர்களை உயர்த்தி அல்லாஹ்வை நன்றி செய்டும் நன்றி பாசறை. முடியுமானால் கைநீட்டி காத்திடும் முதலுதவி பெட்டகம். உயர்வானவர்களை பார்த்து இதுவே எமக்கு தகுதி என்று மனம் பொருந்தி அவர்களை வாழ்த்தும் மனப் பக்குவ மனசு. இன்று அவர்களிடம் நாளை எம்மிடமென்று மறந்திடாது திறந்த மனதோடு வாழ்வோம் எனும் அழகு மாலிகை.

மேலும் ஒரு இறை செய்தி
மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். ( 4:1)
மேலும் ஒரு இறை செய்தி
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான் அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். (16:90)

உலகில் எந்த மூலையில் பிறந்தவர்களும் ஒரு வகையில் எமது சகோதரர்களே! நபி ஆதமுடைய மக்களாகவே எல்லோரும் சங்க மித்தோம் . எல்லா உயிர்களும் முஸ்லிமாகவே உலகத்தை பார்க்கிறது. ஆனாலும் பெருகின்ற வயிற்றிலும் வளர்க்கப்படுகின்ற சூழலிலுமே அவர்களது நிலைகள் மாற்றம் பெருகிறது. எனவே இரத்த பந்தமானாலும் தூர சொந்தமானாலும் எல்லோரும் முஸ்லிம் என்ற பாக்கியத்தை சுமந்து வாழ்வோம்.


மேலும் ஒரு நபிமொழி
நாயகம் (ஸல்) சொன்னார்கள். தர்மம் செய்யும்போது 10 மடங்கு நன்மைகளும் அழகிய கடன் கொடுத்தவருக்கு 18 மடங்கு நன்மைகளும், சொந்த பந்தங்களுடன் சேர்ந்து நடந்தவர்களுக்கு 24 மடங்கு நன்மைகளும் அல்லாஹ் கூலியாக கொடுக்கிறான். (முஸ்தத்ரகுல் வஸாயீல்)

மேற் ஹதீத் கூறிய மூன்று வியடங்களும் வாழ்வின் ஒவ்வொரு பகுதிகள் அதில் மேன்மையான நன்மைகளை சுமந்து வருபவைகளாக சொந்தத்தை குறிப்பிடுகிறது. மேலும் இந்த மூன்று வியங்களை உள்ளக்கிய செயற்பாடுகள் பெரும்பாலும் சொந்தத்தில் முன்னிலை படுத்த படுவதை இஸ்லாம் வலியுறுத்துகிறது. தர்மம் செய்தல், கடன் கொடுத்தல், சொந்தத்தை சார்ந்து நடத்தல் போன்ற விடயத்தையும் சொந்தம் என்ற உறவுகள் அமுல்படுத்துகிறது. எனவே முடிந்தளவு சொந்தங்களை சொந்தங்களாக பார்ப்போம். முடியுமானளவு அவர்களுக்கு தர்மம் செய்வோம், முடிந்தளவு கடன் கொடுத்து காத்திருந்து காத்திடுவோம்.

தலை நிமிந்தாலும் சொந்தம்
தலை குணிந்தாலும் சொந்தம்.
இரத்த இரத்தமில்லா பந்தம்
ஒன்று கூடி வாழ்ந்தாலே
உலகம் பூராக நாங்களே தங்கம்.

கணவன் மனைவி முகவரி தெரியாதும் முகங்களே புரியாதும் உயிரோடு சேரப்போகின்ற இன்னுமோர் உயிர். தன்னை உனக்கும், உன்னை தனக்கும் வாழ உறுதி கொள்ளும் ஒரு புதிய வகுப்பு பாடம். தேசம் தெரியாது பாசத்திற்காக நேசத்திற்காக தன் பாதுகாத்த வெட்கத்தை உணர்வுகளை உன்னுடன் மட்டும் பகிரப்போகிறேன் என்ற ஒழுக்க கொள்கை.
என்னை விட்டால் அவளுக்கு யாருமில்லை அவனை விட்டால் எனக்கு யாருமில்லை என்ற மனப்போக்கில் பாசங்களை, நேசங்களை, இன்பத்தை, துன்பத்தை, கட்டுப்பாட்டை, விட்டு கொடுப்பை புரிந்துணர்வோடு பங்கு கொள்ளப் போகும் ஒரு புதிய அத்தியாயம். பெற்றோரை விட்டு உடன் பிறந்த சகோதரத்தை கொஞ்சம் தூரமாகி வாழப்போகிறேன் என்ற புதிய உலகம். தனித்திருந்த மனசு மணவாழ்க்கையோடு இரட்டிப்பாக்கி மணமாலை சூடிவிட்டது. நீயே இனி எனது பிரகாசமும் இருளும் என விளக்கேற்றும் மாலிகை திருமணம். இந்த வாழ்க்கiயில் எமது நிலையை நாம் எப்படி அமைத்திருக்கிறோம் என்பதை கொண்டே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படப் போகிறது.

மேலும் ஒரு இறை செய்தி
உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள். எனவே உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். உங்கள் ஆத்மாக்களுக்காக முற்கூட்டியே (நற்கருமங்களின் பலனை) அனுப்புங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண்டும் என்பதை உறுதியாக அறிந்து கொள்ளுங்கள். நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!
( 2:223)
மேலும் ஒரு இறை செய்தி
ஒரு பெண் தன் கவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை. அத்தகைய சமாதானமே மேலானது.இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ( 4:128)
மேலும் ஒரு இறை செய்தி
(கணவன்-மனைவி ஆகிய) அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும் மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பினால், அல்லாஹ் அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும். இருக்கின்றான். (4:35)
மணவாழ்க்கைக்கு தேவையான பல விடயங்களை குர்ஆன் கூறியது. கணவன் மனைவிக்குள்ள பொறுப்புகள் மிக முக்கியமானவை.கணவனுக்கு கட்டுப்படுவதும் ,அவனது உரிசை; சொத்துக்களை பாதுகாப்பதும்மனைவியின் கடமை. அதுபோல் கணவன் அவளுக்குறிய உரிமையை, தேவைகளை கொடுத்து தனது கட்டுப்பாட்டில் பாதுகாக்க வேண்டியதையும் கூறியது. எனவே இவர்களுக்கிடையில் ஏற்படுகின்ற முரண்பாடுக்கான தீர்வை கீழே தெளிவு படுத்தியுள்ளோம்.

உன்னால் புது திருப்பம்
இதனால் உனக்கும் எனக்கும்
மணவாழ்க்கையில் விருப்பம்.

மண்ணகத்தில் பொக்கிஷம்
இது இறையின் பாக்கிஷம்.

எம்மிடமில்லை மறைவு
அனால் எற்படா குறைவு
இப்படி வாழ்ந்தாலே
மணவாழ்க்கை நிறைவு.

நான் புரட்சியாவதும்
புரள்வதும் உன்னில்
நீ மலர்வதும்
மிரல்வதும் என்னில்
புரிந்து கொண்டால் வெற்றி.




குழந்தை:
பெற்றெடுத்தால் மட்டும் போதாது பேணுதலாய் பாதுகாத்திடவேண்டும்.
எங்களது குழந்தைகளுக்கு நாங்களே ஆரம்ப வழிகாட்டி ஆசிரியர். நாங்கள் எந்தப் பாதையில் செல்கிறோமோ அந்த பாதையி;ல்தான் எம் குழந்தைகளும் பயணிக்க தொடங்குவார்கள். நாங்கள் சென்றது சரியாக கணிப்பிட்டிருப்பின் அவர்தம் வாழ்வும் வெற்றி பெரும். நாங்கள் பயணித்தது தவறான கூடாத பள்ளமும் குழியும் கொண்ட வாழ்வானால் அவர்கள் வாழ்வும் தடம்புரழும். நாங்கள் எப்படிச் சென்றாலும் குழந்தைகளை சரியாக பயிற்றுவித்திருந்தால் அவர்களின் வெற்றியை தோல்வியை நியமிப்பது மிக கடினம். பயிற்றுவிக்காது விட்டு இருப்பீர்களாயின் தங்களது எதிர் கால இலக்கு மாறி அவர்களே தங்களது இலக்கை தீர்மாணிக்கும் சக்தியை பெற்றிடுவார்கள். சில நேரங்களில் பெற்றோர்களினால் பயிற்று விக்கப்படு;ம் குழந்தைகள் அவர்களின் இலக்கை ஆசையை ஆர்வத்தை துறைகளை அறிந்து அதன் பாதைகளை காட்டிக் கொடுப்பது அவர்களின் வாழ்க்கையில் மேலும் வெற்றிகளை கொடுக்கலாம். எப்போதுமே குழந்தைகளுடன் குழந்தைகளாக இருங்கள். அவர்கள் சிந்திக்கும் பிரித்தறியும் திறனை கொண்ட நேரம் சிறந்த பகிஸ்பர நண்பராக மாறுங்கள். எந்த பிரச்சனையின் போதும் ஆறுதலும் உதவியுமாய் இருங்கள். அப்போதே அவர்கள் எதிர் காலத்தில் தங்களோடு சந்தோஷத்தை துக்கத்தை பகிர்ந்து கொள்ளும் பிள்ளைநண்பர்களாக இருப்பார்கள்.

மேலும் ஒரு இறை செய்தி
(தலாக் சொல்லப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமான இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும. பாலூட்டும் தாய்மார்களுக்கு (ஷரீஅத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது தாயை அவளுடைய குழந்தையின் காரணமாகவோ. (அல்லது) தந்தையை அவன் குழந்தையின் காரணமாகவோ துன்புறுத்தப்படமாட்டாது. (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும். இன்னும், (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்துப் பாலூட்டலை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. தவிர ஒரு செவிலித்தாயைக் கொண்டு உங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட விரும்பினால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டியதை முறைப்படி செலுத்திவிட வேண்டும். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள் . நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.( 2:233)



குளிரும் தெரியாது
சூடும் புரியாது.
அதன் பாஷை
அவனுக்கே புரியும்
அதை கேட்பதில்
எல்லாருக்கும் பிரியம்.
வழிகாட்டின் வளர்ந்திடுவர்
வழி கெடுத்திருப்பின்
தடம் புரண்டிடவர்.

நண்பர்:
ஆயிரம் ஆயிரம் மனிதர்களை பார்க்கிறோம். பேசுகிறோம் சிறிக்கிறோம் பழகுகிறோம். எல்லோரையும் எமது நண்பர்களாக எடுப்பதில்லை. குறிப்பிட்ட சிலரை மட்டும் எமது நண்பர்களாக தேர்ந்தெடுக்கும் பரீட்சை. அதற்கு மேலாக ஒருவரை,இரண்டு பேரை எமது உயிர் நண்பர்களாக நெங்சில் சுமக்கும் ஆனந்தம். எப்போதுமே நண்பர்களுடனான உறவை மிக அர்த்தமுள்ளதாக வைத்தக் கொள்ள வேண்டும். வெளிச்சமென்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் நேர்கொடு. கெடுதி எனும் படுகுழியில் தள்ளி விடும் எச்சரிக்கை விடுதி. தேவையென்று வரும் போது தா என்று கேட்காமலே உள்ளக் கதவுகளை தட்டிதரும் தபால் காரன். இன்பத்தை துன்பத்தை இரண்டரை கலந்து அனுபவிக்கும் ஏக்கம். நல்ல நண்பர் கிடைத்த ஒருவர் எதற்கும் கவளைப்பட வேண்டியதில்லை. அதற்காக எதற்கெடுத்தாலும் அவனையே எதிர் பாhக்காதே! நிறையப் பேசலாம் நிறையவே எதிர்பார்க்காதே! நீங்கள் உங்கள் நண்பர்களிடம் எதை எதிh பார்க்கின்றீரோ அதையே பெரும்பாலும் அவர்களும் எதிர்பார்ப்பார்கள். மனதை பக்குவப்படுத்தி எதனையும் எதிர் பார்க்காதவர்கள் அதில் சிறந்தவர்கள், விதிவிலக்கானவர்கள். தாகம்மென்றால் நீர் புகட்டவும் பசி என்றால் ஓடிவந்து ஊட்டிடவும் பெற்றோரும் சகோதரரிகளும் இருக்க எந்த ஒருமூலையில் பிறந்த எம்மை எவ்வித எதிர் பார்ப்புமின்ற பாசத்தை நட்பை காட்டி அதற்காக ஏங்கி தவிக்கும் நட்புக்கு எப்படியெல்லாம் நாமிருக்க வேண்டும.; அதனை எமது வாழ்வில் கடைப்பிடிக்கிறோமா?
ஒரு மனிதனின் நட்பும் திருமண துணையும் நன்றாக அமைந்து விட்டால் அவனது எதிர்காலத்தை நோக்கிய வெற்றியை நாம் இப்போதே நிர்ணயித்து விடலாம். இவ்வாறான நட்போடு உங்கள் உறவை எப்படி பாது வைத்திருக்கிறீர்கள்.? நண்பர்களுடனான உறவில் தெளிவான மனப் பக்குவத்தை புரிந்துணர்வை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

தாய்மடி சுகம்போல.
நட்பின் மடியில்
தாகம் தீர்வது பல

உள்ளுணர்ந்த தோழமையில்
உகத்தையும் வென்றிடும்;
உணராத தோழமைகள்
உள்ளதையும் ஊணமாக்கிடும்.

அவர்களில் ஒருவர் எனக்கு (இம்மையில்) உற்ற நண்பன் ஒருவன் இருந்தான் எனக் கூறுவார்.
(37:51)
மேலும் ஒரு இறை செய்தி
எதுவரையென்றால், (இறுதியாக அத்தகையவன்) நம்மிடம் வரும்போது (ஷைத்தானிடம்) 'ஆ! எனக்கிடையிலும், உனக்கிடையிலும் கிழக்குத் திசைக்கும், மேற்குத் திசைக்கும் இடையேயுள்ள தூரம் இருந்திருக்க வேண்டுமே!" (எங்களை வழிகெடுத்த) இந்நண்பன் மிகவும் கெட்டவன்" என்று கூறுவான். (43:38)

மேலும் ஒரு இறை செய்தி
மனிதர்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும். ஆகவே, இவ்வுலக வாழ்க்கை உங்களை ஒரு போதும் ஏமாற்றிவிட வேண்டாம். இன்னும் (ஷைத்தானாகிய) ஏமாற்றுபவன் உங்களை அல்லாஹ்வை விட்டும் ஏமாற்றி விட வேண்டாம். ( 35:5)



மேலும் ஒரு இறை செய்தி
அப்பால், அவர்கள் தம் உடன்படிக்கையை முறித்து விட்டதால் நாம் அவர்களைச் சபித்தோம். அவர்களுடைய இருதயங்களை இறுகச் செய்தோம். (இறை)வசனங்களை அதற்குரிய (சரியான) இடங்களிலிருந்து அவர்கள் மாற்றுகிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த போதனையின் (பெரும்) பகுதியை மறந்து விட்டார்கள். ஆகவே அவர்களில் சிலரைத் தவிர அவர்களில் பெரும்பாலோரின் மோசடியைப் பற்றி (நபியே!) நீர் தவறாமல் கண்டு கொண்டே இருப்பர்கள். (5:13)


எனவே மேலே சொன்ன இறை வசனங்கள் நல்ல நண்பர்களை தேர்ந்தெடுப்பது பற்றியும் கெட்ட நண்பர்களை வைத்திருந்தவர்களையும் பற்றிய எச்சரிக்கயை சொன்னது. நாம் நல்ல நண்பர்களுடன் சேர்ந்தால் எமது பாதையும் நல் வழி பெரும் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து நேரத்தையும் காலத்தையும் கடத்தி விட்டு வெறும் கைகளோடு மரணித்தால் எமது நிலைகளும் இவ்வாராகிவிடும். அல்லாஹ் நம்மை அதிலிருந்து காப்பாற்றுவானாக.

ரஸலுல்லாஹ்வுக்கு ஹஸரத் ஜிப்ரீல் (அலை) அவர்கள் உபதேசம் செய்தாதக நபிகளார் கூறுகிறார்கள்.
முஹம்மதே! நீர் விரும்பியவர்களுடன் தோழமை கொள்! உனக்கும் அவர்களுக்குமிடையில் பிரிவினை ஏற்படும். நீh விரும்பயிதை செய் .அவர்கள் செய்கின்ற பலனை அவர்கள் அனுபவித்து கொள்வார்கள். (பிஹாருல் அன்வார்)

அதாவது நபிகளாருடைய நண்பர்கள் பலரும் இருந்தார்கள்.அதில் இஸ்லாத்தை எற்றுக் கொண்ட முஸ்லிம்களும், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத காபிர்களும் இருந்தார்கள். மேலும் நபிகளாருடன் நயவஞ்கத்தனமாக நடந்து கொண்டவர்களும் நபிகளாருடன் நட்பு பராட்டி சேர்ந்து கொண்டார்கள். ஆனால் நபிகளாருக்கு முனாபிக்களுடன் சேர்வது மிகவும் கஷ்டமாக இருந்தது அதாவது மனச் சஞ்சலப்பட்டார்கள். நபிகளாரின் இறை செயலுக்கு மாற்றமாக இவர்கள் நடந்து கொண்டார்கள். இதனை மனம் வறுந்திய நபிகளாருக்கு ஜிப்ரீல் (அலை) சொன்ன உபதேசமாக இது விளங்ப்படுகிறது.

எனவே நாம் எவருடன் தோழமை கொண்டாலும் நற்பண்புகளை அவர்களிடமிருந்த கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் தவறான செயற்பாடுகளுடன் நாம் துணை நிட்க கூடாது. அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கான பலனையும் நாம் செய்கின்ற நன்மைக்கான பலனையும் இறைவன் நன்கறிந்தவனாக இருக்கிறான்.
நல்ல நண்பர்களுடன் முடியுமானளவு விட்டு கொடுத்து உதவி செய்து புரிந்துணர்வுடன் நடந்து கொண்டு பகிஸ்கரமாய் வாழ வேண்டும். முடிந்தால் உங்களது நெருக்கமான நண்பர்களோடு உங்களது குறைகளை கேட்டு நிவர்த்தி செய்கின்ற நண்பர்களாக இருப்பீர்களாயின் அதன் வெற்றி இருவரையும் சேர்த்து கொள்ளும். நட்புடனான வாழ்வில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை நாம் எவ்வாறு புரிந்துணர்வாக நடந்து கொள்வது பற்றி கீழே பேசுவோம்.
உலகத்தின் நோக்கம் எவ்வளவு தூரமானதாகவோ குறுகியதாகவோ இருந்தாலும் அவைகளை வெற்றியாக தோல்விகளாக நிர்ணயிக்கும் சக்தியை மனித மனங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கிறான். சிந்தனை என்பது இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப் பெரும் அருள் என்பதை யாரரும் மறுக்க முடியாது. அதனை ஒரு சாதரன விடயமாகவே கருத முடியாது . மனிதன் என்ற பெயரால் அழைக்கப்டுகின்ற ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு கோணத்தில் சிந்தித்தவாரே இருக்கிறது. முற்று முழுதாக சிந்தித்து தானாக நடைமுறைப்படுத்தும் திறனையோ அல்லது இறைவன் அவனது மனதில் இதனையே நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற திணிப்பையோ கொடுப்பதில்லை . இறை அருளோடு , அதிகாரத்தோடு சக்தியோடு மனிதனுக்கு நன்மைகளை தீமைகளை கற்றுக் கொடுக்கிறான். அவை இரண்டுக்கும் இடை நிலையில் மனிதன் சிந்தனை சக்தி பெற்றவனாக வாழ்கிறான். முழுதாக மனிதன் அவனது சந்தினை மட்டும் கொண்டு எதனையும் நிர்ணயிப்பதில்லை. இறைவன் ஒவ்வொரு மனிதனின் தகுதிக்கு எற்றவாறு சக்திக்கு ஏற்வாறு இவனுக்கென்று அவனது செயல்களை கண்காணித்தவனாக இருக்கிறான்.
அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். (55:4)

அல்லது, மனிதனுக்கு அவன் விரும்பியதெல்லாம் கிடைத்து விடுமா? (53:24)

இன்னும், மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. (53:39)

இறை வசனங்கள் கூறியதை கவனித்தீர்கள். மனிதனுக்கு பேச்சையும், முயற்சியையும், கொடுப்பவன் அல்லாஹ்வே! ஆனாலும் மனிதன் விரும்பிய எல்லாவற்iயும் தனது செயற்பாட்டினால் மட்டும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதையும் அல்லாஹ் தெளிவாக கூறிவிட்டான். மேலும் மனிதனின் எல்லா மேலெண்ணங்களும், ஆசைகளும் கற்பனைகளும் நிறைவேறுதில்லை. என்பதையும் விபரித்ததை கண்டிருப்பீர்கள்.
இவ்வாறு ஒவ்வொரு மனிதனிடமும் மாற்று மாற்றான திறன்கள் காணப்படுகின்றன. அவனது பொறுமதிமிக்க இலக்குகளை எட்டிப்பிடிக்க முயற்சித்தவனாக தவன்டவனாக முன்னேறுகின்றான். இதை இறை கற்றுக் கொடுத்த இறைபாதயூடாகவோ அதற்கு மாற்றமாகவோ பயன்படுத்துகின்ற சக்தியை மனிதன் பெற்றிருக்கிறான்.

தௌவீகம்.நேர்மையை இலட்சியமாக கொண்ட மனிதன் இங்கும் வெற்றி பெற்று மறுவுலகிலும் வெற்றியை சுமந்து செல்கிறான். இந்த சிந்தனைகளில் அக்கரையற்றவர்களை நோக்கமற்றவர்களை வாழ்க்கை இழுத்துச் சென்று நரகப்படுகுழியில் தள்ளி விட்டு கைதட்டி சிறிக்கிறது. அறிஞ்சர்களின் கூற்று இப்படி பேசுகிறது. எப்படியும் வாழலாம் எனும் தந்திர மாயத்தை விட்டு விட்டு இப்படியே வாழனும் எனும் மனப் பக்குவத்தை ஏற்படுத்துவதே சிறந்தது. அதுவே வெற்றிக்குறியது.

மனிதன் என்பவன் நிர்வகிக்கும் எனும் பொறுப்பை சுமந்தவன். எமது வாழ்வில் ஏற்படுகின்ற நிகழ்வுகளை நிர்வகித்துக் கொள்கின்ற மனப்பக்குவத்தை தயார் படுத்த வேண்டும். எப்போதுமே எமது இலக்கை நோக்கி நகர்த்துகின்ற போது அவசியத்தை தனது ஆரம்ப கள்ளாக்கி எமது ஆற்றல் இலக்குகளை நடைமுறைப்படுத்த வேண்டும். மாறாக அவசியத்தை விட்டு ஆடம்பரத்தில் கை வைத்து எமது இலக்கினை நோக்கி பயணித்தால் அதன் விளைவு எதிர் மiறாயாக தடம்புரளும் என்பதில் சந்தேகமில்லை.

வரலாற்றில் இலக்கு இல்லாது நிகழ்ந்த எந்த வெற்றியையும் காணவே முடியாது. இலக்கு கொண்ட பலரும் சறுகிச் சறுகி தோல்வி கண்டுதான் வெற்றியெனும் சிகரத்தை கண்டார்கள். ஒரு இலட்சயத்தின் மீது அர்ப்பணிப்புடன் அதன் மீதான முழுக் கவனத்தையும் கூர்மைப்படுத்தி சிந்திக்க வேண்டும். பாதையில் நடக்கின்ற போது பள்ளமும், வெள்ளமும், குளிரும் சூடும், கள்ளும், முள்ளும், இருளும் அபாயமும் இருக்கவே செய்யும். அதனை கவனித்து எதன் வழி சரியாக இருக்கும் என சிந்தித்து நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு எமக்கே உரியது. அதுவே எமது வாழ்வை எழற்சி பெறச் செய்யும்.

நாம் ஏதோ ஒரு பாதையில் தொடர்ந்தாலும் அதை தௌய்வீக அடிப்படையில் கொண்டு சென்றால் அது வெற்றியாக அமையும். எமது நிலையில் நாம் ஏழையாகவோ செல்ந்தராகவோ அறிஞ்சராகவோ பாமரனாகவோ வீரனாகவோ கோழையாகவோ கருப்பராகவோ வெள்ளையாகவோ இது போன்ற ஒட்டுமொத்த அம்சங்களில் ஆரம்ப காலம்தொட்டோ , இடைநடுவிலோ , எதிர்காலத்திலோ உருவாகலாம். எந்த நிலையும் எமக்கு நிச்சயமில்லை. இவைகளைக் கொண்டு மனிதனை அளவீடு செய்கின்ற எண்ணங்களை வளர்க்கவே கூடாது. மனிதர்கள் எல்லோரையும் சமமாக பார்க்கின்ற எண்ணங்களை வளர்த்து கொள்ள வேண்டும்.
இவர்களுடனான எமது வாழ்வில் அன்பாக பன்பாக பழகுவதோடு அவர்களது குணநலன்களை உணர்ந்தவர்களாக எமக்குள் பாதுகாப்பது எம்மை நற்பண்புள்ள மனிதனாக்கும். அப்போதே அல்லாஹ்வும் அவனது அடியார்களும் எம்மை மதிப்பார்கள். இறைவன் தந்தவைகளை கொண்டு திருப்திபட்டு பிறரை திருப்தி படுத்தும் வாழ்வையே இஸ்லாம் அழைக்கிறது. இறைவன் தந்த எந்த செல்வங்களும் அருட்கொடைகளும் தமக்கு மட்டும் சொந்தமானதல்ல. அது பணச் செல்வமாகட்டும், கல்விச் செல்வமாகட்டும் எதுவாகருப்பினும் அதுவும் இறைவன் எமக்களித்த இன்னுமெரு கடமையென்பதை நினைவில் கொள்ள வேண்டும். செல்வத்தை பெற்;றவுடன் மனிதன் இறைவனை நன்றி மறந்தவனாகவும் மனிதர்களை மதிக்காதவனாகவும் மாறி விடுகிறான் . அவையெல்லாம் தனது திறமையாலும் விடா முயற்சியினாலும் பெற்றவை என கர்வம் பேசுகிறான். இவனைப் போன்றவர்களை கவனித்த இறைவசனம்.

மனிதனுக்கு துன்பம் வரும்போது நம்மை அவன் அழைக்கிறான். பின் அவனுக்கு எமது தரப்பிலிருந்து அருட் கொடை எதையும் அளித்த பின் . இது என் அறிவாலும் திறமையினாலும் எனக்கு கிடைத்தது என்கிறான். உண்மையில் அது அவனுக்கு சோதனைப் பொருளாகும். ஆனால் அவர்களில் பலர் அறியமாட்டார்கள். (39:49)

மேலும் ஒரு இறை செய்தி
நீங்கள் சிறுபான்மையினராக இருந்த நேரத்தை எண்ணிப் பாருங்கள். அன்று பூமியில் நீங்கள் பலவீனர்களாய் கருதப்பட்டீர்கள். தம்மை எவரும் தட்டி பறித்துச் சென்று விடக் கூடாது என்று அஞ்சினீர்கள். பின் அல்லாஹ் உங்களுக்கு புகலிடமளித்தான். நீங்கள் நன்றி; செலுத்தும் பொருட்டு இதையெல்லாம் செய்தான்.

செல்வம் வரும் போகும் அது இன்று உன்னிடம் நாளை எவரிடமோ என்று யாருக்குமே தெரியாது. நாம் எமது வாழ்க்கையில் அனுபப்படுகின்ற காட்சிகளை இறைவன் எச்சரிக்கிறான். உலகில் நாம் கண்டிருப்போம் மனிதர்களால் ஒதுக்கப்பட்டு கருதப்பட்டவர்கள் அல்லாஹ்வின் உதவி ஏதோ வழியில் கிடைத்திருக்கும் அதைக் கண்டு மனிதர்கள் தனது பழமை நிலையை மறந்து விடுவார்கள். ஏன் அவர்களுக்கு உதவியவர்களைக் கூட மறந்து விடுவார்கள். பணத்திமிரும் கர்வமும் கொண்டவர்களாக பெருமை கொள்வார்கள். அவர்கள் இது எனது திறமையாலும் அனுபவத்தினாலும் நான் கஷ்ட்டப்பட்டு பெற்றுக் கொண்டவைகள் என தன்னை உயாத்திக் கொள்வார்கள். தன்னோடு தோழமை கொண்டவர்களை மறந்து விடுவார்கள். அதன் பின் நாம் எதை பேசினாலும் அது தவறாகவே புரிவார்கள். நாம் எதை செய்தாலும் அதில் குறை காண்பார்கள். எமது உறவை தள்ளிவிட எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என எதிர் பார்த்து இருப்பார்கள். நாம் அன்பாக பலது சொல்லிருப்போம் அதனையெல்லாம் மறந்து விடுவார்கள். வேதனையில் எம்மையறியாது ஏதும் தவறு இடம்பெற்றாலும் அதனை தங்களுக்கு சந்தர்ப்பமாக பயன்படுத்தி கொண்டு எம்மை விட்டு விரண்டோடவே முயற்சிப்பர்கள். எமது மன்னிப்புக்களை ஏற்க மாட்டார்கள். இவர்களை அல்லாஹ்வின் எச்சரிக்கை கடுமையாக விமாசிக்கிறது.
மேலும் ஒரு இறை செய்தி
அத்தகையோர் உலோபித்தனம் செய்ததுடன் மற்றவர்களையும் உலோபித்தனம் செய்யத் தூண்டி அல்லலாஹ் தன் அருட் கொடைகளை அவர்களுக்கு கொடுத்ததை மறைத்து கொள்கிறார்கள். அத்தகைய நன்றி கெட்டவர்களுக்கு இழிவான தண்டனையை நாம் தயார் படுத்திருக்கின்றோம்.
(4:37)
மேலும் ஒரு நபிமொழி
நபி பொருமானார் (ஸல்) சொன்னார்கள். இவ்வுலகத்தில் மூன்று விடயத்திற்கு தண்டனை உடனடியாக வழங்கப்படும். 1.பெற்றொரை துன்புறுத்தல் 2. மக்களுக்கு தீங்கிழைத்தல் 3. மற்றவர் செய்த நற்செயல்களுக்கு நன்றி மறத்தல். (பிஹாருல் அன்வார்,ஆமாலி தூசி)

தங்களுக்கு கிடைத்த அருளை மறந்து விடுவது மட்டுமல்ல. அவர்களுக்கு உதவி செய்து முன்னேற்றியவர்களையும், அறிவுரை செய்தவர்களையும் இவர்கள் கஞ்சப்படுத்திடுவார்கள். விரக்தியை உண்டாக்கி விடுவார்கள். அவர்களை ஒரு போதுமே நாம் கவனத்தில் கொள்ளவே கூடாது. அல்லாஹ்வுக்குகாக நேசித்து அவனுக்காக கொடுப்பவர்கள் யாரையும் யாருடைய புகழையும் எதிர் பார்க்கவே மாட்டார்கள். அவர்கள் கொடுத்து கெட்டாலும் கொடுத்து கொண்டுதான் இருப்பார்கள். எத்தனை பேரில் அவர்கள் தோல்வி கண்டாலும் அவர்கள் அல்லாஹ்வின் முன்னிலையில் வெற்றியை எதிர் பார்ப்பார்கள். குடித்த போதiயை விட இவர்களுக்கு கொடுத்த போதை பெரிதாகவே தெரியும். கொடுக்க வில்லையென்றால் அவர்களுக்கு நிம்மதி இருக்காது. அவர்களுக்கு எதையோ இழந்ததை போல் இருக்கும். இவர்களே அல்லாஹ்வை நேசிக்கிறார்கள். அல்லாஹ்வும் அவர்களை நேசிக்கிறான். அல்லாஹ் சிலரது தேவைகளை அவன் நேரடியாக கொடுக்கிறான். சிலரது தேவைகளை பிறர் மீது பொறுப்பு சுமத்தியே செல்வந்தர்களாக்கினான். அதனை மறந்து வாழ்கின்ற மனிதனை மறுமையிலும் பார்க்க மாட்டான். என்ற எச்சரிக்கையையும் அதிகமாக சொல்கிறது. தேவை என்கின்ற போதே தேவையுடைவர்களை கவனிக்க வேண்டிய கடமையை மனிதன் மறந்து வாழ்வது நற்பெயரை பாதுகாக்குமா இறைவனிடமோ மனிதனிடமோ!?

மேலும் ஒரு இறை செய்தி
எந்த மனிதனுக்கு தன் அருட் கொடைகளை நிறைவாக கொடுத்து மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பை அவன் மீது சுமத்தி விடுகிறானோ! அவன் அவற்றை அதை சரிவர செய்யட்டும். அவ்வாறின்றி சடைவும் வெறுப்பும் அடைவராயின் அவர் தனக்கு கிடைத்த அருளை இழப்புக்குள்ளாக்கி விட்டார்.

எப்போதும் குறை கூறி பெரிது படுத்தி வெறுப்படையச் செய்பவர்கள் இன்றைய உலகில் அதிகம். அதற்காக நாம் ஒரு போதும் அல்லாஹ்வுக்காக தனது செல்வத்தை பயன் படுத்த சோர்வடையக் கூடாது. நாம் எதனை செய்கிறோம் என்பதை இறைவன் மட்டும் அறிந்தாலே போதும். சிலர் பேசுவார்கள் நான் எதை செய்தாலும் மனிதர்கள் என்னில் குறையே காண்கிறார்கள். செலவு செய்கின்ற என்னை குறை காண்கிறார்கள். என்னிடம் அநியயாம் செய்கிறார்கள். என் மீது பொறாமை கொள்கிறார்கள். மாறாக பதுக்கி வைத்திருப்பவர்களை பாதுகாத்து அவர்களின் செல்வத்தை வளர்ககிறார்கள். என்று கூவார்கள். அவர்களை பார்த்தே இறைவன் மேல் வசனத்தில் நல்லுபதேசம் செய்கிறான்.

எனவே பணத்தை ஒரு போதும் ஒரு பெரிய விடயமாக அதை மட்டும் நம்பி வாழ் முடியாது. மாறாக அதனை விட்டு விரண்டோடி அதன் அவசியத்தை மறுத்து வாழவும் முடியாது. அது வாழ்வின் பகுதியில் ஒரு தேவைக்காக பயன் படுத்தும் பொருளாகும். பணம் என்பது விரும்மியோ விரும்பாமலோ ஒவ்வொரு மனித வாழ்விலும் செல்வாக்கு செலுத்துவதை இன்றைய உலகில் தவிர்க்க முடியாது. அதன் தேவையை புரிந்தும் அதன் விபரீதங்களை விளங்கியும் வாழ்க்கை செலவை நடாத்துகின்ற போது இறை பொறுத்தத்தை வென்றிடலாம்.
எவரிடம் பண ஆதிக்கம் இருக்கிறதோ அவர்களிடம் கொடூர பண்புகளே குடியிருக்கும். பணத்தினால் எதனையும் சாதித்திடலாம் என்கின்ற மமதையில் வாழ்பவர்கள் இவர்கள். அன்பு தொடக்கம் அதிகாரம் வரை இவர்கள் பணத்தை பயன் படுத்தி வெள்ளனும் என்ற தவறான எண்ணம் கொண்டவர்கள். பணமே அவர்களுக்கு உதவி. தன்னம்பிக்கை அற்றவர்கள். அன்பைப் பெற்று அன்பை கொடுக்கலாம் என்ற அனுபவமில்லாதவர்கள். பணம் இல்லையென்றால் இவர்களிடம் யாருமே இருக்க மாட்டார்கள். தேவை முடிய எல்லாரும் பிரிந்து விடுவர்கள். பணம் என்பது ஆக்கவும் அழிக்கவும் முக்கிய காரணியாக இன்றைய உலகம் மாற்றிருக்கிறது.
எப்போதும் மனங்களை மனங்களை கொடுத்து வாங்குங்கள். நீங்கள் இறை நற்பண்புள்ள மனிதர்களாக அன்பு நேசம் உதவி போன்றவைகளை பாரிமாறக்கூடியவர்களாக இருங்கள். இந்த உள்ளங்களும் நிலைக்கும். மாறாக பணத்தினாலோ அதிகாரத்தினாலோ பெறப்படும் எந்த செல்வாக்கும் நிலையானதில்லை.

மேலும் ஒரு இறை செய்தி
அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர், அதைத் தொடர்ந்து அதைச் சொல்லிக் காண்பிக்காமலும், அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கின்றார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு. இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள். ( 2:262)
எமது வாழ்வியலில் நாம் அன்பை பண்பை விட்டுக் கொடுப்பை கொண்டு மனித மனங்களை உருவாக்க வேண்டும். பெற்றோர் தொடக்கம் சமூதாயம் வரை எமது மனித நேயத்தினை வென்றவர்களாக இருக்கவேண்டும். நாம் செய்கின்ற உதவிகளை மற்றவர்கள் அறியாது செய்வது இறைவனுக்கு மிக விருப்பமானதாகும். மேலும் எமது உதவிகளை பெருபவர்களுக்கும் அது சந்தோஷமளிக்கும். மாறாக செய்கின்ற உதவிகளை பிறர் பெருமைக்காக அவர்கள் பார்க்கின்றவாறு செய்தால் அது இறைவனிடம் எவ்வித பிரயோசனமும் இன்றி போய் விடும். உதவிபெருவரை மற்றவர்கள் தரக்குறைவாகவும் கருதி விடுவர்கள் அதனால் அவரை சங்கடப்படுத்திடும். நோவினை படுத்திடும். யாருக்கு எவ்வளவு செய்கிறோம் என்பதை விட யாருக்கும் எதுவும் செய்யாதவர்களாக இருந்தாலும் எமது மறுவுலகம் வினா எழுப்பிக் கொண்டே நிட்கும்.
மேலும் ஒரு இறை செய்தி
அவர்கள் எத்தகையவர்கள் என்றால் அல்லாஹ்வுடைய திருநாமம் கூறப்பட்டால் அவர்களின் இதயங்கள் பயத்தினால் நடுங்கும். அவர்களுக்க ஏற்படும் கஷ்டத்தை பொறுமையுடன் ஏற்றுக் கொள்வார்கள்.மேலும் நாம் அவர்களுக்களித்ததிலிருந்து தானமும் செய்வார்கள். (அல்ஹஜ் :34,35)

இதுவே வாழ்க்கையின் யதார்த்த நிலையயை சொல்கின்ற வசனமிது. அல்லாஹ்வின் பெயர் கேட்டால் அவர்கள் இதயங்கள் அஞ்சி அவனை ஞாபகமூட்டும், மேலும் தனக்கு ஏற்பட்ட துன்பத்திலும், துயரத்திலும் பொறுமையாக அவன் ஞாபகத்தில் இருப்பார்கள். அவனை நன்றி மறந்து விட மாட்டார்கள். அத்துடன் தன்னிடமுள்ளதைக் கொண்டு அல்லாஹ்வுக்காக தர்மம் செய்வார்கள். அவர்களையே அல்லாஹ் மூஃமீன்கள் என புகழ்கிறான். தான் ஆயிரம் உழைத்தால் அதைவிட குறைவாக இருப்பவனுக்கு தர்மம் செய்வதை இந்த வசனம் சொல்கிறது. அல்லாஹ் தங்களுக்கு கொடுத்ததிலிருந்து என்று சொல்கிறான். நாம் நம்முடைய வருமானம் நமக்கே போதாது என்று சொல்வதை விட்டு உள்ளதைக் கொண்டு பொதுமாக்கிக் கொண்டு எம்மிடமிருப்பதைக் தர்மம் செய்து அல்லாஹ்வின் புகழைப் பெருவோமாக.

வாழ்க்கை வட்டத்தில் எமது செயல்களை அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக தயார் செய்து கொள்வோம். அதனூடாக மனித அன்பும் இறை அன்பும் கிடைக்கும். அது மனிதர்களிடமிருந்து கிடைக்கவில்லையென்றாலும் கவளைபப்ட ஏதுமில்லை. அல்லாஹ் என்ற நாமத்தை நம்பி வாழ்பவனுக்கு இது போன்றவைகளை எதிர் பார்க்கவே மாட்டான். நாம் எப்படி நன்றாக வாழ்ந்தாலும் எம்மை நோக்கிய விமர்சனங்களும் முரண்பாடகளையும் மனித வாழ்வில் விரும்பியோ விரும்பாமலோ சுமந்துதான் ஆகவேண்டும். முரண்பாடுகளுக்கும் உடன்பாடு கொள்பவர்களையே இஸ்லாம் விரும்புகிறது.

மேலும் ஒரு இறை செய்தி
நீங்கள் எந்த விஷயத்தில் கருத்து வேற்றுமை கொண்டிருக்கிறீர்களோ, அதன் தீர்ப்பு அல்லாஹ்விடமே இருக்கிறது. அத்தகைய தீர்ப்பு வழங்குபவன் தான் அல்லாஹ் என்னுடைய இறைவன் அவன் மீதே நான் முற்றும் நம்பிக்கை வைக்கிறேன் அன்றியும் அவன் பக்கமே நான் திரும்புகிறேன். (42:10)
என்ற நம்பிக்கையோடு கருத்து வேறுபாட்டை விட்டு புரிந்துணர்வில் நம்பிக்கையை வளர்த்து கொண்டால் சரி. நாம் வாழ்கின்ற எமது சூழலில் முரண்பாடுகளை தவிர்க்க முடியாது. நாம் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வதில்தான் எமது உறவு வளரும். தான் மனதை கொடுத்து மனதை வாங்கி விட்டேன் என்று தானாக ஏமாந்து விடுவார்கள். அதனை நாம் ஒரு போதும் தவறென்று கூறவே முடியாது .அது அவரை ஏமாற்றி கொண்டவர்களின் தவரே! மனித மனங்களை எம்மோடு இருக்கிறதா என்று மனங்களை கொண்டு பரீட்சை செய்யுங்கள். பணத்தையோ அதிகாரத்தையோ கொண்டு பரீட்சை செய்து விடாதீர்கள். மனம் கொடுத்து மனம் வாங்குகிறது என்று சொல்கிறீர்களே அது என்ன என்று உங்களுக்கு தோன்றலாம். இது நம்பிக்கை, விசுவாசம், அன்பு, உதவி, விட்டு கொடுப்பு புரிந்துணர்வு, பரஸ்பரம், ஏக்கம், தாக்கம், தேடல் போன்ற ப+க்களால் பூத்த ப+ங்கவனமே மனப் பாமாற்றம். இது தாய்க்கும் பிள்ளைக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், சகோரர்களுக்கும் சகோரர்களுக்கும , நண்பர்களுக்கும் நண்பர்களுக்கும், முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலும் ஏற்படும் நம்பிக்கையே. இவைகள் அன்பு கொண்ட இரு உள்ளத்திலும் குடியிருக்கும். ஒரு உள்ளத்தில் இருக்க மறு உள்ளத்தில் இல்லையென்றால் அது சரியான புரிந்தணர்வு கொண்ட உறவாக இருக்காது. ஏதோ ஒரு நேரக்கடத்தலாக விளையாட்டாகவே இருக்கும்.

இவ்வறான எமது வாழ்வில் தோன்றுகின்ற முரண்பாடுகளை எப்படி உடன் பட்டுக் கொள்வது? உலகிய வாழ்வில் ஒன்று மற்றொன்றுக்கு முரண்பாடாகவே தோன்றுகிறது. எதில் முரண்பாடில்லை? இரவுக்கு பகலும், நன்மைக்கு தீமையும், நல்லவருக்கு கெட்டவரும் , அன்புக்கு வம்பும், நேசத்திற்கு வேஷமும், வெற்றிக்கு தொல்வியும், முரண்பாடுகளே!
முரண்பாடுகள் நன்மையாகவோ தீமையாகவோ அவரவர் சிந்தனைக்கு தோன்றும். அது நன்மையாக வரும்போது அதன் தீமை தெளிவுபடுத்தப்படுகிறது. தீமையாக வரும்போது அதன் நன்மை கற்றுக் கொடுக்கப்படுகிறது. எனவே வாழ்க்கையில் முரண்பாடுகள் கூட முன்னேற்றத்திற்கான ஒரு வழிகாட்டலாக அமைப்பது எமது கையில்.

தாய்க்கும் பிள்ளைக்கும், கணவனுக்கும் மனைவிக்கும், சகோரர்களுக்கும் சகோரர்களுக்கும் நண்பர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆசிரியருக்கும் ஆசிரியருக்கும் ஆலிமுக்கும் ஆலிமுக்கும் இப்படி ஒருவருடன் மற்றெருவருக்கு தோன்று கருத்து வேறுபாடுகளே! முரண்பாடுகளாக காட்டப்படுகிறது. இவர்களுக்கிடையில் விட்டு கொடுப்பும், புரிந்துணர்வும், பரஸ்பரமும் தொடர்படுமாயின் அதன் விளைவுகளை அறிந்தவர்களாக உடன் பட்டிலாம். மண்ணறை செல்லும் வரை முரண்பட்டவர்களும் முரண்பாடுகளும் இருந்த கொண்டுதான் இருக்கும். வாழ்க்கையில் ஆயிரம் அர்த்தம் இருப்பது போல் அதில் ஆயிரம் பிரச்சனைகளும் முரண்பாடுகளும் இருக்கும். அதனை எப்போதும் பேசித்தீர்க்க பழக வேண்டுமே தவிர அதனை பெரிது படுத்தி பிரச்சனையாக்கக் கூடாது. இறைவன் ஆக்கபூர்வமான மூளையை தந்திருக்கிறான். அதனை சரியாக பயன்படுத்தி சிpந்தித்து நான் நினைப்பது என்ன நீ நினைப்பது என்ன? என்பதை பேசித் தீர்பப்பதுவே சிறந்தது. எப்போதும் நாம் எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் சரியாக அமைவதில்லை. வாழ்க்கையை இனிமையாக வாழ்வதற்கு இதயத்திலிருந்து நேசம் நிறைந்த சிந்தனையே சிறந்தது. அதனையே மனதாபினம் என்கிறோம்.

முரண்பாடுகளை முரண்பாடாக பார்ப்பிதில்தான் பிரச்சனை உருவாகிறது.
நுஎசல யுஉவழைn hயள வைள சுநயஉவழைn முரண்பாட்டை தெளிவு படுத்தும் நிய+ட்டனின் கோட்பாடு!
அவர் மேற் கொண்ட முரண்பாடுகளான நேர் ஏற்றமும் மறை ஏற்றமும் சமன்பாடக்கியே உடன்பாடக்கினார். இருள் சூழ்ந்த இரவை வெளிச்சமாக்கினார். இறைசக்தியான மறையும், நேரும் நிய+ட்டனுக்கு வெற்றியளித்தது இதன் காரணத்தால் முழ சமூதாயமும் பயன்பெருகிறது. ஆனாலும் இவ்வாறு பயனிருக்கின்ற நிலையில் விஞ்;ஞான வளர்;ச்சியாலும், காடழிப்பு செயல்காளாலும் உலக கால நிலைமாறி அதிலும் முரண்பாடு தோன்றுகிறது என்றால் நிய+ட்டனின் கோட்பாடுகள் முன்னே கூறியது சரிதானே! எனவே முரண்பாடு என்கின்ற ஒரு விடயம் ஒரு அறிவு சார்ந்த விடயமே தவிர அதை பிரச்சனையாக பார்க்கவே பரிவினை தோன்றுகிறது. ஆனால் சிலர் இருப்பார்கள் எப்போதுமே மற்றவரின் செயலிலும் சொல்லிலும் முரண்பட்டவர்களாகவே இருப்பாகள். அதற்கான காரணங்கள் இதுவாக இருக்கலாம்.

1. அது அவர்களின் சுபாவம்
2. அவர்களின் சுயநலத்திற்காக
3. எமது செயலிலும் சொல்லிலும் அவர்களுக்கு நம்பிக்ககையின்மை
4. அவர்களிடம் எமது கருத்துக்கான மாற்று கருத்து இருப்பதால்
5. எம்மை அவமானப்படுத்தி பழிவாங்கும் எண்ணம்

இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவர்களின் கருத்தை மதிப்பளித்து கேட்டு சிந்திக்க வேண்டும் தவறாக தெரியும் நேரம் விட்டு விட்டு சரியாக புரியுமாயின் எடுப்பதுமே சிறந்தது . மற்றவர்களின் முரண்பாடுகளுக்காக பயந்து எமது உணர்வை உரிமையை இழக்க முடியாது. சில நேரம் அதனை கட்டுப்படுத்தியாக வேண்டும் என்பதை இறை வசனமும் ஏவுகிறது. எதனை முக்கியம் முக்கியமற்றது என்பதை நாமே தீர்மாணிக்க வேண்டும். ஒரு முரண்பாடன விடயத்தை எடுத்தால் பொறுமையாக அதை பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டும். அதன் பயன், விபரீதங்களை சிந்திக்க வேண்டும்.
மேலும் ஒரு இறை செய்தி
இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள் நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள்(அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள் உங்கள் பலம் குன்றிவிடும் (துன்பங்களைச் சகித்துக் கொண்டு) நீங்கள் பொறுமையாக இருங்கள் நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கின்றான்.
வாழ்க்கiயில் எம்மைச் சுற்றி நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே இருக்கிறார்கள். நல்லவர்களை தேர்தெடுப்பதும் கெட்டவர்களை அளவாக வைத்துக் கொள்வதும் எமக்குறிய பொறுப்பு. முரண்பாடு உருவாகின்ற போது சம்பந்த பட்டவர்களுடன் மனம் விட்டு பேசி தீர்க்க வேண்டும். அத்துடன் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஈடுபாடு இருந்தால் பிரச்சனைகள் தீர்வாக மாறும். வெற்றியும் புகழும் உங்களை தேடி தானாக ஓடி வரும்.
மேலும் ஒரு இறை செய்தி
மேலும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்து பாருங்கள்.! நீங்கள் ஒருவர் மற்றவருக்கு விரோதியாக இருந்த நேரத்தில் அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான். ( ஆல இம்ரான் :103)

மேலும் ஒரு இறை செய்தி
நிச்சயமாக விசுவாசிகள் ஒருவர் மற்றொருவருக்கு சகோதரர்களே1. ஆகவே சண்டையிட்டு கொள்ளும் உங்கள் இரு சகோதர்ர்களுக்கிடையில் சமாதானத்தை ஏற்படுத்துங்கள். நீங்கள் அருள் பாலிப்பதற்காக அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். (அல் ஹ_ஜ்ராத் :10)

மேல் குறிப்பிடுகின்ற இறைவசனங்கள் முரண்பாடுகளையும் அதன் விளைவுகளையும் தீர்வையும் செய்தியாக அறிவிக்கிறது.

எனவே முரண்பாடுகளை அதில் தொடர்புடையவர்கள் மாத்திரம் தலையீடு செய்வது சிறந்தது. காரணம் தங்களது பிரச்சனைகள் தங்களோடு தீர்வு காண்பதனால் எமது செயற்பாடுகள் பிறரை பாதிக்காது விடும். மூன்றாம் நான்காம் நபர்களை முடியாத போது மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கிறது. நாம் வாழ்கின்ற சூழலில் கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளை, சகோதர சகோதரிகள், நண்பர்கள், உறிவனர்கள், சொந்தங்கள், தொழில் புரியும் இடங்கள் போன்ற இடத்தில் உருவாகின்ற கருத்து வேறுபாடுகளே பிரச்சனையாக உருவாகிறது. இவகைளை நாம் புரிந்துணர்வோடு நடந்து கொண்டால் வெற்றிதான். முரண்பாடுகளின் போது நீதியரசர்களாக கடைமை புரிவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

மற்றவர்களின் ஆலோசனைகள் வாழ்வில் இருக்க வேண்டும். அதற்காக எதற்கொடுத்தாலும் பிறரை தேடுவது எமது அறிவுத்திறனை சிந்தனை தன்மையை மங்கவைத்திடும். மேலும் பிறருக்கு சுமையாகவோ தலைவலியாகவோ எமது ஆலோசனை நேரங்கள் அமையக் கூடாது. பிறர் மூளையை விட எமது மூளையும் சக்தி கொண்டது என நாமே நிருபித்து காட்ட வேண்டும். சிந்திக்க சிந்திக்க புதுப்புது அறிவும், தீர்வும் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ஆண், பென் பிரிவினைகளின் போது ஆணதிக்கம் என்பது பிரயோகிக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது. அது சில நேரங்களில் இல்லையென்பதற்கில்லை. பெரும்பாலும் வெறும் பென்மையை உணராதவர்களின் குற்றச் சாட்டே தவிர வேறில்லை. ஆணதிக்கம் என்பது இஸ்லாம் அனுமதித்த ஓர் விடயமல்ல. இஸ்லாம் ஒன்று சேர்ந்த குடும்பத்தையும், அதை தொடரும் சமூக வளர்ச்சியையும் வழி நடாத்தும் பெறுப்பை, ஆளுமையை இஸ்லாம் கடைப்பிடிக்க சொல்கிறது. ஆணும் பென்னும் சமம் எனும் இஸ்லாம் ஆளுமை என்ற கட்டமைப்பை ஆணிடம் தங்கிருப்பதை உணர்த்துகிறது. ஆணதிக்கம் என்ற மமதையை சிலர் வளர்த்து விட்டு அது சில இடங்களிலும் காரியாலையங்களிலும் தலை தூக்கிருக்கிறது. நாம் எமது சூழலில் ஏனைய சூழலிலும் கண்டிருப்போம் அன்பையும் பாசத்தையும் ஒழுக்கத்தையும் அறிவையும் ஆளுமையாக கொண்டவர்களே சமூகத்தில் சிறந்து வெற்றி பெருகிறார்கள். சில நேரத்தில் ஆணதிக்கம் என்பது பதவித்திமிரும், வழிநடத்தப்படும் சிக்கலான கட்டமைப்பாகவும், விரக்தியாகவும் இருக்கலாம். எனவே ஆணதிக்கம் என்பது ஆண்களின் மீது சுமத்தும் பழியேதான்.

தவறுகளை தவறாக ஏற்றுக் கொள்ளும் பண்புகள் எப்போது உருவாகிறதோ அப்போதுதான் மீண்டும் தவறுகள் இடம்பெற வாய்ப்பில்லை. தவறுகளை செய்த மனிதன் அதனை மறைப்பதற்காக தவறுக்கு மேல் தவறு செய்தவனாக தப்பு செய்கிறான். எந்த மனிதனுக்கென்றும் அவனுடைய உணர்வுகளை உரிமைகளை இஸ்லாம் மதிக்கிறது. எப்போதும் இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் பக்கமே தனது நீதித்தராசை நீட்டி தாழ்த்தியவாறு காத்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுக்கென்று சுயமரியாதை இருப்பதை மதிக்க ஒருராவது இருக்கவே செய்வார்கள். இஸ்லாம் இதை மிக கணண்pயமாகவும் அவதானமாகவும் கையாளுகிறது. ஒரு மனிதனை அவமானப்படுத்தல், வீண்பழி சுமத்தல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல், அவனது மானத்தை மாசுபடுத்தல் போன்ற இழிவுச் செயல்களுக்கு பாரிய தண்டனையை மறுமையில் நிர்ணயிப்பதோடு இந்த உலகத்தில் பழிவாங்கும் உரிமையையும் அனுமதித்திருக்கிறது.
மேலும் ஒரு இறை செய்தி
நீங்கள் பதிலக்கு பதில் துன்புறுத்தக் கருதினால் உங்களை அவர்கள் துன்புறுத்திய அளவே அவர்களை துன்புறுத்துங்கள். (அதற்கு அதிகமாகன்று) உங்களை துன்புறுத்தியதை நீங்கள் பொருந்திக் கொண்டாலோ அது மிக அழகான நன்iயுடைய பொறுமையாகும். (அந் நஹ்ல்126)

ஒரு மனிதனை தங்களது வெளிப் பார்வையைக் கொண்டு மட்டும் இடை போட்டுவிடக் கூடாது. அல்லாஹ் அவனுக்கென்று திறமைகளை, வித்தியாஷமான முயற்சிகளை வைத்திருப்பான். பிறரின் குறைகளைப் பேசி மானத்தை காற்றில் பறக்க விட்டு நாம் அடையும் சந்தோஷம் என்ன? அதனை விட தவறுகளை உரிய முறையில் அன்பாக சுட்டிக்காட்டி அறிவுரை செய்தால் நன்றாக இருக்குமல்லவா? இவ்வாறான நிலைகள் எமக்கு நடந்தால் எமது மன வேதனை எப்படி இருக்கும் என்பதை நாம் ஒரு நிமிடம் சிந்தித்து இருக்கிறோமா? மேலே அனுமதித்த குர் வசனத்தை கவனித்தோம். நாம் பிறருக்கு எவ்வளவு துன்பத்தை துயரத்தை கொடுத்திருக்கிறோம்? எவ்வாறு எங்காளல் ஒரு மனிதரை துன்புறுத்த முடியுமோ அவ்வாரெல்லாம் துன்புறத்தி இருக்கிறோம். எவ்வாரெல்லாம் அவனை அவமானப்படுத்த முடியுமோ அவ்வாரெல்லாம் அவமானப்படுத்தி இருக்கிறோம். இந்த நிலையை அவனது மனதின் சுமையயை, கஷ்டத்தை புரிந்து கொண்ட அல்லாஹ் அவனுக்கு பாதிக்கப்பட்டவனுக்கு பழிக்குப் பழி வாங்க அனுமதி கொடுத்திருக்கிறான். ஆனாலும் அல்லாஹ்வுக்காக எங்களை பொருந்தி வாழும் மனிதனுக்கு நாம் என்ன கைமாறு செய்யப் போகிறோம்.? அவனுடைய பொருமையை அல்லாஹ் அழகான ஒன்றாக அழங்கரித்து காட்டுகிறான்.
மேலும் ஒரு நபிமொழி
இப்னு மஸ்வூத் அறிக்கிறார்
நீங்கள் மூன்று பேர் ஒன்று கூடி இருக்கும்போதும் ,மக்களுடன் நிறைந்திருக்கும் போதும் மூன்றாமவரை விட்டு.இரண்டு பேர் மட்டும் ரகசியமாக எதையும் பேச வேண்டாம்.ஏனெனில் அது அவரக்கு வருத்தத்தை (கவளையை) உண்டாக்கும். ( முஸ்லிம்,புகாரி, நஹ்ஜூல் பலாஹா)

இரண்டு பேர் தவிர்ந்த ஏனைய மூன்று நான்காம் நபர்களின் உரிமைகளையும் மதிக்கிறது. ஒவ்வவொரு மனிதனுக்கும் ரகசியமிருப்பதை இஸ்லாம் வெறுக்க வில்லை. ரகசித்தினால் மற்றவர் பாதிக்கப்படவதை இஸ்லாம் வெறுக்கிறது. பலர் கூடிருக்க இருவர் மட்டும் பேசியாக வேண்டுமாயின் அதை மறைவிலோ அல்லத வேரோரு நேரத்திலோ ஏற்படுத்திக் கொண்டால் நன்றாகருக்கும் என்கிறது. இல்லையென்றால் அதே நேரத்தில் பேசியாக வேண்டுமென்ற நிட்பந்தம்; ஏற்பட்டால் எழுந்து சென்று பேசிக் கொள்வதையே சிறப்பாகும். மற்ற மனிதனின் கவளையையும், அவனது வேதனையையும் தெளிவு படுத்துகிறது. அந்த வேதனை இருக்கிறதே எதற்குமே சமமாகாது. தனிமையில் ஒதுக்கப்பட்டவர் எனக்கு இவர்களுடன் பேச எனக்கு தகுதியில்லையா? அல்லது என்னை பற்றி ஏதாவது பேசுகிறார்களா? இல்லை யாருக்காவது சதி செய்யப்போகிறார்களா? இவ்வாறான பல சந்தேகங்களும், வேதனைகளும் ப+கம்பமாக வெடித்து அவை சுனாமியாக மாறும் அதுவே பிரிவாக , பிரச்சனையாக, கொலையாக, மாறி கொடுமைகளாகும். அதனால் இஸ்லாம் பாதிக்கப்பட்டவனின் துன்பத்தை , வேதனையை பிறரும் புரிந்து கொள்ள வேண்டும் என முயற்சியடுக்கிறது.
ஒரு மூஃமினின் உள்ளத்தை நோவினை செய்வது ஒரு சாதரண விடயமல்ல அது இறைவனுடைய அர்ஷை தங்கு தடையின்றி சென்றடையும். மனதைத் துன்படுத்தி வேதனை படுத்துவதை நாம் அந்த நிலமையிலிருந்து உணர்ந்தால் மட்டுமே புரியும்.
மேலும் ஒரு இறை செய்தி
நபியே தர்மத்தையும் , நன்மையானவற்றையும் , மனிதர்களுக்கிடையில் சமாதானத்தை செய்த வைப்பதையும் தவிர. அவர்களின் இரகசியப் பேச்சில் பொரும்பாலனவற்றில் எந்த விதமான நலனுமில்லை. ஆனாலும் எவர் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை தேடி இதைச் செய்கிறாரோ! அவருக்கு நாம் மகத்தான நற்கூலியை வழங்குவோம். (4:114)


ரகசிய பேச்சுவார்த்தைகளை அல்லாஹ் எவ்வாறு வர்ணித்தான் என்று சிந்தித்திருப்பீர்கள். மற்றவரை துன்பப் படுத்தி நாம் பேசுகின்ற இரகசியத்தையும் அல்லாஹ் அறிந்தவன்தானே அதனால் அவன் அதில் எவ்வித பிரயோசனமுமில்லை என்கிறான். வீண் பேச்சுக்களை தடுத்து எமது நாவுகளை பாதுகாப்போமாக. வாய்க்குள் நாக்கு அமைந்துள்ளதால் அதனை கட்டுப்படுத்தி பேணவேண்டிய பொறுப்பு நமது மூளையை சாறும். பல்வேறு சந்தர்ப்பத்தில் நாவு பேசத்துடிக்கும். தேவையற்ற விடயத்திலெல்லாம் குறுக்கிட்டு அவாமனப்டுத்தும். எனவே அதனை இதயத்தினால் கட்டுப்படுத்தி அதன் நிலமை சரிவர பேணவேண்டும்.

மரவேலை செய்யும் தச்சான் ஒரு முறை மரத்தை வெட்டுமுன் மீண்டும் மீண்டும் அளந்து கொள்வான். ஏனெனில் அளவு சரியில்லை என்றால் வெட்டியது வீணாகும். அதே போல் எமது நாவை நாம் பேசுவதற்கு முன் ஒரு முறைக்கு இரண்டு முறை பரீட்சிக்க வேண்டாமா?

நாவு என்பது ஐவாய் மிருகம் போன்றது அது எதையென்றாலும் தின்று விடும் எனவே அதனை பாதுகாகப்பாக வைத்திருப்பது எமது கடமையென நபி மொழி கூறுகிறது. மேலும் நாவையும் தனது மர்மஸ்தானத்தையும் பாதுக்கும் மனிதனுக்கு நான் சுவனத்தை பெற்றுக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். என்ற நபி மொழிகளும் எம்மை பார்த்து கூறியிருக்கிறது.

நாக்கை நீ என்றும் கைதியாக வைத்துக் கொள்! உனக்கு என்றும் விடுதலை என்கிறது ஜெர்மெனிய பழமொழி. மேலும் நல்லதொரு உறுப்பென்றால்; அது நாக்குதான். அதே போல் கெட்டதொரு உறுப்பென்றாலும் அதுவும் நாக்கும் என்றும் நபி மொழிகள் கூறியிருக்கிறது. எல்லா உறுப்புகளையும் இரண்டாக படைத்த இறைவன் ஏன் நாவை ஒன்றாக படைத்தான். ஒன்றை பேசும் முன்: இரண்டு கண்களால் சரியாக பார் என்றும், இரண்டு காதுகளால் சரியாக கேள் என்றும்தான். படைத்திருக்கலாம் .


நாவு என்பது சிறு விடயத்தை கூட பெரிது படுத்தி உலகப் பேரையும் உண்டாக்கிடும். அதனை சரியாக பயன்படுத்தா விட்டால் நாமே எம்மை பற்றி கைசேதப்படும் நாள் நிச்சயம் எற்படும்.

நாம் மேற் குறிப்பிட்டது போல் மனிதனை மனிதன் ஏசும் போது கவளையடைகிறான். வேதனைப்படுகிறான், ஏசியவருக்கு முன்னிலையில் நான் நன்றாக வாழ்ந்து காட்டனும் எனும் விரக்தியும் கொள்கிறான். இவைககள் முடியாது போனால் அவனை உரிமையின்றி , நேர்மையின்றி பழிவாங்க நினைக்கிறான். ஆனாலும் இறை நபிகாளார் விடயத்தில் இக்கவனத்தை மனிதர்கள் நடைமுறை செய்வது சீரோதான்.

உடலையும் உள்ளத்தையும் அறிபவன் அல்லாஹ்! எம்முடைய செயலை நாமே அளவிட்டு கொள்வோம்! நான் பேசியது, நான் செயற்படுத்தியது நான் நடந்து கொண்ட முறைகள் சரியா? தவறா என்பதை. மனிதன் எப்போதும் பிறரை விட தன்னுடைய செயலை நியாயப்படுத்த நினைக்கிறான். தங்களை தாங்களே நல்லவர்கள் என்று சொல்வதில் பிரயோசனமில்லை. அல்லாஹ் எம்மை நல்லவன் என்றால் போதுமல்லவா? எனவே தம்முடைய செயல் ஒவ்வொன்றையும் அல்லாஹ்வுக்கு பொருத்தாமனதா? என்று சிந்தித்து கொள்வதே எம்மை நல்லடியார்களாக்கும்.

மனிதன் நம்பிக்கை, பாசம் , அன்பு, நேசம், என்பவைகளுக்காக உலகில் ஏங்குபவன். அதை பிறரில் கொடுத்து அதில் எவ்வித பிரயோசனமுமின்றி போகும் நேரம் விரக்தியடைந்து அவனுக்கே அவன் ஆறுதல் சொல்லி கொள்வான். எப்படி தெரியுமா? மௌனித்து மனம் வெறுத்து , இழக்கப்பட்ட இடத்தில் பழிவாங்கி, அவன் கொடுத்த அன்பை போன்ற கோபத்தை காட்டியேதான். அதுதான் அவனுக்கு நிம்மதியளிக்கிறது. அதனை எவ்வாறு தவறு என்று சொல்கிறோமோ அது போல் அவனுடைய இந்த விரக்திக்கு, வேதனைக்கு காரணமாக இருந்த எம்மை பற்றி, எமது தவறைப்பற்றி ஒரு முறை சிந்திக்கிறோமா? எவ்வாறலெ;லாம் தங்கள் மீது அன்பு வைத்து நம்பிக்கையாக நடந்து கொண்;டவர்கள் எம்மீது கோபம் கொள்ளுகின்ற அளவு எமது செய்றபாடுகள் அவனை எப்படி பாதித்து இருக்கும் என்று முறை எம்மை நாம் விசாரித்தோமா? இல்லை எமது தவறை உணர்ந்து மண்ணிப்பு கேட்டோமா? இவ்வாறெல்லாம் இல்லாத நாம் அவனது வேதனையால் வருகின்ற வார்த்தை சத்தத்திற்கு இறைவனிடம் சென்று முறையிட்டாலும் இறைவனும் இவ்வாறுதான் எமக்கு சொல்வான் என்பதில் சந்தேகமில்லை.
மாறாக தவறு செய்யாத ஒரு மூஃமினை, முஸ்லிமைப் பார்த்து யாரும் ஏசினால். அவரை அல்லாஹ் ஏசுகிறான்;. அவருக்குறிய தண்டனையையும் வழங்குவான். எம்மை பார்த்து ஒருவரென்ன ஒட்டுமொத்த சமூகமும் முனாபிக் என்றாலும் நாம் முனாபிக்காவதில்லை. எமது உள்ளத்தை அறிந்தவன் அல்லாஹ் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லையா? நபிகளார் சொன்னார்கள் முனாபிக் என்பவன் யாரென்று அவைகளுக்குள் எம்மை, எமது செயலை நிறுத்து பார்ப்போம் நாம் யாரென்று.

நபி(ஸல்) சொன்னார்கள் முனாபிக்கின் அடையாளங்கள் மூன்று
1. பேசினால் பொய்யை பேசுவான்
2. நம்பிக்கைக்கு துரோகம் செய்வான்
3. வாக்களித்தால் மாறு செய்வான்.

நபிகளார் இதைச் சொல்லிச் சென்றார்கள் எதற்காக? எம்மை இதில் கணக்கிட்டு பார்க்கத்தான். எனவே நாம் யாரென்று நாமே தீர்மானித்து கொள்வோம். மேலும் நாம் இச் செயலிருந்து எம்மை பாதுகாத்து கொண்டு நற்பண்புள்ள இறை நேசர்களாக முயற்சிப்போமாக.
முரண்பாடுகளை உடன் பட்டு கொள்கையை கொள்கையோடு மனிதனை பிரசாரம் செய்யுங்கள். பிரிவினை செய்யாதீர்கள். இஸ்லாம் என்ற கோட்பாட்டோடு ஒற்றுமைப் படுங்கள். வேற்றுமைகளை வேறுபடுத்தி விட்டு உலகரீதியாக உம்மா என்ற செய்றபட இதை விட பொருத்தமான நாட்கள் இன்னும் எமக்கு வரவில்லையா?

ஒருவர் மிகவும் பெரிய ஓவியர் என்ற புகழைப் பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மிகவும் பிரமாண்டமான அழகான ஓவியம் ஒன்றை வரைந்து ஊரின் மையப்பகுதியில் வைத்து அந்த ஓவியத்துக்கருகில் இந்த ஓவியத்தில் பிழை ஏதும் இருந்தால் பார்வையாளர்கள் அந்த இடத்தை வட்டமிடுங்கள் என்ற ஒரு சிறிய குறிப்பையும் வைத்தார். பின்பு அவர் தனது வீட்டிற்கு திரும்பினார். அடுத்த நாள் யாராவது தனது ஓவியத்தை குறை கூறியிருக்கிறார்களா? என்று பார்க்க ஆவலுடன் விரைந்தார். வந்து கண்டு மயங்காத குறையாய் அதிர்ந்து போனார். அப்படி நடந்தது என்ன?

அவர் வந்து பார்த்த போது அந்த ஓவியத்தில் ஒரு இடம் பாக்கியில்லாமல் எல்லா இடத்திலும் வட்டமிடப்பட்டிருந்தது. பார்வையாளர்கள் பிழைகளைச் வட்டமிட்டு வட்டமிட்டு மொத்தத்தில் அந்தப் படத்தின் அழகே காணாமல் போய் விட்டது. மொத்தத்தில் வட்ட வட்டக் குறிகள் தான் கண்ணுக்கு தெரிந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த அந்த ஓவியர் பொறுமையாக அந்த வட்டக் குறிகள் எல்லாவற்றையும் அழித்த பின் இந்த ஓவியத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதை திருத்தவும் என்று எழுதிவைத்தார். பின்னர் வீடு திரும்பிய அவர் வழக்கம் போல அடுத்த நாள் வந்து பார்த்தபோது அவர் ஆச்சரியமடைந்தார். ஏனெனில் முந்தின நாள் பிழைகளைச் சுட்டிக் காட்டினவர்கள் எவரும் இன்று அந்த பிழைகளை திருத்த முன்வரவில்லை. இதுதான் பொதுவாக மனித குணாதிசயமாக இருக்கிறது.

ஒருவரின் குறையைக் கூற வேண்டுமாயின் நான் நீ என்று போட்டி போட்டுக் கொண்டு சொல்பவர்கள் அதிகம். ஆனால் அதே குறையை திருத்த முயல்பவர் மிக மிக சொறபமே. இன்னும் சொல்லப் போனால் எவருமிலர். பொதுவாக மற்றவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது நாம் நினைவில் கொள்ள வேண்டிய பொன்மொழி என்னவெனில்...

நீ ஒரு விரலால் மற்றவர்களைச் சுட்டிக் காட்டும் போது
உன் விரல்கள் மூன்று உன்னைச் சுட்டிக் காட்டுகிறது என்பதை மறந்துவிடாதே!

(கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாருங்கோ)
குறைகளை உரியவரிடம் சுட்டிக்காட்டி திருத்த முயற்சிப்போம். குறைகளை அங்கும் இங்கும் பேசுவதை விட இவை அழகான அனுகுமுறையாக கையாள்வோம்.

உங்களால் முடிந்தவரை பிறரின் முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்யுங்கள். இல்லா விட்டால் அவர்கள் மனசு நோகாமல் பழகப்பாருங்கள். இரண்டும் முடியாது போனால் மனதில் வெறுப்பை வளர்த்து கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: