முகவுரை:

ஏக இறைவன் எல்லாம்வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல்லுக்கே எல்லாப்புகழும் அவன் மனித கற்பனைக்கும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டவன். இந்த உலகத்திற்காகவும் மனித சமுதாயத்திற்காகவும் அவன் வழங்கியுள்ள அருட்கொடைகள் எண்ணற்றவை, எந்தவொரு கணிப்பீட்டு நிபுணராலும் கணிப்பீடு செய்ய முடியாதவை. இப்பணியில் உலகமே ஒன்று திரண்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்பேற்பட்ட சக்தியும் வல்லமையும் ஆற்றலும் நிறைந்த அந்த அல்லாஹ்வைப் போற்றுகின்றேன்;,; துதிக்கின்றேன்;,; வணங்குவதற்கு தகுதியானவன் அவனன்றி வேறில்லையென சான்று பகர்கின்றேன்.

மேலும் எங்கள் தலைவர் கண்மணி நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ் தஆலாவின் தூதரும் நேசருமாவார்கள் என்றும் பிரகடணஞ் செய்கின்றேன். இஸ்லாம் எனும் நேர்வழியை அல்-குர்ஆனினூடாக அந்த நபி மூலமாக நமக்குத் தந்தான் அல்லாஹ். அந்த நேர்வழியில் எந்தவிதமான சந்தேகங்களுமில்லை. அதை எமக்கு எடுத்துச்சொன்ன நபிமார்களின் இறுதிமுத்திரையான எங்கள்கண்மணி முஹம்மத் நபி (ஸல்) அவர்கள்கூட ஒப்புவமையில்லாதவர்! களங்கமற்றவர்! அப்பழுக்கற்றவர் !
உண்மை நேர்மை கண்ணியம் ஆகியவற்றின் மொத்தவடிவம் என்பதை எம்மவர் எவரும் ஏற்றுக் கொள்வர். இதில் மாற்றுக் கருத்தில்லை, இருக்கவும் முடியாது. இடையில் வந்த இஸ்லாமிய விரோதிகளும், ஷெய்த்தானின் தூதுவர்களும் எமக்குள்ளிருக்கும் பலவீனர்களோடு இரண்டறக்கலந்து எமது சன்மார்க்கக் கிரியைகள் எல்லாவற்றையும் விட்டகுறை தொட்டகுறையாக்கிவிட்டனர்.
ஆயினும் இஸ்லாமியப் பலங்கொண்டோர் இந்த ஷெய்த்தானியத்தோடு போராடி வென்றனர்;, பலவீனரோ அவன் பின்னேசென்றனர்.

இவ்வாறு ஷெய்த்தானியம் ஊடுருவிய எமது நற்கிரியைகளுள் இந்த நோன்பு துறக்கும் நேரம்பற்றிய அம்சமும் ஒன்றாகி விட்டது.

அதிகம்பேர் அலசிப் பார்க்காத விடயம் இது! ஆயினும் இதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தேவை தற்போது எல்லோரையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது. எமது நோன்புகள் வீணாகிக் கொண்டிருக்கின்றன என்ற கசப்பான உண்மை எம்மையறியாமலேயே எம்மால் நடைமுறைப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பலவருடங்களாக இதைப்பற்றிக் கவலைப்பட்டேன், சிந்தித்தேன், ஆராய்ந்தேன். இன்னுமின்னும் பல உண்மைகளை உணர்ந்து கொண்டேன்;.
1995ல் இருந்து 1998 வரை நான் மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளை எமது கண்ணியத்துக்குரிய உலமாக்களோடு கருத்துப் பரிமாறினேன். என்னுடைய ஆராய்ச்சியின் முடிவுகளை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டார்கள்.
எனவே இதில் மேலுமொரு நம்பகத்தன்மையைப் பெற்றுக்கொண்ட நான் எனது மாணவர்களுக்கு இதுபற்றிய விரிவுரையை நிகழ்த்தினேன்.

1998 ரமழான் மாதம் முழுவதும் இது பற்றியே பல இடங்களிலும் பேசினேன்.
நோன்பு துறக்கும் நேரத்தையும் மஃரிபுடைய நேரத்தையும்பற்றிய தெளிவை அவர்களுக்குச் சொன்னேன். எல்லோரும் ஏற்றுக்கொண்டனர். அதன்படி செயற்படவும் தொடங்கினர்.

அப்போதெல்லாம் நோன்பு துறக்கும் நேரம்பற்றிய எனது அந்த விளக்கத்திற்கெதிராக யாருமே பேசவில்லை. இந்த இடத்தில் நான் இன்னுமொன்றைக் கூறிக்கொள்ளவேண்டும். அதாவது நோன்புதுறக்கும் நேரம் பற்றிய இந்த முடிவுகள் என்னுடைய ஒரு புதிய கண்டுபிடிப்பல்ல. சொந்தக் கருத்துமல்ல. எமது கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு துறக்கும் நேரம் மஃரிபுடைய நேரம் பற்றியெல்லாம் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். அதை முபஸ்ஸிரூன்களும் இமாம்களும் எமக்கு விளக்கியுள்ளனர். அவற்றையே உங்களுக்குச் சமர்ப்பித்துள்ளேன்.

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன முஸ்லிம்சேவையின் சஹர் விசேட ஒலிபரப்பிலும் தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் இந்தவிடயம்பற்றிப் பேசியுள்ளேன். பல உலமாக்களும் அறிஞரும் பாராட்டினர்.

ஆனால் இந்த நோன்பு துறக்கும் நேரத்தை இதுவரை யாரும் நடைமுறைப் படுத்தியதாகத் தெரியவில்லை.

ஆகவே, ஒரு தனிமனிதனாக நின்று இதைப் பிரச்சாரஞ்செய்ய வேண்டிய நிலையிலுள்ளேன். பலர் இதை எழுத்துறுப் பெறவேண்டுமென்றும் வலியுறுத்தினர். அதன் பிரதிபலிப்பே இப்போது உங்கள் கைகளில் தவழ்கின்ற இந்நூல்.
“Breaking of the Fast”” என்ற பெயரில் முதலில் ஆங்கிலத்தில் இது எழுதப்பட்டது.அதற்கு நல்ல வரவேற்பும்கிடைத்தது.

ஐம்பெரும் கடமைகளுள்; ஒன்றான இந்த நோன்பைப் பல சிரமங்களுக்கு மத்தியில் நோற்று வருகின்றோம். ஆனால் அதை துறக்கின்ற அந்த இறுதி வேளையில் ஷைத்தான்; பாழாக்கி விட்டான். யூத-ஸியோனிஸ நசாறாக் கூட்டத்தினரின் நீண்ட காலத் திட்டமிது! “நீங்கள் பகலெல்லாம் பட்டினி கிடப்பதுதான் மிச்சம் இதோ அதைப் பயனற்றதாக்கி விட்டோம் என்ற அவர்களுடைய சதியிலிருந்து எம்மை நாம் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்ற ஓரே நோக்கத்திற்காகவே என்னுடைய இத்துணை முயற்சிகளும்.
இதில் கூறப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களும் புனித அல்-குர்ஆனிலிருந்தும் சங்கை மிகு சஹீஹான ஹதீஸ்களிலிருந்தும் எடுத்தாளப் பட்டவை.

இதன் ஆங்கிலப் பிரதி September 02, 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இணையத்தினூடாகவும்(Internet)எண்ணற்றோர்படித்துப்பயன்பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.தமிழிலும் தரப்படவேண்டுமென பலரும் வலியுறுத்தினர்.


நோன்பு மட்டுமல்ல எமது சன்மார்க்கக் கடமைகள் அனைத்திலும் ஆதிக்கஞ் செலுத்திக்கொண்டிருக்கின்ற யூத-நசாறாக் கூட்டத்திpன் சதிக்குள் சங்கமிக்காது சங்கையான அந்த ரஹ்மான் எம்மைக் காப்பாற்றுவானாக!
சரியெது பிழையெதுவென சற்றேசிந்தித்துச் செயலாற்றுந்திறனை அவன் எமக்குத் தந்தருள்வானாக!

ஒரு பணிவான வேண்டுகோள் :
நோன்பு துறக்கும் நேரம் இதுதான் - இந்த நேரத்தில்தான் நீங்கள் நோன்பு துறக்க வேண்டுமென நான் தங்களை வற்புறுத்தவில்லை. வாதம் புரியவுமில்லை. வழக்கத்திலுள்ள நோன்பு துறக்கும் நேரம்பற்றிய என்னுடை சந்தேகத்திலிருந்து தெளிவுபெற முயற்சித்தேன். படித்தேன். படித்ததை வைத்து ஆராய்ந்தேன். ஆராய்ந்துபெற்ற அறிவுகளை துறைசார் அறிஞரோடு அலசினேன். மேலும் தெளிவு பெற்றேன். நான் பெற்றதை இந்த வையகமும் பெறவேண்டும்; எமது சமூகம் காப்பாற்றப்பட வேண்டுமென விளைந்தேன்.

ஆகவே, எனது அன்புமிக்க முஸ்லிம் சகோதரீர்! இதைப் படித்துவிட்டுத் தாங்களும் இதுபற்றி தர்க்கங்கள் புரியவோ அடுத்தவருக்குத் திணிக்கவோ முற்படவேண்டாமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

இதன் தமிழாக்கத்தில் எனக்குப் பெரிதும் உதவிய என் அன்புச் சகோதரர் - இலங்கை ஒலிபரப்புகூட்டுத்தாபன முஸ்லிம் சேவைக்கட்டுப்பாட்டாளர் எஸ் முஹம்மது ஹனிபா அவர்களுக்கும் நூலை அச்சிட்ட அச்சகத்தார் .. .. ஆகியோருக்கும் இதை நிதானத்தோடும் நீதியோடும் வாசிக்கின்ற அனைத்து வாசகப்பெருமக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

எல்லாம்வல்ல அல்லாஹ் என்னையும் உங்களையும் நேரானவழியில் நடத்துவானாக! எவர்களுக்கு அவன் நல்லருள் புரிந்தானோ அவர்களுடையவழியில் எம்மையும் நடாத்துவானாக! அவனுடைய கோபத்திற்குள்ளானவர்களினதும் வழி தவறியவர்களினதும் வழியிலிருந்து அவன் எம்மைக் காப்பாற்றுவானாக ! ஆமீன்.
இந்த சிற்றேட்டை இந்த சங்கையான உம்மத்துக்காக அர்ப்பணம் செய்கிறேன்.
الإهْداء هَذَ الكِتَاب إلى:
اُمَّةَ رَسُوْلُ الله صَلّى الله عَلَيْهِ وآلِهِ وسلّم

எம். ஸ{ல்கிப்லி நாஸிம்,
½, மாதங்கஹவத்தை லேன்,
கொழும்பு 06.
டெலிபோன்: 2586627
27 ரஜப் 1428 ஹிஜ்ரி
(11 ஆகஸ்ட் 2007)




மொழிபெயர்ப்பாளரின் குறிப்பு
“Breaking of the Fast” என்ற பெயரில் அருமையான நூலொன்றைக் கண்டேன்.
எம்மவர் யாருமே இதுவரை தொட்டுப் பார்க்காத விடயமிது ! பல சிரமங்களுக்கு மத்தியில் நோற்கப் படுகின்ற எமது புனித நோன்புகளின் நற்பயன்களை நம்மையறியாமலேயே நாமிழந்து கோண்டிருக்கின்றோமென்ற உண்மையை சகோதரர் நாஸிம் அவர்கள் மிகவும் தெட்டத்தெளிவாக உணர்த்தியுள்ளார்கள்.

1995ஆம் ஆண்டிலிருந்து இந்த உண்மையை எமது முஸ்லிம் சமுதாயத்திற்கு ஒப்புவித்துவிட அவர் முயற்சி செய்து வருவதையிட்டு அவருடைய ஈமானின் பெறுமானத்தை உணர்ந்து வியந்தேன்.

ஒரு சிறிதளவேனும் என்னாலும் அவருக்கு உதவ முடிந்ததையிட்டு எனக்கு மிக்க மகிழ்ச்சி. எமது வானொலி ரமழான்கால ஸஹர் விசேட ஒலிபரப்பில் ‘ஸஹர் சிந்தனை ஆங்கிலம்’ என்ற தலைப்பில் சகோதரர் நாஸிம் அவர்கள் வழங்கிய சிந்தனைகளுல் இந்த நோன்பு துறக்கும் விடயம் தொடர்பாகவும் வலியுறுத்தப்பட்டது. பொதுவாகவே அவருடைய வானொலிப் பேச்சுக்கு மறுப்புப் பேச்சுக்கள் பிறப்பதில்லை. மாறாக பொறுப்பு வாய்ந்த விடயதானங்கள் என்றே எல்லோரும் வியப்பர் !
அந்த வகையில் இந்த நோன்பு துறக்கும் நேரம்பற்றிய கருத்துக்களும் கவரப்பட்டன. அதனால் அது ஆங்கிலத்தில் நூலுருவம் பெற்றது. இணையத்தினூடாகவும் உலகவலம் வந்துகொண்டிருக்கின்றது.
இருந்தும் !
இது தமிழிலும் தரப்பட வேண்டுமென்பது பலரது தணியாத தாகம்! அதனால் மீண்டுமொருமுறை கண்ணியத்திற்குறிய உலமாக்களோடு கலந்தாலோசித்து எடுப்பவை எடுத்து தவிர்ப்பவை தவிர்த்து இதோ தமிழில் வருகிறது.

எஸ் முஹம்மது ஹனிபா,
சிரேஷ்ட ஒலிபரப்பாளர்,
91/25A, Watarapola Road,
Mt. Lavinia.

நோன்பு துறக்கும் நேரம்

இஸ்லாத்திற்கும் முஸ்லிம் பெருமக்களுக்கு மெதிராக காலங்காலமாகக் கட்டவிழ்க்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற சதிகள் பற்றி புனித அல்-குர்ஆனும் சங்கைமிகு நபி மொழிகளும் எம்மை எச்சரித்துக் கொண்டும் அறிவுரை பகர்ந்து கொண்டுமிருப்பதை சற்று ஞாபகப்படுத்திவிட்டு விடயத்துக்கு வருகின்றேன்.
அல்-குர்ஆன் எச்சரிக்கின்றது
إنّهُم يَكِيْدُوْنَ كَيْدًا
86:15 நிச்சயமாக அவர்கள் (உமக்கெதிராகச்) சூழ்ச்சி செய்கிறார்கள்.
يَا أيُّهَا الّذِيْنَ ءآمَنُوْا خُذُوْا حِذَرَكُمْ
4:71 .நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள்;
وَلْيَأخُذوا حِذرَهُمْ
4:102 எனினும் நீங்கள் எச்சரிக்கையாகவே இருந்து கொள்ளுங்கள்.
حِذَرَ – எனும் சொல்லுக்கு பலகருத்துக்கள் இருக்கின்றன. இன்னும் எச்சரிக்கையாக இரு, விழிப்புடனிரு, கவனமாயிரு, பாதுகாப்பாயிரு, ஆயத்தமாக இரு போன்ற பல கருத்துக்களை உள்ளடக்கியதாக இந்தச் சொல் காணப்படுகின்றது.

ஆகவே புனித அல்-குர்ஆன் நாம் விழிப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டுமென வலியுறுத்து கின்றதல்லவா?

இஸ்லாத்தின் ஆரம்பகாலந் தொட்டே யஹ{திகளும் நஸாராக்களும்
முஸ்லிங்களுக்கெதிராக செயற்படத் தொடங்கினர். எமது உடல்வள பொருளாதார நலன்களுக்கு மட்டுமல்ல சன்மார்க்க விடயங்களிலும் எம்மை வழிகெடுக்க அவர்களாலான அனைத்து முயற்சிகளையும் அனைத்து சாதனங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஓர் உதாரணத்திற்காக பலருமறிந்த பன்றியை எடுத்துக் கொள்வோம்.

இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்ட இந்தப் பன்றியின் எதையாவது –முஸ்லிங்களுக்குள் திணித்துவிட வேண்டுமென்பது அவர்களின் பேராசை!
நன்கு திட்டமிட்டு நாம் அன்றாடம் பாவிக்கும் சீனிக்குள் அதனைத் திணித்தனர். எப்படியென்று பார்ப்போம்.

தாவரங்களிலிருந்து பெறப்படும் சர்க்கரைக்கு தொழில் ரீதியான ஒரு கவர்ச்சியையும் வெண்மையையும் வழங்க எலும்புக்கரி தேவைப்பட்டது அல்லது எலும்புக்கரிக்கான தேவை ஏற்படுத்தப்பட்டது. இரசாயனவியலில் எலும்புகளை எரித்து பஸ்பமாக்குவதன் மூலமாகப் பெறப்படும் கரிப் பொருளிலிருந்து (Animal Charcoal)அல்லது Bone Char கிடைக்கும். அதன் மூலப்பொருளான டீழநெ புசளைவஐக் கொண்டு சர்க்கரையை அல்லது தேன்பாகை Bone GristIf; ச் சுத்திகரித்து சீனியாக மெருகூட்டினர். ஆரம்பத்தில் மாடுகளின் எலும்புகளிலிருந்து பெறப்பட்ட Bone Char இல் இருந்துதான் சர்க்கரை வெண்மையாக்கப்பட்டது. பல சீனி உற்பத்தி நிறுவனங்கள் சர்க்கரை நிறம்நீக்கியாக ( ion exchange system ) நீண்டகாலமாக இம்முறையையே கையாண்டுவந்தனர்.

ஆயினும் 1950இல் இருந்து மாட்டினது எலும்புக்குப்பதிலாக பன்றி; எலும்பையும் பாவிக்கத் தொடங்கினர். அழ்ழாஹ் ஹராமாக்கிய வஸ்துக்களை உட்கொள்வதன் மூலம் எமது துஆக்கள் வணக்க வழிபாடுகள் அழ்ழாஹ்வால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகி விடும் என்ற உண்மையை அவர்கள் நன்குணர்ந்து செயற்பட்டனர்.
இதில் மிகவும் போற்றுதற்குரிய விடயம்என்னவென்றால் அக்கால உலமாக்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட்டதுதான்.
தொடர்ப்புச்சாதன வசதிகள் குறைவாக இருந்த அக்காலத்தேகூட உலக முழுவதும் இச்செய்தியைப்பரப்பி முஸ்லிம் பெருமக்களை உசார் நிலையில் வைத்திருந்தனர் எமது சங்கைமிகு உலமாக்கள்.
உடனடியாகவே உலக முஸ்லிம்கள் அனைவரும் வெள்ளைச் சீனியையும் பழுப்புநிறச் சீனியையும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டனர். இதனால் சர்வதேசரீதியில் சீனி உட்பத்தி நிறுவனங்கள் பல பெரிதும் நஷ்டமடைந்தன.

இவர்களுடைய சதித்திட்டத்தை முஸ்லிம் மக்கள் நன்கு தெரிந்து கொண்டதால் அம்முறையைக் கைவிட்டு வேறு இரசாயன முறைகளை உபயோகிக்கத் தொடங்கினர். Bone Char -ல் இருந்து சீனி வடிகட்டுதல் முறை தற்போது வழக்கொழிந்து போனாலும் முஸ்லிங்கள்மீதான யூத ஷைத்தானிய சதியைச் சற்று பின்னோக்கிப் பார்ப்பதற்காகவே இதை ஞாபகப்படுத்துகிறேன்.
இதன் பின்னர் இன்னுமொரு பகுதியில் நுழைந்தனர்.
அது தான் “சுகாதாரத்துறை.
Medicinal Capsules’ எனப்படுகின்ற செலுலோஸ் - மரத்தாது தற்போதெல்லாம் பாவனையிலிருப்பதை நாமறிவோம். வில்லைகளுக்கு பதிலாக இந்த (Capsules)) கெப்சூல்களை பிரபல்யப் படுத்தினர். இந்த கெப்சூல்களுக்குள்ளே பலவிதமான நோய்களுக்குமுண்டான மருந்துப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இந்த சியோனிஸ யஹ{திகளும் நஸாராக்களும் என்னசெய்தார்கள் தெரியுமா? மரத்தாதினால் செய்யப்பட்ட கெப்சூல்களுக்குப்பதிலாக
‘Gelatine’’ - ஜெலட்டீனால் செய்யப்பட்ட கெப்சூல்களை அறிமுகஞ்; செய்தனர். அத்தோடு நின்றுவிடாது இந்த ஜெலட்டீனை பன்றியின் எலும்புகளிருந்தும் தோலிலிருந்துமேபெற்று அதிகளவில் உற்பத்தி செய்யத் திட்டமிட்டனர்.
ஐரோப்பா முதற்கொண்டு கேற்கத்திய நாடுகளிலும், கிழக்கு நாடுகளிலும், தொலைகிழக்கு நாடுகளிலும் கோடிக்கணக்கான பன்றிகள் நாளாந்தம் உணவுக்காகக் கொல்லப்படுவதால் பன்றியின் எலும்பும் தோலும் மிகவும் இலகுவாகவும் மலிவாகவும் பெறக்கூடியதாக இருந்தது. ஆகவே ஜெலட்டீன் கெப்சூல்களை உற்பத்தி செய்வதற்கான உற்பத்திச் செலவும் அவர்களுக்கு குறைவு!

இதனால் உலகளாவியரீதியில் இதற்கெனப் பல தொழிற்சாலைகள் பெருகின. பன்றிகள் கிடைக்காத இடங்களில் மாடுகளின் எலும்பும் தோலும் உபயோகப்படுத்தப்பட்டன.
மருந்துள்ளிட்ட இந்த கெப்சூல்கள் வெகு வேகமாகப் பிரபல்யமடைந்தன.
இதனால் மாடுகளிலிருந்து உற்பத்தி செய்வது மாத்திரமன்றி கூட்டிணைப்பு முறைசார்ந்தவிதத்தில் synthetic ஜெலட்டினையும் உற்பத்தி செய்யத் தொடங்கினர்.

இந்த முஸ்லிம் பெருமக்கள்மீது இவர்களுக்கு ஏன்தான் இத்துணை வெறுப்போ தெரியவில்லை,; இவ்வாறாக முஸ்லிம்கள் உண்ணத்தகாத உணவுகளையே முஸ்லிம்கள் உண்ணத்தக்கதாக ஆக்க வேண்டுமென்பதில் அவர்கள் கண்ணுங் கருத்துமாக இருக்கின்றார்கள் என்பதை முஸ்லிம் பெருமக்கள் நன்குணரவேண்டும்.

யூத நஸாராக்களின் இந்த ஷைத்தானியசதி மருந்துகளுக்குள் மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை. தகரடப்பிகளிலும் போத்தல்களிலும் அடைக்கப்ட்ட உணவுப்பொருட்களை

(tinned and bottled foods), இன்று பல்பொருள்அங்காடிகளில் (Supermarkets) காண்கிறோம்,; வாங்குகின்றோம். இவ்வாறு அடைக்கப்பட்டவை பழுதுபடாதிருக்க preservatives,stabilizers எனப்படும் இரசாயனப் பதார்த்தங்கள் அவற்றுள் சேர்க்கப்படுகின்றன. Emulsifiers எனப்படும் பசைக்குழும்புகளும் பயன்படுத்தப் படுகின்றன.
இவ்வாறான தகரடப்பியில் அடைக்கப்பட்ட பழவகைகள், மரக்கறி வகை, பிஸ்கற் வகை, சாக்லேற் உட்பட இன்னும் பல உணவுப் பொருட்கள் நாளாந்தம் வெளிவந்த வண்ணமுள்ளன. பால் வகைகளிலுங்கூட இந்த emulsifiers, stabilizers, preservatives சேர்வைகள் சேர்க்கப் படுவதாக அறிகிறோம். சேர்ப்பதில் தவறில்லை,; ஆனால் சேர்ப்பதில் சேர்வதில்தான் தவறு நடை பெறுகிறது. மேற்படி இரசாயனப் பொருட்களுக்குள்ளும் பன்றியிலிருந்து பெறப்படும் மூலப்பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடையக் கூடியதாகவுள்ளது.
ஆகவே, தகர டப்பாக்கள் போத்தல்களில் அடைக்கப்பட்டுவரும் உணவுப் பொருட்களின் உபயோகத்திலும் கவனமாக இருந்துகொள்ளுங்கள்.
இவற்றை நாம் தவிர்ப்பது எப்படி? கண்டு கொள்வது எங்ஙனம்?
என்று ஆதங்கப்படுவோரின் நலன்கருதி இந்தநூலின் பிற்பகுதியில் இது தொடர்பான அட்டவணையொன்றை தகுந்த ஆராய்ச்சியின் பின்னர் தொகுத்துத் தந்துள்ளேன்.
அதாவது, உணவு உற்பத்தி நிறுவனங்கள் அல்லது பதனிடும் நிறுவனங்கள் தங்களுடைய உணவுப் பொருட்களில் பயன் படுத்தப்பட்டுள்ள சேர்வைகள், உப உணவுப் பொருட்கள் பற்றிய விபர அட்டவணையொன்றை அதனுடன் இணைத்திருப்பர். Emulsifier Codes - ‘‘இமல்ஸிபயர் கோட்ஸ்’’ என்று இதனைச்சொல்வர்.

இரசாயனச் சேர்வை அடிப்படையில் இந்த இணைக்கலவை உப உணவு வகைகளுக்கு ஓர் இலக்கம் வழங்கப்பட்டிருக்கும். இந்த இலக்கத்தை இனங்காண்பதன் மூலம் நாம் ஹறாம் கலந்த உணவைத் தவிர்த்துக்கொள்ள முடியும். இவ்வாறு நாம் தவிர்க்க வேண்டிய இலக்க அட்டவணையொன்றை (The
Haram Emulsifier Codes) இந்நூலின் இறுதியில் தந்துள்ளோம். உணவுப் பொருட்கள் வாங்கச் செல்லும்போது உடன் வைத்திருந்து ஒப்புநோக்குங்கள் - தப்புஏற்படாது.
முஸ்லிங்களை வழிகெடுப்பதில் அந்த யூத-நஸாராக்களின் சதி இத்துடன் முடியவில்லை.
எமது மத்ரஸாக்களிலும் கல்வியகங்களிலும் கண்வைத்தனர். இதற்காக முஸ்லிம் உலகிற்குள் இன்னும் சற்று ஆளமாக ஊடுருவினர்.
முள்ளை முள்ளாலேயே களைய வேண்டுமென்பதற்காக முஸ்லிம் உலகில் முஸ்லிம் பெருமக்களால் மிகவும் கண்ணியத்தோடு நோக்கப்பட்ட கண்ணியத்துற்குரிய உலமாக்கள், அறிஞர் சிலரை தம் வலையில் வீழ்த்தினர். எமது சங்கைமிகு இஸ்லாத்தை சடங்கு ரீதியான இஸ்லாமாக மாற்ற விழைந்தனர். - இதில் வெற்றியும் கண்டனர்.

பரிசுத்த இஸ்லாம் பறிபோனது. சடங்குகளும் சம்பிரதாயங்களும்தான் இஸ்லாம் என்றநிலை உருவானது.
அந்த யூத-நஸாராக் கூட்டத்திற்;கு இதுவும் திருப்திகரமாகத் திகழவில்லை.
முஸ்லிம் உலகப் பல்கலைக் கழகங்களுக்குள் நுழைந்தனர், பாடத்திட்டங்களுக்குள்ளும் பல்லை நுழைத்து இஸ்லாமிய இயல் சார்ந்த பாடத்திட்டத்தை சப்பித்தின்று அதைச் செயலற்றதாக்கினர்.
ஒரு தெளிவில்லாத மார்க்கமாக,; குழப்பங்கள்கொண்ட ஒரு மார்க்மாக,; நுண்ணறிவற்ற காலத்திற்கொவ்வாத ஒரு சடவாதக் கொள்கையாக இஸ்லாத்தை இருட்டடிப்புச் செய்தனர்.
மேலைத்தேய சதிக்குள் சங்கமமாகிப்போன இந்த இஸ்லாமிய நவீன மேதைகளோடு தூய இஸ்லாத்திலிருந்து இவற்றையெல்லாம் பார்த்துப் பரிதவித்துக்கொண்டிருந்த எமது முஸ்லிம் அறிஞர் முறன்படத் தொடங்கினர்.

பரிசுத்த இஸ்லாத்தைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்கின்ற எந்தவொரு நபரும் இதை அங்கீகரிக்க மாட்டார் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வோமல்லவா?
இருந்தும் இந்த நயவஞ்சகர்களோடு ஏற்பட்ட இந்த நியாயமான கருத்து முறன்பாடுகளை வெறுத்து வெருண்டெழுந்த அந்தப் போலி உலமாக்களும் அவர் தம் மேலைத்தேய எசமான்களும் இதைப் பூதாகரமாக்கிப் பூமியில் இரத்த ஆறு ஓட கால்வாய்கள் அமைத்துக் கொண்டிருக்கின்றனர்.
யூத-நஸாராக்களின் சண்டைச் சதி தற்போது இயல்பாகவே
நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இப்போது நமது சக்தி வாய்ந்த தொழுகை (صلاة) நேரமும் நோன்பு(صوم) துறக்கும் நேரமும் இந்த சண்டைக்குள் சிக்கிக்கொண்டிருக்கின்றன.

ஹதீஸ் குத்ஸியில் - “”நோன்பு எனக்கேயுறியது அதற்கு நானே கூலி கொடுக்கின்றேன்.” என்று எல்லாம் வல்ல அழ்ழாஹ்தஆலா நோன்புக்காக மட்டும் விசேடமாகக் கூலி தருவதாகப் பெருமிதப் படுத்துகின்ற இந்தத் தூய நோன்பை நாம் சிரமேற்கொண்டு, பல பக்குவங்கள் பேணி, மிகவும் கண்ணுங்கருத்துமாக நோற்று வருகின்றோம். இருந்தும் நம்மையறியாமலேயே அதன் நன்மைகளைப் பெறுவதில் தோற்று வருகின்றோம் என்ற உண்மையை நாம்நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த யூத-நஸாராக் கூட்டமும் அவர்களுடைய ஆலிம்களும் நமது தூய நோன்பை செயலற்றதாக்கி விட்டனர். “”நீங்கள் பட்டினி கிடப்பதுதான் மிச்சம் பயனொன்றுமில்லை” என்ற அவர்களது திட்டத்தை நிறைவேற்ற சூரிய அஸ்த்தமன நேரம் தான் மஃரிப் தொழுகையுடைய நேரமெனவும் இதே சூரிய அஸ்த்தமன நேரம் தான் நோன்பு துறக்கும் நேரமெனவும் நம்பவைத்து விட்டார்கள்.

நம்மவர் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றுத் திகழ்ந்த நமது உலமாக்களைக்கொண்டே இதைக் கூறவைத்தார்கள்,; எழுத வைத்தார்கள். அப்பாவியான நாங்களும் காலங்காலமாக இதையே கடைப்பிடித்தும் வருகின்றோம். இவர்களைப் பற்றித்தான் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே இவ்வாறு கூறியுள்ளார்கள் :
ஸஹீஹ் முஸ்லிமில் வருகின்ற இந்த அருமையான ஹஸீஸைப் பாருங்கள் (அரபியில் ஹதீஸ் எண் 213)

عنْ أبيْ هريرة قال قال رسولُ الله (ص):
بَادِرُوْا باِلأعْمال ِ فِتناً كِقَطِعَ الليْلِ ِ مُظلِم ِ يُصْبِحُ الرّجُل ُ مُؤْ مِناً ويُمْسيْ كافرًا
وَيُمْسيْ مُؤْ مِناً وَ ِ يُصْبِحُ كافرًا - يَبيْعُ ديْنَه بعَرَض ٍ مِّن الدّ ُ نْيَا (مسلم)

இந்த ஹதீஸை ரிவாயத்து செய்கிறார்கள் அபூ ஹ{ரைரா (ரலி):
”இரவின் இருட்டைப்போல் இன்னல்கள் வந்து உங்களைச் சூழ்ந்துகொள்ளுமுன்பே நற்காரியங்கள் செய்ய அவசரப்படுங்கள். காலையில் விசுவாசியாக விழித்தெழும் ஒருவன் மாலை நேரம் வரும்போது காபிராகிவிடுவான் - மாலை நேரத்தில் விசுவாசியாக இருக்குமொருவன் காலை விடியும்போது காபிராகி விடுவான் . (இந்த கால கட்டத்தில் தான்) அவன் அவனுடைய மார்க்கத்தை துனியாவின் அற்ப இலாபத்திற்காக விற்றுவிடுவான்” என எமது தலைவர் கண்மனி நாயகம் (ஸல்)அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள்.

நோன்பு துறப்பது BREAKING OF THE FAST – أ تِمّ ُ واْ الصِّيامَ

حَدّ َثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِى حَازِ ِم ٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه و آله وسلم قَالَ:
لاَ يَزَالُ النَّاسُ بِخَيْر ٍ مَا عَجَّلُوا الْفِطْرَ (البخارى
)
ஸஹீஹ{ல் புகாரீ (ஆங்கிலப் பிரதி) –பாகம்; 3 - ஹதீஸ் இல: 178 - (தொடர் எண் (அரபு) : 1957 க் கவனியுங்கள் :

''நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும்வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸஹ்ல் இப்னு சஃத்(ரலி) அறிவித்துள்ளார்கள்.

பொதுவாக நம்மவர் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஸஹீஹான ஹதீஸ் இது.

இதனடிப்படையில் மஃரிப் தொழுகைக்கான அஸான் ஒலி காதில் பட்டதும் நோன்பைத் துறக்க விரைகின்றோம். அதில் பிழையில்லை. சரியான முறையும் அதுதான்.
ஆயினும் இந்த அஸான் சொல்லப்படும் நேரம்தான் குளறுபடி!
நாட்காட்டிகளிளும் (Calendar) துண்டுப் பிரசுரங்களிலும் தற்போது உத்தியோக பூர்வமாக பிரசுரிக்கப்பட்டிருக்கும் சூரிய அஸ்தமன நேரந்தான் மஃரிப் தொழுகையின் நேரமா? என்று நாம் நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டியுள்ளது.
பள்ளிவாசல்களில் மட்டுமல்ல ஒலி ஒளிபரப்புகளிலும் அஸான் ஒலிக்கின்றது. சில நேரங்களில் சிற்சில நேர வித்தியாசங்களிலும் அஸான் ஒலிபரப்பாகின்றது.
எப்படியோ - அஸான் ஒலி கேட்டதும் விரைந்து விரைந்து நோன்பை துறக்கின்றோம்.
பகல் பட்டினியுடன் பக்திச் சிரத்தையோடு பிடித்த நோன்பை வீணடிக்கத்தான் விரைகின்N;றாமா? அல்லது சரியாகத்தான் துறக்கின்றோமா? என்று சற்று சிந்திக்க வேண்டியுள்ளது சகோதரர்களே !

வானிலை அவதான நிலையத்தால் கணிப்பீடு செய்து தரப்பட்டுள்ள சூரிய அஸ்தமன நேரம்தான் நமது மஃரிப் தொழுகைக்கான அஸான் ஒலிக்கும் நேரமென நம்மில் அதிகம்பேர் நம்பியிருக்கின்றோம்.
இது எமது கண்ணியத்துக்குரிய தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய சுன்னாவல்ல என்பதை மிகவும் அழுத்தந் திருத்தமாகச் சொல்கின்றேன்.

சில நேரங்களில் வான சாஸ்திர ஆய்வுகள் மூலமாகக் கிடைக்கின்ற சூரிய உதய-சூரியஅஸ்தமன கணிப்பீடுகளில் அத்துணை துல்லியம் இருப்பதில்லை என்பதை அவர்களே விளக்குகிறார்கள்.

சூரியஉதயம்- சூரியஅஸ்தமனம் தொடர்பான மிகச்சரியான வரைவிலக்கணம்தான் என்ன? என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ழூ சூரிய உதயம் : காலையில் ஒரு நேரத்தில் வானிலையில் ஏற்படுகின்ற – சூரியனின் ஆழிவட்ட மேல் விளிம்பு, தொடுவான் விளிம்போடு ஒன்று படும் நேரமே . சூரிய உதயமாகும்.
ழூ சூரியஸ்தமனம் : மாலையில் ஒரு நேரத்தில் வானிலையில் ஏற்படுகின்ற ஆழிவட்டமேல் விளிம்பு தொடுவான் விளிம்போடு (அடிவானத்தோடு) ஒன்று படும் நேரமே சூரிய அஸ்தமன நேரமாகும்.

இந்த இரு நேரங்களிலும் அதாவது உதய சூரியனின் முதற் கதிர்களும் - அந்திச் சூரியனின் கடைசிக்கதிர்களும் சூரியனின் ஆழிவட்டத்தின் மையம் அடிவானத்தின் கீழ்தான் இருக்கும்.
இன்னும் வேறு சில வளிமண்டல காரணங்களால் காலையிலும் மாலையிலும் சூரியனின் ஆழிவட்ட மேல் விளிம்பு சம்பூர்ணமாய் அடையுமுன் சில நிமிடங்கள் மேல் நோக்கியே காணப்படும்.

வைகறை - Twilight
சூரியோதயத்திற்கு சில நேரங்களுக்கு முன்பும் - சூரியஸ்தமனத்திற்கு சில நேரங்களுக்கு பின்பும் சூரியனிலிருந்து வரும் ஒளி வளிமண்டலத்தை மங்கலான ஒளிபெற செய்கிறது. இதையே வைகறை (Twilight) என்பர்.

வைகறை நேரம் (Twilight) மூன்று விதப்படும் -
1. (Civil Twilight) சிவில் வைகறை :
சூரியன் ஆறு (6) பாகை அல்லது குறைவாக அடிவானத்திற்குக் கீழாய் இருக்கும் கால நேரத்திற்கு ஸிவில் வைகறை (Civil Twilight) - வைகறை மங்கலொளி எனப்படும்.
2. (Nautical Twilight) நோட்டிகல் வைகறை :
சூரியன் ஆறு (6) பாகைக்கும் 12 பாகைக்கும் அடிவானத்திற்குக் கீழாய் இருக்கும் கால நேரத்திற்கு நோட்டிகல் வைகறை (கடல் பிரயாணம் சம்பத்தப்பட்ட)( Nautical Twilight) எனப்படும். இக்கால நேரத்தில் பழபழக்கும் நட்சத்திரங்கள் நன்றாகத் தெரியும். இந்த நேரமே கப்பலோட்டிகளுக்கு திசைகாட்டக் கூடியதாகவும் இருக்கிறது.

3. (Astronomical Twilight) வானுலார் வைகறை :
சூரியன் 12 பாகைக்கும் 18 பாகைக்கும் அடிவானத்திற்கு கீழாய் இருக்கும் கால நேரத்திற்கு வானுலார் வைகறை (Astronomical Twilight) எனப்படும்.
இதில் அவ்வவ்வருட காலத்திற்கேற்ப சிற்சில வித்தியாசங்கள் ஏற்படலாமெனவும் கூறப்படுகின்றது.

இலங்கையைப் போன்ற வெப்ப மண்டல நாடுகளில் - Civil Twilight - ஸிவில் வைகறையானது- வைகறை மங்கலொளி - சூரியோதயத்திற்கு கிட்டத்தட்ட 21 நிமிடங்களுக்கு முன்னர் ஆரம்பமாகி சூரியஸ்தமனத்திற்கு கிட்டத்தட்ட 21 நிமிடங்களுக்குப்பின் மாலை வைகறை மங்கலொளியின் நேரமாகின்றது.
Nautical Twilight – நோட்டிகல் வைகறையானது சூரியோதயத்திற்கு கிட்டத்தட்ட 37 நிமிடங்களுக்கு முன் ஆரம்பமாகி சூரியஸ்தமனத்திற்கு கிட்டத்தட்ட 37 நிமிடங்களுக்குப்பிறகு மறைந்து விடுகின்றது.
இன்னும் இவைப்பற்றி எண்ணிலடங்காத விஞ்ஞான ரீதியான உண்மைகள் உள்ளன. அவற்றை சுருக்கங்கருதி நாம் எடுத்துக்கொள்ளவில்லை. எனினும் இதுபற்றிய மேலும் தெளிவுகள் தேவைப்பட்டோர்
Astronomical Almanac, ed. P. K. Seidelmann (1992), pp 482ff. .
எனும் பிரசுரத்தைப் பார்க்கலாம் அல்லது இணையத்திலுள்ள The Cosmological Institute எனும் அண்டவெளியின் அமைப்புமுறை பற்றிய தகவல்களைத் தரும் விஞ்ஞான கல்வி நிலையத்தின் வெப்சைட்டில் பார்த்து கொள்ளலாம்.

இன்னும் எளியமுறையில் கூறுவதென்றால் மாலையில் வைகறை மங்கலொளி நேரமானது - நிலாவொளியோ அல்லது வேறு ஏதாவது மின்சார ஒளியோ இல்லாத நேரத்தில் ஒரு பொருளை நாம் காண்பதாயின் அந்தப் பொருளின் உருவம் மட்டுமே நமக்குத்தென்படும்,; அதன் பகுதிகள் தென்படாது.
உதாரணமாக நமது வீட்டு வாசலில் ஒரு மனிதன் வந்து நின்றால், யாரோ ஒரு மனிதர் நிற்கின்றார் என்ற தோற்றம் மட்டுமே தெரியும்;,; அவர் யார் என்பது புரியாது. அவருடைய முகம் அங்க அவயங்கள் தென்படாது. அப்பேற்பட்ட மங்கலான இருட்டு நேரமே Civil Twilight எனப்படுகிறது.
இதையே நோன்பு துறக்கும் நேரமென நான் சொல்லவில்லை எங்கள் கண்மனி நாயமக் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

உதய அஸ்தமன கணிப்புகளின் திட்பநுட்பம்:
சூரிய உதய, சூரிய அஸ்தமன இயல்பு நேரங்களை மிகவும் நுட்பமாகப் பிழையின்றிக் கணிக்கமுடியாதென விஞ்ஞானிகளும் நிபுணர்களும் கூறியுள்ளனர். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

கால நிலையின் நிலைமைகளைப் பொறுத்தே வானிலை நேரக்கணிப்பை நுட்பமாகக் கூற முடியும்.
வானவிளிம்பில் படும் ஒளிக்கதிர் நேர்கோட்டிலிருந்து விலகிச் செல்லும் சூரியனின் கிரணங்களால் பாதிக்கப் படுகின்றன. ஆகவே மிகச்சிறந்த காலநிலை நேரங்களிலும்கூட சரியான உதய-அஸ்தமன நேரங்களை கணிப்பது முடியாததொரு காரியமாகும். ஏனென்றால் ஒவ்வொரு இடத்தின் இடஇயல்பும், அதைக் கவனிப்பவரின் உயரம் - மலைகளின் உயரம் போன்ற காரணிகள் உதய-அஸ்தமன நேரங்களைப் பாதிக்கலாம். ஆகவே இவ்வாறான விடயங்களை சாதாரணமான உதய-அஸ்தமன நேர கணிப்பில் சேர்ப்பது செயல் முறை சார்ந்ததொன்றல்ல.
அடிவானத்திற்கு மேலெழும் கோண அளவு அதிகமாக இருந்தால் உதய-அஸ்தமன நேரக்கணிப்பு குறைவாகவே காட்டும். இன்னும் மேகங்களாலும் நேரக்கணிப்பு அதிகமாக பாதிக்கப்படுகிறது.
ஆகவே, சூரிய உதய-அஸ்தமன நேரங்களை சரியான நுட்பத்துடன் கணிப்பது முடியாததொருகாரியமாகுமென தெளிவாகத் தெரிகின்றதல்லவா?

ஆகவே, வானிலை ஆராய்ச்சி நிலையத்தினால் தெரிவிக்கப்படுகின்ற சூரிய அஸ்தமன நேரம் ஓர் உத்தேசக்கணிப்பேயன்றி மிகவும் துல்லியமானதல்ல. எனவே, இவர்களால் கணிக்கப்பட்டு எமக்காக வழங்கப்பட்டுள்ள சூரிய அஸ்தமன நேரம் மஃரிப் தொழுகையின் நேரமாக இருக்க முடியாது. இந்த உண்மையை விளக்கும் அல்-குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் அனேகம் இருக்கின்றன. இந்த நூலின் சுருக்கம் கருதி அவற்றில் ஒரு சிலவற்றை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் நாம் விளக்கியுள்ளோம்.

ஆகவே அல்-குர்ஆனிலிருந்தும் ஹதீஸ்களிலிருந்தும் நாம் மஃரிப் தொழுகையின் சரியான நேரத்தை உறுதிப் படுத்துவோம் - இது எங்கள் தலைவர் கண்மனி நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னாவை சரியான முறையில் எடுத்துக் காட்டுகின்றது.
முதலில் நாம் தொழுகைக்கான அழைப்பு அஸான் சொல்லப்படுகின்ற நேரங்களை உறுதிப் படுத்தும் ஹதீஸ்களைக் கவனிப்போம்:

தொழுகைநேர அட்டவணையைத் தருகின்ற நாட்காட்டிகளிளும் (calendar)) விசேடமாக ரமழான் காலத்தில் வினியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரங்களிலும் ‘சூரிய அஸ்தமனம் என்று ஒரு நிரலணி இருப்பதைக் காணலாம் - அதே நிரலணியினருகே ‘மஃரிப் தொழுகைக்கான நேரம்’ எனவும் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்த ‘சூரிய அஸ்தமன’ நேரத்தை வழங்கியிருப்பது வானிலை ஆராய்ச்சி நிலையம்.
இந்த நேரம்தானா எமது மஃரிப் தொழுகையின் நேரம்?
நீங்களே தீர்மானியுங்கள்.
மஃரிப் தொழுகைக்கான அஸான் ஒலிக்கும்போது வானத்தை சற்று நோக்குங்கள். மேகமில்லாத நாட்களில் வானம் நீல நிறமாகவும் வானத்தில் அந்திநேர மஞ்சலொளியுடனும் காணப்படுவதைக் காணலாம். இன்னும் மஞ்சலொளியின் கதிர்கள் நமது வீட்டு வாசல்களிலும் சுவர்களிலும் ஜன்னலூடாகவும் ஊடறுத்துக் கொண்டிருப்பதையுங் காணலாம்.
இது தான் மஃரிப் தொழுகையின் நேரமா?
வானிலை ஆராய்ச்சி நிலையம் வழங்கும் சூரிய அஸ்தமன நேரம் தான் மஃரிப் தொழுகையின் நேரமென்று எங்கள் தலைவர் நாயகம் (ஸல்) கூறியுள்ளனரா?
அருள் மறை அல்-குர்ஆனில் அழ்ழாஹ் சொல்வதைக் கவணியுங்கள்:
إنَّ الصّلوة َ كَانَتْ عَلَى الْمُؤْمِنِيْنَ كِتابًا مَّوْقُوْتًا●
4:103 ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது. (ஸ{ரா அல்-நிஸா)
وَ أقِم ِ الصّلوة َ طَرَفَي ِ النَّهَارِ وَزُلّفًا الّيْل ِ ●
11:114. பகலின் (காலை, மாலை ஆகிய) இருமுனைகளிலும், இரவின் பகுதியிலும் நீங்கள் தொழுகையை நிலைப்படுத்துவீராக - (ஸ{ரா அல்-ஹ_த்).

தப்ஸீர்களிலும் இதுபற்றித் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
விசேடமாக தப்ஸீர் குர்துபியில் :
طرفي النّها ر – தரஃபயின்னஹார் - طرفان தர்ஃபான் - என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைப் பாருங்கள்:
طرفان தர்பான் என்பது ஒரு நாளின் இரு இறுதி முனைகளும் என்பது பொருள்படும்.
طرف எனும் அறபுச் சொல்லுக்கு ஓரே பொருள் சார்ந்த வேறு கருத்துகளும் உள்ளண (synonyms) - அவையாவன :
حدّ - منتهى ‘ஹத்த’ - ‘முன்தஹா’ எனும் சொற்களின் பொருளாவன எல்லை, வரம்பு, விளிம்பு, ஓரம், கடைசி எல்லை, கடைக்கோடி என்பனவாகும்.
ஆகவே طرفي النّها ر – ‘தரஃபயின்னஹார்’ என்பது الظهر – ‘ளுஹரு’டைய ஆரம்பமும் العصر ‘அஸரு’டைய கடைசியையும் - இரு இறுதி முனைகளையும் குறிக்கின்றது என்றும்
الليل من وزلفا – ‘வ ஸ{லஃபம்மினல்லைல்’ – என்பது இரவின் இரு எல்லைகளையும் குறித்து நிற்கின்றது – அதாவது والعشاء المغرب- மஃரிபையும் இஷாவையும் குறிக்கின்றது என கூறப்படுகிறது.
இன்னும் கண்மனி நாயகம் (ஸல்) சொன்னார்கள்:
هي الصّبح في أوّل النّهار والظّهر والعصر مرّةً اُخرى
هُما زُلفا اللّيل المغرب والعشا
சுப்ஹ{டைய நேரமானது பகலின் முதல் உச்சநிலையும் ளுஹரும் அஸரும் மற்ற இறுதி உச்ச நிலையுமாக இருக்கும்; . நண்பகல் உச்சிவேளை ஒரு உச்ச நிலையும் சூரிய அஸ்தமனம் மற்ற உச்ச நிலையுமாகும் -
மஃரிபும் இஷாவும் இரவின் முதல் உச்ச நிலையும் கடைசி உச்ச நிலையுமாகும்.
زُلْفة : أوّلُ اللّيل أو قِسْمٌ مّنْْهُ
அரபி அகராதியில் : زُلْفة – என்றால் இரவின் ஆரம்பம் அல்லது இரவின் ஒரு பகுதியை குறிப்பிடும்.

ஸ_ரா அல்-ஃகாபில் அல்-குர்ஆன் திரும்பவும் கூறும்போது:

فَاصْبرْ عَلَى مَا يَقُوْلُوْنَ وَسَبّح بِحَمْدِ رَبّكَ قَبْلَ طُلُوْع ِ الشَّمْس وَقَبْلَ الْغُرُوْبِ●
50:39. எனவே (நபியே!) அவர்கள் கூறுவதைப் பற்றிப் பொறுமையோடிருப்பீராக! இன்னும், சூரிய உதயத்திற்கு முன்னரும், (அது) அஸ்தமிப்பதற்கு முன்னரும் உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு நீர் தஸ்பீஹ{ செய்வீராக.

இது தொடர்பான இன்னொரு அழகான ஹதீஸைப் பாருங்கள் :

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ حَدَّثَنَا خَالِدٌ وَهُشَيْمٌ عَنْ إِسْمَاعِيلَ عَنْ قَيْسٍ عَنْ جَرِيرٍ قَالَ كُنَّا جُلُوساً عِنْدَ النَّبِىِّ صلى الله عليه وسلم إِذْ نَظَرَ إِلَى الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ قَالَ : إِنَّكُمْ سَتَرَوْنَ رَبَّكُمْ كَمَا تَرَوْنَ هَذَا الْقَمَرَ لاَ تُضَامُّونَ فِى رُؤْيَتِهِ ، فَإِنِ اسْتَطَعْتُمْ أَنْ لاَ تُغْلَبُوا عَلَى صَلاَةٍ قَبْلَ طُلُوعِ الشَّمْسِ وَصَلاَةٍ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ ،
فَافْعَلُوا (البخاري)

ஹதீஸ்:
ஜரீர் இப்னு அப்துழ்ழாஹ் அல்-பஜலீ அவர்களால் ரிவாயத்துச் செய்யப்படுகிறது:
நாங்கள் நாயகம் (ஸல்) அவர்களோடு பௌர்ணமி தினத்தன்று உட்கார்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சந்திரனைப்பார்த்துச் சொன்னார்கள், நீங்கள் உங்களுடைய ரப்பை இந்த பூரணச் சந்திரனைப் பார்ப்பதைப்போல் காண்பீர்கள். அவனை பார்ப்பதற்கு ஒரு கஷ்டமும் இருக்காது. உங்களுக்கு சூரியோதயத்திற்கு முன்னுள்ள தொழுகையையும் அதாவது (ஸ{ப்ஹ{ தொழுகை) சூரிய அஸ்தமனத்திற்கு முன்னுள்ள தொழகையையும் (அதாவது அஸர் தொழுகை) தவறவிடாது (தூக்கத்தாலோ அல்லது வியாபாரத்தின் பராக்காலோ)கடைபிடிக்க முடியுமென்றால் அப்படியே செய்யுங்கள் - என்றார்கள்.
ஸஹீஹ{ல் புகாரீ –பாகம்; 9 - ஹதீஸ் இல: 529.
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் இல: 7078. திர்மிதி ஹதீஸ் இல: 5647 (தப்ஸீர் குர்துபி - தப்ஸீர் இப்னு கஸீர்)

மேலும் ஸ_ரா தாஹா 130ஆவது வசனத்தைப் பாருங்கள்:

فَاصْبرْ عَلَى مَا يَقُوْلُوْنَ وَسَبّح بِحَمْدِ رَبّكَ قَبْلَ طُلُوْع ِ الشَّمْس ِوَقَبْلَ غُرُوْبِهَا وَمِنْ ءآنَاﺉالّيْل ِفَسَبّحْ وَأطْرَافَ النّهَار ِلَعَلّكَ تَرْضى●
20:130 .ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை(யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக! இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது அடைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக! இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக! இதனால் (நன்மைகளடைந்து) நீர் திருப்தியுறலாம்.
இந்த வசனம் பிரத்தியேகமாக ஃபஜ்ர் தொழுகை, இரண்டு பிற்பகல் தொழுகைகளான - ளுஹர் அஸர் - இரவின் இரு தொழுகைளான மஃரிப் இஷா ஆகிய நேரத் தொழுகைகளையே குறிப்பதை அவதானிக்கலாம்.
இன்னொரு ஹதீஸைக் கவனியுங்கள்:
عنْ عبْد الله بْنِ عمر ٍ قال قال رسول الله (ص) :
وقْتُ الظّهَر إذا دَالَتِ الشّمْسُ وكانَ ظِلّ ُالرّ َجُلُ كُطُوْلهِ مالمْ يحضُر ِالعصْرُ
و وقْتُ العصْر ِ مالم تصفّرُ الشمْسُ
ووقْتُ صلوةِ المغر ِبِ مالم يَغِب ِالشّفَقُ
ووقْتُ صلوة ِالعِشاء ِإلى نِصْفِ اللّيْلِ الأوْسَطِ
ووقْتُ صلوة ِ الصّبح ِ مِنْ طُلُوْع ِالفجْر ِ مالَمْ تطْلع ِالشّمسُ
فأمْسِكْ عَنِ الصّلوةِ فإنّها تطْلُعُ بَيْنَ قَرَنَي ِ الشّيطانِ (مسلم)
கண்மனி நாயகம் (ஸல்) கூறினார்கள்:
ளுஹரின் நேரம் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தது முதல் ஒரு மனிதரின் நிழல் சரியாக அவரின் உயரத்தைப்; போன்று ஆகுகின்ற நேரம் வரையிலாகும்., மேலும் அஸருடைய நேரம் வராத வரையிலுமாகும்.
அஸரின் நேரம் சூரியனின் மஞ்சள் மாறாத வரையிலுமாகும்.
மஹ்ரிப் தொழுகையின் நேரம் செம்மேகம் மறையாத வரையிலாகும்.
ஃபஜ்ரு தொழுகையின் நேரம், ஃபஜ்ரு உதயமானதிலிருந்து சூரியன் உதிக்காத வரையிலுமாகும். சூரியன் உதயமாகிவிட்டால் தொழுவதை நிறுத்திக்கொள் ஏனெனில் அது நிச்சயமாக ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு மத்தியில் உதயமாகின்றது என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ், பின் அம்ரு ரளியல்லாஹ{ அன்ஹ{
(ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் இல: 1275)
இங்கே எமது பிரதான நோக்கம் மஃரிப் தொழுகை பற்றியதேயாகும் :
ஆகவே,
: ووقْتُ صلوةِ المغر ِبِ مالم يَغِب ِالشّفَقُ
மஃரிபுடைய தொழுகை நேரம் வானத்தின் செம்மேகம் மறையும் வரை நீடித்திருக்கும்.
தப்ஸீருடைய உலமாக்கள் அனைவருமே,;-
சூரியனின் செங்கதிர்கள் கண்ணுக்குத் தோன்றிய நேரத்திலிருந்து அந்த செங்கதிர் மறையும் வரை மஃரிப் தொழுகைக்கான நேரமாகும் என்று தீர்ப்புக் கூறியுள்ளார்கள்.
அறபு அகராதியில் شّفَقُ (ஷஃபக்) என்னும் சொல்லின் கருத்து
بَقِيَّةُ ضّوْءِ الشَّمْش ِ بَعْدَ غُرُوْبِهَا
சூரிய அஸ்தமனத்தின் பின்னர் தோன்றுகின்ற மங்கலொளி;, (The twilight afterglow after the Sunset ) ) – ஆதார ஹதீஸ்
ஹதீஸ் - ஸ{னன் அபூதாவூத் ஹதீஸ் இலக்கம் 393:

عَنِ ابنِ عبّاس ٍ قال قال رسُوْلُ الله (ص):
أمّنِيْ جِبْريْلُ عِنْدَ الْبَيْتِ مرّتيْنِ فَصَلىّ بيَ الظّهْرحيْنَ زَالَتِ الشّمْسُ وكا نتْ قَدْرَالشّراكِ وَ صَلّى بِيَ الْعَصْر ِ حِيْنَ صَارَ ظِلّ ُ كُلّ ِ شيْءٍ مِثْلَهُ وَ صَلّى بِيَ الْمَغْر ِبَ حِيْنَ أفْطَرَ الصَّائِمُ وَ صَلّى بِيَ الْعِشَاءَ حِيْنَ غَابَ الشَّفَقُ وَ صَلّى بِيَ الْفَجْر ِ حِيْنَ حَرَمَ الطَّعَامُ وّالشَّرَابُ عَلّى الصَّائِمِ – فَلَمَّا كَا نَ الْغَدُ صَلىّ بيَ الظّهْر ِ حِيْنَ كَانَ ظِلُّهُ مِثْلُهُ وَ صَلّى بِيَ الْعَصْر ِ حِيْنَ كَانَ ظِلُّهُ مِثْلَيْهِ وَ صَلّى بِيَ الْمَغْر ِبَ حِيْنَ أفْطَرَ الصَّائِمُ وَ صَلّى بِيَ الْعِشَاءَ إلى ثُلُثِ الّليْلِ وَ صَلّى بِيَ الْفَجْر ِ فَاسْفَرَ ثُمَّ الْتَفَتِ إلَيَّ - فَقَالَ يَا مُحَمُّدُ هذَا وَفْتُ الأنْبِيَاءِ مِنْ قَبْلِكَ وَالْوقْتُ مّا بَيْنَ هذَيْنِ الْوَ قْتَيْنِ (أبوداود
)
அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் சொன்னார்கள், ஜிப்ரீல் (அலை) அவர்கள் கஃபதுழ்ழாவில் இரு முறை என்னை வைத்து தொழுகை நடாத்தினார்கள். சூரியன் மத்தியிலிருந்து செருப்பின் தோல்வார் அளவு கடந்தவுடன் (அதாவது செருப்பினுடைய தோலளவு நீளமான தூரம்) என்னோடு ளுஹர் தொழுதார்கள். எல்லாவற்றினதும் நிழல் அதே அளவு நீளமானதும் என்னோடு அஸர் தொழுகையை நிறைவேற்றினார்கள். அதன்பிறகு நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்தில் என்னோடு மஃரிபைத் தொழுதார்கள். சூரியஸ்தமனத்துக்கு பின்னர் தோன்றுகின்ற செம்மை நிறம் முற்றாக மறைந்ததும் (இளம் இருட்டு) இஷாவை என்னோடு தொழுதார்கள். சுபுஹ் தொழுகையை நோன்பு நோற்கும் ஒருவர் உண்ணக்குடிக்க விலக்கப்பட்ட நேரம் தொழுதோம்.
மறுநாள் ளுஹர் தொழுகையை ஒருவரின் நிழல் அவருடைய அதேயளவு உயரத்தையடைந்ததும் தொழுதோம். பின்பு அஸர்தொழுகையை ஒருவரின் நிழல் அவரது உயரத்தைப் போன்று இருமடங்கு நிலைக்கு வந்ததும் தொழுதோம்.
பின்பு நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்தில் மஃரிப் தொழுகையைத் தொழுதோம்.
இரவின் மூன்றில் ஒரு பங்கு கழிந்ததும் இஷாவைத் தொழுதோம்;. நாங்கள் சுபுஹ் தொழும்போது மிதமான ஒளியிருந்தது. இதன் பின்பு ஜிப்ரயீல் (அலை) என்னைத் திரும்பிப் பார்த்து முஹம்மதே உங்களுக்கு முன்னால் இருந்த நபிமார்களும் இதே நேரங்களைதான் முறையாகப் பின்பற்றினார்கள். மேலும் தொழுகையின் இரு நேரங்களுக்கிடையே இருக்கும் இடைவெளி நேரத்திற்குள் எந்த நேரத்திலாவது தொழுதுகொள்ள அனுமதியுண்டு என்றும் கூறினார்கள்.
இந்த ஹதீஸை அப்துழ்ழாஹ் இப்னு ஃஅப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.


இது பற்றிய ஏராளமான ஹதீஸ்கள் ஸஹீஹ் ஸித்தாவில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நூலின் பக்கங்களைக் குறைக்கவேண்டும் என்பதற்காகவும் ஒரேவிடயம் பலதடவைகள் எழுதப்படுவதைத் தவிர்த்துக் கொள்வதற்காகவும் அந்த ஹதீஸ்களை எழுதவில்லை, இருந்தும் தேவைப்படுவோர் தேடிக்கொள்வதற்காக ஹதீஸ்களின் இலக்க விபரங்களை இத்தால் இணைத்துள்ளேன்.
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் இல: 1278, 1280; -
ஸஹீஹ் புகாரியில் பல ஹதீஸ்கள் -
‘பிக்ஹ{ஸ் ஸ{ன்னா 1.82
பொதுவாக இவை அனைத்து ஹதீஸ்களிலும் ஒருவசனமே இழையோடுவதைக் காணலாம்:


உதாரணத்திற்காக இந்த ஹதீஸைப் பாருங்கள்:
وَ صَلَّى الْمَغْر ِبَ قَبْلَ أنْ يَغِيْبَ الشَّفَقُ
‘‘அவர்கள் (ரசூலுழ்ழாஹ்) சூரியனின் செங்கதிர்கள் மறையுமுன் மஃரிப் தொழுயையை தொழுவார்கள்.”
மஃரிப் தொழுகையின் நேரம் சூரியனின் செங்கதிர்கள் மேல் வானத்தில் தெரிந்ததும் மஃரிபுடைய நேரம் ஆரம்பமாகி செங்கதிர்கள் மறைவதோடு மஃரிப் தொழுகையின் நேரம் முடிந்துவிடும் என்றுமுபசிரூன்கள் கூறுகிறார்கள்.

ஐأقِم ِ الصّلوة َ لِدُلُوْكِ الشَّمْش ِ إلى غَسَق ِ الَّيْل ِوَقُرْءَانَ الْفَجْر ِ
إنَّ قُرْءَانَ الْفَجْر ِ كَانَ مَشْهُوُدًا ●
17:78 (நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும்வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக! இன்னும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலைநிறுத்துவீராக! நிச்சயமாக ஃபஜ்ரு தொழுகை சான்று கூறுவதாக இருக்கிறது.
தொழுவதற்கு தடை செய்யப்பட்ட நேரங்கள்

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ:
« لاَ يَتَحَرَّى أَحَدُكُمْ فَيُصَلِّى عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَلاَ عِنْدَ غُرُوبِهَا »
(صحيح البخاري – حديث 585)
கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் அறிவிக்கிறார்கள்:
நீங்கள் யாரும் சூரியன் உதயமாகும் நேரத்திலும் சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திலும் தொழ வேண்டாம்.
ஆதாரம்:
ஸஹீஹ{ல் புகாரீ – பாகம் 1 - ஹதீஸ் இல: 559 –
அறபு மொழி : தொடர் எண்: 585, 582, 589, 1192, 1629, 3273 –

இதைத் தெளிவு படுத்துவதற்காக ஹதீஸ்கள் சிலவற்றின் அசல் அறபு வசனத்தை மட்டும் கவனத்திற்கொணர்கிறேன்.

ஸஹீஹ{ல் புகாரீ - தொடர் எண்: 582
- حَدَّثَنَا مُسَدَّدٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ هِشَامٍ قَالَ أَخْبَرَنِى أَبِى قَالَ أَخْبَرَنِى ابْنُ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم
« لاَ تَحَرَّوْا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا » (صحيح البخاري – حديث 582)

ஸஹீஹ{ல் புகாரீ - தொடர் எண்: 589
حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ أُصَلِّى كَمَا رَأَيْتُ أَصْحَابِى يُصَلُّونَ ، لاَ أَنْهَى أَحَدًا يُصَلِّى بِلَيْلٍ وَلاَ نَهَارٍ مَا شَاءَ ، غَيْرَ أَنْ لاَ تَحَرَّوْا طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا
(صحيح البخاري – حديث 589)

இப்னு உமர் (ரலி) அறிவிக்கிறார்கள் :
‘‘என்னுடைய தோழர்கள் சொல்வது-செய்வதையே நானும் சொல்வேன்-செய்வேன். ஒருவர் இரவிலோ பகலிலோ தொழுவதை நான் தடை செய்ய மாட்டேன் - என்றாலும் சூரியன் உதிக்கும் நேரத்திலும் - சூரியன் அஸ்தமனமாகும் நேரத்திலும் தொழ நாடக்கூடாது.
ஸஹீஹ{ல் புகாரீ – பாகம் 2 - ஹதீஸ் இல: 283
ஸஹீஹ{ல் புகாரீ – பாகம் 1 - ஹதீஸ் இல: 563
மேலும் ஸஹீஹ{ல் புகாரீ; தொடர் எண் ஹதீஸ்கள்: 1192– அறபு மொழி கிரந்தங்களின் ஆதாரங்கள்.

قَالَ وَكَانَ يَقُولُ إِنَّمَا أَصْنَعُ كَمَا رَأَيْتُ أَصْحَابِى يَصْنَعُونَ ، وَلاَ أَمْنَعُ أَحَداً أَنْ يُصَلِّىَ فِى أَىِّ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ ، غَيْرَ أَنْ لاَ تَتَحَرَّوْا
طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا . (صحيح البخاري – حديث 1192)

ஸஹீஹ{ல் புகாரீ இன்னும் தொடர் எண் ஹதீஸ்;: 1692– அரபி மொழி கிரந்தங்களின் ஆதாரங்கள்.

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللَّهِ - رضى الله عنه - قَالَ سَمِعْتُ النَّبِىَّ صلى الله عليه
وسلم يَنْهَى عَنِ الصَّلاَةِ عِنْدَ طُلُوعِ الشَّمْسِ وَعِنْدَ غُرُوبِهَا .
(صحيح البخاري – حديث 1692)
ஃஅப்துழ்ழாஹ் அறிவிக்கிறார்கள் :
சூரியன் உதயமாகும் நேரத்திலும் சூரியன் அஸ்தமனமாகும் நேரத்திலும் தொழுவதை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்வதை நான் கேட்டிருக்கிறேன்.
(ஸஹீஹ{ல் புகாரீ – பாகம் 2 - ஹதீஸ் இல: 695)

இன்னும் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள்:
وَلاَ تَحَيَّنُوا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا ، فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَىْ شَيْطَانٍ » . أَوِ الشَّيْطَانِ . لاَ أَدْرِى أَىَّ ذَلِكَ قَالَ هِشَامٌ .
(صحيح البخاري – حديث 3273 )(مُتّفق عليه)
சூரியன் உதயமாகும் நேரத்திலும் சூரியன் அஸ்தமனமாகும் நேரத்திலும் தொழுதுகொள்ள எண்ணவும் வேண்டாம் ஏனென்றால் ஷெய்த்தானுடைய தலையின் இரு கொம்புகளிக்கடையில்தான் சூரியன் உதயமாகிறது.
ஸஹீஹ{ல் புகாரீ.; தொடர் எண் ஹதீஸ்: 3273

حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدَةُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عُمَرَ - رضى الله عنهما - قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم:
« إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَلاَةَ حَتَّى تَبْرُزَ ،
وَإِذَا غَابَ حَاجِبُ الشَّمْسِ فَدَعُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ »
وَلاَ تَحَيَّنُوا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا ، فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَىْ شَيْطَانٍ
(صحيح البخاري – حديث 3272 )

ரசூல் (ஸல்)அவர்கள் கூறியதாக இப்னு உமர் அறிவிக்கிறார்கள் :
காலையில் சூரியனின் மேல் விளிம்பு கண்ணுக்குத் தோன்றினால் சூரியன் முழுமையாக கண்ணுக்குத் தெரியும் வரை தொழாதீர்கள். அதே போல் சூரியன் அஸ்தமனமாகும் நேரத்தில் கீழ் விளிம்பை கண்டீர்களானால் சூரியன் முழுமையாக மறையும்வரை தொழவேண்டாம் ஏனெனில் ஷெய்த்தானுடைய தலையின் இரு பக்கங்களுக்கடையில் (இரு கொம்புகளிக்கடையில்) தான் சூரியன் உதயமாகிறது.
ஸஹீஹ{ல் புகாரீ இன்னும் தொடர் எண் ஹதீஸ்: 3272
ஸஹீஹ{ல் புகாரீ பாகம் 4. ஹதீஸ் இல: 494

وَقَالَ حَدَّثَنِى ابْنُ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم « إِذَا طَلَعَ حَاجِبُ الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَرْتَفِعَ ، وَإِذَا غَابَ حَاجِبُ
الشَّمْسِ فَأَخِّرُوا الصَّلاَةَ حَتَّى تَغِيبَ » . (صحيح البخاري – حديث 583 )

இன்னும் கண்மனி நாயகம் (ஸல்)அவர்கள் திருவாய் மலர்ந்தருளியதாக இப்னு உமர் ரிவாயத்து செய்கிறார்கள்:
நீங்கள் சூரியன் உதயமாகும் நேரத்திலும் சூரியன் அஸ்தமனமாகும் நேரத்திலும் தொழவேண்டாம். மேலும் சூரியனின் விளிம்பு அடிவானத்தில் தெரிந்தால் அது மேலே உயரும்வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள். இன்னும் சூரியனின் மேல்விளிம்பு மறைவதைக் கண்டால் அது சம்பூர்ணமாக மறையும் வரை தொழுகையைப் பிற்படுத்துங்கள்.
ஸஹீஹ{ல் புகாரீ,; தொடர் எண் ஹதீஸ்: 583
ஸஹீஹ{ல் புகாரீ பாகம் 1. ஹதீஸ் இல: 587

மேலும் உங்களுக்கு ஆதாரங்கள் தேவையெனில் இதோ
ஸஹீஹ் முஸ்லிமில் இருந்தும் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களின் ‘முஅத்தா’வில் இருந்தும் சில ஹதீஸ்களை தருகின்றோம்.

ثُمَّ أقْصِرْعَنِ الصَّلوةِ حَتّى تَغْرُبَ الشُّمْسُ فَإنّهَا تّغْرُبُ بَيْنَ قَرْنَي الشَّيْطَان ٍ وَ حِيْنَئِذٍ يَّسْجُدُ لَهَا الكُفّارُ (مسلم)
ரசூலுழ்ழாஹி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆமிர் இப்னு அபஸ ஸலமி அவர்கள் ரிவாயத் செய்கிறார்கள்; - இது ஒரு நீண்ட ஹதீஸ் என்பதால் அதில் ஒரு பகுதியை மட்டும் தருகிறோம்:
‘‘சூரியன் மறையும்வரை தொழுவதைச் சற்று பிற்படுத்துங்கள் ஏனென்றால் அது ஷெய்த்தானின் இரு கொம்புகளிக்கடையில் தான் அஸ்தமனமாகிறது.
இன்னும் இதுதான் காபிர்கள் (வணங்கும்) ஸஜ்தா செய்யும் நேரமுமாகும்.
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்: 1812

حَدَّثَنِى يَحْيَى عَنْ مَالِكٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ عَبْدِ اللَّهِ الصُّنَابِحِىِّ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ « إِنَّ الشَّمْسَ تَطْلُعُ وَمَعَهَا قَرْنُ الشَّيْطَانِ فَإِذَا ارْتَفَعَتْ فَارَقَهَا ثُمَّ إِذَا اسْتَوَتْ قَارَنَهَا فَإِذَا زَالَتْ فَارَقَهَا فَإِذَا دَنَتْ لِلْغُرُوبِ قَارَنَهَا فَإِذَا غَرَبَتْ فَارَقَهَا ». وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الصَّلاَةِ فِى تِلْكَ السَّاعَاتِ .
அல்-முஅத்தா தொடர் ஏடு இல: 15 - ஹதீஸ் - 44
அல்-முஅத்தா தொடர் எண் ஹதீஸ் - 513

ஃபஜ்ருக்கு பிறகும் அஸருக்கு பிறகும் தொழுகையை தடை செய்தல்.

யஹ்யா சொன்னார்கள் - இந்த ஹதீஸ் மாலிகிடமிருந்தும் அவர் ஸெய்த் பின் அஸ்லமிடமிருந்தும், அவர் அதாஇப்னு யஸாரிடமிருந்தும் அவர் அப்துழ்ழாஹ் அல் சுனாபஹீ யிடம் ரசூலுழ்ழாஹ் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் கூறுகிறார் : அதாவது:
சூரியன் உதயமாகும் நேரம் ஷெய்தானுடைய கொம்பும் அதனோடு இருக்கும் - சூரியன் ஏற ஏற அந்தக் கொம்பும் விலகிச்செல்லும்.
பின்பு சூரியன் நன்பகல் உச்சியை அடைந்ததும் மீண்டும் வந்து சேர்ந்து விடுகின்றது - சூரியன் சாயும் போது விலகிச்செல்கிறது சூரியன் அஸ்தமனமாகும்போது திரும்பவும் வந்து சேர்ந்து விடுகின்றது. அழ்ழாஹ்வின் திருத்தூதர் (அழ்ழாஹ் அவர்களுக்கு நல்லருள் பாலித்து அமைதியும் சாந்தமும் அருள்வானாக) இந்த நேரங்களில் தொழுவதைத் தடுத்துள்ளார்கள்.

وَحَدَّثَنِى عَنْ مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ كَانَ يَقُولُ لاَ تَحَرَّوْا بِصَلاَتِكُمْ طُلُوعَ الشَّمْسِ وَلاَ غُرُوبَهَا
فَإِنَّ الشَّيْطَانَ يَطْلُعُ قَرْنَاهُ مَعَ طُلُوعِ الشَّمْسِ وَيَغْرُبَانِ مَعَ غُرُوبِهَا وَكَانَ يَضْرِبُ النَّاسَ عَلَى تِلْكَ الصَّلاَةِ
அல்-முஅத்தா தொடர் ஏடு இல: 15 - ஹதீஸ் - 49
அல்-முஅத்தா தொடர் எண் ஹதீஸ் - 518

ஃபஜ்ருக்கு பிறகும் அஸருக்கு பிறகும் தொழுகையை தடை செய்தல் தொடர்பான ஹதீஸ்:

யஹ்யா சொன்னார்கள் - இந்த ஹதீஸ் மாலிகிடமிருந்தும் அவர் அப்துழ்ழாஹ் இப்னு தீனாரிடமிருந்தும் இவர் அப்துழ்ழாஹ் இப்னு உமரிடமிருந்தும் உமர் இப்னு கத்தாப் (ரலி) கூறியதாக :
‘‘ சூரியன் உதயமாகும் நேரத்திலோ சூரியன் அஸ்தமனமாகும் நேரத்திலோ தொழுவதற்கு நாட்டம் கொள்ளாதீர்கள் ஏனென்றால் ஷெய்த்தானுடைய கொம்புகள் சூரியன் உதயமாகும்போதே வானில் எழுந்து சூரியன் அஸ்தமனமடையும் வேளையிலேயே அவையும் அஸ்தமனமாகி விடுகின்றன.

மேலும் அல்-முஅத்தா தொடரேடு இல: 15 - ஹதீஸ் - 44 இல்
உமர் (ரலி) அவர்கள் இந்த நேரங்களில் தொழுகின்றவர்களைத் தண்டிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆகவே சூரியன் உதயமாகும் நேரத்திலோ சூரியன் அஸ்தமனமாகும் நேரத்திலோ தொழுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்ற உண்மையை நாம் தெட்டத்தெளிவாக விளங்கக்கூடியதாகவுள்ளது.

மேலும் மையத்துக்கான நல்லடக்கம்கூட இந்த நேரங்களில் நடை பெறக்கூடாது என்றும் புகாரி – முஸ்லிம் கிரந்தங்களிலே ஹதீஸ்கள் வந்துள்ளன. இதோ அவற்றில் சிலவற்றையும் இத்துடன் இணைக்கின்றோம்.

عَنْ عُقْبَة َ ابْن ِ عَامِر ٍ قَال: ثلاَ ثَ سَاعَاتٍ كَانَ رَسُوْلُ الله (ص) يَنْهَانَا
أنْ تُصًلَِيَ فِيْهِنَّ أوْ نَقْبُرَ َ فِيْهِنَّ مَوْتانَا :
حِيْنَ تَطْلُعُ الشَّمْسُ بَاز ِغَة ً حَتّى تَرْتَفِع:
وَ حِيْنَ يَقُوْمُ قَائِمُ الظّهِيْرةِ حَتّى تَمِيْلَ الشّمْسُ :
وَ حِيْنَ تُضَيّفُ الشّمْسُ لِلْغُرُوْبِ حَتّى تّغْرُبَ – (متفق عليه)
கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் தொழுவதற்கும் மையித்தை நல்லடக்கம் செய்வதற்கும் தடுக்கப்பட்டுள்ள மூன்று நேரங்களை அறிவித்துள்ளதாக உஃகபதிப்னு ஆமிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
அதாவது:
சூரியன் உதயமாகி அது முழுமையாக மேலே ஏறும் வரை.
சூரியன் மத்தியானத்தின் உச்ச நிலையை அடைந்து அது சாயும் வரை.
சூரியன் அஸ்தமனமாகி அது முழுமையாக மறையும் வரை. ஆகிய நேரங்களாகும்.
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்: 1811 – ஆங்கிலம்
ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்: 1966 - அறபு

நாங்கள் முன்னர் குறிப்பிட்ட அல்-குர்ஆன் வசனம் கூறுவதை மேலும் மீட்டிப்பார்ப்போம்
أقِم ِ الصّلوة َ لِدُلُوْكِ الشَّمْش ِ إلى غَسَق ِ الَّيْل
(நபியே!) சூரியன் (உச்சியில்) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் சூழும் வரை (ளுஹர், அஸர், மஃரிப், இஷா) தொழுகையை நிலை நிறுத்துவீராக. அல்-குர்ஆன் : 17:78
மேலும் அல்-முஅத்தா தொடரேடு முதலாம்பாகம் - ஹதீஸ் - 19 – 20 ஆகிய ஹதீஸ்களைப் பாருங்கள் :
دُلُوكُ الشَّمْسِ- غَسَقُ اللَّيْلِ இவ்விரண்டையும் விளக்கும் ஹதீஸ்கள்
وَحَدَّثَنِى عَنْ مَالِكٍ عَنْ دَاوُدَ بْنِ الْحُصَيْنِ قَالَ أَخْبَرَنِى مُخْبِرٌ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ كَانَ يَقُولُ دُلُوكُ الشَّمْسِ إِذَا فَاءَ الْفَىْءُوَغَسَقُ اللَّيْلِ اجْتِمَاعُ اللَّيْلِ وَظُلْمَتُهُ .

ஃஅப்துழ்ழாஹ் இப்னு அப்பாஸ் எப்போதும் கூறுவார்கள் - دُلُوكُ الشَّمْسِ- என்பது சூரியன் மதிய நேர உச்சியை விட்டும் சாயும் நேரம் என்றும் -
غَسَقِ اللَّيْلِ – என்பது இரவும் இரவின் இருள் சூழும் நேரமுமாகும்
அகராதியிலே :
دُلُوْك - (துலூக்) என்றால் சூரியன் சாயும் வேளை.
غَسَق ِ - (ஃகஸக்) என்றால் இரவின் இருள் என்றும் இருப்பதைக் காணலாம்.
அகராதியிலே வைகறைக்கு இன்னும் பல கருத்துகள் கூறப்பட்டுள்ளன.
சூரிய அ;ஸ்மனத்திற்குப் பின்னுள்ள மிகவும் மங்கலான ஒளி – அரைகுறை இருள் - இருளார்ந்த – அதாவது கண்களால் பார்க்க கஷ்டமான – தெளிவற்ற – மங்கிய – தெளிவின்மை என்றெல்லாம் பொருள் பொறிக்கப்பட்டுள்ளது.
شَفَقமறையும்போது غَسَقِ ஆரம்பமாகிறது
தஃப்ஸீர் ஃகுர்துபியில்
الغَسَق سَوَادِ الليل
غَسَقِ என்றால் இரவின் கருமையை குறிக்குமென்று அபூ உபைதா (ரலி) ரிவாயத்து செய்கிறார்கள்.
غَسَقِ எனும் சொல் இஷாத் தொழுகையின் ஆரம்பத்தையும் அதன் முடிவு நள்ளிரவு வரையுள்ள காலத்தையும் குறிப்பிடுவதாக பல ஹதீஸ்கள் வந்துள்ளன.
சூரியனின் செங்கதிர்கள் மறைவதை غَابَ الشَّفَق)) என குறிப்பிடும் அதிகமான ஹதீஸ்கள் உள்ளன.
وَ صَلَّى الْمَغْر ِبَ قَبْلَ أنْ يَغِيْبَ الشَّفَقُ
‘‘ரசூலழ்ழாஹி (ஸல்) அவர்கள் சூரியனின் செங்கதிர்கள் மறைவதற்கு முன் மஃரிப் தொழுகையை நிறைவேற்றினார்கள்.”
சூரியனின் செங்கதிர்கள் மேல்வானத்தில் தென்படும் நேரத்திலிருந்து மஃரிப் தொழுகை ஆரம்பமாகி அது மறையும்வரைதான் மஃரிப் தொழுகைக்கான நேரம் என முஃபஸ்ஸிரூன்கள் விளக்கந் தருகின்றார்கள்.
முஅத்தாவிலிருந்து வரும் இன்னுமொரு ஹதீஸ் மஃரிப் தொழுகைக்கான சரியான நேரத்தை தெளிவாக விளக்குகின்றது.

قَالَ مَالِكٌ وَهَذَا الأَمْرُ هُوَ الَّذِى أَدْرَكْتُ عَلَيْهِ النَّاسَ وَأَهْلَ الْعِلْمِ بِبَلَدِنَا .
وَقَالَ مَالِكٌ الشَّفَقُ الْحُمْرَةُ الَّتِى فِى الْمَغْرِبِ فَإِذَا ذَهَبَتِ الْحُمْرَةُ فَقَدْ وَجَبَتْ صَلاَةُ الْعِشَاءِ وَخَرَجْتَ مِنْ وَقْتِ الْمَغْرِبِ

. . .மாலிக் கூறுகிறார்கள் எங்கள் சமூகத்திலுள்ள அறிவுத் திறன் பெற்றவர்கள் சொல்வது இதுதான்:
شَفَق என்பது சூரியன் அஸ்தமனத்திற்குப் பிறகு தோன்றுகின்ற (வானத்தின்) செந்நிறமாகும்.இந்த செந்நிறம் மறைந்ததும் இஷா தொழுகைக்கான நேரம் வந்து மஃரிப் தொழுகைக்கான நேரம் முடிந்து விட்டது.
அல்-முஅத்தா தொடர் ஏடு ஒன்று - ஹதீஸ் - 23

غَسَقِ - شَفَق என்னும் இவ்விரு சொற்களும் خَوْف எனும் பயத்தை உண்டாக்கும் நேரம் எனவும் கூறப்படுகிறது.
خَوْف - எனறால் அச்சம், பயம், நடுக்கம், அதிர்ச்சி, திகில், பீதி எனவும் பொருட்படும்.
அல்-குர்ஆன் 113ஆவது அத்தியாயமான – சூரா அல்-ஃபலக்கின் மூன்றாவது வசனம் இதற்கு சான்று பகர்கின்றது:

وَمِنْ شَرّ ِ غَاسِق ٍ إذَا وَقَبَ
113:3 .இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-
எனக்கூறுகிறது.
இங்கே غَسَقَ எனும் மூலச்சொல்லிலிருந்து தான் غَاسِق எனும் சொல் பெற்றிருக்கிறது.
இதனடிப்படையில்தான் غَاسِق என்பது இருள் சூழும் நேரம். இது பயமும், திகிலும், பீதியும் மனிதன் இருதயத்துக்குள் ஊர்ந்து திரியும் நேரம் என மி;கச்சிறப்பான முறையில் முபஸ்ஸிரூன்கள் அனைவரும் ஏகமனதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இதுவரை மஃரிப் தொழுகைக்கான நேரம் எது? அது முடிவடையும் நேரம் என்ன? என்ற கேள்விக்கான விடைகளை மிகவும் தெளிவாகவும் நுட்பமான ஆதாரங்களுடனும் எடுத்துக்கூறினோம்.
இதனடிப்படையில் இனி எமது இந்த சிறு நூலின் முக்கிய கருப்பொருளான நோன்பு துறக்கும் நேரம் பற்றிய புனித அல்-குர்ஆனோடு இணங்கிப்போகின்ற ஹதீஸ்கள் சிலவற்றைக் கவனிப்போம்:
எல்லோருக்கும் தெரியும் பெருமானார் (ஸல்) அவர்களின் காலத்திலே நேரத்தைக் குறிப்பி;டுவதற்கு இப்போது இருப்பதைப் போன்று கடிகாரங்கள் இருக்கவில்லை., அத்தோடு சூரியோதயம் - சூரியஸ்தமனம் பற்றியெல்லாம் விளக்கங்கூற வானிலை ஆராய்ச்சியாளர்களும் இருக்கவில்லை – ஆகவேதான் எங்கள் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்தின் நன்மைக்காக இவ்வுலகமழியும் வரை யாராலும் மாற்ற முடியாத கால ஓட்டத்தின் நிரந்தர நியமங்களை, அடையாளங்களை அழகாகக் குறிப்பிட்டுவிட்டுச் சென்றார்கள் என்பதை முதலில் நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.
தஃப்ஸீர்களான ஃகுர்துபி, இப்னுகதீர், இப்னுகுஸைமா, ஸஹீஹ{த்தர்ஃகீப், ஜலாலைன் போன்ற தப்ஸீர்கள் புனித அல்-குர்ஆனின் ஒவ்வொரு சொல்லிற்கும்;கூட விளக்கங்கள் தந்துகொண்டிருக்கக்கூடிய அரும் பெரும் பொக்கிஷங்கள். அத்தோடு இப்னு ஃகய்ஸ் - அபூ உபைதா (ரலியழ்ழாஹ{ அன்ஹ{மா) போன்ற விசேடமான ஸஹாபாக்களால் ரிவாயத்துச் செய்யப்பட்ட மிகச்சிறந்த ஹதீஸ்களும் இந்த தப்ஸீர்களுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ்வாறான ஹதீஸ்களுள் மஃரிப் தொழுகை, நோன்பு துறக்கும் நேரம் பற்றியும் இப்னு ஃகய்ஸ் - அபூ உபைதா (ரலியழ்ழாஹ{ அன்ஹ{மா) ஆகிய ஸஹாபாக்களால் ரிவாயத்துச் செய்யப்பட்டுள்ளன.
அவற்றையும் மற்றும் பல தப்ஸீர்களிலிருந்தும் எமது இந்தத் தலைப்புக்குத் தேவையான ஹதீஸ்கள் சிலவற்றை இதோ உங்கள் பார்வைக்காகத் தொகுத்து வழங்குகின்றோம். படித்துவிட்டு நீங்களே ஒரு முடிவுக்கு வரலாம் :

حَدَّثَنَا الْحُمَيْدِىُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ قَالَ سَمِعْتُ أَبِى
يَقُولُ سَمِعْتُ عَاصِمَ بْنَ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ أَبِيهِ – رضى الله عنه – قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم « إِذَا أَقْبَلَ اللَّيْلُ مِنْ هَاهُنَا ، وَأَدْبَرَ النَّهَارُ مِنْ
هَاهُنَا ، وَغَرَبَتِ الشَّمْسُ ، فَقَدْ أَفْطَرَ الصَّائِمُ » .(مُتَّفَق ٌ غَلَيْهِ)

‘‘ஒரு பக்கம் நாள் முழுமையாக மறைந்து சூரியன் முழுமையாக அஸ்தமனமாகி இரவின் இருள் இந்த பக்கத்தால் வரும் நேரம் தான் நோன்பாளி நோன்பு துறக்க வேண்டும்’’ என்று அழ்ழாஹ்வின் அருமைத் தூதர் (ஸல்) கூறியதாக உமர் இப்னு ஃகத்தாப் (ரலி) அறிவிக்கிறார்கள்.
(முத்தஃபகுன் அலைஹி: புகாரி பாகம் 3. ஹதீஸ்: 175)

கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் இன்னும் கூறியுள்ளார்கள்:

ثُمَّ أتَاهُ حِيْنَ غَرَبَتِ الشَّمْسُ فأمَرَهُ فَصَلَّى الْمغْر ِب
சூரியன் முழமையாக-ஆழமாக மறைந்ததன் பின் அவர்கள் (அழ்ழாஹ்வின் தூதர்) மஃரிப் தொழுகை தொழும்படி உத்தரவிட்டார்கள்.
و صَلّى الْمَغْرب إذا سقط القُرْص
கதிரவனின் ஆழிவட்டம் முழுமையாக மறைந்துவிட்ட பிறகு மஃரிப் தொழுகையை நிறை வேற்றுங்கள்.
في الْمغْرب إذا تواريْ القُرْص كانَ وقْتُ الصّلوة والإفطار
மஃரிப் நேரமானது கதிரவனின் ஆழிவட்டம் முழுமையாக மறைந்துவிடும் நேரம் - இந்த நேரம் தான் தொழுகையினதும் நோன்பு துறப்பதினதும் நேரமாகும்.

إنّ لهذه الصّلوة (المغرب) وقْتّيْن أوّلا ً وَ آخِرًا –
وَ إنْ أوَّلها غّيْبُوْبةِ الشَّمْس وَ آخِرها غَيْبُوْبَةِالشّفق –
ثُمّ صلّى الْمَغْر ِب حِيْنَ وَجَبَتِ الشَّمْش وَ أفْطَر الصَّاءم
நிச்சயமாக இந்த மஃரிபுடைய வேளையானது இரு பகுதிகளாகும் -
1. தொடங்கும் முதல் நேரமும் -
2. முடிவுறும் கடைசி நேரமும்.
முதற் பகுதியானது சூரியன் முழுமையாக மறையும் நேரம் (செங்கதிர்கள் மேல்வானத்தில் காணப்படும் நேரம்) அடுத்த பகுதியானது முடிவுறும் கடைசி நேரம். அதாவது இந்த செங்கதிர்கள் எமது பார்வையிலிருந்து மறையும் நேரம். இவ்வாறாக சூரியன் முழுமையாக மறைந்த நேரம் தான் மஃரிப் தொழுகைக்கான நேரமும் நோன்பாளி நோன்பு துறக்கும் நேரமுமாகும்.
என்று கண்மனி நாகம் (ஸல்) கூறியுள்ளார்கள்.

நோன்பு துறக்கும் நேரம் பற்றி இதற்கு மேலும் பேசலாம். இது போன்ற இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் மிகவும் விரிவாகவுள்ளன. வாசகர்களின் நம்பகத்தகைமை கருதி மேலும் சில ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள அடையாளங்கள் அறிகுறிகள் ஆகியவற்றைச் சுரக்கமாகத் தருகின்றோம்:
நோன்பு துறக்கும் நேரத்தின் அறிகுறிகள்:
1. ஒரு பொருளின் நிழல் - சாயை விழாத நேரம்.
2. சூரியனின் செங்கதிர்கள் (ஷஃபக்) மேல் வானத்திலிருக்கும்.
3. அம்பு ஒன்றை எய்தால் அது கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் செல்லும் - (இருள் ஆரம்பிக்கும் நேரம்)
4. ஒரு மனிதன் நியாயமான ஒரு தொலைவில் நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம் - ஒரு மனிதன் நின்று கொண்டிருப்பதாகவே தெரியும் ஆனால் அவரை யாரென்று அடையாளங்கண்டுகொள்ளக் கூடியவாறு அவருடைய முகம் அவயவங்கள் சரியாகத் தென்படாது. அப்பேற்பட்ட இருள் ஆரம்ப நேரம்!
தற்கால விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய இந்த அடையாளங்களை, அறிகுறிகளை இன்னும் ஊர்ஜிதப்படுத்துகின்றன:

நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல் Civil Twilight - ஸிவில் வைகறை அல்லது வைகறை மங்கலொளி - நேரத்தில் - நிலாவொளியோ அல்லது செயற்கை ஒளியோ இல்லாமலும் பிரதிகூலமான வளிமண்டல சூழ்நிலைகளான மழை இருட்டு, பகலெல்லாம் மந்தமான காலநிலை போன்றவை இல்லாது வானம் அதற்கேயுரிய தெளிவான நிலையில் காட்சி தரும் நேரத்தில் சூரிய ஒளியின் நிலை எப்படி இருக்குமென்றால் பெரிதான ஒரு பொருளை காணக்கூடியதாக இருக்கும் என்றாலும் அதனுடைய பகுதிகளைப் பார்க்க முடியாதவாறு துலக்கமின்றித் தென்படும். அப்பேற்பட்ட மங்கலொளியைத்தான் Civil Twilight - ஸிவில் வைகறை என்ற பெயரிட்டு விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர்.

இதைத்தான் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் அப்போதே தீர்க்கத்தரிசனமாக சொல்லியுள்ளனர். நபி (ஸல்) அவர்களின் முன்னறிவுப்புகளின் உண்மைகள் அதிசயத்திலும் அதிசயம் தான்!

கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கிய மங்கலொளி விளக்கத்தின் அடிப்படையிலும் அதை விஞ்ஞான ரீதியாக விளக்குகின்ற Civil Twilight எனும் விளக்கத்தின் அடிப்படையிலும் நோன்பு துறக்கும் நேரம் எதுவென இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமெனக் கருதுகிறோம். இதை எந்தவொரு வானிலை ஆராய்ச்சியாளரோ விஞ்ஞானியோ மறுக்க முடியாது, மாறாக ஏற்றுக்கொள்வர்.

அதாவது நோன்பு துறக்கும் நேரம் சூரியன் ஆறு (6) பாகை அல்லது அதற்குக் குறைவாக அடிவானத்திற்குக் கீழாக இருக்கும் கால நேரமான வைகறை மங்கலொளி நேரம்தான் Civil Twilight - ஸிவில் வைகறை என்பதை ஏற்றுக்கொள்வர்.

வைகறை மங்கலொளி நேரம் என்பது இரவின் இருள் அணுகும் நேரம் - إلى الليل
ஆகவே எமது வானாராய்ச்சி நிலையத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளில் கூறப்படும் அல்லது பிரசுரிக்கப்பட்டிருக்கும் சூரிய அஸ்தமன நேரத்திலிருந்து கிட்டத்தட்ட 21 (இருபத்தியொரு) நிமிடங்களில் தான் வைகறை மங்கலொளி நேரம் கணிக்கப்படுகிறது.

உலக வரைபடத்தில் இலங்கை அமைந்திருக்கும் பூமத்திய ரேகைகளின் அடிப்படையில் - கொழும்பானது 6 பாகை 55 கலை வடக்கு நெட்டாங்கிலும் (Longitude), 79 பாகை 52 கலை கிழக்கு அகலாங்கிலும் (Latitude) அமைந்திருக்கிறது.
வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவிக்கும் சூரிய அஸ்தமன நேரத்திலிருந்து சரியாக 15 (பதினைந்து) நிமிடங்களுக்குப் பிறகுதான் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் எமக்கு அறிவித்த அடையாளங்கள் அறிகுறிகள் எல்லாம் தென்படுகின்றன.

எனவே உத்தியோகபூர்வமாக பிரசுரிக்கப்படும் பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ள சூரிய அஸ்தமன நேரம் 18.30 – அல்லது மாலை 6.30 என்றால் - சரியான நோன்பு துறக்கும் நேரம் அல்லது மஃரிப் தொழுகை நேரம் - 18.45 – அதாவது மாலை 6.45.
இந்த நேரத்தில்தான் நாமும் அவசர அவசரமாக நோன்பை துறக்க முனைய வேண்டும்.
لاَ يَزَالُ النَّاسُ بِخَيْر ٍ مَا عَجَّلُوا الْفِطْرَ (البخارى)
‘‘நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் வரை மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்”
என்று இந்த நேரத்தைத்தான் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் எமக்குக் கற்றுத்தந்துள்ளார்கள்.
وَ صَلّى بِيَ الْمَغْر ِبَ حِيْنَ أفْطَرَ الصَّائِمُ

‘ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பாளி நோன்பு துறக்கும் நேரத்தில் என்னோடு மஃரிப் தொழுகையைத் தொழுதார்கள்.’ என்று கண்மனி நாயகம் (ஸல்) குறிப்பிட்ட நேரம் இதுதான்.
ஆதாரம்: ஸ{னன் அபூதாவூத் ஹதீஸ் 393

இங்கே கவனிக்க வேண்டியது மஃரிபுடைய நேரம் தான் நோன்பாளி நோன்பு துறக்கும் நேரம் என்று கூறப்படவில்லை. நோன்புளி நோன்பு துறக்கும் நேரம் தான் மஃரிப் தொழுகைகான நேரம் என ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தொட்டும் பெருமானார் (ஸல்) அவர்கள் பிரஸ்தாபித்துள்ளதைக் கவனிக்கலாம்.

இதுவரை கூறியதன் அடிப்படையில் சூரிய அஸ்தமன நேரத்தில் தொழுவதற்கு முடியாதென்றால் நோன்பு துறக்கவும் முடியாது.

கவனிக்கவேண்டிய மற்றொரு முக்கிய விடயம் - ஓரிடத்தின் மஃரிபுடைய நேரம் வேறோரிடத்தில் வித்தியாசப்படும்.
உதாரணமாக கொழும்பில் நோன்பு துறக்கும் நேரம் - காலி, கண்டி, மட்டக்களப்பு, அனுராதபுரம், யாழ்ப்பானம் போன்ற இடங்களில் நோன்பு துறக்கும் நேரமாக இருக்க முடியாது.

மிகவும் கவலைக்குரிய விடயம் என்ன வென்றால் எமது நாட்டைப் பொறுத்த வரையில் வானொலியிலோ தொலைக்காட்சியிலோ மஃரிபுடைய அஸானைக் கேட்டதும் இலங்கையின் எப்பகுதியினரும் ஏககாலத்தில் நோன்பைத் துறந்து விடுகின்றனர்.
இது சரியானதொரு முறையல்ல.

ஏனவே ஊடகங்கள் ஊடாகவரும் அஸானுடைய நேரத்தில் குழப்படி. அதற்குள் நாமும் வேறு ஊர்கள் தோறும் மாறிச்செல்லும் அஸானுடைய நேரங்களைப் பேணாது அவசரப்பட்டு நோன்பைத் துறந்துவிடுகின்றோம்.

பகலெல்லாம் பட்டினிகிடந்து பக்குவங்கள் பல பேணிப் பாதுகாத்துப் பிடித்த அருமை பெருமையான அழகிய நோன்பு,; அது துறக்கப்படும் அந்த இறுதிவேளை பிரயோசனமற்றதாகி விடுகின்றது.

நோன்பு துறப்பதற்கு விரைந்து செல்லுங்கள் என்ற விரைவின் வரை விலக்கணம் இதுவல்ல, என்பதை மேலே சுட்டிக்காட்டினோம்.
பிற்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றி விடக்கூடாது என்பதற்காகவே முற்காலத்தில் எக்காலமும் தெரிந்த எங்கள் ஏந்தல் நபி (ஸல்) அவர்கள் அழகாக எடுத்துச் சொல்லிவிட்டார்கள்.

ஆகவே நோன்பு துறக்கும் நேரம் மஃரிபுடைய நேரம் என்பவை பற்றி பெருமானார்(ஸல்) அவர்கள் கூறிய பெறுமதியான கருத்துக்களை கவனத்திற் கொள்வதோடு நோன்பு துறக்கும் நேரம் பற்றிய சகலவிதமான வாதங்களுக்கும் முத்தாய்ப்பாய் அமைந்துள்ள பின்வரும் அல்-குர்ஆன் வசனத்தையும் சிரமேற்கொண்டு செயற்பட முயற்சிப்போமாக :
ثُمَّ أتِمُّواْ اصّيَامَ إلى اللّيْل
பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்;

இந்த அல்-குர்ஆன் வசனத்தைச் சற்று ஆழமாக நோக்குங்கள் - இரவு வரும் வரை என்று சொல்லப்படுவது நாம் இதுவரை விளக்கிய விடயங்களைத்தான் என்பது எல்லோருக்கும் தெளிவாகும்.

எமது தலைவர் கண்மனி நாயகம் (ஸல்) அவர்கள் எம்மைப் பார்த்து எச்சரிப்பதைப் பாருங்கள் :
அவர்கள் தாம் கண்ட ஒரு கனவில் :
.. .. அந்த மலைக்கருகில் நான் வந்ததும் அந்த சப்தங்கள் என காதுகளைத் துளைத்தன. ‘இது என்ன சப்தம்’ என்று கேட்டேன். ‘இது தான் நரக நெருப்பில் கிடப்போரின் கூக்குரல்.’ என்று சொல்லப்பட்டது.
பின்னர் இன்னுமோர் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படடேன் அஙகே சில மனிதரைக் கண்டேன். அவர்கள் அவர்களது பின்தொடை தசை நார்களால் தலைகீழாக தூக்கப்பட்டு தொங்கவிடப்பட்டிருந்தார்கள். அவர்களின் கடைவாய்கள் கிழிந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. ‘இவர்கள் யாரென்று கேட்டேன். ‘‘இவர்கள் தான் சரியான நேரத்திற்கு முன்பு அவசரப்பட்டு நோன்பு துறந்தவர்கள்.’’ என்று எனக்குக் கூறப்பட்டது – ஆதாரம் :; ஸஹீஹ{த் தர்ஃகீப் 1ஃ420 - ஸஹீஹ் இப்னு ஃகுஸெய்மா இல: 1986.
فتاوه اللجنة الدائمة - ஃபதாவ அல்லஜ்ன அல்-தாஇமா 10ஃ287
, و أتمّوا الصّيام إلى اللّيْل,, . . . انّ الله عزّوجل يقول
فمَنْ أكلَ قبْلَ ان يدخل الليل فعليهِ قضاؤه . . .
அழ்ழாஹ் அஸ்ஸவஜல் கூறுகிறான்:
பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்;

இந்த வசனத்தை விளக்கம் தந்தவர்கள் கூறுகிறார்கள்:
‘‘ஒரு மனிதன் தான் சரியான நேரத்தில் நோன்பைத் துறந்தேனா? என்று சந்தேகம் கொண்டு அதை உறுதியாக நம்பியிருந்தான், அல்லது பெரும்பாலும் இருக்கக் கூடும் என நினைக்கிறான் என்றால் அந்த நோன்பு ‘கழா’ வாகி விட்டது. அதை அவன் இன்னொரு நாள் நோற்றேயாக வேண்டுமல்லவா? இதன் அடிப்படை என்ன தெரியுமா? நாள் அப்படியே இருந்தது - பகல் முடிவடையவில்லை என்பதாகும்.”


இந்த பத்வா அல்-குர்ஆனினதும் மற்றும் பல ஹதீஸ்களினதும்; அடிப்படையில் வழங்கப்பட்டதாகும் - அவ்வாறான ஹதீஸ்களில் ஒன்றை மட்டும் உங்கள் சிந்தனைக்காக விடுகிறோம்.

محمد بن يحيى عن احمد بن محمد عن عُثمان بن عيسى عن سماعه قال سألته عن قوم صاموا شهر رمضان فغشيهم سحاب اسود عند غروب الشمس فظنّوا انه ليل فافطرو ثمّ ان السحاب انجلي فاذا الشّمس فقال على الذي افطر صيام ذلك اليوم انّ الله عزّوجل يقول , و أتمّوا الصّيام إلى اللّيْل,, فمَنْ أكلَ قبْلَ
● ان يدخل الليل فعليهِ قضاؤه لانّه اكل مُتعمُدًا

இதுவரை நாம் கூறியவை உலமாக்களையும் அறிஞர்களையும் குறைத்து மதிப்பீடு செய்யவோ, வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தவோ அல்ல. அழ்ழாஹ் தஃஆலா அல்-குர்ஆனில் வர்ணிப்பதைப்போல் :

إنْ هُو إلاّ ذِكْرٌ لّلْعٰلَمِيْنَ
وَلَتَعْلَمُنّ نَبَأهُ بَعْدَ حِيْن ِ
38:87 .''இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை.""
38:88 .''நிச்சயமாக (சிறிது) காலத்திற்குப் பின்னர், நீங்கள் இதன் உண்மையைத் திட்டமாக அறிந்து கொள்வீர்கள்.""
والله أعلم

ஹராம் இமல்ஸிபயர் கோட்ஸ்’ விபரமறிய கடைசிப் பக்கத்தில் அனுபந்தத்தை பாருங்கள்.


அனுபந்தம்

The Haram Emulsifier Code. - ஹராம் இமல்ஸிபயர் கோட்

The Haram Emulsifier Code. - `uhk; ,ky;]pgah; Nfhl;
Please Always keep in the pocket .
Simplified one.
Both With E and Without E.
120,140, 141, 160[a], 161
252, 300, 301,
422, 430, 431, 433, 435, 436, 441, 470,
471(*Animal Base),472[a], 472[b], 472[c],
472[d], 472[e], 473, 474, 475, 476,
477, 478, 481, 482, 483, 491, 492,
493, 494, 542, 570, 572, 631, 635, 920
(*471 Vegetable Base is said to be Halaal)


The following Emulsifiers – With or Without E are
Suspected - Mashbooh – مَشْبُوْه-

Suspected - Mashbooh – مَشْبُوْه-
மஷ்பூஹ் - சந்தேகத்துக்குள்ளானவை


E100, E110, E120, E153, E210, E213, E214
E216, E234, E256, E270, E280.
E325, E326, E327, E334, E335, E336, E337.
E432, E433, E434, E440, E470, E472, E495
E904.

கருத்துகள் இல்லை: