சிந்தனைத் தெளிவு

இஸ்லாமிய இயக்கத்துக்குத் தேவையானது சிந்தனைத் தெளிவு

சமகால இஸ்லாமிய சிந்தனைக்கான நிறுவனத்தின் இயக்குநரான ஜஃபர் பங்காஷ் மதச்சார்பற்றஇ திணிக்கப்பட்ட ஒழுங்கில் செயற்படுவதிலான அபாயங்களைக் குறித்து எச்சரிக்கும் அதே வேளைஇ தனது குறிக்கோள்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முறைகள் ஆகியவற்றைக் குறித்து இஸ்லாமிய இயக்கம் தெளிவினைக் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றார்.


இஸ்லாமிய அரசு மட்டும் தான் முஸ்லிம்களின் இயல்பான வாழிடம் என்பதை முஸ்லிம் அறிஞர்கள்இ இஸ்லாமிய இயக்க செயல்வீரர்கள்இ ஏன்இ சாதாரணமான முஸ்லிம்களும் கூட ஏற்றுக் கொள்கின்றனர். கலாநிதி கலீம் சித்தீக்கியின் வார்த்தைகளில் கூறுவதானால் இஸ்லாமிய அரசில் வாழாத முஸ்லிம்கள் "தண்ணீரை விட்டு வெளியில் இருக்கும் மீன்களைப்" போன்றவர்கள் ஆவர். அவ்வாறெனில்இ ஈரானின் இஸ்லாமியக் குடியரசினைத் தவிர்த்துஇ இன்றைய உலகில் ஏன் ஒரு இஸ்லாமிய அரசு கூட இல்லை? அரசுகளுள் பல தம்மை "இஸ்லாமிய அரசுகள்" எனக் கோரிக் கொள்ளவும்இ "பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு" என்பது போன்ற பெயர்களைத் தாங்கியனவாக இருக்கவும் செய்கின்றன என்பது உண்மை தான். குர்ஆன் மற்றும் ஸுன்னாஹ்வினால் ஆளப்படும் ஒரு சமூகம் என்பதாக சவூதி அரசாங்கம் தன்னை முன்னிறுத்திக் கொள்கின்றது. ஆனால் உண்மை யாதெனில் ஒரு மன்னராட்சி இஸ்லாமிய அரசாக இருக்கவியலாது. அல்லாஹ்வின் திருத்தூதர் தன்னை ஒருபோதும் ஒரு மன்னராகக் கருதவில்லை. அல்லாஹ்வின் அடியாரும்இ திருத்தூதருமானவர் என்றே தாம் அழைக்கப்பட வேண்டுமென அவர்கள் வலியுறுத்தினார்கள். "அரபுகளின் இளவரசர்" என்பதாக அவர்கள் விளிக்கப்பட்ட போதுஇ அவ்வாறு கூறிய மனிதரை அவர்கள் எச்சரித்தார்கள். ஒரு அரசியல் அமைப்பு அல்லது அரசு இஸ்லாமிய அரசியல் அமைப்பு அல்லது இஸ்லாமிய அரசாக இருப்பதானதுஇ வெறும் பெயரினை அதனுடன் இணைத்துக் கொள்வதைக் கா†டிலும் பாரதூரமானதாகும்.

1980-களைக் குறித்து அங்கலாய்ப்பினை உணரும் முஸ்லிம் செயல்வீரர்கள்இ ஈரானை ஒத்த இஸ்லாமியப் புரட்சிகள் முஸ்லிம் உலகின் பிற பகுதிகளில் நடந்தேறிடவில்லை என்ற அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் உடனே பிற முஸ்லிம் நாடுகளில்- குறிப்பாக எகிப்துஇ துருக்கிஇ துனீஷியாஇ அல்ஜீரியா மற்றும் பாகிஸ்தான்- மிகப் பாரிய மாற்றங்கள் நிகழுமென்ற பெரு நம்பிக்கைகள் இருந்தன. ஆனால் எங்கும் எந்தப் புர†சியும் நிகழ்ந்திடவில்லை. மாறாகஇ பெரும்பாலும் இவ்வனைத்து நாடுகளிலுமான இஸ்லாமிய இயக்கங்கள் மிகக் கொடூரமாக ஒடுக்கப்ப†டன. அல்ஜீரியாவில்- குறிப்பாக இஸ்லாமிய விமோசன முன்னணி(குஐளு) தலைமையிலான இஸ்லாமிய இயக்கம் 1991 டிசம்பர் தேர்தல்களில் பரவலான வெற்றியை ஈட்டியது. ஆனால் அது அல்ஜீரிய உயரதிகாரிகளால் அதிகாரத்திலிருந்து தடுக்கப்பட்டது. அவர்களின் மேற்கத்திய சார்பும்இ ஸியோனிஸ சார்பும் கொண்ட இராணுவம் அல்ஜீரிய மக்களில் ஏறக்குறைய 3இ50இ000 பேர்களை படுகொலை செய்தது. பெண்களைஇ சிறுவர்களைஇ ஏன் பச்சிளம் குழந்தைகளைக் கூட விட்டு வைக்கவில்லை. போஸ்னியா மற்றும் கொசோவோவில் இனச் சுத்திகரிப்பு உச்ச கட்டத்தில் இருந்த சமயத்தில் அல்ஜீரிய மக்களின் மீதான இந்த இனப்படுகொலை பக்கச்சார்பும்இ ஆணவமும்இ நயவஞ்சகத்தனமும் கொண்டஇ மேலும் சுதந்திரத் தேர்தல்கள் மற்றும் பிரதிநிதித்துவ ஜனநாயகம் என்பவற்றைக் குறித்து வழக்கமாக அலட்டிக் கொள்ளும் மேற்கினால் குறிப்பிடத்தக்க வகையில் கவனிக்கப்படாமற் போயிற்று.

50-களிலும் 60-களிலும் எகிப்திய அரசுஇ "இனியெப்போதும் தலைதூக்கவே கூடாது" என்கிற ரீதியில் இஹ்வானுக்கு எதிரான போரினை மீளுயிர்ப்பித்துக் கொண்டிருந்தது. ஈரானில் இஸ்லாமியப் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் தனது மக்களுக்கு எதிராக தொடர் பயங்கரவாதத்தினை கட்டவிழ்த்து வி†டதில் அதுவே முதன்மையானதாக இருந்தது. 1981 அக்டோபர் 6-ல் ஒரு இராணுவ அணிவகுப்பின் போதான அன்வர் சதாத்தின் கொலைக்குப் பிறகு ஜமா அல்-இஸ்லாமிய்யாஇ மக்கள் தமது அழைப்பினையேற்று அணிதிரள்வர் என்ற நம்பிக்கையில் தென் எகிப்து பகுதிகளில் எழுச்சியை நிகழ்த்தியது. இது ஒரு தந்திரோபாய பெரும்பிழையாக அமைந்தது. கவனமிக்கத் திட்டமிடல் ஒரு இயக்கத்திற்கு தேவையாயிருக்கின்றது. அந்த இயக்கம் விரும்பிய வகையில் மக்கள் தாமாகவே எதிர்வினையாற்றுவார்கள் என்று அது கற்பிதம் செய்து கொள்ள முடியாது. யு.எஸ் மற்றும் இஸ்ரேலினால் ஆதரவும் நிதியுதவியும் அளிக்கப்பட்ட அரசாங்கத்தின் எதிர்வினை மிருகத்தனமாய் இருந்தது. எழுச்சி ஈவிரக்கமின்றி அடக்கப்பட்டது மட்டுமின்றி அரசினை எதிர்த்தவர்கள்இ அவர்களுடைய உறவினர்கள் மற்றும் அவர்களுக்காக வழக்காடிய வழக்கறிஞர்களின் மீதும் கூட குற்றம் சுமத்திடுவதற்காக கங்காரு இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் சுற்றி வளைக்கப்பட்டனர்இ தாக்கப்பட்டனர்இ அடித்துத் துவைக்கப்பட்டனர். மேலும் தேசத்துரோகம் மற்றும் இன்னும் பிற போலியான விதிமீறல்களைக் கொண்டு குற்றம் சாட்டப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர்- வெறும் தாடி வளர்த்திருந்தனர்இ மேலும் தவறான இடத்தில் தவறான சமயத்தில் இருந்தனர் என்பதற்காக மட்டுமே- பலியாடுகளாக இஷ்டத்திற்குப் பொறுக்கியெடுக்கப்பட்டனர். இதன் மூலம் ஏற்கனவே கிளர்ச்சியில் கொந்தளித்துக் கொண்டுள்ள உலகின் ஒரு பிராந்தியத்தில் எகிப்திய அரசாங்கம்இ இஸ்லாமிய "இராஜ துரோகிகள் மற்றும் புரட்சியாளர்களிடம்" மிகக் கடுமையாக இருப்பதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் காட்டிக் கொள்வதற்காக.

சித்திரவதையின் மூலம் பெறப்பட்ட "ஒப்புதல் வாக்குமூலங்களின்" அடிப்படையிலான நாடக வழக்கு விசாரணைகளுக்குப் பிறகு நூற்றுக்கணக்கான மக்கள் தூக்கிலிடப்பட்டனர் அல்லது துப்பாக்கிப் படைப்பிரிவினரால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டனர். மத்திய கிழக்கிலுள்ள மற்ற அரசுகளைப் போன்றே முபாரக் அரசின் அடியாட்களும் தாம் செய்யாத குற்றங்களை ஒப்புக் கொள்ளுமாறு அவர்களை நிர்பந்திப்பதற்காக குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனைவிகள்இ பெண்மக்கள்இ சகோதரிகள் அல்லது தாய்மார்களைக் கற்பழிக்கப் போவதாக அச்சுறுத்தினர். தமது பெண்களின் கண்ணியம் பங்கப்படுத்தப்படுவதற்குப் பதிலாக முஸ்லிம்கள் மரணத்தையே முன்தெரிவு செய்வர் என்பதை அறிந்திருந்த அரசுஇ அத்தகைய ஒப்புதல் வாக்குமூலங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஆண்களை தூக்கு மேடைகளுக்கு அனுப்பவும்இ பத்தாயிரக்கணக்கான பிறரை நிலவறைச் சிறைகளில் அடைக்கவும் செய்தது. எழுச்சிக்குப் பின்னர் ஏறக்குறைய முப்பது ஆண்டுகள் ஆகியும் பலர் இன்னும் சிறையில் வாடிக்கொண்டுள்ளனர். இஸ்லாமிய இயக்கத்தை நசுக்கிட முடிந்ததற்காக எகிப்திய அரசு அமெரிக்க மற்றும் ஸியோனிஸ உளவுச் செயற்பாட்டுக்கும்இ இரகசிய ஆயுத விற்பனைக்குமே நன்றி கூறிட வேண்டும்.

பிறவிடங்களில் இஸ்லாமிய இயக்கங்களின் நிலைமைகள் சற்றே பரவாயில்லை. மூர்க்கத்தனமானஇ சொல்லவொண்ணா ஒடுக்குமுறைதான் செச்சன்யாஇ துனீஷியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் விதியாய் இருந்து வருகின்றது. பாகிஸ்தான்இ இந்தோனேஷியா மற்றும் மலேஷியாவில் இஸ்லாமியக் கட்சிகள் சமயச் சார்பற்ற பிரதிநித்துவ கட்டமைப்புகளுக்குள்ளாக இணங்கிப்போகும்படி சேர்த்துக் கொள்ளப்பட்டுஇ பின்னர் அவற்றின் உறுப்பினர்களாக மாற்றப்பட்டனர். மில்லியன்-டாலர் வீடுகள்இ ஒன்றுக்கு மேற்ப†ட மனைவிகள்இ ஆடம்பர தானியங்கி வாகனங்கள்இ வாகன ஓட்டிகள் மற்றும் கலந்து கொள்பவரை ஜிஹாதைக் காட்டிலும் ஜிதாலுக்கு(விவாதம்) அதிகம் தயார்படுத்துகின்ற செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்ட ஹலகாக்கள் ஆகியவற்றைக் கொண்டு சவூதி அரேபியாஇ கத்தார்இ அமீரகங்கள் மற்றும் குவைத் ஆகியவற்றில் உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் மழுங்கடிக்கப்பட்டனர். மேலும் ஐரோப்பிய இஸ்லாமிய அடையாளத்தைப் பற்றிப் பிடித்திருந்த அல்லது அமெரிக்க குணாதிசயங்களுடன் ஒன்றித்துப் போயிருந்த திசையறியாத மேற்குலகிலிருந்த முஸ்லிம்களைக் குறித்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அல்ஜீரியாவின் பிரச்சினை மிகப்பொருத்தமான எடுத்துக் காட்டாகும். இராணுவத்துடன் ஒன்றிணைந்து பணியாற்றிய மதச்சார்பற்ற உயரதிகாரிகள் ஒரு பயங்கரவாத ஆட்சியினைக் கட்டவிழ்த்து விட்டனர். முஸ்லிம்கள் ஆச்சர்யப்படக் கூடாது; அல்ஜீரியாவிலான நிறுவப்பட்ட ஒழுங்கானது இஸ்லாமிய இயக்கத்திடம் அமைதியான ரீதியில் அதிகாரத்தினை கையளித்திடும் என எதிர்பார்ப்பது யதார்த்தத்திற்கு உகந்ததா? மேலும்இ சமூகத்தின் மீது திணிக்கப்பட்டுள்ள ஒழுங்கினை வீழ்த்திட ஆயுதப் போரா†டத்தை மேற்கொள்வது பொருத்தமானதா என்றும் முஸ்லிம்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். நடைமுறையிலிருக்கும் ஒழுங்கைக் குறித்து முஸ்லிம்கள் அதிருப்தி கொள்ளும் அதேவேளைஇ அமைதியான வழிகளில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான எவ்வித வழிவகைகளும் எஞ்சியிராத நிலையில் வேறு என்ன தெரிவுகள் இருக்கின்றன? தவறாய்ப் போனது எது மற்றும் எதிர்காலத்தில் அத்தகைய பிழைகளை எவ்வாறு மீண்டும் இழைத்திடாமல் இருப்பது என்பது குறித்த இன்னுமதிக புரிதலை அடைந்து கொள்ள இவை மற்றும் இவற்றையொத்த கேள்விகளுக்கு விடை காணப்பட்டாக வேண்டும்.

முஸ்லிம் உலகின் இழிநிலையிலிருந்தான மாற்றத்தைக் குறித்து பொறுமையற்றுப் போவது இயல்பானதே என்ற போதும்இ தொடரியக்கத்தைத் துவங்குவதற்கு முன்பு முறையான வீட்டுப்பணி செய்வது முக்கியமானதாகும். இது வெறும் கோட்பாட்டளவிலான கேள்வி மட்டுமன்று. முதலில்இ சிந்தனை மற்றும் நோக்கம் குறித்த தெளிவு இருக்க வேண்டும். இரண்டாவதுஇ திணிக்கப்ப†ட ஒழுங்கிற்குச் சவால் விடுக்கவும்இ அதனை வீழ்த்துவதற்கான போராட்டத்தில் தமது உயிர்களைத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கும் மக்களின் தீர்மானமிக்க ஒரு குழு இருக்க வேண்டும். ஈரான் பாணி புர†சிகள் வேறு இடங்களில் நிகழ வேண்டுமென்றால்இ அறிவுசார் மற்றும் பௌதீக இரு ரீதிகளிலும் ஒத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது இன்றியமையாதது ஆகும். உண்மையில்இ ஷியா இறைமையியல் கோட்பாட்டில் இருந்த ஏறக்குறைய அரசியலுக்கே முற்றிலும் எதிரான தேக்கநிலையினை தோற்கடித்ததே இமாம் கொமைனி தலைமையிலான புரட்சியை மேலும் கவனத்தை ஈர்ப்பதாக ஆக்கியது. மக்களைச் செயற்படும்படி தூண்டுவதோடு மட்டுமின்றிஇ அதற்கும் முதலாகஇ அரசியல் ஈடுபாட்டிற்கு எதிரான தமது இறைமையியல் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன என்று அவர் ஷியா உலமாக்களை ஏற்றுக் கொள்ளச் செய்ய வேண்டியிருந்தது. விலாயத்தே ஃபாகிஹ் எனும் அவரது மூல ஆக்கத்தில் தொகுத்துரைக்கப்பட்டுள்ள தனது இஜ்திஹாதின் ஊடாக இமாம்இ 1300 வருடகால ஷியா அரசியல் சிந்தனையை ஸுன்னி உலகிலான முக்கிய இஸ்லாமிய விடுதலைக் கருத்துக்கள் மற்றும் கடும் முயற்சிகளுடன் பொருந்திப் போகின்ற ஒரு இயக்கம் மற்றும் தவிர்க்கவியலாத ஒரு நிலையாக மாற்றியமைத்தார். அரசியல் சுய-பிரதிநிதித்துவத்தில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொள்ளவும்இ இருபதாம் நூற்றாண்டிலான இஸ்லாமிய சுயாதிகாரத்தினை தனித்துவமிக்க வகையில் வடிவமைக்கவும் இமாமின் இஜ்திஹாது ஷியாக்களுக்கு கதவினைத் திறந்து விட்டது. தமது இஸ்லாமிய இயக்க வரலாறு நெடுகிலும் ஸுன்னி உலகிலான முஸ்லிம்கள் இத்தகைய எந்தவொரு இறைமையியல் தடைகளுக்கும் முகம் கொடுத்ததில்லை. தமது சமூகங்களில் இருந்த சீர்குலைந்த சமூக-அரசியல் ஒழுங்கினை வீழ்த்துவதற்காக வெகுஜனங்களை அணிதிரட்ட மட்டுமே செய்ய வேண்டியிருக்கின்றது. இருப்பினும்இ மக்களை அணிதிரட்டுவதானது ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒரு பணி என்பதாகவே நிரூபணமாகியிருக்கின்றது.

எனவே நாம் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கின்றது: ஈரானில் இமாம் கொமைனி சாதித்ததில் ஒரு விகிதத்தைக் கூட ஏன் பிறவிடங்களில் உள்ள முஸ்லிம்களால் சாதித்திட இயலவில்லை? இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இஸ்லாமிய இயக்கம் வெற்றி பெற வேண்டுமென்றால் முதலில் சிந்தனைத் தெளிவுஇ தெளிவாக நிறுவப்பட்ட குறிக்கோள்கள் மற்றும் அவற்றை அடைந்திடுவதற்கான பொருத்தமான முறைமை ஆகியவை இருந்தாக வேண்டும். அதிகாரத்தைக் கைப்பற்றுவது முதன்மை குறிக்கோள் அல்ல. புவியில் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநாட்டுதல் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு வழிமுறையே அது. இயக்கம் முத்தகீ தலைமைத்துவத்தினால் வழிநடத்தப்பட வேண்டும்- குறுகிய மத-ஆதீனஇ வர்க்க அல்லது சுய நலன்களை அடைந்து கொள்ள முற்படுகின்றவர்களால் அல்ல. தக்வா என்பது வெறுமனே இறைபக்தியுடன் இருப்பது என்பதைக் கா†டிலும் பரந்த ரீதியில் வரையறுக்கப்பட வேண்டும். பல இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் உலகில் இருப்பது ஒரு இறைபக்தியின் சித்திரத்தை முன்னிறுத்துகின்றது. சிலர் எவ்விதச் சந்தேகமுமின்றி இறைபக்தியுடையோர் தாம்; ஆனால் அது குறுகியஇ சடங்கு ரீதியிலான பொருளில் தான். அல்லாஹ்வுடனான உறுதியான கடப்பாடு மற்றும் உலகில் தமது செயல்களுக்காக ஒவ்வொருவரும் பதில் சொல்லியாக வேண்டிய கேள்வி கணக்கின் நாள் ஒன்று இருக்கின்றது என்ற புரிதலிலும் வேர் கொண்ட தக்வாவின் குரானிய வரையறையினை நாம் மீள்கண்டிட வேண்டும்.

இஸ்லாமியத் தலைமைத்துவத்தில் எவ்வாறு தக்வா தன்னை வெளிப்படுத்தும்? தலைவர்கள் தெளிவினைக் கொண்டவர்களாகவும்இ வெளிப்படுத்துபவர்களாகவும் இருக்க வேண்டும். வெற்றிகரமான தலைமைத்துவத்தின் முக்கியமான ஒரு பண்பு தெளிவு ஆகும். என்ன செய்ய வேண்டும் என்பதிலான தெளிவுஇ யார் அதனைச் செயற்படுத்தப் போகிறார்கள் என்பதிலான தெளிவு மற்றும் செயல்படுத்துபவர்களை அவர்களின் செயல்களுக்கு பொறுப்பாளிகளாக்கிடுவதிலான தெளிவு. குழப்பமான சமயங்கள்இ சமாளிக்கவியலா சூழ்நிலைகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலங்களில் இலக்கை நோக்கிய திசையிலான ஒரு செல்நெறியைத் தெரிவு செய்வதன் மூலம் மகத்தான தலைமையானது இந்தத் தெளிவினை மெய்ப்பித்துக் காட்டும். மனிதர்கள் என்னும் ரீதியில் நாம் இப்போது மேற்கொள்ளும் தீர்மானங்களினாலேயே எதிர்காலம் வடிவமைக்கப்படுகின்றது என்பதை அறிந்தவர்களின் ஒரு பண்புநலன் தெளிவு ஆகும். ஒரு அவசரகால உணர்வினை நிறுவிஇ எதிர்காலத்திற்கான நீதமிக்க சமூக மற்றும் பொருளாதாரப் பார்வையை வரைந்துஇ மேலும் அல்லாஹ்வின் இறைச் சட்டத்தினை அமுல்படுத்துவதன் ஊடாக அனைத்து முக்கிய அங்கங்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வியல் தேவைகளையும் நிறைவு செய்கின்ற ஒரு திசையிலான செல்நெறியைத் தெரிவு செய்கின்றவர்களின் ஒரு பண்பே தெளிவு ஆகும்.

இப்போக்கில் அல்லாஹ் முத்தகீகளைக் குறித்துக் கூறுகிறான்இ

"...மேலும் எவர் (அல்லாஹ்வின் திருத்துகின்ற நீதத்திற்கு எதிராகத்) தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றாரோஇ அவருக்கு அவன் (புதிய) திசையினைக் கா†டுவான். மேலும் அவருக்கு அவன் அவர் அறியாத இடங்களிலிருந்து (திசைகளை) வழங்குவான்; மேலும் அல்லாஹ்வின் மீது தனது நம்பிக்கையை வைப்பவருக்கு அவன் (மட்டுமே) போதுமானவன்" (65:2-3)

மொழிபெயர்ப்பில் பெரும்பாலும் இழக்கப்படுவது என்னவெனில்இ அல்லாஹ்வின் நாட்டம் மற்றும் முத்தக்கீயின் நாட்டம் இவற்றுடைய கலவையின் இடை விளைவுப் பொருளாக வெளிப்படும் இஸ்லாமிய திசை நிறுவல் தான். மேலும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் முஸ்லிம்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நோக்கிடல் ஆகாது என்பதும் இந்த ஆயத்துகளில் வெளிப்படையாய் புலப்படுகின்றது. எனவே தமது உணர்வினை அல்லாஹ்வுடன் ஒன்றிணைக்கின்ற முஸ்லிம்கள்இ இந்த தொடர்பாடலில் இருந்து சக்தி வாய்ந்த தலைவர்களாக எழுச்சி பெற முடியும். சுருக்கமாகஇ வினைத்திறன் மிக்க தலைமைத்துவமானது தனது கூட்டத்திற்கு ஒரு வலுவானஇ குழப்பமற்ற திசைச் செல்நெறியினை அமைத்துக் கொடுக்கும். திசை நிறுவலுக்குத் தெளிவு தேவை. மேலும் அல்லாஹ் வழியினைக் காட்டுகிறான் (அதாவதுஇ குழப்பநிலையை நீக்குவதன் மூலம் தெளிவினை வழங்குகிறான்). வேறுவகையில் தெரிவிப்பது என்றால் ஒரு தலைமைத்துவம்இ தான் ஒரு இஸ்லாமியத் தலைமை எனக் கோரும் அதேவேளை அது - குறிப்பாக மைய அறிவினைப் பெற்றிருப்பவர்களுக்காக- தெரிவு செய்த திசை தெளிவற்றதாக இருப்பின்இ அத்தகைய தலைமைத்துவத்தை தக்வாவினைக் கொண்ட தலைமைத்துவம் எனக் கூறவியலாது. மேலும் அதனால் அது ஒரு அதிக பாதுகாப்பானஇ அமைதியான எதிர்காலத்தினை நோக்கி முஸ்லிம்களை வழிநடத்திடும் தகுதியை இழக்கின்றது. குர்ஆனியக் கோட்பாடுகளைஇ மதச்சார்பற்றஇ மேற்கத்திய போதையூட்டப்பட்ட வெற்றுரைகளுடன் கலப்பதன் மூலம் ஒரு திசைச் செல்நெறியை நிறுவிடத் தெரிவு செய்தமையால் இஹ்வானின் நவீன நாளைய அவதாரம் ஒரு "இஸ்லாமியத்" தலைமை என்னும் தகுதியை இழந்து நிற்கின்றது.

அல்லாஹ்விடமிருந்து வந்த தொடர்ச்சியான வரிசையிலான தூதர்கள் மற்றும் அத்தாட்சிகளைச் சுமந்த வேதவெளிப்பாடுகளின் மூலமாகஇ கடப்பாட்டு உணர்வுமிக்க பின்பற்றாளர்களின் தீர்மானமிக்க ஒரு கூட்டத்தினை எவ்வாறு ஒழுங்கு செய்வது என்பதற்கான உதாரணம் ஒவ்வொரு யுகத்திற்குமான முத்தக்கீ தலைமைத்துவத்திற்கு வழங்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர்கள் மனிதகுலத்திற்கு அல்லாஹ் மற்றும் அவனுடைய படைப்பினங்களுக்கான அவர்களின் கடமையினை நினைவூட்டவே வந்தனர்- அதனால் புவியில் இணக்கமும் சமநிலையும் இருக்க வேண்டும் என்பதற்காக. ஆனால் அல்லாஹ் அத்துடன் விட்டுவிடவில்லை. அவன் அவர்களின் மீது அருளியவற்றைக் கொண்டு நெருங்கிய மற்றும் தூர உறவினர்கள்இ தேவையுடையோர்இ ஏழைகள் மற்றும் ஆதரவற்ரோர் ஆகியோருக்கு உதவிட வேண்டுமெனவும்இ மேலும் கடன்இ அடிமைத்தளை மற்றும் அனைத்துவித ஒடுக்குமுறையிலிருந்தும் மக்களை விடுவித்திட தீர்மானமான திருத்தச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் அவன் தனது அடியார்களுக்கு க†டளையிட்டுள்ளான். சுருக்கமாகஇ முஸ்லிம்கள் சமூக ரீதியில் பொறுப்புணர்வுமிக்க மனிதர்களாக இருக்க வேண்டும் (2:177)
அல்லாஹ்வே அனைத்தையும் படைத்தான் என்பதை நாம் நம்புவோம் எனில்- அவ்வாறே நாம் நம்பிட வேண்டும்- பின்னர் சமூகத்தில் அவனது ஸுனனை அமுல்படுத்திட வேண்டும். உலகின் பிரச்சினைகளைத் தீர்த்திடுவதற்கான சரியான வரைச்சட்டம் என்று மனிதர்கள் என்ற ரீதியில் நமது வரம்புக்குட்பட்ட அறிவினைக் கொண்டு எவற்றை நாம் எண்ணுகிறோமோ அந்தக் "குறையுடைய" கருத்துக்களை அல்ல.

சமஅளவு முக்கியமானது என்னவெனில்இ முஸ்லிம் பெரும்பான்மைச் சமூகங்களில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் இயல்பினைக் குறித்த மிகவும் தெளிவானதொரு புரிதல் இருக்க வேண்டும். ஆனால் தமது சமூகங்களில் நிலவில் உள்ள அமைப்புகளைப் பொறுத்த வரையில் இயற்கையிலேயே எதுவும் தவறில்லை என்னும் மனப்போக்கினைப் பிழையாகக் கொண்டிருக்கும் இஸ்லாமிய இயக்கத்தின் பல முன்னணி நபர்கள் உள்ளடங்கிஇ இக்கருத்தினைக் குறித்த சரியான மதிப்பீட்டில் பொதுவான குறைபாடு இருக்கின்றது. அதிகாரப் பதவிகளில் நேர்மையான மக்கள் வருவதே இந்த அமைப்புகள் இன்னுமதிக வினைத்திறனுடனும்இ மேலும் மக்களின் பொதுநலனுக்காகவும் செயற்படுவதற்குத் தேவையானது என அவர்கள் உணருகின்றனர். அநீதிஇ பாரப†சம் மற்றும் பக்கச்சார்பு ஆகியவை அனைத்தும் மேற்கத்திய மதநீக்கம்பெற்ற முறைமைகளின் அடிப்படை இழையினூடே இணைத்துப் பிண்ணப்பட்டுள்ள இழைகளே என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அநீதியை வெறுமனே ஒட்டுவேலை செய்து நீதியினை உருவாக்கிட முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. இந்த எளிமையாக்கும் பாங்கிலான அணுகுமுறை முஸ்லிம்கள் மத்தியில் ஏராளமான குழப்பத்திற்கு வழிவகுத்திருக்கின்றது. மேலும் பல இஸ்லாமிய இயக்கங்களை ஒரு இருள்படிந்த முட்டுச் சந்திற்குள் இட்டுச் சென்றுள்ளது. மதநீக்கம்பெற்ற நிறுவன அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படும் தேர்தல்களில் பங்கு பெறுவதானது இவ்வகையான பிழையான சிந்தனைக்கான ஒரு தெளிவான உதாரணம் ஆகும்.

பிரதிநித்துவத்தின் மீதான உலகளாவிய சொல்லாடலை வழிப்பறி செய்து கொண்டதன் மூலமாக மேற்கத்திய பிரச்சார இயந்திரம் ஜனநாயக சமூகங்களில்இ அதுவும் இறைவனை நிராகரிக்கின்றஇ பணிவிணக்கமற்றஇ மேற்கத்திய பாணியிலான ஜனநாயகங்களில் மட்டுமே சுதந்திரத் தேர்தல்கள் சாத்தியம் என்று மெல்ல நயம்படப் புகுத்துகின்றது. பூலோக அளவிலான கருத்துக்களின் பரிமாற்றத்தில் இருக்கின்ற மகத்தான மடமைகளில் ஒன்றுஇ சுயநலமிக்கஇ மேலும் எங்கும் எதிர்ப்புக்கு அப்பாற்ப†டதாக விளங்கும் மேற்கத்திய கலாச்சாரம் இறைவனை அடைவதற்கான ஒன்றுக்கு மேற்பட்ட பாதைகளை(யூதம்இ கிறித்தவம்இ இஸ்லாம்இ புத்தம்இ ஹிந்து மதம்இ ஜெயின் மதம்இ இன்னும் பிற) ஏற்றுக் கொள்கின்ற அதேவேளைஇ சுதந்திரத் தேர்தல்களுக்கான ஒரே வழியாக சமூக (மதச்சார்பற்ற) ஜனநாயகத்தை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றது. இது அதிகார வேற்றுமை ஆகும்: இந்தப் பச்சோந்தித்தனமான ஜனநாயகம்+சர்வாதிகாரத்தை நாம் செயற்படுத்திக் கொண்டிருக்கும் அதேவேளை அவையோ இறைவனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்று கூறுகின்றன. மேலும் இதனை ஏற்றுக் கொள்கின்ற எந்தவொரு மனிதனுக்கும் சிந்திக்காமை என்பது நன்மையானதாகவும்இ சிந்திப்பது குற்றமாகவும் கருதப்படுகின்ற உலகில் ஒரு தானியங்கி இயந்திரத்தைப் போன்றிருப்பதைத் தவிர வேறு எந்தத் தெரிவும் இல்லை. கடந்த 25 வருடங்களாக இஸ்லாமியக் குடியரசு சுதந்திரத் தேர்தல்களைப் பெற்றிருக்கின்றது. ஆனால் அது அதிகாரப் பொறுக்கிகள் மற்றும் ஒட்டுண்ணிகளின் சிறப்பு நலனின் தோற்றம் மற்றும் நிறுவனமயமாதலை ஆதரிக்கும் ஒரு ஜனநாயகம் அல்ல.

தேர்தல்கள் என்பவையே தம்மளவில் பிரச்சினையாக இல்லாத போதும் எந்தச் சூழல் மற்றும் வரைச்சட்டத்தில் அவை நடத்தப்படுகின்றனஇ யார் அவற்றை ஒழுங்கு செய்கின்றனர்இ மேலும் எவ்வாறு அவை நடத்தப்படுகின்றன என்பவை மிகமுக்கியமான விடயங்களாகும். பெரும்பாலான முஸ்லிம்கள் இவற்றைக் கையாள்வதைத் தெரிவு செய்வதில்லை. பேராசையும் அதிகாரமும் படைத்த பெருங்குடியினரின் விழுமியங்களை மீள்வலியுறுத்தவும்இ எவர்கள் அதனைக் க†டுப்படுத்துகின்றனரோ அவர்களுக்கு ஆதாயமளிக்கவுமே ஒரு மதநீக்கம்பெற்ற அமைப்பானது தேர்தல்களை நடத்துகின்றது. அத்தகையதொரு அமைப்பு ஒரு "இஸ்லாமிய" அரசியல் கட்சி அதிகாரத்திற்கு வருவதையோஇ அதனைக் காட்டிலும் ஒரு இஸ்லாமிய இயக்கம் மேலோங்குவதையோ அனுமதிக்காது. இதுவே அல்ஜீரியாவிலும் பிறவிடங்களிலும் கோரமான பின்விளைவுகளுடன் நடந்தேறியது என்பதைக் காண முடிந்தது. வெகு அரிதான நிகழ்வில் ஒரு போலி இஸ்லாமியக் கட்சி அதிகாரத்திற்கு வந்திட அனுமதிக்கப்படும் போதுஇ உலக அதிகார தரகர்களின் பொருளாதார நலன்களுக்கு சேவகம் புரிந்திடும் மதநீக்கம்பெற்ற கட்சிகளிலிருந்து அதனை வேறுபடுத்தி அறிந்திட மிகச் சிறிதளவே இருக்கின்றது எனும் வகையிலான வேதனைமிக்க சமரசங்களைச் செய்து கொள்ளுமாறு அது நிர்பந்திக்கப்படுகின்றது. குறிப்பாக நன்னெறிஇ நல்லொழுக்கம் மற்றும் அரசியலிலான இஸ்லாம் மற்றும் மதச்சார்பின்மையின் இந்தக் கலவையானது முஸ்லிம் சமூகங்களில் பாரிய குழப்பநிலையைத் தோற்றுவித்திருக்கின்றது.

மதநீக்கம்பெற்ற நிறுவன அமைப்பினால் ஒழுங்கு செய்யப்படும் தேர்தல்களில் முஸ்லிம்கள் பங்கேற்காவிடில்இ எவ்வாறு அவர்கள் அதிகாரத்திற்கு வரவியலும்? இதற்கான விடையை இறைத்தூதர்களின் ஸீராவிலும்இ ஈரானில் இமாம் கொமைனி தலைமையிலான இஸ்லாமிய இயக்கத்தின் சமீபத்திய உதாரணத்திலும் காணவியலும். மக்காவில் தாருந் நத்வாவில்(மக்கள் கூட்டமைப்பு) நடத்தப்பட்ட கூட்டங்களில் இறைத்தூதர் பங்கேற்கவில்லை. தலைமைத்துவத்தை அவருக்கு அளிக்க அவர்கள் முன்வந்ததை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனை இறைத்தூதர் முற்றிலுமாக நிராகரித்து விட்டார். இச்சமயத்தில் தான் சூரா அல்-காஃபிரூன் அருளப்பட்டது. நாம் சிறுவர்களாய் இருந்த போதிருந்தே இந்தச் சிறிய சூராவினை அறிவோம் என்று நாமனைவரும் கோரினாலும்இ உண்மையில் நாமதனை அறிந்திருக்கின்ரோமா?

"கூறுவீராக! ‘ஓ சத்தியத்தை மறுப்போரே! நீங்கள் எவற்றுக்குக் கீழ்ப்படிகின்றீரோ நானதற்கு கீழ்ப்படிபவனில்லை. மேலும் நான் கீழ்ப்படிபவனுக்கு நீங்கள் கீழ்ப்படிபவர்கள் இல்லை! மேலும் நீங்கள் எவற்றுக் கீழ்ப்படிந்தீர்களோ அவற்றுக்கு நான் கீழ்ப்படிய மாட்டேன். மேலும் நான் கீழ்ப்படிபவனுக்கு நீங்கள் ஒருபோதும் கீழ்ப்படிய மாட்டீர்கள். உங்களுக்கு உங்களுடைய தீன்இ மேலும் எனக்கு என்னுடைய தீன்!‘" (109: 1-6)

இந்த சூராவின் அதிகாரம் மற்றும் பிரதிநித்துவத்தின் சூழல்பொருத்தத்தைக் குறித்து அறியாமல் நாம் எவ்வாறு இந்த சூராவினை அறிவோம் என்று கோர முடியும்? மக்கத்து முஷ்ரிக்குகளால் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட பேரத்திற்கு மறுமொழியாகவே இந்த சூரா அருளப்பட்டது. இந்த பேரத்தின் படி அவர்கள் தமது சொந்த சட்டம்இ நிறுவனங்கள் மற்றும் விதிமுறைகளின் படி ஒரு வருடம் ஆட்சி செய்வர்; பின்னர் இறைத்தூதர் அல்லாஹ்வின் சட்டத்தின் படி ஒரு வருடத்திற்கு ஆட்சி செய்யலாம். வானிலிருக்கும் அல்லாஹ்வால் இந்தப் பேரம் நிராகரிக்கப்பட்டமையால்இ வருங்கால முஸ்லிம்கள் அனைவராலும் இது நிராகரிக்கப்பட வேண்டும்.

"ஒரு விவகாரத்தில் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதர் எப்போது தீர்மானித்து விட்டனரோஇ முற்றிலுமாக கீழ்ப்படிந்து விட்ட ஆணோ அல்லது முற்றிலுமாக கீழ்ப்படிந்து விட்ட பெண்ணோ தம்மைப் பொறுத்த வரையில் அதில் தெரிவு செய்வதற்கான சுதந்திரத்தைக் கோர முடியாது. அல்லாஹ் மற்றும் அவனது தூதருக்கு எதிராக கலகம் புரிந்தவர்கள் தெள்ளத் தெளிவாக வழிகேட்டில் சென்று விட்டனர்" (33:36)

தாகூத்திய அதிகாரக் கட்டமைப்புகளுடன் எவ்விதமான ஒத்துழைப்போஇ சமரசமோ அல்லது இணங்கிப் போதலோ இருக்கக் கூடாது. மேலும் அதற்கும் மேலாகஇ தீர்மானம் மேற்கொள்ளும் பதவிகளில் அவர்கள் நீடித்திருக்க அனுமதிக்கக் கூடாது. மேலும் பொது நலனிலான அவர்களின் பிரதிநிதித்துவம் பிழையானது என்றும்இ சுயநலன் மிக்கது என்றும் முத்திரை குத்தப்பட வேண்டும். அல்லாஹ்வின் அதிகாரத்திற்கு எவரும் சவால் விடுக்கவோ அல்லது போ†டியாளராக இருக்கவோ இயலாது. முஷ்ரிக்குகளின் இப்பேரத்தினை ஏற்றுக் கொண்டால் புவியிலேயே மாபெரும் இணைவைப்பினைச் செய்தவராகி விடுவோம் என்பதை இறைத்தூதர்(கள்) உணர்ந்திருந்தார். எனவே இஸ்லாமியக் கட்சிகளின் பல தலைவர்கள் செய்வதைப் போன்று அமைச்சர்களாக ஆவதற்கான முதல் வாய்ப்பு கிடைத்தவுடனேயே அவர்களுக்கு எச்சில் சுரக்கத் துவங்கி விடுவதைப் போன்றும்இ "உள்ளிருந்தே" மாற்றத்தினை துவக்கப் போவதாக தமது இந்த துரோகத்தினை அவர்கள் நியாயப்படுத்துவது போன்றும் அவர் இந்தப் பேரத்தைக் கேட்டதும் தாவிக் குதிக்கவில்லை. இத்தகைய பேரத்தினை ஏற்றுக் கொள்ளும் எந்தவொரு "இஸ்லாமியக்" கட்சிக்கும் விளைபலன் மிகவும் நாசகரமானதாகவே இருக்கும். மேலிருந்து இஸ்லாத்தைக் கொண்டு வருவது என்பதை விட்டும் தொலைவாகஇ ஆதிக்கம் செலுத்தும் ஜாஹிலிய்ய அமைப்புடனான சமரசங்களுக்கும்இ பெரும்பாலும் அதனுடைய வரம்பு மீறல்களை சரிகாணவும்இ வெறுமனே பங்கேற்றுத் தோற்பதற்காக இந்தச் செயல்முறையில் தமது சுய நம்பகத் தன்மையை இழக்கவும் அது நிர்பந்திக்கப்படும். அநீதிம் ஆதிக்கம் செலுத்தும் ஒழுங்குடனான சமரசத்தை உள்ளடக்கிய பேரத்தினை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக இறைத்தூதரோஇ இன்னல்களையும் கொடுமையினையும் அனுபவிப்பதையே தெரிவு செய்தார்கள்.

இந்த சூராவில் கவனிக்க வேண்டிய இரண்டாவது விடயம்இ முஸ்லிம்கள்- இறைத்தூதரின் உறுதிகுலையாத தலைமைத்துவத்தின் கீழ்- (இன்றைய வார்த்தைகளில் கூறுவதென்றால்) தமது துப்பாக்கிளை உறுதியாகப் பற்றிப் பிடித்திருக்காத வரை காஃபிர்கள் தமது உண்மையான சொரூபங்களிலும்இ முழுமையான தயாரிப்புடனும் தோற்றமளித்திட மாட்டார்கள். இறைத்தூதர் நியமிக்கப்பட்ட நேரத்தில் முஸ்லிம்கள் என்ரோஇ அதே போன்று காஃபிர்கள் என்றோ எவரும் இருக்கவில்லை. ஆனால் நீதியை மையமாகக் கொண்ட இஸ்லாத்தின் செய்தி வலுப்பெறத் துவங்கிஇ உண்மையுள்ளமும் கடப்பாட்டுணர்வும் கொண்ட பின்பற்றாளர்களை திரட்டத் துவங்கிஇ மேலும் நிலவில் இருந்த முஷ்ரிக் அதிகாரக் க†டமைப்பின் அட்டூழியத்திற்குச் சவால் விடுக்கத் துவங்கியதும் சமூக நீதி நிலவும் பொதுவான சூழ்நிலையை கடுமையாக எதிர்க்கக் கூடிய- இதுவே வேறுவகையில் குஃப்ர் எனப்படுகின்றது- மக்களின் ஒரு குழு தோன்றத் துவங்கியது. இன்றும் அதுவே தான். உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் தமது நடத்தையை அல்லாஹ்வின் வேதம் எனும் அரங்கின் அடிப்படையிலல்லாது வேறெதன் மீதும் அமைத்துக் கொள்ள மாட்டோம் என்ற தீர்மானத்துடன் இருப்பதன் மூலமும்இ உலகின் ஒடுக்கப்பட்டோரின் உணர்வுகளை எழுச்சியுறச் செய்வதன் மூலமும்இ தாகூத்திய அதிகார சமநிலையின்மையில் நிலைத்திருக்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமும் இப்போது குலைந்து கொண்டிருக்கும் சுதந்திரம்இ விடுதலைஇ சமத்துவம் மற்றும் செழிப்பு என்ற பெயரிலான இந்த போர்வெறி மற்றும் இரத்தவெறி பிடித்த பிசாசின் கூரிய பற்களையும் நகங்களையும் வெளிப்படுத்துகின்றனர். இறைத்தூதரது ஸுன்னாஹ்வின் மீது தளராத பற்றுறுதி கொண்டிருந்ததால் தான் இமாம் கொமைனிஇ ஈரானில் திணிக்கப்பட்டிருந்த ஒழுங்கினை தூக்கியெறிவதில் வெற்றியடைந்தார். நிலவில் இருந்த ஒழுங்கினை அவர் மொத்தமாக நிராகரித்தார். இஸ்லாத்தின் இயல்புகளுக்கு அந்நியமானது அது என்று கூறி அதனை அவர் மறுதலித்தார். அதற்கெதிராக அவர் அச்சமற்ற வகையில் பேசினார். மேலும் அதனை எதிர்த்துஇ தூக்கியெறிந்திடுவதற்காக அவர் மக்களை அணிதிரட்டினார். இஸ்லாமியப் புரட்சியின் முழுமையான வெற்றிக்கு முன்னர் கடைசி வாரங்கள் மற்றும் மாதங்களில் சமரசத்திற்கான பேரங்கள் முன்வைக்கப்ப†டன. குறைவான தக்வாவுடைய தலைவர்களாய் இருந்திருப்பின் அந்த வாய்ப்பினை நோக்கி தாவிக் குதித்துஇ ஒரு கறைபடிந்த இழிவுமிக்க அமைப்புக்கு புது வாழ்வினை வழங்கியிருப்பர். முழுமையான மாற்றத்தினை வலியுறுத்திய இமாம் அத்தகைய எல்லா பேச்சுவார்த்தைகளையும் நிராகரித்தார். ஈரானில் நடைபெற்ற நிகழ்வுகள் அவருடைய நிலைப்பாட்டினை முழுமையாக ஊர்ஜிதம் செய்தன.

ஈரானியப் புரட்சியின் மற்ரொரு முக்கியமான பண்புக்கூறுஇ ஷவுடைய ஆட்சிக்கு எதிராக ஆயுதத்தைத் தூக்கிடுமாறு இமாம் மக்களைக் கேட்டுக் கொள்ளவில்லை. அரசாங்கம் தீவிரமான துப்பாக்கிச் சூட்டினை நிகழ்த்திஇ கொலை வெறியாட்டத்தில் ஈடுபட்ட போதும்இ அதற்கெதிரான வன்முறை எதிர்வினை இல்லை. மாறாகஇ தமது சொந்த மக்களையே கொல்ல வேண்டாம் என படைவீரர்களுக்கான ஒழுக்க அறிவுரை வழங்கப்பட்டது. ஒன்பது மாதங்களுக்கும் குறைவான காலகட்டத்திற்குள் 80இ000-க்கும் அதிகமான தமது நாட்டு மக்களைக் கொன்றதற்குப்- அவர்களில் பலர் பெண்களும் குழந்தைகளுமே- பிறகுஇ ஷாவின் படையிலிருந்த படைவீரர்கள் - சில சமயங்களில் தமது சொந்த பந்தங்களின் மீதான- இந்த அர்த்தமற்ற படுகொலைகளினால் உள்ளம் நோயுற்றுஇ கலகம் செய்தனர். மேலும் அதிகார வர்க்கத்திற்கு எதிராக தமது ஆயுதங்களைத் திருப்பினர். இது நிகழ்ந்த போது ஆட்டம் முடிந்துஇ ஷா தப்பியோட வேண்டியதாயிற்று.

துரதிர்ஷ்ட வசமாக அல்ஜீரியாவில் முற்றிலும் வேறானதொன்று நிகழ்ந்தது. வன்முறையற்ற எதிர்ப்புப் பேரணிகளில் மக்களை வீதிக்கு கொண்டு வருவதற்குப் பதிலாக இஸ்லாமிய விமோசன முன்னணி(குஐளு)இ இராணுவம் எதிர்பார்த்தவாறான ஆயுதந் தாங்கி மோதலுக்குள் இழுக்கப்பட்டது. நியாயமாகப் பார்த்தால் ஊஐகு அதிகாரத்தை எடுத்துக் கொள்வதைத் தடுப்பதற்காக இராணுவம் தலையிட்டதற்குப் பிறகு நடந்தேறிய நிகழ்வுகள் குஐளு-ன் கட்டுப்பாட்டிற்குள் இல்லை. அல்ஜீரியாவின் குடிமக்களின் மீது இராணுவக் குழுஇ ஒரு பயங்கரவாதப் பேயாட்சியினைக் கட்டவிழ்த்து விட்ட அதே வேளைஇ அத்தகைய கொடூரங்களுக்கு எல்லாம் அது இஸ்லாமிய இயக்கத்தினையே குற்றம் சாட்டியது. இவற்றில் பெரும்பாலான கொலைகளுக்கு இராணுவம் தான் பொறுப்பு என்பது வெகு விரைவிலேயே தெளிவாகிவிட்டது. படுகொலையினால் உள்ளம் நோவுற்றுஇ நாட்டை விட்டுத் தப்பியோடிய இராணுவ வீரர்களால் 1997-ல் பிரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் செய்தித்தாள்களில் அரசாங்கத்தின் குற்றங்கள் வெளிக்கொணரப்பட்டன (பார்க்க. லீ மோண்டேஇ பாரிஸ் மற்றும் தி இண்டிபெண்டென்ட்இ இலண்டன் நவம்பர் 8ஃ9இ 1997) ஆனால் மேற்கத்திய அரசுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இவ்வெளிப்படுத்துதல்களை வெறுமனே அலட்சியம் செய்தன. ஏனெனில் மேற்கு-ஆதரவுஇ மேற்கினால் பயிற்சி அளிக்கப்பட்ட அரசாங்கத்தின் குற்றங்களை கவனத்திற்கு கொண்டு வருவது அவர்களுடைய நலன்களுக்கு நல்லதன்று. அத்தோடுஇ ஒரு முஸ்லிம் நாட்டில் மற்றுமொரு இஸ்லாமிய அரசாங்கம் அதிகாரத்தினை அடைவதை அனுமதிப்பவையாக அவை இல்லை. அவர்களைப் பொறுத்த வரையில்இ ஒரேயொரு ஈரானே போதுமானது.

இஸ்லாமிய இயக்கத்தின் பல தலைவர்கள் உள்ளிட்ட முஸ்லிம்களின் அணியைக் காட்டிலும் முஸ்லிம் உலகிலுள்ள அரசாங்கங்களும்இ அவற்றின் மேற்கத்திய எஜமானர்களும் ஈரானிலான இஸ்லாமியப் புரட்சியிலிருந்து அதிகம் கற்றுக் கொண்டதாகத் தெரிகின்றது. சில முஸ்லிம்கள் உட்பிரிவுவாத வளைக்குள் விழுந்து விட்ட அதேவேளைஇ பிறரோ இஸ்லாமிய புரட்சி என்பதன் அர்த்தம் என்னவென்பதைக் குறித்த தமது சொந்த மட்டுப்படுத்தப்பட்ட புரிதலுக்குப் பலியாகி விட்டனர். இப்பின்னடைவுகள் இருந்த போதும்இ சூழ்நிலை முற்றிலும் மங்கலாக இருக்கவில்லை. ஆஃப்கானிஸ்தானிலான சிவப்பு இராணுவத்தின் தோல்வியே சோவியத் யூனியன் சிதறிப் போவதற்கு வழிவகுத்தது என்பதை முஸ்லிம்கள் நினைவு கூர்ந்திட வேண்டும். அதேபோல்இ உலகிலேயே மூன்றாவது பெரிய இராணுவத்துடன் கூடிய ஸியோனிஸ்ட்டுகள் லெபனானில் ஹிஸ்புல்லாஹ்வின் கைகளால் ஒருமுறைக்கு இருமுறை அடைந்த திருப்தியளிக்கும் தோல்வியும் முக்கியத்துவமற்ற சாதனை அன்று.

இன்னும் பிற பிரகாசமான புள்ளிகளும் தொடுவானில் தென்படுகின்றன. ஃபலஸ்தீனிலான இன்திஃபாதாவானது ஈரானிலான இஸ்லாமியப் புரட்சியின் வெற்றி மற்றும் லெபனாலிலான ஹிஸ்புல்லாஹ்வின் வெற்றி ஆகியவற்றிலிருந்து நேரடியாகச் செயலூக்கம் பெறுகின்றது. அவற்றுக்கு இடையே இப்போது ஒரு பரஸ்பர உறவு நிலவுகின்றது. இஸ்ரேலைத் தோற்கடிக்க முடியும் என்பதைக் காட்டியது மட்டுமின்றிஇ அதன் இராணுவ மேலாதிக்கத்தை பொருத்தமற்றதாக ஆக்கிடும் வகையிலான ஒரு வழியில் ஹிஸ்புல்லாஹ் பயணிக்கின்றது. இந்தப் பாடங்களில் சிலவற்றை இன்திஃபாதா ஃபலஸ்தீனில் மகத்தான வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துகின்றது. ஃபலஸ்தீனியர்கள் முகம்கொடுக்கும் வேறுபாடுகளும்இ அவர்கள் செய்து கொண்டிருக்கும் தியாகங்களும் மிகப் பெரியனவாய் இருக்கின்றன. ஆயினும் போராட்டம் எளிமையானதொன்றாக இருக்கவில்லை. அவர்களுக்கு எதிரான தீய சக்திகள் மிகப் பரந்த இராணுவ பலத்தையும்இ வளங்களையும் தம்மிடத்தே கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் குறைவாகப் பெற்றிருக்கின்ற சட ரீதியிலான வளங்களை ஈமானைக் கொண்டு சமன்படுத்திட வேண்டும். இத்தரத்தில் முஸ்லிம்களுக்கு இணையானோர் எவருமிலர். இருப்பினும் எதிர்நோக்கியிருக்கும் போராட்டம் கடினமாகத் தான் இருக்கும். காட்டுமிராண்டித் தனமான சட்டம் மற்றும் "வலிமையே சரி" என்கிற மூதுரையினால் ஆளப்படும் ஒரு உலகில் முஸ்லிம்கள் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடிவதற்கு முன்னர் இன்னும் அதிகமான தியாகங்கள் புரியப்பட வேண்டும். வரலாற்றின் அடிப்படைப் பாடங்களில் ஒன்று ஒடுக்குமுறையாளர்கள் எப்போதுமே தாமாக சுயவிருப்பத்துடன் அதிகாரத்தினை விட்டுக் கொடுத்ததில்லை. அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். மதநீக்கம்பெற்ற ஒழுங்கின் கீழான தேர்தல்கள் அல்லது எவர்களின் விசுவாசம் வேறெங்கோ இருக்கின்றதோ அத்தகைய களங்கமுற்ற மேட்டுக்குடி வர்க்கத்துடனான அதிகாரப் பகிர்வு போன்ற மோசடியான முயற்சிகளால் ஏமாற்றப் பட்டுவிடக் கூடாது என்பதை இஸ்லாமிய இயக்கம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

எனவே இஸ்லாமிய இயக்கத்தின் முதல் முன்னுரிமை சிந்தனைத் தெளிவுக்கே இருக்க வேண்டும். மற்றனைத்தும் அதன் பிறகே. முன்னெடுப்பினை எடுப்பதற்கான மகத்தான வாய்ப்புகளை இன்று மேற்கினை பீடித்திருக்கும் பொருளாதாரக் கொந்தளிப்பு வழங்குகின்றது. அதேபோல் ஆஃப்கானிஸ்தான்இ ஈராக் மற்றும் லெபனான் போன்ற இடங்களிலான மேற்கின் இராணுவத் தோல்விகளும் அதன் நெருங்கிக் கொண்டிருக்கும் மரணத்தினைத் தெளிவாகச் சுட்டுகின்றது. குறைந்தபட்சம் உலகச் சூழ்நிலையானது ஒடுக்கப்பட்டோருக்குச் சாதகமாக பெரிதும் மாறியிருக்கின்றது. மற்றுமொரு வாய்ப்பு தமது பிடியிலிருந்து நழுவிச் சென்றிட முஸ்லிம்கள் அனுமதித்திடக் கூடாது.

கருத்துகள் இல்லை: