அரபிகளின் ஆடம்பர நிலையும் அஜமீகளின் ஆதங்க நிலையும்


கண்ணிர் சொட்டச் சொட்ட வருகின்ற கவளைக்கு காலத்தில் பதில் கிடைக்குமோ தெரிய வில்லை. மனித கல்புகளில் கருணை கிடைக்கும். நீராக மாறி வருகின்ற உலகில் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது மனித தேவையாக எப்போதே இறைவன் நிர்ணியித்து விட்டான். இன்று competitive world போட்டிமிகு உலகில் நிர்ப்பந்தமாகியும் விட்டது. உலகில் மாடிக்கட்டங்கள் high rise building போட்டி போட்டு உயர்ந்து கொண்டு சொல்வது போல் மனித நேயங்கள் humanness பொது நலத் தேவைகள் Public service வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. இறைபடைப்பின் அழிவுகள் சோதனையாகவும் வேதனையாகவும் அதிகரித்தாலும் போதனை பெருகின்ற மனித இனம் 0 எனலாம்.
 அரபு நாடுகளில் midalest உணவுத்தட்டங்களிலும் உயர்மாடிக் கட்டங்களிலும் சாதனை படைத்து தங்களது ஆடம்பர(fancy)வாழ்க்கையை உலகிற்கு சொல்லுகிறார்கள். ஆனால் ஒருநேர உணவில்லா தவிக்கும் மனிதனின் சோதனையை வேதனையை( basic needes) அடிப்படை தேவைகளை கொஞ்சமும் நினைக்கிறார்களா?.


இஸ்லாம் அதன் நிலையான தெய்வீகத்திற்கு ஏற்றவாறு (humanness) மனித உரிமையை தெளிவாக பேசி அதனை தனது யாப்பாக நிர்ணயித்திருக்கும் மார்க்கம். மனிதன் தோன்றிய காலம் தொட்டு மனித நேயத்தை பேசாதவன் மனிதனாக இருக்கவே முடியாது என்பதை இஸ்லாம் ஆதம் (அலை) genetics சந்ததியிலிருந்து தெளிவாக அறிமுகப்படுத்திருக்கிறது. பெருமானாரின் வாழ்க்கையில் ஒவ்வொரு (instinct) உணர்வும் மனித நேயமாக உருவெடுத்தே நபித்துவத்தை நிரூபித்து காட்டியது. நபி பெருமானாரின் வாழ்க்கைக்குப் பின்னும் மனித சமூகம் சீர் திருத்தம் பெரவில்லையென்றால் எங்கு வைக்கனும் என்பதை குர்ஆன் தெளிவாக்கிவிட்டது.

இஸ்லாத்தின் தவ்ஹீத் தெய்வீகத்தை(god)எற்றுக் கொண்டவரையும் ஏற்றுக் கொள்ளாதவரையும் வாழ்க்கையின் செயற்பாடுகளில்தான்(practical) வேறுபடுத்திக் காட்டும். பெயரளவில் முஸ்லிமாக வாழ்வதில் இறை கண்ணியம், சுவனம் கிடைப்பதில்லை. முஸ்லிமாக பிறந்ததற்காகவும் இஸ்லாமிய மண்ணில் வாழ்வதற்காகவும் தாங்கள் அரபிகள் என்றோ அஜமிகள் என்றோ cackke அரைகூவுவதில் அல்லாஹ் நேசிப்பதில்லை.

பெருமானார் தனது வாழ்க்கையின் இறுதி நேரத்தில் இதனை தெளிவாக குறிப்பிட்டு சொன்னார்கள். அல்லாஹ் உங்களின் உடலையோ உடைகளையோ உரைவிடங்களையோ கவனிப்பதில்லை. அவன் உள்ளத்தைதான் பார்க்கின்றான். என்ற இறை வசனத்திற்கு ஏற்றவாறு நபிகளார் தனது இறுதி ஹஜ் பயணத்தில் இந்த உம்மத்தை பார்த்து ஏவுகிறார்கள். இவ்வரலாற்று நிகழ்வை இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் செவியுற்றும் செயலில் குறைந்திருப்பது கவளைக்குறியது. Bitter truth கசப்பான உண்மை

அரபி,அஜமீ என்றோ! செல்வந்தர்,ஏழை என்றோ! கருப்பர்,வெள்ளையர் என்றோ! இறைவனிடத்தில் சிறந்தவராக goodman முடியாது. தக்வா (இறையச்சம்) உள்ளவர்தான் இறைவனிடத்தில் சிறந்தவர். என்று கூறினார்கள். இதுவே இஸ்லாத்தின் தெளிவான கொள்கை என்பதை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும்.

இஸ்லாம் தோன்றிய மண்ணில் இஸ்லாமிய போதனைகளுக்கு மாற்றமாக அரேபியர்களின் fancy ஆடம்பர வாழ்க்கை முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் வேற்று மதத்தவர்களும் நாஷ்தீகர்களும் தவறாக கருத்துக் கணிக்கும் வகையில் காட்டிக் கொண்டு foolish முட்டாள்தனமாக வாழ்கிறார்கள். இஸ்லாத்தின் பார்வையில் தனது சகோதரன் பசித்திருக்க தான் வயிறு நிரப்பிக் கொள்வதை இஸ்லாம் எச்சரித்திருக்க அரபிகளின் ஆடம்பர வாழ்க்கைக்கு முஸ்லிம்களினதும் இஸ்லாத்தினதும் கண்ணியம் பழியாவது துரதிஷ்டவசமானது. Bitter truth கசப்பான உண்மை.

நபி பொருமனார் தனது 63 வருட காலத்தின் சாரம்சத்தைதான் Highlights தனது இறுதி ஹஜ் பயணத்தின் இறுதியில் செய்தார்கள். அது ஒரு சாதரன உரையாக இல்லை. தனது நபித்துவப் பணியை முடித்து அல்லாஹ்வின் அழைப்புக்கு விடைகொடுக்க பெருமானார் தனது உம்மத்தை நீங்கள் இப்படியே வாழ வேண்டும் என appointment order ஏவினார்கள். அதைக் கண்டும் காணதவராக அரேபிகளில் 50% வாழ்கிறார்கள் என்பதை வரலாற்றின் நிகழ்வுகள் நிருபிக்கின்றன. நபிகளார் அந்த அரபிகளிடத்திலிருந்த கோத்திர மொழி உயர்ந்தவர் தாழ்ந்தவர், (atrocties) அராஜகம் என்ற பிரிவினை வாதங்களை போக்கினார்கள். அவைகளை இனிமேல் செயலித்த வேண்டாம் என எச்சரித்தார்கள். ஆனாலும் நபிகளாரின் மரணத்தின் பின் மீண்டும் அவைகளை தலைகளில் helmet டாக சூட்டிக் கொண்டார்கள். இவர்களின் மூதாதையர்கள் சந்ததிகள்.genetics

நபிமார்கள் கால்கள் நடந்த மண்ணில் அவர்கள் மூச்சுக்காற்று வீசிய பகுதிகளில் அல்லாஹ்தாஆலா இந்த மண்ணுக்கு பல good cultural அற்புதங்களை அருட்கொடைகளை கொடுத்திருக்கிறான். அது இன்று அந்நியர்களின் தேவை பூர்த்தி நீக்கி அளவுக்கு அதிகமாக கொள்வணவு செய்து சேமித்து வைக்கும் பெருளாதாரமாக Exchange market மாறி இருக்கிறது. வியர்வை சிந்தி கைதொழில் செய்து தண்ணீர் இரைத்து விரகுக்குச் சென்று கால்நடைகள் வளர்த்து இஸ்லாத்தை வளாத்தார்கள் அன்று. இன்றைய அரபிகளின் வாழ்க்கை வீட்டில் சோம்பரித்தனமாக அமர்ந்து கொண்டும் வீணாண கழியாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டும் don’t do any thing எல்லா வேலைக்கும் பணியாட்களை அமர்த்தி சுகமனுப விக்கிறார்கள்.

அவசியத்தை விரும்பும் மார்க்கம் இஸ்லாம். அவசியங்கள் தீர்ந்து மேலதிக பொருளாதாரம் கணக்காய்வு Counting செய்யப்படும்போது அது எமக்கு சொந்தமானதல்ல. அவை ஏழைகளின் அநாதைகளின் அன்றாட சீவியம் என்பதை கும்ஸ்,ஸகாத்,ஸதகா என்பதினூடாக பிரகடனப்படுத்தியது. பெருமனார்(ஸல்) அவர்கள் பிறந்த காலத்தில் அரேபியரின் ஆடம்பர வாழ்க்கை எவ்வாறு இருந்ததோ அதையும் மிஞ்சி இன்றைய அரேபிகளின் நிலை கவளைக்குறியது.

அல்லாஹ்தஆலா மனிதனுக்களிக்கும் செல்வங்கள் அனைத்தும் சோதனைக்குறியவை. அவை எது இறைதிருப்தியுடன் பகிர்ந்தளிக்கப்ட்டு மனித வாழ்க்கைக்கு Usefully பிரயோசனம் படுகின்ற போதுதான் அதன் வெற்றியை சந்திக்க முடியும். எதனளவில் பெருமானார் Hailers கவளையீனமாக இருந்து விடாதீர்கள் என்று ஏவி எச்சரிக்கையாக Warning விட்டுச் சென்றார்களோ அவை நபிகளார் மரணத்தின் பின் மீறப்பட்டது. அதன் விளைவாக உம்மத் பல துண்டுகளாக உடைக்கப்பட்டது. ஏகாதிபத்தியர்களால் புனித பூமிகள் சுடுகாடாகிறது. அரச அரண்மனையில் அமர்பவர்கள் கைபொம்மையானார்கள். எண்ணெய் வலமிக்க நாடுகள் சுரண்டப்படுகிறது. இவ்வாறிருக்க நபிகளாரின் இறுதி உரையினை ancestors மீளய்வு செய்து அதனை பின்பற்ற வேண்டிய பொறுப்பு முஸ்லிமான ஒவ்வொரு தோழிலும் சுமக்கப்பட்டிருக்கிறது. Important life.

அரேபிய நாடுகளில் வளர்ந்த ஆடம்பர வாழ்க்கை ஆசிய நாடுகளிலும் மலையேறி வருகிறது. அரபியர் இப்படிருக்க நாமிருந்தாலென்ன? அவர்கள்தானே இஸ்லாத்தை ஆரம்பத்திலிருந்து பின் பற்றுபவர்கள் அந்த மண்ணில்தானே நபிகளார் வாழ்ந்தர்கள் என்ற உணர்வோடு misunderstand தப்பெண்ணங்களும் ஆடம்பர வாழ்க்கைகளும் உருவாக ஆரம்பித்து விட்டது. இவை தவிர்க்கப்பட வேண்டும் .நபிகளாரின் மரணத்தின் பின் தங்களது சுயநலனகளுக்காகவும் Selflife, மாலிகை, அரச அரண்மனைகளுக்காகவும் இஸ்லாத்தை Misuse, abuse பயன்படுத்தினார்கள் பலர். சாதரண வலிப்போக்கனைப் போல் நாடோடியைப்போல் வாழுங்கள் என்று கூறிய நபிகளாரின் பொன் மொழிகளை வீழ்ச்சி பெறச் செய்தார்கள்.
மூஃமின்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலை முனாபிக்குகளுக்கு இவ்வுலகம் சுவனம்
என்ற பொன்மொழிகளை எழுற்சி செய்யத் தொடங்கினார்கள். அதனால் இஸ்லாத்தை அழிப்பதில் தங்களது அதிகாரங்களை பயன்படுத்தினார்கள். அப்பாசியர்களும் உமையாக்களும் தங்களுக்குள் இரத்தம் ஓட்டி பொருமாரின் வாழ்க்கை நேசர்களை துயரப்படுத்தி தூரப்படுத்தினார்கள். இவர்களெல்லாம் யார்? இந்த அரபிகளின் மூதாதையர்கள்தான். நபிகளாரிடத்தில் எந்த அரண்மனைகள் இருந்தன அவர்கள் குடும்பத்தில் என்ன சொத்துகள் இருந்தன.?


இவர்களிடம் நீர் கூறும் நீங்கள் நம்பிக்கை கொள்ள வில்லை வேண்டுமானால் நாங்கள் கீழ் படிந்தோம் என்று கூறுங்கள். நம்பிக்கை இன்னும் உங்கள் இதயங்களில் நுளையவில்லை. (49:14)

இவ்வாறு வாழ்ந்த அரபிகளின் சந்ததிகளே இவர்கள். சிலர் ஏதோ நபிகளாருடனும் இஸ்லாத்துடனும் தங்களை சேர்த்து தங்களை வளர்த்து கொண்டிருந்தார்கள். ஓர் பார்வையில் இஸ்லாத்தையும் அதன் நோக்கங்களையும் பின்பற்றுபவர்கள் போல நடித்தார்கள். ஆனால் அவர்கள் இதயங்களில் இஸ்லாத்தினதோ, அல்லாஹ்வினதோ, நபிகளாரினதோ நேசங்கள் இருக்கவில்லை.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதால் அதில் கிடைக்கும் கனீமத் அன்பளிப்புகளையும், ஸதகா, ஸகாத் gift. favour, desire, love. civility, போன்றவைகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும் விரும்பினார்கள். அதே நிலையினை இன்றைய அரேபியர்களும் நிரூபித்த காட்டுகிறார்கள். அவர்கள் சந்ததியல்லவா? உண்மையில் இன்னும் சிலர் நபிகளாரின் வாழ்க்கையோடு தங்களையே அர்ப்பணித்து பின்பற்றினார்கள். அவர்களைத்தான் அல்லாஹ்வும் பொருந்ததிக் கொண்டான் அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக் கொண்டார்கள். அவர்களே புகழுக்குறியவர்கள். பெருமானார் அவர்கள் 63 வருட காலத்தில் எவ்வளவு துன்பத்தை அனுபவித்து இந்த மார்க்கத்தை எமது கைகளில் தந்துவிட்டுச் சென்றார்கள். அந்த தியாகங்கள் aims தினம் தினம் மாசுபடுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. எந்த அரேபியர்களுக்கு நபிகளார் முன்னெச்சரிக்கை செய்தார்களோ நியமன உத்தரவிட்டார்களோ (appointment order) அந்ந அரேபியர்களால்தான். அதன்விளைவாக நபிகளாரின் பின்னரும் பல யுத்தங்களை நபிகளாரின் பிரதிநிதிகள் சந்திக்க நிர்பந்திக்கப்பட்டனர்

இந்த யுத்தங்களையெல்லாம் அரசியல் பார்வையாக மட்டும் பார்க்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும். இஸ்லாத்தில் அரசியலும் ஆண்மீகமும் பிரிக்கப்பட்டதல்ல. அரசியலையும் ஆண்மீக வழியில் செலுத்தும் போதுதான் இஸ்லாமிய சாம்ராச்சியத்தை கட்டியெழுப்பலாம். அப்போதுதான் இஸ்லாத்தின் போதனைகளை தங்கு தடையின்றி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தலாம். இதைத்தான் நபிகளார் ஆட்சி செய்து காட்டினார்கள். தனக்குப்பின் இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதைத்தான் தனது இறுதி ஹஜ் உரையில் வலியுறுத்தினார்கள். உங்களில் சிறந்தவர் தக்வா உள்ளவர்தான் என்ற பின் உங்களின் தலைவர் ஒரு addict அடிமையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள். என்றதெல்லாம் ஆண்மீகமும் அரசியலும் சேர்ந்த தலைமைத்துவ இமாமத்தைதான். அவரையும் தனக்குப்பின் இவர்தான் என appointment order கை உயர்த்தி நியமித்தாலும் அவை அரசியலில் மறுக்கப்பட்டது கசப்பான உண்மை.

அந்த தலைமைத்ததுவம் ஆண்மீகத்தை தனது அமைதிப்பதையில் வழிநடாத்திக் கொண்டிருந்தது. ஆனால் கால ஓட்டத்தில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் backlash, atrocities பங்கம் ஏற்படுகின்ற நிலை உருவாகியது. அதனை ask question எதிர்க்கும் போது fierce fighting யுத்தங்கள் தீணிக்கப்ட்டன. மாறாக அது அரசியல் யுத்தம் என்று திணிக்க முனைவது சிந்தனைக்காது. நபிகளார் எந்த அரச கதிரையில் அமர்ந்து ஆட்சி செய்தார்கள்? நபி பெருமனார் எவ்வாறு ஏழ்மையாக பசி பட்டினியாக kind soul தயாள உணர்வுள்ளவராக வாழ்ந்தார்களோ அவ்வாறுதான் நபிகளாரின் கும்பத்தினரும் வாழ்ந்தார்கள். உள்ளதை கொடுத்துதவி உயர் குர்ஆனிய வசனங்களால் certificate of allah அவாடு பெற்றார்கள். நிச்சயமாக இவர்களிடம் அரசியல் ஆசைகளோ சொத்து செல்வங்கள் சேமிக்கனும் என்ற தேவைகளோ இருக்கவில்லை.

இவ்வாறு வாழ்ந்த தூய்மையானவர்கள் எதற்காக அரசியலில் தங்களது உயிரை கொடுக்கனும். அவர்கள் எந்த நோக்கத்தில் இறைதியாகமாய் தங்களது உயிரை கொடுத்தார்களோ அவை அவர்களின் ஸஹாத்தின் பின்னரே சமூகத்திற்கு revolution எழுற்சி கொடுத்தது. அவர்கள் அரசிலுக்காக தங்களது உயிரை கொடுத்திருந்தால் அவர்கள் எதுவும் அனுபவிக்காமல் சென்றிருக்கமாட்டார்கள். தங்களது உயிரை பாதுகாத்து விட்டு கூலி படைகளுக்கோ அரசியல் இலாபங்களுக்கோ அடிபணிந்து விட்டு hanky panky தில்லுமுல்லு செய்து ஏனையவர்கள் போல் எதிர் காலத்தில் அரசியல் அரணமனைகளில் அமர்ந்திருக்கலாம்தானே! அவர்களின் கஷ்டங்களும் நேசங்களும் இஸ்லாத்திற்கு தொன்றாட்டுவதைத்த விர வேறு ஏதுமில்லை. அதை அவர்களது உயிரை அர்ப்பணித்தும் செய்து தந்து விட்டு சென்றார்கள்.

நபிகளாரும் தானும் இஸ்லாத்தை எப்படி எத்திவைத்தோம் என்று இமாம் அலி தனது இறுதி நேரத்தில் புதல்வர் இமாம் `_ஸைனுக்கு சொன்னார்கள்.

மகனே! இந்த இஸ்லாத்தை பாதுகாக்க வேண்டி பொறுப்பு உமக்கு இருக்கிறது. உனது பாட்டனார் முஹம்மத் (ஸல்) அவர்களும் நானும் இந்த இஸ்லாத்தை ஆரம்பத்தில் வளர்க்க எவ்வளவு துன்பத்தை கஷ்டத்தை அனுபவித்தோம் தெரியுமா மகனே! ? இந்த Hot of desert region பாலை வனச்சூட்டில் நட நடையாக அலைந்தோம். உயிருக்கு அச்சுருத்தலிருந்தும் கற்களால் எறியப்பட்டும் வந்தவர் போனவர் கண்டவர் காணாதவர்களாலும் ஏச்சுப்பட்டோம். ஒரு உள்ளத்தில் தவ்ஹீதை சொல்ல ஒழித்து ஒழித்து சொன்னோம் மகனே!. சிலர் ஏற்றுக் கொண்டார்கள் மகனே! சிலர் அவமதித்து எங்களை தூற்றினார்கள். இவ்வாறு பல துன்பங்களை அனுபவித்து சிறுசிறு துளியாக சேர்த்துதான் மகனே இந்த இஸ்லாத்தை உலகம் பூராக கிடைக்கச் செய்தோம் மகனே! அதை தூய்மையாக காப்பாற்ற வேண்டி பொறுப்பு உனக்குள்ளது மகனே என்று வலியுறுத்தி சென்றார்கள்.

இவ்வாறு வளர்த்த இஸ்லாத்தை அரேபியர்களின் ஆடம்பர வாழ்க்கையனாலும் for self life சுயநல போக்கினாலும் அழித்து கொண்டு இருக்கிறார்கள். அரேபியர்களை காண்கின்ற முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் இஸ்லாம் என்றால் இப்படித்தானா? என்று கீழ் தரமாக amusement கேளிக்கை, விமர்சிக்கும் நிலைக்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். உணவுக்காகவும் உரைவிடங்களுக்காகவும் உழைப்பு தேடி gulf midal est வலைகுட நாடுகளுக்கு வருகின்ற போதுதான் அரபிகளின் கபட நிலையை உணரமுடிகிறது. எந்த நோக்கத்தில் விமானம் ஏறினோமோ அது திசைதிருப்பட்டு அரேபியர்களின் ஆடம்பர வாழ்க்கைக்கு பலர் தங்களை அறியாமலே உள் நுளைக்கிறோம்.

அரேபியே ஆணவம்

நபிகளார் இஸ்லாத்தை வளர்ப்பதில் பண்போடும் பணிவு தாழ்மை மனப் பான்மையோடும் தனது நடத்தையை அமைத்தனால்தான் அவருக்கு அல்அமீன் அஷ்ஸாதீக் என்ற பெயரெல்லாம் சூட்டினார்கள். இந்த அரபிகளிடம் தற்பெருமையும் ஆணவமும்,Hatred துவேஷம் குடி கொண்டிருக்கிறது. நபிகளார் மொழியினால் பெருமைப்பட ஒன்றுமில்லை என்ற போதும் இதை indifference உதாசீனப்படுத்தியவர்களாக ignored அலட்சியப் படுத்தியவர்களாக தாங்கள் அரபிகள் நாங்கள் எல்லாவற்றுக்கும் உலகில் உரிமையுடையவர்கள். என்ற அரபிய ஆணவம் அவர்களிடம் ஆட்சி செய்கிறது.

intertwined பின்னிப் பிணைந்துள்ளது. உண்மையில் அரபு மொழி சிறந்த மொழி புனித குர்ஆனின் மொழி அது வஹியின் மொழி என்பதிலெல்லாம் யாருக்கும் don’t logical கருத்து வேறுபாடில்லை.dont lip service வாய்ப் பேச்சில்லை. அரேபியர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் புனித அல்குர்ஆன் உலகுக்கே சொந்தமானது அது எல்லா மனிதர்களுக்கும் உரிமையானது. குர்ஆன் அரபு மொழியில் வஹி அரபு மொழியில் இறங்கக் காரணம் நீங்கள்தான். உங்களுக்கே அன்று god order and warning இறை ஏவலும் கட்டளைகளும் தேவையானது. நீங்களே இறைவனை மறுத்து பல தெய்வங்களை வணங்கினீர்கள். அன்றைய காலத்தில் பெரும்பான்மை கொண்டவர்களாக அரபு மொழியே இருந்தது அதற்காகத்தான் இறைவன் அரபு மொழியை தேர்ந்தெடுத்தான். மாறாக தாங்கள் அரபியர்கள் சிறந்தவர்கள் அஜமிகள் கேவலமானவர்கள் என்ற சிறப்புக்கு இடமளிக்கவில்லை.

அரபியர்களிடம் பெரியவர் என்ற மரியாதைகளோ சிறியவர் என்ற கருணைகளோ கிடைப்பதென்றாலும். அரபிகளாக இருக்கனும் ஒவ்வொரு விடயத்திலும் அரபியர் என்றே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என நினைக்காறார்கள். (injutiseஅநீதம்), (incompatibleஒத்துவராமை). (indifference உதாசீனப்படுத்தல்) (don’t inferiorty தாழ்மை உணர்வில்லாமை) போன்ற அதீத எதிர்பார்ப்போடு irregularity முறை கேடான life style வாழ்க்கையாக வாழ்கிறார்கள்.


நினைப்பது போல் இஸ்லாத்தின் ஏனைய விடயத்திலும் குர்ஆனின் போதனைகளுக்கு உட்பட்டு loyally விசுவாசமாக இருந்திருந்தால் இஸ்லாமிய உம்மா ஒற்றுமையில் எல்லாவற்றையும் வெற்றி கண்டிருக்கும். அவர்கள் தவறு செய்தால் sorry style மன்னிக்கும் சட்டம் அஜமிகள் தவறு செய்தால் soot style தண்டிக்கும் சட்டம். இவ்வாறுதானா இஸ்லாத்தை தனது for self சுயநலத்திற்கு ஏற்றவாறு சட்டம் இயற்றுவீர்கள் என்று அந்நிய கேட்கின்ற நிலை துன்பத்திலும் துன்பம். Comlicated issue சிக்கலான பிரச்சனை.

இவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை உமக்குச் செய்த பேருதவியாக சொல்லிக் காட்டுகிறார்கள். இவர்களிடம் நீ கூறும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை எனக்குச் செய்த பேருதவியாக சொல்லிக் காட்டாதீர்கள். மாறாக நம்பிக்கை கொள்வதற்கான வழிகாட்டுதலை அருளியதன் மூலம் அல்லாஹ் உங்களுக்கு பேருதவி செய்திருக்கிறான். நம்பிக்கை கொண்டவராக வாதிடுவதில் வாய்மையாளர்கலாக இருந்தால். (49:17)

ஏதோ இஸ்லாத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டதால் இஸ்லாம் ஏதும் இலாபம் பெருவதாக நினைக்கிறார்கள். இஸ்லாம் அவர்களுக்களித்திருக்கும் நன்மைகளை, உதவிகளை நல்லொழுக்க பண்புகளை நினைப்பவர்களாக இல்லை. இஸ்லாத்தின் clean தூய்மையான clear மிக தெளிவான தெய்வீகத்தை பெரும் பாக்கியத்தை கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்துவதை விட்டு அவர்கள் தூரமாகி வாழ்கிறார்கள் என்பதை குர்ஆனிய வவசனம் தெளிவு படுத்துகிறது. எனவே இவர்கள் இஸ்லாத்துக்கு உதவுவர்களாக இருந்தால் dedication ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இஸ்லாத்தின் கடமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாப்பதில் முன் வரவேண்டும், செயற்படுத்த வேண்டும். என்பதையே குர்ஆனிய வசனங்கள் எதிர் பார்க்கிறது.

இறைவன் இவர்களுக்கு பல அருட் கொடைகளை கொடுத்திருக்கிறான். ஆனாலும் அவர்கள் நன்றி மறந்து அரபி என்ற arrogant ஆணவத்தில் பெருமை கொள்கிறார்களே தவிர இறைவனின் அருட் கொடைகளை வைத்து அவனுக்கு நன்றி செலுத்துவதில்லை.

உதரணமாக ஒரு விடயத்தை முடிக்க அரபிய அரச காரியாளையங்களுக்கு சென்றால் அஜமிகள் வரிசையாக காலையிலிருந்து காத்திருப்பார்கள் அரபிகள் வந்தால் முன் யார் இருக்கிறார் என்ற displin ,approach அவதானிப்பு, அணுகுமுறை கொஞ்சமும் இருக்காது அடித்து உடைத்து விட்டு அவர்கள் முன்செல்வார்கள். இப்படி கூடுதலான இடங்களில் அஜமிகள் என்ற hatcred துவேஷம்,அவமதிப்பு நடைபெருகிறது. உலக வழக்கத்தில் கடைக்கு உள்ளே சென்று பொருட்களை வாங்குவதான் எமது தேவை ஆனால் அரேபிய நாடுகளில் பெரிய Car, GMCவண்டிகளில் கடைக்கு முன்னின்று cone அடித்தால் கடைக்காரன் எழுந்து செல்ல வேண்டும். கடைக்கு உள்ளே யார் இருந்தாலும் அரபியர்களைத்தான் பார்க்க வேண்டும். அவர்கள் வண்டியிலிருந்து இறங்கி வரமாட்டார்கள். அஜமிகள் கடைகளில் பணிபுரிவதால் இறங்கி போகனும். இப்படியான வைராக்கியமுடைய அரபிய பண்புகள் எப்படி இஸ்லாத்தை வளர்க்கும்?

புனித இறை இல்லங்கள்

அல்லாஹ் தஆலா புனித இல்லங்களாக கஃபதுல்லாஹ் மதீனுல் மனவ்வரா பைதுல் மக்திஸ் இவைகளை தேர்ந்தெடுத்தான் காரணம் இறைதூதுத்துவ செய்தியை எற்றி வைக்க வந்த பல நபிமார்களின் வரலாறுகள் இந்த மூன்று இடங்களிலும் நிறைந்திருக்கின்றன. வரலாற்றில் தோன்றிய நான்கு வேதங்களின் நபிமார்களின் கால்பட்டு அவர்கள் செய்த பணிகளுக்காக அவர்களை கண்ணியப்படுத்தி அவைகளை சென்று தரிசிப்பதை கடமையாக்கினான். அதை உணராத அரேபிகள் நாங்கள் புனித பூமியின் செந்தக்காரர்கள். எங்களிடமே இஸ்லாமிய அரச தலைமைத்துவம் இருக்க வேண்டும். முஸ்லிம்களின் எல்லா அம்சங்களையும் தீர்மானிக்கும் சக்திகளாக நாங்களே கௌரவிக்கப்பட வேண்டும் என்ற பேராசை, great expection அதீத எதிர் பார்ப்பகள். மனதில் மாத்திரம் இருக்கிறதே தவிர செயற்பாடுகளில் ஏற்படுவதில்லை.

அல்லாஹ்தான் அதற்கு பெருமையுடயவன் முஸ்லிம்கள் அனைவரும் அதற்கு உரிமையுடையவர்கள். மூன்று இறை இல்லங்களின் பூமியிலும் அந்நி சக்திகளால் handle ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. இவ்விடங்களில் இஸ்லாத்தின் கலாசாரங்களுக்கு getting weak சக்தி இழந்து வருகிறது, hatred ஆபத்தாகி வருகிறது. இந்த அரபிய அமீரங்கள் என்ன செய்கிறது. அமெரிக்காவுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் கைகட்டிக் கொண்டு அவனது இராணுவ பாதுகாப்பில் வாழும் இவர்களுக்கு நாளை என்ன நம்பிக்கை இருக்கிறது.? பலஸ்தீன பூமி பல நூற்றாண்டுகளாக சுடுகாடாகி உயிர்கள் எந்த பெருமதியும் இன்றி குழந்தைகள் முதியவர்கள் என்று மரணமயமாகிறது.


ஹமாசும் ஹிஸ்புல்லாக்கலும் இல்லையென்றால் எப்போதே பலஸ்தீன பூமி இஸ்ரேலாக முழு உருவப்படமாக விஷ்வரூபம் எடுத்திருக்கும். இந்த நேரத்திலெல்லாம் இந்த அரேபிய அமீரங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறது.? ஏனைய முஸ்லிம் நாடுகள் வாருங்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம் என்று பகிரங்க அழைப்பு விடுத்தாலும் அமெரிக்காவுக்கு வக்காலத்து வாங்குவதிலும் காட்டிக் கொடுப்பதிலும் இன்னும் தங்களது அமீரங்களை பாதுகாத்து கொள்கிறார்கள். சவுதீ, கட்டார், பஹ்ரைன், குவைத், எகிப்து, ஜோர்தான் டுபாய் போன்ற அமீரங்கள் அமெரிக்கர்களின் இஸ்ரேலின் குழந்தைகளாக இஸ்லாமிய உம்மத்தை பழிகொடுத்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள்தானா இஸ்லாமிய சாம்ராச்சியத்தை எழுற்சி பெறச் செய்பவர்கள்? இவர்கள்தானா எங்களின் உரிமைகளை வென்று தருபவர்கள்? நபிகாளார் எழுற்சி பெறச் செய்த இஸ்லாமிய ஆட்சியை இன்னும் இன்னும் வீழ்ச்சி பள்ளதாக்கில் தள்ளி கொண்டுதான் இருக்கிறார்கள். ஜனநாயகமில்லா அரச அரன் மணைகள் நிலையாக இருப்பதற்காக இஸ்லாமிய உம்மாவை காட்டிக் கொடுத்து அதன் in the backgorunt பின்ணணியில் இன்பம் காண்கின்ற அந்த அமீரங்கள் இன்னும் நீண்ட நாட்களுக்கு நிலைக்காது.

அல்லாஹ்வுடைய தூதருடன் போருக்குச் செல்லாமல் தங்கி விடுதும்.அவரை பொருப்படுத்தாமல் தங்களைப்பற்றியே அக்கரை செலுத்தும் மதீனாவாசிகளுக்கும் அவர்களை சுற்றி வாலும் நாட்டுப்புற அரபிகளுக்கும் அழகல்ல. (9:120)

இந்த குர்ஆனிய வசனம் தெளிவாக பொருந்துகிறது இந்த அரபு நாடுகளுக்கு. பலஷ்தீனமும் மக்களும் அல்லோலத்தில் அல்லோலமாய் துன்பப்பட இந்த அரபு நாடுகள் கண்டும் காணாதவர்களாக இருக்கிறார்கள். அந்த மக்களை நோக்கிய எந்த கவளையுமின்றி பல மாடிக்கட்டங்கள் உயர்த்தி accomplish சாதனை படைக்கிறார்கள். எப்போதும் தங்களை பற்றியே அக்கரையும் ஆணவமும் கொள்கிறார்கள் தவிர இஸ்லாத்தின் தொன்டர்கள் எமது சகோதரர்கள் என்று அவர்களுடைய போருக்கு உணவுக்கு இருப்பிடத்திற்கு உதவி புரிகிறார்களா? இல்லை நாங்களும் அதில் கழந்து கொண்டு புனித போரில் ஷஹீதாக வேண்டும் என்று எந்த அரபிய நாடுகளிலும் முன்வந்தவர்கள் இருக்கிறார்களா? அவர்களுக்கு உதவுவர்கள் என்றால் அது அஜமிகளும் ஈரானும், சிரியாவும் ஹிஸ்புல்லாக்களையும் பகிரங்கமாக தெரிவுபடுத்தும்.

அவர்களுக்காக அல்லாஹ்விடத்தில் பிராத்தனை செய்யும் அழகான சந்தர்ப்பமே குனுத் ஆகும். தொழுகையில் உம்மத்தின் பாதுகாப்புக்காக கேட்கின்ற பண்பாட்டை நபிகளார் கற்றுக் கொடுத்தார்கள். அதில் கருத்து வேறுபாடுகள் கொண்டாலும் அதன் யதார்த்தம் பலரும் சொல்வதைபோல் ஒவ்வொரு தொழுகையிலும் கேட்கப்பட வேண்டும். ஒவ்வொரு நிமிடத்திலும் உம்மாவுக்கு against அச்சுருத்தல் துன்பம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இன்னும் குனுத் ஓதாமல் இருப்பவர்கள் என்றால் பலஷ்தீன மக்களின் நிலையை இன்னும் பிரச்சனையாக உணர வில்லையா? இல்லை இருந்தாலும் ஓதக் கூடாதென்ற பிடிவாதமா? ஆனால் இந்த அரபிகள்தான் தொழுகைக்கே முக்கியத்துவம் அழிப்பதில்லையே எப்படி குனுத் ஓதுவது . அரபு நாடுகளில் பள்ளிவாயல்களுக்கு போனால் அங்கு பொரும்பான்மை கொண்டவர்களாக வேலை வாய்ப்புக்குச் சென்ற அஜமீகளே இருப்பார்கள். இவ்வாறான தங்களது வாழ்க்கை போக்கில் இஸ்லாத்தின் யதார்த்த நிலைகளயெல்லாம் இருப்பதை இல்லையென்றும். இல்லாதை இருப்பதென்று உருவாக்க நினைக்கிறார்கள்.

பெற்றோலிய வாதம்
அரபிகள் நினைக்கிறார்கள் எங்களது மண்ணில் இருப்பவைதான் சிறந்தவை எங்களது மண்ணில்தான் petrol இருக்கிறது எங்களது மண்ணில்தான் flavorful மிக ருசியான grains, frots flooring, கணிகள், தாணியங்கள், இருக்கிறது. அஜமிகள் எங்களுக்கு அடிமைகள் என்று எங்களிடம் பேசுவார்கள். ஆனால் அவர்கள் அந்நிய சக்திகளுக்கு அடிமைப்பட்டு பெற்றோலியத்தை சிறு விலைகளுக்கு அள்ளி கொடுத்து விட்டு குடி நிரைக்கூட minarl water பல விலை கொடுத்து வாங்கும் foolish மடத்தனம் நிறைந்தவர்களாக இருக்கிறார்கள். பெற்றோல் உள்ளவரை தங்களை பாதுகாத்து கொள்வீர்கள். எத்தனை ஆண்டுகளுக்கு இன்னும் அதிலிருந்து உம்மாவை அழிக்க lobby வரவேற்பிடம் கொடுத்து அணுசரணை வழங்குவீர்கள்.?

அல்லாஹ்வின் இந்த அருள் இல்லையென்றால் இந்த அரபு நாடுகளின் நிலை என்னவாக இருக்கும்? ஏனைய முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து இந்த எண்ணெய் வளத்தை சரியாக பயன் படுத்திருந்தால் இந்த பலஸ்தீனுக்கு இந்த நிலை உருவாகிருக்குமா? இன்னுமின்னும் பல peepa கணக்கில் அமெரிக்காவுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்து எம் உம்மாவை எரிக்க கொல்லி போடும் அரபு நாடுகளுக்கு எப்போதும் உணர்வே வராதா?

இறை நிராகரிப்புச் சொல்லினை திண்ணமாக கூறியிருந்தும் நாங்கள் அவ்வாறு கூற வில்லை என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் மீண்டும் மீண்டும் சத்தியம் செய்கிறார்கள்.மேலும் தம்மால் செய்ய முடியாத செயலை செய்ய நினைத்தார்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்களுக்கு செல்வம் வழங்கியதற்காகவா அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள்? (9:74)

அல்லாஹ்வின் வசனம் தொளிவாக இவர்கள் மூதாதையரின் வாழ்வை குறிப்பிடுகிகின்றது. இந்த அரபிகள் போன்றே அவர்களும் அல்லாஹ்வின் அருளை அனுபவித்துக் கொண்டு முனாபிக் தனமாக இருந்தார்கள். முஸ்லிம்களிடத்தில் நாங்கள் இஸ்லாத்தை ஏற்றிருக்கிறோம் என்று சத்தியம் செய்து விட்டு இஸ்லாத்திற்கு எதிராக நடந்து கொண்டார்கள். இஸ்லாத்தில் கிடைக்கும் கனீமத் அன்பளிப்பகளையும் ஸதகா ஸகாத் பணங்களையும் பெருவதற்காகவே அவர்கள் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாக நடித்தார்கள். இதே போக்குகளை இன்றைய அரபிய சந்ததிகள் தொடர்கின்றன. அமீரகங்களை பரம்பரை பரம்பரையாக பாதுகாக்கவும் அரபிகள் என்று பொருமை பெற்றுக் கொள்ளவுமே இவர்கள் அரபி, முஸ்லிம்கள் என்று எழுந்து எழுந்து நின்று logic பேசுவார்கள். ஏனைய இஸ்லாமிய good life style எழுற்சிக்கு ஒழித்து வாழ்வதையே தெளிவாக தெரிகிறது. அல்லாஹ்வும் அவுனுடைய தூதரும் அவர்களுக்கு அருளிய செல்வங்களை நன்றி மறந்து அதற்கொதிராக நடப்பதையே குர்ஆனிய வசனம் கவளை கொள்கிறது, ஞாபகப்படுத்துகிறது.

பெண்களின் ஆபாச ஆடை

World fast chaning வளர்ந்து வருகின்ற நவீன வளர்ச்சியில் உலகத்தில் குழப்பமும் தீய பண்புகளும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அத்து மீறல்களும் அநியாயங்களும் கற்பழிப்பும் கொலை கொள்ளை என்று உலகம் நிறைந்து விட்டது. நல்லவர்களை good attribates நற்பண்புகளை காண்பது மிகமிக அரிதாகி விட்டது. தீயவாகளே எங்கு பார்த்தாலும் இருக்கிறார்கள். கடைகளிலும் வீதிகளிலும் கூட சர்வ சாதாரனமாக தீமைகள் four letter words கெட்டவார்த்தைகள் மலிந்து போய் crime has increased குற்றச் செயல்கள் அதிகரித்து விட்டது. இவைகளை கருத்தில் கொண்டும் குடும்ப ஒற்றுமையை பாதுகாக்கவும் பண்பாடுகளை வளர்க்கவும் இஸ்லாம் பெண்களை அடக்கமாக இருக்க ஏவியது. பண்பாடுகளை குழப்பங்களை கவர்ச்சியை கருத்தில் கொண்டு ஹிஜாபை இஸ்லாம் அறிமுகப்படுத்தியது. சாதரண மனிதனையும் கவர்ச்சி தூண்டக் காரணமாக இருந்து விட வேண்டாம் என்ற இஸ்லாம் பெண்களை ஒரு வரையறுத்த conrol கட்டுக் கோப்புக்குள் பணித்தது. அந்நியவர்களுடன் பேசுவதையும் அவர்களுடன் தனித்திருப்பதையும் தடுத்தது. வெளியேறும் நேரம் தங்களது breast மார்புகளை தங்களது Soul முன்தானிகளால் மறைத்து கொள்ளும் படி கட்டளையிட்டது. பெருமானார் அவர்களும் குர்ஆனும் பெண்களின் ஆடைகள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்கள்.


அவர்களிடம் ஏதாவது கேட்பதாயிருந்தால் திரை மறைவிலிருந்து கேட்டுக் கொள்ளுங்கள். இதுவே உங்களின் அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது.(33:53)

நபியே! உங்கள் மனைவியரிடத்திலும் பெண் மக்களிடத்திலும் மூஃமினான பெண்களிடத்திலும் அவர்கள் தங்களின் தலை முன்தானைகளை தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக. அவர்கள் கண்ணியமானவர்களாக அறிந்து கொள்வதற்காகவும், அவர்கள் தொல்லைக்கு ஆலாகமல் இருப்பதற்காகவும். இது மிகவும் ஏற்ற முறையாகும். அல்லாஹ் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கிறான்.(33:59)

நபியே! மூஃமீனான பெண்களிடம் நீர் கூறுவீராக அவர்கள் தங்களின் பார்வைகளை தாழ்த்திக் கொள்ளட்டும். மேலும் தங்களின் வெட்க தலங்களை பேணிபாதுகாத்து கொள்ளவும், மேலும் தங்களின் அழங்காரத்தை அவற்றில் வெளியே தெரியக் கூடிவை தவிர வேறெதையும் வெளிக்காட்டலாகாது. மேலும் அவர்கள் தங்கள் முன்தானைகளால் தங்களின் மார்பகங்களை மறைத்துக் கொள்ளட்டும். மேலும் அவர்கள் கணவரிடத்தில் தவிர தங்கள் அலங்காரங்களை வெளிபடுத்தவும் வேண்டாம்.(24:31)

இவ்வாறு பண்புகளுக்கு மேல் civilizations நாகரீகங்களை,பண்புகளை பாதுகாக்க அழகான நடைமுறையை இஸ்லாம் நெறிபடுத்துகிறது. ஆனால் அரேபி பெண்கள் இருக்கமான,ஆபாசமான ostentacious ஆடம்பரமான ஆடைகளையும் அணிகிறார்கள். கூடுதலான ஆடைகள் ஆண்டாண்டு புதிய ஆபாச new years modal ஆடைகளாக அறிமுகப்படுத்துவது அரபு நாடகளே என்பது வேதனைக்குறியது.

தங்களது கணவன் தவிர்ந்த ஏனையோருக்கு தங்களது அழகினை காட்ட வேண்டாம் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது. அரேபிய பெண்கள் கவர்ச்சியிலும் அழங்காகரங்களிலும் தங்களை வர்ணித்து inncoent அப்பாவி மனிதனையும் கவர்ச்சிக்கு அழைக்கும் செயற்பாடுகளாயிருக்கிறது. அவர்களை சந்தர்ப்ப சூழ்நிலையில் முன்னோக்கினால் அவர்களின் கவர்ச்சிப்போக்கில் மனிதன் தன்னை மறந்து விடுகிறான். உதடுகளுக்கும் lipstic முகத்திற்கும் நகங்களுக்கும் வர்ணம் பூசி இருப்பார்கள் அதை நீக்குவது என்றாலே பல நாட்கள் தேவையாகலாம். அடக்கமாய் வாழ்ந்த பெண்களும் இவர்கள் அரபிகள் இப்படிருக்க நாமிருந்தால் என்ன என்ற மனப்போக்கு உருவாகிறது. இவர்கள்தானே இஸ்லாத்தை சொன்னவர்கள் என்ற மனோ நிலை பின்பற்றபடுகிறது தவறான நடத்தையுடைய பெண்களின் ஆடைகளையும் பாதணிகளையும் அணிய அனுமதில்லாதபோதும் அரேபிய பெண்களின் உடைகள் மிக கேவலமாக இருக்கும்.

அழகான ஆடை அபாயா கூட அரேபிய பெண்களிடம் ஆபாசாமாக இருக்கமாக அமைக்கப்பட்டிருக்கும். மறைக்கப்பட வேண்டிய breasts, buttocks மார்பகங்களும் மர்மஸ்தானங்களும் naked வெளிப்படையாக காட்சி தருவது போலிருக்கும். எவைகளை பெண்களிடம் நபிகளார், குர்ஆன் இருக்க வேண்டாம் என எச்சிரித்தார்களோ அவை அணைத்தும் அவர்களிடம் மீறப்பட்டிருப்பது மிக வேதனைக்குறியது.

இஸ்லாம் அனுமதித்தவாறு தன்னை மறைத்து கொண்டு வெளிவரும் பெண்களும் அரபிகளில் ஒரு சிலர் இருப்பதை நாம் பெருமை கூறிக் கொள்ள வேண்டும்.

பெரும்பான்மையானவர்கள் ஹிஜாப் அணிவதில்லை. மறைக்க கட்டயமற்ற முகத்தை மறைத்துக் கொண்டு மறைக்கப்பட வேண்டிய பகுதிகளை மாற்றானின் காட்சிக்கே காட்டிக் கொண்டு வருவார்கள். ஏனைய ஆசிய நாட்டு பெண்கள் எவ்வளவு பக்குவமாக உடையணிகிறார்கள். அந்த நிலை அவர்களிடம் சிறிதளவுகூட nonegrests ஆதங்கப்படுவதில்லை, கூச்சம் ஏற்படுத்த வில்லை. ஏனைய பெண்களைவிட பாவங்கள் செய்து நரகத்தை அரபிய பெண்கள்தான் நிரப்புவார்களோ என்று கணிக்கத் தோன்றுகிறது.

பாவத்திற்கும் விபச்சார பார்வைக்கும் களம் அமைத்து விட்டு அவன் என்னை பார்க்கிறான். அவன் என்னை சீன்டி விட்டான். என்று கூச்சளிடுவார்கள் எப்போது? தனது கற்பை சரியாக பாதுகாத்து கொள்ளாது கவர்ச்சி காட்டிவிட்டு அது சமூகத்தில் அம்பளமாகிற போது தான் தப்பித்து மற்றவனை மாட்டிடும் blame game பழி சுமத்தும் விளையாட்டுச் செயல் அரபிய பெண்களிடம் குறைந்து போகவில்லை.

கற்பு என்பது ஒவ்வொன்றுக்கும் இருக்கிறது. ஒவ்வொரு உருப்புகளுக்கும் கட்டுப்பாடு உரிமை இருக்கிறது அவை மீறப்படுவது விபச்சாரங்களே! கற்பு என்பது பெண்ணுக்கு மாத்திரமில்லை. பாவம் செய்தல் என்பது அபம் மாத்திரமில்லை. இவைகளையும் விபச்சாரம் என்பதாகவே இஸ்லாம் அறிமுகப்படுத்திருப்பது அதிகமானவர்கள் கவனிப்பதில்லையா?

ஆடம்பர அரண்மனை
தலைக்கு மேல் தலையணை வைத்தாலும் தூக்கத்தை கொடுப்பவன் அல்லாஹ். Daspin baget குப்பை தொட்டியில் படுத்து உருண்டாலும் அரண்மனையில் ஓய்வெடுத்தாலும் அன்றையநாள் கழிந்தே போகும். அரபு நாடுகளில் ஒர சாதரண குடும்பம் வசிக்கவோ அல்லது அவர்கள் சந்ததிகள் வசிக்கவோ பல அரண்மனைகள் அமைக்கப்படும். அந்த காலத்தில் வாழ்ந்த பிர்அவ்ன் போன்ற அரபியர்கள் இன்னும் வாழ்கிறார்கள். தனது வீட்டுக்கும் மற்ற வீட்டுக்கும் இடையில் பல meeter கணக்கில் (barrier ) தடுப்புச் சுவர்கள் உயர்த்தப்பட்டருக்கும். பக்கத்து வீட்டில் என்ன துன்பம் கஷ்டம் என்ற கவனிப்புகள் இருப்பதில்லை. இதற்கு மாற்றமாக இறை இல்லங்கள் பாடசாலை வசதிகள் சிறிது சிறிதாக ஒடுக்கப்பட்டிருக்கும். ஆசிய நாடுகளிலும் இருக்கின்ற பள்ளிகளை விட சிறிதாக பள்ளிவாயல்கள் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் அவர்களின் வீடுகள் பல ஏக்கர் காணிகளை கொண்டதாக நீர் தொட்டிகளையும் (amusement park) பூங்கா வனங்களையும் கொண்டதாகருக்கும்.இவ்வாறு அரேபிய நாடுகள் ostentacious ஆடம்பரத்தில் மிதக்கிறது. Arabi mining ostentacious அரேபியர் என்றால் ஆடம்பரமானவர்கள் என்ற வார்த்தைகள்தான் வெளி வருகின்ற நிலை உருவாகிருக்கிறது. இந்நத அரபிய அமீர்மார்களின் வீடுகள் எவ்வாறு பணங்கள் செலவழிக்கப்பட்டு உயர்த்தப்பட்டிருக்கிறது.

இந்த பணங்கள் எல்லாம் எப்படி வந்தது? அவர்கள் மூதாதையர் காலத்தில் எப்படி பொது சொத்துகளுக்கு (பைத்துமால்)எப்படி அநீயாயம் ஏற்பட்டதோ அதே வழிமுறை கையாளப்படுகிறது. அவர்கள் சந்ததிகளுக்கும் உறவினர்களுக்கும் அதிலிருந்து ஆடம்பர வாழ்க்கைக்கு அள்ளி கொடுக்கப்படுகிறது. ஏழையாக வாழ்ந்தவர்கள் ஏழையாகவே வாழ்கிறார்கள். அநாதையாக வாழ்ந்தவர்கள் ஆதரிக்க யாரிமின்றி அவஸ்த்தைக்கே ஆளாகிறார்கள்.

நீங்கள் நினைக்கிறீர்களா? இந்த அரபி நாடுகளில் பிச்சைக்காரர்கள் இல்லை என்று ஏழைகள் இல்லையென்று. நிறையவே வாழ்கிறார்கள். பள்ளிவாயல்களிலும் ஏனைய இடங்களிலும் கையேந்தி இருக்கிறார்கள். ஆனால் செல்வந்தர்களுடைய வீடுகளும் அரண்மனைகளும் வானத்தை எட்டிடலாம் என்று எண்ணுகிறதோ? தங்கத்தினால் தூங்கும் அறையும் குளியலரையும் கொண்ட அபுதாபி அமீரின் உடல் எதனால் உருவாக்கப்பட்டதோ? இவ்வாறான ஆடம்பர வாழ்க்கையால் எதனை சாதிக்கப்போகிறார்கள்? உடலில் மூச்சுள்ளவரைதான் எல்லாமே அதன் பின் ஆறுமூள வெள்ளை துண்டில்சுருட்டப்பட்டு ஆறடி புதைகுழி கூட சொந்தமில்லை. அதற்கு gold bungalow தங்கத்தினால் வீடுகளும் வெள்ளியினால் போக்குவரத்து வண்டிகளும் தேவைதானா?


வீணாக்கப்படும் உணவுகள்.

Competitive world போட்டிமிகு உலகில் உணவு என்பது மனித வாழ்வில் உயிருடன் ஒட்டிய அம்சமாகும். உலகத்தில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்த மதக் காலசாரங்களை கொண்டிருந்தாலும் அல்லாஹ் அனைவருக்கும் உணவளிக்கின்றான். அல்லாஹ்தஆலா இந்த பாரிய பொறுப்பை தனது கிருபையினால் அதில் ஒருவரை ஒருவர் Canacting தொடர்படுத்தி வைத்திருக்கிறான். சில நபிமார்கள் நல்லடியர்கள் தவிர்ந்த எவருக்கும் நேரடியாக இறைவனிடமிருந்து உணவளிக்கப்படுவதில்லை. ஒருவரை ஒருவர் மீது தங்கி வாழச் செய்திருப்பது அவனது அர்ரஹ்மான் எனும் கருணையாளானுக்குறிய பண்பாகும். இஸ்லாம் மனித சக்திக்கு அப்பாட்பட்ட எதையும் அவன் மீது எதிர் பார்ப்பதில்லை . குற்றம் பிடிப்பதில்லை. மனித சக்தி என்பதை அவனது உணவு,உடை,உறைவிடம் பொருளாதாரம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது. உலக சொற்களில் மனித உரிமை என்ற ஒன்று தோன்ற இவைகள் அடிப்படை எனலாம். இஸ்லாம் மனித பண்பாட்டை சொல்வதில் உணவிலும் குறைவைத்திட வில்லை.

உண்ணுங்கள் பருகுங்கள் வீண்விரயம் செய்யாதீர்கள். வீண்விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்புவதில்லை. (7:31)

என்று பகிரங்மளிக்கிறது. உணவு என்பது இறைவனின் அருள் அவனது அன்பு என்ற பண்பினூடாக உருவானது. அதற்காக மனிதன் விலங்குகள் பறவைகள் எல்லா படைப்பினங்களும் இரவு பகலாக கஷ்ட்டப்பட வேண்டியிருக்கிறது. யார் எங்கு தொலைவில் சென்றெல்லாம் உழைக்கிறார் என்றால் அது தனது வயிற்று பசி dieting உணவுத்தட்டுப்பாடு என்பதை யாரும் மறுக்க இயலாது.

நாளடைவில் developing country உட்பட எத்தனை நாடுகளில் உணவின்ற குடி நீரின்றி கற்களையும் களி மண்ணயும் வயற்றுப் பசியின் வெற்றிடத்தை நிரப்புகிறார்கள். தெரியுமா? ஒரு நேர உணவுக்காக அழுகின்ற கண்ணீருக்கும் ஏக்கதிற்கும் யார் விடை கொடுப்பது? உலகை சுற்றி எல்லா நாடுகளிலும் அந்த நிலை இருக்கிறது. ஆனால் அவைகளையெல்லாம் அவதானித்தும் அலட்சியமாக இருக்கின்ற நாடுகள் பல அரபு நாடுகள் என்பதை வரலாறு opinion poll கருத்துக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன.

அதற்கு மாறாக இந்த அரபு நாடுகளில் வீடுகளில் செய்யப்படுகின்ற உணவு ed fufile வீண்விரயத்திற்கு அளவே இல்லை. Flavorful வாய்க்கு ருசியாகவும் expens stuff பல உயர்தர பொருட்களாலும், grains தாணியங்களாலும் தயாரிக்கப்பட்டு சாதனை படைக்கப்படுகின்றது. வீணிறி பிரயோசனப்படுமென்றால் பேச வேண்டிய தேவை இருக்காது. ஆனால் அவை குப்பை வாலிகளிலும் சாக்கடைகளிலும் வீசப்படுகின்ற நிலை பரிதாபத்திலும் பரிதாபம். அரபிகளின் உணவுகள் மட்டுமல்ல அவர்கள் உண்ண இருக்கும் முன் பல குடி பாணங்கள் பல வகை வகையான உணவுகள் எல்லாம் இருக்கும் எல்லாம் ஒரு அமர்வின் பின் குப்பையில் வீசப்படுகின்றவைதான். Pepsi ,coca cola இன்றி அவர்களின்உணவுகள் சேமிபாடு அடைவதில்லை. சோமாலியா பொஷ்னியா சூடான் போன்ற
முஸ்லிம் நாடுகள் உட்பட பல நாடுகள் உணவு பற்றாக் குறையினால் நாளுக்கு நாள் மரண வீதம் disater ,difficulties பேரழிவு சிரமங்களை அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த துன்ப நிலையை உலகத்தில் உணர மனிதர்களே இல்லையா? என்ற அவல நிலைக்கு யார் பதில் சொல்வது?

இவர்களின் இதயங்களில் மனித நேயங்களே உருவாகாதா? நீங்கள் இவ்வாறான ஆடம்பர வாழ்க்கைனால் சம்பாதித்தது என்ன? நீங்கள் உயர் மாடிக் கட்டங்களிலும். பெரிய உணவுத்தட்டங்களிலும் சாதனை படைக்கிறீர்கள். பசினாலும் பட்டினியாலும் நாங்கள் சோதனை படைக்கிறோம். நோன்பின் மூலமாகவும் உங்களுக்கு உணர்வுகள் ஏற்பட வில்லையென்றால் நோன்பையும் நீங்கள் சரியாக பிடிப்பதில்லை என்பதையே சொல்கிறீர்கள். நீங்கள் பெயரளவில்தான் முஸ்லிம்கள். அரபி என்ற ஆணவம் மட்டும்தான்
இவ்வாறு பல விடயங்கில் அரபிகளிடத்தில் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் தவறாக கணிக்கும் வகையில் அவர்களது செயல்கள் இருக்கிறது. கூடாத பண்புகளும் கலாசார சீர்கேடுகளும் நிறைந்து இருக்கின்றன.
அறிவியல் விடயத்தில் பின்னடைவு
நற்பண்புகள் வளாராமை imprudent விவேகமின்மை
வீடுகளில் பெண்களின் கட்டுப்பாட்டு அடிபணியும் நிலை
அளவுக்கு மிஞ்சிய சத்தம்
பணியாளர்கள் துன்புறுத்தப்படல்
அந்நிய கலாசாரம்
பிள்ளை வள்ர்ப்பில் கவனமின்மை
உலமாக்ககள் அரச அரண்மனைக்கு அடிபணிய வேண்டிய நிலை
வேலைக்கேற்ற உதியம் கொடுப்பதில்லை
Irregularity life of islam இஸ்லாத்திக்கெதரான முறைகேடான வாழ்க்கை
Crude முரட்டுத்தனம் cruelties கொடுமை தனம் consttuted சதித் திட்டமிடல் போன்ற கெட்ட பண்புகள் நிறைந்திருத்தல். இதற்கு மாற்றமாக இஸ்லாமிய நல்லொழுக்க விழுமியங்களில் மிக மிக பின்தங்கிய நிலையில் இருப்பதை இன்றைய சுற்றுச் சூழலில் காண முடியும்.

இஸ்லாம் அறிவியல் விடயத்தில் எவ்வளவுக்கு தனது declare அங்கிகாரத்தை சொல்கிறது. பல இடங்களில் அறிவியலை ஆராயும் படி கட்டளையிடுகிறது. சிந்திக்கும்படி பணிக்கிறது. இவைகளிலெலாம் அரபிகள் மிக பின் தங்கிய நிலையில் இருப்பதை உலக அறிவியல் சொல்கிறது. அன்று இவர்கள் மன்னர்கள் இப்படித்தான் அறிஞர்களையும் கல்விமான்களையும் அடக்கி வைத்திருந்தார்கள். அவர்களைப்பற்றி புகழ் கவி பாடவும், அவர்களுக் கெதிரானவர்கள் பற்றி இகழ் கவி பாடவுமே பயன்படுத்தினார்கள். மேலும் அவர்களால் அனுமதிக்கபட்ட அறிவியல் விடயங்களை மட்டுமே மக்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் சொல்லுக்கு கட்டுப்படாதவர்கள் cruetty துன்புறுத்தப்பட்டார்கள், சிறையிலடைக்கப்பட்டார்கள், கொலை செய்யப் பட்டார்கள். அதே நிலை இந்த இன்றைய அரபீய அமீரகங்களில் நடை பெருகிறது. இந்த நாடுகளில் இருக்கின்ற எந்த உலமாக்களும் அரசுக்கு எதிராக குரல் கொடுத்ததில்லை. கொடுப்பதற்கு இவர்களிடம் தைரியமும் இல்லை. அதனால் இவர்கள் இந்த அமீரங்களை ஆதரிப்பவர்கள். என்று தெளிவாகிறது. அப்படியாக இருப்பின் இந்த நாடுகளில் அத்தூமீறி நடக்கின்ற அநாச்சாரங்களை இவர்கள் ஆதரிக்கிரர்களா? இல்லை இவர்களுக்கு இவை பாவச் செயல்களாக தெரிவதில்லையா?

அறிவு விடயத்தில் அவர்களுடைய மன்னராட்சிக்கு எந்த தொந்தரவுமில்லாத அறிவை படிப்பதில் மட்டும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஏனைய கொள்கை சார்ந்த எந்த விடயத்திலும் இங்கு தெளிவு வகுப்புகள், ஒன்று கூடல் நடந்தால் அவை தடுக்கப்படுவது ஏன்? இவையெல்லாம் உலமாக்களின் அறிவியலின் சுதந்திர மீறல் இல்லையா?

வரலாற்றலவில் science,விஞ்ஞான Geography புவியல் வானசாஸ்திரம், astronomy வானசாஸ்திரம் the science of medicine, the medical மருத்துவம், கணக்கதிகாரம், the science of Arithmetic, Mathematics. போன்ற துரைகளை ஆரம்பத்தில் உருவாக்கியவர்கள் எல்லாம் முஸ்லிம்கள் இன்றைய சுழலிலும் ஏனைய முஸ்லிம் நாடுகளை விட அரபு நாடுகளில் எந்த துரையிலும் முன்னேராமல் அந்நி சக்திகளின் தேவைகளில் அடிமைப்பட்டிருப்பது எவ்வளவு கேவலமானது. எந்த அரபு நாட்டிலாவது அறிவுத் துறையிலோ, ஆயுதத் துரையிலோ விஞ்ஞானத் துரையிலோ மருத்துவத் துரையிலோ ஏதோ ஒரு துரையிலோ சாதனை படைத்ததையோ மேலோங்கி நிட்பதையோ காணமுடிகிறதா? அரபிய நாட்டில் பயன்படுத்த படுகின்ற அனைத்துமே அந்நிய நாட்டிலிருந்த export,inport பெறப்பட்டவைதான். தற்போது இந்த அரபு நாடுகள் இவைகளை தேவையாக உணர்கிறதா?. இந்த நாடுகளில் வருகின்ற வெளிநாட்டவர்களின் மொழி தெரியாது தவிப்பதையெல்லாம் இப்போதுதான் அனுபவிக்கிறார்கள். ஏன் வளர்ந்துவருகின்ற ஆசிய நாடுகளான இந்திய மலேசியா மாலைதீவு பாக்கிஸ்தான் இலங்கை போன்ற நாடுகளில் உட்பத்தி செய்யும் பொருட்கள் கூட இந்த வலை குடா நாடுகளில் இல்லை . ஒரு பாதனி தொழிச்சாலையாவது தங்களது சொந்த தொழில் நுட்பத்தைக் கொண்டு நிபுணர்களை கொண்டு இவர்களால் வழிடாத்த முடியுமா?

இவை எதனைச் சொல்கிறது அவர்களின் ஆடம்பர வாழ்க்கையையும் அந்நிய சக்திக்கு அடிமைப்பட்டிருப்தையுதான் தெளிவுபடுத்துகிறது. இவர்களது எண்ணெயை சரியாக பயன்படுத்தினால் எத்தனை தொழில்சாலைகளை உருவாக்கலாம். இவர்கள் புனித குர்ஆனை சரியாக உணர்ந்திருந்தால் எத்தனை கண்டு பிடிப்புகளை,expensive stuft விலைமதிப்புள்ள பொருட்களை, expent வல்லுணர்கள் நிபுணர்களை உருவாக்கி இருக்கலாம் . அவர்கள் நபி பெருமனாரின் வாழ்க்கையை சரியாக எடுத்திருந்தால் எத்தனை இஸ்லாமிய அரச சாம்ராச்சியத்தை உருவாக்கி இருக்கலாம். இப்போததெல்லாம் எங்கே போனது அரபிய விளக்கம் ?

ஏன் இன்று ஈராக்கிற்கு ஆப்கானிஸ்தானுக்கு சூடானுக்கு ஈரானுக்கு ஏற்படுகின்ற ecomnomic unce rtainty பொருளாதார தடை இவர்களுக்கு நாளை நடந்தால் இவர்களால் எப்படி வாழமுடியும்.? அவர்களுக்கு பொருளாதார தடை எற்படாது. காரணம் யார் அமெரிக்காவுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் தலைபணியாமல் இருக்குறார்களோ அவர்களுக்குத்தான் பொரளாதார தடை. எப்போதும் அவர்களது பிள்ளைகளாக தலையாட்டும் எமக்கு பொருளாதாரதடை நிகழாது என நினைத்து கொள்கிறார்களா?

அமேரிக்கா எப்போதும் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் அழிப்பதில் தனது துறைகளை தயார் படுத்துகிறோன் . தானே உருவாக்கிய சதாமிடம் அணுஆயுதம் என்று உள்நுளைந்து அங்கு தனது குழப்பத்தை உருவாக்கினான். அவனே ஈரானக் கெதிரான ஈராக் யுத்தத்தை திணித்து அணுவாயுத்தை கொடுத்தவன். உஸாமாவi உருவாக்கி தீவிரவாதி என்று படையெடுத்து ஆப்கானிஸ்தானில் அட்டூலியம் செய்கிறான். ஆரபி நாடுகளை எப்போதும் தனது கட்டுப்பாடடில் வதைத்திருகிறான். முஸ்லிம் நாடுகளை எந்த துறைகளிளலும் வளர்சச்சியடைய விடாது தீவிர வாதி என்று முத்திரை குத்துகிறான்.

பாரசீ வலை குடா நாடான ஈரானும் ஒரு காலத்தில் அமெரிக்காவின் அடிமையில் சிக்கியதுதான்.1979ம் ஆண்டு தான் அது தனது இஸ்லாமிய புரட்சியை வெற்றி கண்டது. அதற்குமுன் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் தடையாகவே ஈரானின் அரச அரண்மனை விளங்கியது. அதனை உணர்ந்த சமூகம் அங்கு தனது புரட்சியை ஏற்படுத்தி வெற்றி கண்டது. தற்போது தன்னை ஒரு இஸ்லாமிய குடியரசாக பகிரங்கமாக அறிமுகப்படுத்தி ஆண்மீக பார்வையுடன் ஆட்சி செய்கிறது. இதனை தாங்கிக் கொள்ள முடியாத monopoly ஏகாதிபத்தியமும் அமெரிக்காவும் அதற்கு பொருளாதார தடையென்றும் அணுவாயுத மிரட்டல் என்றும் அதன் வளர்ச்சியை நசுக்கப்பார்க்கிறது. இது ஏனைய அரபு அமீரகங்களுக்கும் ஒரு jealousy பொறாமையாகவே கருதுகிறது. ஈரானில் ஏற்பட்ட புரட்சி எமது நாட்டிலும் ஏற்பட்டு எமது அரச மன்னராட்சிக்கு முற்றுப் புள்ளி வைத்திடலாம் என்ற அச்சமேதான். ஆனால் எதற்கும் அஞ்சாத ஈரானிய அரசு தனது தெய்வீக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வெற்றி கண்டு போகிறது. ஏனைய பொருளாதார ஆயுத தொழில்நுட்ப மருத்துவ போக்குவரத்து போன்ற காலத் தேவைகளிலும் வளர்ச்சி கண்டு வெற்றி சூட்டுகிறது. உலகலாவிய ரீதியில் பெயர் பெருகிறது.

மேலும் பகிரங்கமாக அமெரிக்காவை ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதிலும் தனது வளர்ச்சியை பயன்படுத்துகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக எனது உம்மா என்று பலஸ்தீன மக்களுக்கும் ஹிஸ்புல்லாக்களுக்கும் ஏனைய இஸ்லாமிய போராளிகளுக்கும் தன்னால் முடியுமான உதவியை செய்து வருகிறது. இவைகளை தாங்கிக் கொள்ளாத அமெரிக்காவும் ஏகாதி பத்தியமும் ஈரானை பலமிழக்கச் செய்யும் ஆயுதமாக கிடைப்பதுவே ஷீஆ எனும் சொல்லாகும். அமெரிக்காவை ஆட்டம் காணச் செய்வதும் அரபிய மன்னராட்சியின் ஆட்டம் கொடுப்பதும் ஈரானாக இருப்பதால் அரபு நாடுகளும் அமெரிக்காவும் நண்பர்களாகிறார்கள். இவர்களுக்கு கிடைக்கும் ஆயுதமாக ஷீஆக்களை irresponsibly தாருமாறாக புணைந்து, mutual blaming பழி சுமத்தி சமூகத்தில் கசப்பை உருவாக்குவது. இதுவே இன்று நடக்கும் ஷீஆ,சுன்னா பிரசாரங்கள். அல்லாஹ்வையும் நபிகளாரையும் குர்ஆனையும் மறுமையையும் நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களிடத்தில் பல பிரிவுகள் உள்ள போதும் ஷீஆக்களை மட்டும் சர்வதேச ரீதியாக எதிர்ப்பதற்கு காரணம் சர்வதேச அரசியல் conspire சதித்திட்டங்களே தவிர வேறில்லை. ஷீஆக்கள் ஏனைய முஸ்லிம்களை விட மேலும் ஒரு விடயத்தில் அக்கரை dedcation ஆழ்ந்த ஈடுபாடு செலுத்துகிறார்கள். நம்பிக்கை கொள்கிறார்கள். அதுவே இமாமத். இவைபற்றிய நூட்களை ஆராய்ந்து தெளிவு பெற்றுக் கொள்வோம்.

இப்படி அரபிய மன்னராட்சி நிலவரங்கள் இருக்க பலஸ்தீன பூமியின் மக்களின் நிலை பரிதாமானது.

உணவு குடிநீர் மருந்து கல்வி இருப்பிடம் போன்ற basic needs அடிப்படை உரிமைகள் இழந்து மறுக்கபட்டவர்களாக நாளுக்கு நாள் மரணமடைகிறார்கள். 2006ம் ஆண்டில் பலஸ்தீன மக்களின் அதிகார பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹாமாஸ் புறக்கணிக்கப்பட்டு மேற்குலகின் ஆசைகளுக்கு அடிபணியும் பத்தா அப்பாஸ் அமைப்புக்கு ஆட்சியை அபகரீக்கும்படி இஸ்ரேலும் அமெரிக்காவும் அரபுநாடுகளும் அங்கீகாரம் கொடுத்தது. ஜனநாயகத்தினால் மக்கள் பிரதிநிதிகளான ஹாமாஸ் அங்கத்தவர்கள் சிறையிலயடைக்கபட்டார்கள்.

ஹாமாஸ் மீதான மேற்குலகின் பொருளாதார தடைக்கு நாம் மேற்குறிப்பிட்டது போல் அரபு நாடுகளின் பின்னணி இருக்கிறது. ஈரானில் ஏற்பட்ட attractire looke of islamic government இஸ்லாமிய ஆட்சியின் வசீகரத் தோற்றம் இஸ்லாமிய புரட்சி இன்று பலஸ்தீனிலும் நாளை எமது நாடுகளுக்கும் மக்களின் மனங்களில் துளிர் விடலாம் என்ற அச்சங்கள் ஹாமாஸ் ஒடுக்கப்பட்டது. முஸ்லிம் நாடுகளில் ஏற்படும் இஸ்லாமிய ஆட்சி அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் எப்படி அச்சுருத்தலோ அரபிய மன்னராட்சிக்கும் conveniences அசோகரியமாகும், அச்சுருத்தலாகும் என்பதை அரபு மன்னர்கள் நன்குணர்ந்து விலை போகிறார்கள். ஆனால் பலஸ்தீன பிரச்சனை பல நூற்றாண்டு காலமாக தீர்வு காணப்படாத ஒற்றை தலைற்ற coains நாணயமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. பலஸ்தீனுக்கும் அந்த மக்களுக்கும் நடக்கின்ற கொடுமையை தட்டிக் கேட்காது மௌனியாக lack ot action இருக்கின்றன அரபு நாடுகள்.

2005ம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஹாமாஸின் அரசயில் வெற்றியின் போது இஸ்ரேல் மறுத்து நீங்கிக் கொண்டது. பலஸ்தீன மக்கள் எகிப்திற்குள் நுளைவதை தடுக்க steel wall சுவரை அமைக்க திட்டமிட்டது. இவ்வட்டூலியத்தை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தன எகிப்தும் அரபுநாடுகளும். ஈரானும் ஹிஸ்புல்லாஹ்வும் பகிரங்கமாக அந்த சுவர் வேலைகளை தடுக்குமாறு எகிப்துக்கு எச்சரிக்கை கொடுத்தது. அதன் பின்னரே அஷ்ஷேஹ் யூசுப் கர்லாவியும் எகிப்துக்கு தடுக்கும்படி வேண்டுகோலிட்டார். ஏனைய முஸ்லிம்நாடும் இதில் ஒத்துழைக்க வேண்டும் என பணித்தார் அதன் பின்னரே தற்காலிக தடை விதிக்கப்பட்டது.

இவ்வாறு பட்டினியால் வாடும் தன் சகோதரனுக்கு ஒரு பாண்துண்டை பலத்காரமாய் கொடுக்க தையரிமில்ல கோழைகளாக வாழுகிறோம் என்ற அஸீஸ் நிஸார்தீன் அவர்களின் உணர்வு உம்மாவை ஒவ்வொரு நிமிடமும் கேள்வி கேட்கிறது.

ஆனால் அரபு நாடுகளில் ஆடம்பரத்திலும் அலட்சிய போக்கிலும் நான் பெரிது நீ பெரிது என்று போட்டி போடுகிறது. அல்லாஹ் ஒவ்வொரு மண்ணுக்கும் அதன் சுழல் காரணிகளை வைத்து தனது அருளை கொடுத்திருக்கிறான். இந்த அரபு நாடுகளில் நன்றி மறந்து அவனது கட்டளைகளுக்கு மாறு செய்து அந்நியனுக்கு விலை போகிறார்கள்.

எனவே தயவு செய்து சகோதரர்களே இஸ்லாத்தை ஆராய்ந்து கொள்வோம். கண்மூடித்தனமாக பின்பற்றுவதை சிந்திப்போம். அரபிகளிடமிருந்தோ, அஜமிகளிடமிருந்தோ இஸ்லாத்தை பின்பற்றுவதை விட அறிவியலுடனும், அல்குர்ஆனுடனும் அஹ்லுல் பைத்தின் வாழ்வோடும் தேடுவோம். இஸ்லாத்தின் ஆரம்ப கால வரலாற்றை ஆராய்ந்து சிந்தித்து வாழ்வோம். அல்லாஹ் அரபி அஜமி என்று நேசிப்பதில்லையே அவன் நேசிப்பது இறையச்சமுள்ளவரைத்தான்.

நான் எனது அனுபவத்தில் உங்களோடு:
பந்நாட்டு மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எல்லோரிடமும் எமது உம்மாவின் இந்த துரதிஸ்ட நிலை பற்றி பேசுவேன். பலர் இதில் எந்த உணர்வுமற்றவர்ளாக இருப்பார்கள். சிலர் உணர்வுள்ளவர்ளாக இருப்பார்கள். குறிப்பாக ஆசிய நாடுகளான இலங்கை இந்தியா பங்களாதேஸ் பாக்கிஸ்தான் போன்றவர்களிடம் பேசினால் உணர்வுகள் கொதிக்கும் நடைமுறையில் கொண்டு வருவதில் தயக்கம் காட்டுகிறார்கள். indifference உதாசீனப்படுத்துகிறார்கள்.

இவ்வாறிருக்க நான் ஈரான் இஸ்லாமிய குடியரசின் ஆண்மீகம் அரசியலை இந்த அரபுநாடுக்கு முன்னுதாரனமாக பேசினால் நழுவிக் கொள்கிறார்கள். காரணமாக ஈரான் ஷீஆக்கலாம் அவர்கள் காபிர்களாம் அவர்கள் அலியை நபி என்று சொல்பவர்களாம் ஸஹாபாக்களை ஏசுபவர்களாம் என்று பல குற்றசாட்டு முன் வைப்பார்கள். அதன் பின் நான் ஷீஆ சுன்னா பிரிவு பற்றி அவர்களிடம் பேசினேன். உண்மையில் அவர்கள் inncent அப்பாவி கிளிப்பிள்ளைகள் போல் தென்பட்டது. யாரோ சொல்லி கொடுத்தவைகளையும் தான் முஸ்லிம் தாய் வயிற்றில் பிறந்தவர் என்பதற்காகவும் தனக்கு தெரிந்தது மட்டுமே இஸ்லாம் அறிவியல் என நினைத்திருந்தார்கள். கூடுதலாக ஆதார நிருபனமாக பேசினால் இதுபற்றிய அறிவு தன்னிடம் இல்லை. என்னிடம் இருப்பது போதும் என்று நழுவிக்ககொள்கிறார்கள். எவ்வளவு துரதிஷ்டமான நிலை. ஒரு விடயத்தில் தெளிவு பெற வேண்டுமாயின் பிடிவாதத்தை விட்டு விடவேண்டும். தெளிவை ஏற்றுக் கொள்ளும் மனப் பான்மை வரவேண்டும். இவை இரண்டு பண்புகளும் எம்மிடம் இல்லை என்றால் தெளிவும் எம்மை விட்டு நீண்ட தூரம் ஓடிடும்.

அவர்களை நோக்கி நான் உதரணமாக சொல்கிறேன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒரு சகோதரனை சிந்தியுங்கள் ஆரம்பத்தில் இந்து மதம் ஏனைய சரியானது இஸ்லாம் பிழையானது என்று நினைத்தவாறு இருந்திருந்தால் அனவது நிலை என்ன? இல்லை நாம் இஸ்லாத்தைத்தான படிக்க வில்லை வேறு எந்த மதத்தையாவது investigate ஆராயனும் என்ற உணர்வு நமக்கும் ஏற்பட்டதா? இல்லைதானே எனவே நாம் இயலாதவர்கள். பிடிவாதமுடையவர்கள். வைராக்கியமுடையவர்கள் என்று தெளிவாகிறதா? இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவன் நம்மை விட ஒரு படி மேலானவன். அவன் இஸ்லாத்தை தவறாகவும் எனக்கு தெரிந்ததுதான் அறிவு என்று நினைத்திருந்தால் அனவது நிலை என்ன?.

இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொரு மனிதனும் இப்படியே கைசேதப்படுகிறான். நான் அறியாத பாவி என்று இஸ்லாமே எனக்கு காட்டியது. அதன் பின்னரே பல மொழி நூற்களையும் படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது. பல கொள்கைகளையும் படித்தேன் இஸ்லாத்தின் ஆரம்ப காலம் தொட்டு அதற்குள் உருவான பிரிவுகள் காரணிகள் பின்னணிகள் என்பதெல்லாம் ஆய்வு செய்தேன். இன்று உயிரிலும் உணர்விலும் இருப்பது என்னிடம் இஸ்லாம் மாத்திரம்தான். அதனூக எனது வாழ்வே ஒளியாக பல துரைகளில் உயர்த்தியது.

எனவே கல்வியை தேடுங்கள் globalization நவீன உலகில் எல்லாம் நிறைந்து இருக்கிறது. இஸ்லாத்தின் ஆரம்ப கால வரலாற்றை முதலில் தேடுங்கள். அதன் பிரிவுகள் பிரச்சனைகளுக்கு காரணிகள் என்ன என்பதை தேடுங்கள். இன்றைய இஸ்லாத்தின் எழுற்சிக்கும் வீழ்ச்சிக்கும் செல்வாக்கு செலுத்துவது எது என்றும் ஆய்வு செய்யுங்கள். வரலாற்றை நம்புமுன் வரலாற்றாசிரியர் நம்பிக்கையானவரா என்று ஆய்வு செய்யுங்கள். குர்ஆனை நாங்களே படைத்தோம் அதனை நாங்களே பாதுகாப்போம் என்ற இறைவசனத்தை full trust பரி பூரணமாக நம்புங்கள். நபி (ஸல்) அவர்கள் வரலாற்றை சொல்லும் வரலாற்றாசிரியரை படியுங்கள். அவர்கள் நபிகளாரின் குடும்பத்தினராக, ஸஹாபாக்களாக இருக்கட்டும். அல்குர்ஆன் வசனத்திற்கு முரணாக ஏதும் ஹதீத் வந்தால் அதை புறக்கணியுங்கள். அது ஏன் எப்படி யாரிடமிருந்து இருந்து வருகிறது என்று கேள்வி கேளுங்கள். தெளிவான நபிகளாரின் ஸஹீஹான ஹதீதுக்கு மாற்றமாக வேறு ஹதீத் வந்தால் அதிலும் ஏன் எப்படி யார் அறிவிக்கிறார் என்று (Ask question ) ஆய்வு செய்யுங்கள்.

நபிகளார் இவர்களிடம் இருந்து எனது நடைமுறை வாழ்க்கை முதல் ஆண்மீக வாழ்க்கை வரை கேளுங்கள் என்றவர்கள் யார்? சிந்தியுங்கள். அவர்களை விட்டு விட்டு வேறு யாரிடமும் செல்வது நியாயமா என்று சிந்தியுங்கள். தவறை யார் செய்தாலும் தவறுதான். அது தூய்மையான நபிகளராக அஹ்லுல் பைத்தினராக ஸஹாபாக்களாக இருந்தாலும் சரியே. எனவே இறைவனை தனது உயிரிலும் உடலிலும் சுமந்த நபிகளார் எந்த தவறும் செய்யமாட்டார் என்பதை குர்ஆனிய வசனங்கள் உறுதி செய்கின்றன. அவர் எதை பேசினாலும் அல்லாஹ்வின் வஹியைத் தவிர வேறு எதுவும் பேசமாட்டார். என்ற குர்ஆனிய வசனத்தை நம்பியவர்களுக்கு தெளிவாகும்.

ஆகவே சகோதரர்களே! முஸ்லிம் உம்மாவுக்குள் பிரிவு ஏற்பட காரணமாய் இருப்பது நபிகளார் வாழ்வு எப்படி என்பதில்தான். இவை தெளிவாகிவிட்டால் உம்மா ஒன்று சேர்ந்து விடுமல்ல. அதற்காக நாம் அறிவை தேடி புறப்பட வேண்டிய காலம் உருவாகிவிட்டது உம்மாவை ஒன்று சேர்க்க வேண்டிய நேரம் அவசியமாகிவிட்டது. அறிவை படிப்பதில் ஒருபகுதியினர் சரியாகி மறு பகுதியினர் பிழையாக வரும். அதனை முடிவு செய்ய எம்மிடம் ஆய்வு முதலில் வேண்டும். ஒர் நாணயத்தில் இரண்டு பக்கங்களும் தலையாக இருப்பதில் don’t use fully அர்த்தமில்லையே. அதுபோல் பிரிவுகளுக்கிடையில் உண்மை தெளிவாகிவிட்டால் ஏனையவை தீயவை என்பது தெளிவாகும். எனவே சுழற்றப்படுகின்ற நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றில் உண்மை எது? பொய்மை எது? ஏன்பது தெளிவுபடும். இஸ்லாத்தை தூய்மையாக பின்பற்ற இதுவே சரியான வழி. அவர் சரியாக இருக்கலாம் இவர்கள் பிழையாக இருக்கலாம் என்று உள்நோக்கங்கள் தெரியாது நமக்குள் நாமே முடிவு எடுத்திட முடியாது. சந்தேகமுடைய வணக்கங்கள் முகத்தில் வீசுப்படும்.

ஆகவே தயவு செய்து சகோதரர்களே இஸ்லாத்தை ஆராய்ந்து பின்பற்றுவோம். அரபிகளிடமிருந்தோ அஜமிகளிடமிருந்தோ இஸ்லாத்தை ஆராய்வோம். அல் குர்ஆனுடனும் நபிகளார் வாழ்வோடும் அஹ்லுல் பைத்தினரின் போதனையோடும் பின்பற்றுவோம்.அரபிகளின் செயலை வைத்தோ அஜமிகளின் செயலை வைத்தோ இஸ்லாத்தை குறைத்து மதிப்பிடுவதை தவிர்த்துக் கொள்வோம்.

கருத்துகள் இல்லை: