இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்

அநியாயம் செய்யும் ஓர் அசத்திய சக்தியை, அல்குர்ஆன் கண்டிக்கும் ஒரு சக்தியை இஸ்லாத்தை தனது கொள்கையாக வைத்திருப்பதாய் சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டால் ஆதரிக்க முடியுமா?

இஸ்லாத்தை அழிக்கும் முஸ்லிம்களை அழிக்கும் இரத்தம் தோய்ந்த அந்தக் கைகளை நேசக்கரத்தோடு பற்ற முடியுமா?

காஸாவில் ஆயிரக்கணக்கான சிறுவர்களும், பெண்களும், வயோதிபர்களும் கொலையுண்டு குற்றுயிராய் வீழ்ந்தபோது....அல்லாஹ்வின் தீனை ஏற்றுக்கொண்ட இந்த முஸ்லிம் உம்மத் இரத்த வெள்ளத்தில் மடிந்து சிதைந்த போது மௌனமாய் இருந்து சஊதி அரேபியா இஸ்ரேலின் கொடுமைக்கு குரல் கொடுக்க முடியாமல் திணறி நின்றதன் தாத்பரியம் என்ன?

தனது நேச நாடான அமெரிக்காவுக்கு நெருக்குதல் கொடுத்து பலஸ்தீ்ன் முஸ்லிம்களை பாதுகாக்க அது ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?
ஈராக்கில் முஸ்லிம்களை கொன்று குவிக்க அமெரிக்க கூலிப்படைக்கு தரை மார்கமாக ஈராக்கை ஆக்கிரமிக்க தனது நாட்டை தளம் அமைத்துக் கொடுத்து அந்த கொடுமைகளில் பங்கேற்றதற்கான காரணம் என்ன?

பத்து லட்சத்திற்குமதிகமான ஈராக்கிய முஸ்லிம்களின் படுகொலைக்கு பக்கபலமாக நின்று அமெரிக்க நண்பனுக்கு உதவி செய்தது.

இஸ்லாத்தை பூண்டோடு அழிப்பதற்கும், முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமிப்பு செய்வதற்கும் ஏதுவாக அமைந்த “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்ற சொற்றொடரை அறிமுகப்படுத்த சஊதி அமெரிக்க ஸீ.ஐ.ஏ உடன் சேர்ந்து செயற்பட்டது.


Posted by Azeez Nizardeen at 20:25 0 comments
அமெரிக்க அடிவருடிகளும் அழிக்கப்பட்ட ஆபகானிஸ்தானும்
80களில் ஆப்கான் நாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக போராடுவதற்கு, ஜிஹாத் என்ற போர்வையில் அந்த நாட்டு மக்கள் ஆயுதபாணிகளாக்கப்பட்டார்கள். ஸீ.ஐ.ஏ உடன் இணைந்து சஊதி அரசு கோடிக்கணக்கான பணத்தை ஆப்கான் ஜிஹாதிற்காக கொட்டித் தீர்த்தது.

நீண்ட நாட்களாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் மௌனமாக இடம்பெற்று வந்த பனிப்போரை ஆப்கானிஸ்தானில் ஆயுதப்போராக மாற்ற ஜிஹாதிய சாயம் நன்றாக பிரயோசனப்பட்டது.

ஜிஹாத் உணர்ச்சியூட்டுவதற்கு சவூதி பணத்தில் இயங்கும் இயக்கங்கள் நன்றாக பயன்படுத்தப்பட்டன. சஊதி அரசு ஸீ.ஐ.ஏ யின் நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்த பாகிஸ்தான் ஜமாஅதே இஸ்லாமியை தெரிவு செய்தது. ஜமாஅதே இஸ்லாமி ரஷ்யாவிற்கு எதிரான போர் ஜிஹாத் என்றும், இஸ்லாத்தி்ன் அடிப்படை கடமையான ஜிஹாதுக்கு முஸ்லிம்களின ஆதரவு தேவையென்றும் உலகமெல்லாம் பிரசாரப்படுத்தியது.

அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஆயுத மயமாக்கப்பட்டதற்கும் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக பயங்கரவாதிகள் பட்டம் சூட்டப்பட்டதற்கும் இருக்கும் தொடர்பை இன்று சஊதியும் அதன் பணத்தில் இயங்கும் இயக்கங்களும் மூடி மறைத்து விட்டன.

இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல் முளைத்ததே அமெரிக்க சஊதி வடிவமைத்த ஜிஹாத் களத்தில் தான். அன்று ஹிக்மத்தியார்களுக்கும், ரப்பானிகளுக்கும் ஆயுதத்தையும் பணத்தையும் அள்ளி இரைத்து பிறகு அவர்களை அடித்து விரட்டி தாலிபான்களிடம் ஆப்கானை தாரை வார்த்து கொடுத்த சஊதி ஸீ.ஐ.ஏ கூட்டாளிகள். தாலிபான்களை அடித்துத் துரத்தி இறுதியில் அமெரிக்காவின் கைக்கு அந்த நாட்டை ஒப்படைத்தனர்.

அண்மையில் ஹிலாரி கிளின்டன் ஆப்கான் ஜிஹாதுக்கு அமெரிக்கா நுர்ற்றுக்கு நுர்று உதவி செய்ததை வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் உலகளாவிய எகாதிபத்திய அரசியலுக்கு இஸ்லாமிய ஜிஹாத் சாயம் பூமி அன்று துணைபோன சஊதியும் அதன் கைக்கூலி இயக்கங்களும் அவர்களாலேயே உருவாக்கப்பட்ட “இஸ்லாமிய பங்கரவாதத்தை” ஒழிக்க புறப்பட்டு முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்யும் அமெரிக்காவின் அராஜகத்திற்கு மறைமுக காரணிகள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Posted by Azeez Nizardeen at 20:06 0 comments
Monday, 20 July 2009
இஸ்லாமிய பயங்கரவாதம் ? கெட்ட நண்பர்களின் கூட்டுச் சதி!
இஸ்ரேலின் நண்பன் அமெரிக்கா
அமெரிககாவின் நண்பன் சஊதி அரேபியா
ஆக இஸ்ரேல், அமெரிக்கா, சஊதி அரேபியா மூவரும் கூட்டு நண்பர்கள்.

இதை இப்படியும் சொல்லலாம் அமெரிக்காவிற்கு இரண்டு நட்பு நாடுகள் இருக்கின்றன.

ஒன்று இஸ்ரேல்

மற்றையது சஊதி அரேபியா.

வேடிக்கை என்னவென்றால் அமெரிக்காவும் இஸ்ரேலும் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழித்து ஒழிக்க வேண்டும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கும் இரண்டு நாடுகள்.

சஊதி அரேபியா இஸ்லாத்தைப் பாதுகாப்பதாக சொல்லிக் கொள்ளும் நாடு.
இந்த முரண்பாடான நட்பில் முஸ்லிம் உம்மத்திற்கு கிடைத்த பரிசு என்ன?
அமெரிக்காவின் தந்திரோபாய “ எண்ணெய் அரசியலுக்கு” மத்திய கிழக்கின் முஸ்லிம் நாடுகள் தன்னை தானே தாரை வார்த்துக் கொண்டதனால் ஏற்பட்ட இழப்பு என்ன?

மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தை சூறையாடும் அமெரிக்காவின் தந்திரத்திற்கு இருப்பது இரண்டு விதிகள்.

ஒன்று நண்பனாய் நெருங்கி வளங்களை விழுங்குவது

அடுத்தது, விரோதி, பயங்கரவாதி என்ற பெயர்சூட்டி பொருளாதாரத் தடை, போர் என்று கூறி அத்துமீறி அந்தந்த நாடுகளுக்குள் ஆக்கிரமிப்பாளனாய் நுழைந்து அந்த நாட்டின் செல்வங்ளை சூறையாடவது.

துரதிர்ஷ்டவசமாக இந்த இரண்டு நிலைமைகளுக்கும் மத்திய கிழக்கின் அரபு நாடுகள் இரையாகியிருக்கின்றன. இரண்டினது பலன்களையும் ஒன்றை இழிவாகவும் (சஊதி) , மற்றையதை இரத்தக் கறையாகவும் (ஈராக்) நாம் பார்த்துக் கொண்டுமிருக்கிறோம.

அமெரிக்கா இஸ்ரேலை போஷித்து அங்குஅராஜகத்தை வளர்ப்பதபோல். சஊதியை நேசித்து அங்கு ஜாஹிலிய்யத்திற்கு புத்துயிர் அளிக்கிறது.

ஒரு சிறு பிள்ளையிடம் புதிர் கேள்வியொன்றாய் மேலே நான் சொன்ன நட்பு தொடர்பான தர்க்கத்தை முன்வைத்து இஸ்ரேலின் நண்பர்கள் யாவர் என்று கேட்டால் அந்த சின்ன பிள்ளை சஊதியும் அமெரிக்காவும் என்று சற்றென்று பதில் சொல்லும்.

மிக மிக இலகுவான தர்க்கம்!

மூவரும் நண்பர்கள்தான் ஆனால் ஒரு வித்தியாசம்!

இந்த மூவருக்குள்ளேயே வெளிப்படையான நட்பும், உள்ரங்கமான நட்பும் இருக்கிறது. சஊதி அமெரிக்க நற்பு வெளிப்படையானது. அதேபோல் அமெரிக்க இஸ்ரேல் நட்பும்வெளிப்படையானது.

மௌனமாக மறைந்திருக்கும் நட்பு சஊதிக்கும் இஸ்ரேலுக்குமிடையில் இருக்கிறது.

சரி, இவர்கள் ஒவ்வொருவரும் தமக்கிடையே உள்ள இந்த நட்பை எப்படி பாதுகாத்துக்கொள்கிறார்கள்?

இவர்களின் நட்பிற்கான இலக்கணம் என்ன? அதை இப்போது பார்ப்போம்.

இஸ்ரேலின் அனைத்து ஆக்கிரமி்புகளையும், படுகொலைகளையும், அக்கிரமங்களையும், அநியாயங்களையும் ஆமோதித்து அமெரிக்கா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஐ.நா பாதுகாப்பு மன்றில்தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்துகிறது. இஸ்ரேலை பாதுகாக்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு பக்கபலமாய் நின்று உதவி செய்கிறது. சட்ட விரோத இஸ்ரேல் நாட்டுக்கு சண்டித்தனம் செய்ய சான்றிதழ் வழங்குகிறது.


இதுவே அமெரிக்க இஸ்ரேல் நட்பிற்கு நற்சான்று!

இனி இந்த அமெரிக்க இஸ்ரேல் சஊதி முக்கூட்டு நட்பிற்கு சஊதியின் சான்று என்ன என்று நீங்கள் சிந்திக்கலாம்.

அமெரிக்கா, இஸ்ரேலை அரவணைக்கறது. அதன் அட்டகாசத்தை அடக்கி வாசிக்கிறது?

சஊதி அரேபியாவோ-
அமெரிக்கா இஸ்ரேல் அகிய இரண்டு நாடுகளின் அக்கிரமங்களையும் அட்டகாசங்களையும் அடக்கி வாசிக்கிறது . இரண்டு நண்பர்களின் ஈனச்செயல்களையும் அமைதியாக நின்று ஆமோதிக்கிறது.

கருத்துகள் இல்லை: