மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய

தனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான். இந்த திருமண வாழ்க்கை மூலமாகத்தான் மனிதன் வாழ்க்கையின் கூடுதலான சுகங்களை நோக்கங்களை வாழ்ககையின் யதார்த்தத்தை அடைகிறான். ஆகவே இந்த வாழ்க்கைக்கு நுளைகையில் ஒவ்வொருவரும் சந்தோஷங்களையும் சங்கடங்களையும் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
 ஆனாலும் இந்த வாழ்க்கையில் ஏற்படுகின்ற சந்தோஷங்களை சங்கடங்களை எவ்வாறு சமப்படுத்தி சமாளித்து கொள்வது என்பதே வாழ்ககையின் உண்மையான போராட்டமாகும். இதை உணராத தம்பதிகளிடத்தில் சிறு சிறு கருத்து வேறு பாடுகள், மனக் கசப்புகள் எற்படுகிறது. இந்த மகனக் கசப்புகள் வேறு பாடுகள் நாளடைவில் பிரச்சனையாக விரக்தியாக மாறி விவாகரத்தில் கொண்டு சென்று விடுகிறது. எனவே மனித வாழ்க்கையில் பிரச்சனை என்பது தவிர்க்க முடியாதது. எம் வாழ்க்கையில் எற்படுகின்ற கருத்து வேறு பாடுகளை நாம் எவ்வாறு சந்திப்பது என்பதை நோக்குவோம். திரு மண வாழ்ககையில் கணவன் மனைவிகளிடத்தில் ஏற்படுகின்ற பிரச்சனையை விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு அன்பு பரஸ்பரம் என்பதினூடாகவே தீர்க்கப்பட வேண்டும். கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளும்> மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக நடைமுறைப் படுத்துகின்ற போது இந்த பிரச்சனைகள் உருவாக இடமில்லை. எனவே இந்தப் பகுதியினூடாக நாம் மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை குறிப்பிடுவோம். வேரெரு பதிவில் கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை குறிப்பிட அல்லாஹ் எமக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும் என்று கேட்டவனாக.

 
1. எங்கயோ பிறந்து எங்கயோ வளர்ந்து உனக்கு நான் எனக்கு நீ என்று ஏற்று நேசித்து வாழ்வதே திருமணமாகும்.

2. நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருப்பதாக குர்ஆன் குறிப்பிடுகின்றது. இதன் அர்த்தங்கள் என் உடல் உனக்கு மட்டும் உரிமையுடையது. அதை மற்றவரின் கண்களுக்கு கட்சிக்கு தடை செய்யப்பட்டது என்கிறது. மேலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உங்கள் தம்பதி வாழ்க்கையில் ரகசியமற்றவர்கள். மேலும் அதை பிறரிடம் சொல்லி ரசிப்பதில் (ரகசியம் ) தடுக்கப்பட்டதாக குறிக்கிறது.

































3. நபிகளார் அன்னை ஹதீஜா நாயகி வாழ்க்கை போல் வயது வித்தியாஷம் தகுதி பார்க்காது அன்பு பரஸ்பரம் விட்டுக் கொடுப்புகளுடன் வாழ்வது.





















4. ஹஸரத் பாத்திமா அலி அவர்களின் இல்லற வாழ்க்கை வரலாற்றை படித்து அதனைப்போல் தாரள மனத் தன்மையோடு வாழுங்கள்





















5. மனைவி என்ற ரீதியில் நீங்கள் கணவனுக்கு செய்கின்ற பணிவிடைகளை ஒரு போதும் கேவலமாக நினைக்காதீர்கள்.

































6. உங்கள் கணவர் வீட்டை விட்டு வெளியேறும் நேரம் துஆ செய்து அழகன வாத்தைகளை கூறி வழியனுப்பங்கள்.









7. வீட்டுக்கு வரும் போது ஸலாம் சொல்லி நல்வரவழைத்து ஆறுதல் அழியுங்கள். மேலும் வெளியில் சேர்ந்து வந்திருப்பார் தண்ணீர் குடிபானம் கொடுத்து உபசரியுங்கள்.









8. வீட்டுக்கு வந்தவுடன் பிரச்சனைகளை சொல்லாது சந்தோஷமான விடயங்களை சொல்லி அவரோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.









9. துக்கமான விடயங்கள் இருப்பின் அதை வேறு ஒரு நேரத்தில் சொல்ல அமைதியாய் இருங்கள்.









10. அவர் சென்ற பயணத்தைப் பற்றிய சந்தோஷ செய்திகளை சொல்கின்ற போது நீங்களும் சந்தோஷப்பட்டு மனம் மகிழுங்கள்.









11. அவருக்கு விருப்பமான உணவு வகைகளை சமைத்து கொடுத்து திருப்தி படுத்துங்கள்.









12. அவர் இல்லாத நேரத்தில் அவருடைய சொத்து பணம் வாகணம் நீங்கள் பிள்ளைகளை பாதுகாத்து கொள்ளுங்கள்.









13. அவரின் குடும்பத்தினருடன் அன்பாக பாசமாக பழகுங்கள்.









14. உங்கள் குடுபத்தவர்களுடன் அனுமதிக்கப்பட்ட நெருக்கத்தை ஏற்படுத்தி அவருக்கு கொடுங்கள்.









15. உங்கள் பெற்றோருடனும் அவர்கள் பெற்றோருடனும் சந்திப்பை ஏற்படுத்தி கொடுங்கள்









16. உங்கள் குடும்ப தேவையை விட அவர் குடுமபத்தின் தேவைகள் அதிகமாக இருந்தால் அதை செய்ய ஆலோசனை கொடுங்கள்.









17. அவரது குடுபம்பத்தை விட உங்கள் குடும்பத்தில் அதிக தேவை இருப்பின் அதை ஆலோசனை செய்யுங்கள்.









18. உங்கள் இரண்டு குடும்பத்தினரையும் விட உங்களின் வீட்டுக்குள் அதிக தேவை இருப்பின் அதை முக்கியப்படுத்தி அவரிடம் அன்பாக சொல்லி நிவர்த்தி செய்யுங்கள்.





















19. எப்போதும் கணவரோடு அழகாக செல்லமாக கனிவாக பேசப்பழகுங்கள். சத்தமாக பேசாதீர்கள்









20. அவருடன் வேண்டாம் வெறுப்பாக வார்த்தையை பேசாதீர்கள். மேலும் அவர் சொல்லும் வார்த்தைகளை கவனியுங்கள். உதாசீனப்படுத்தி பேசாதீர்கள். வேறு ஏதும் திட்டம் உங்களிடம் இருந்தால் அதை சரியாக எடுத்து சொல்லுங்கள்





















21. வேறு ஆண்களுக்கு முன்னிலையில் தேவையற்ற எந்த விடயத்திலும் பேசாதீர்கள். தேவை ஏற்பட்டாலும் அமைதியாக அடக்கமாக பேசுங்கள்









22. அவரது ஆடைகளை உடமைகளை சரியாக தயார் படுத்தி வையுங்கள்





















23. நீங்கள் எப்போதும் குளித்து சுத்தமான ஆடைகளை அணிந்து இருங்கள்.





















24. உங்கள் ஆசைகள் தேவைகள் இருந்தால் அதனை கணவரிடம் அன்பாக அழகான வார்த்தைகளில் தெளிவாக குறிப்பிடுங்கள். நிச்சயமாக ஒரு ஆண் பெண்னின் அதகாரத்திற்கு அடங்குபவனாக இருக்கமாட்டான். இதற்கு இஸ்லாமும் அனுமதி கொடுக்க வில்லை.

































25. முதலாவதாக கணவரை எது கோபப்படுத்துமோ அச்செயலை பேச்சைத் தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.





















26. உங்கள் கணவரிடம் கோபம் ஏற்படுமாறு நீங்கள் நடந்து கொண்டால.; நீங்கள் அந்த தவறை ஏற்று கொள்கின்ற மனப்பக்கவத்தை ஏற்படுத்துங்கள். மேலும் மன்னிப்பு கேட்பதில் தயக்கம் காட்டாதீர்கள்.





















27. அவர் கோபமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் எதையும் கதைத்து தொல்லை படுத்தாதீர்கள். அவர் அமைதியான பிறகு உங்கள் செயலின் உண்மையான நோக்கத்தை தெளிவு படுத்தி சொல்லுங்கள். அதை அவர் தவறு என சொல்லின் அந்த செயலை விட்டு விட்டு மாற்றுரீடாக எவ்வாறு செய்வது என்று அவரிடம் ஆலோசனை கேளுங்கள்.





















28. அவருக்கு ஏற்படுகின்ற பிரச்சனைக்கு தோல்விக்கு ஆறுதல் சொல்லுங்கள். ஆலோசனையும் தன்னம்பிக்கையும் கொடுங்கள்.









29. பொறுமையும்பாதுகாப்பளித்தலும்கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.









30. வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு உங்கள் கணவருக்கு குழந்தைகளுக்கு உறவினர்களுக்கு சொத்துக்களுக்கு...) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம் (உதாரணமாக : நோய் விபத்துகள் இறப்புகள்.)





















31. உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொள்ளும் வேளையிலும் அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும்போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).





















32. உங்கள் கணவர் உங்களை வீண்பழி சுமத்தினால் அதனை அல்லாஹ்விடம் விட்டு விட்டு அவருக்கு சந்தேகம் எற்படாதவாறு உங்கள் நடத்தைகளை பேணி பாதுகாத்து பக்குவமாய் இருங்கள்.





















33. உங்கள் கணவரிடம் எதையும் மறைக்காதீர்கள்.





















34. அவரை சந்தேகப்பட்டு துருவித்துருவி கேள்வி கேட்காதீர்கள்





















35. அல்லாஹ் அருளியவற்றைக் கொண்டு திருப்தி கொள்வது.உங்களுடைய கணவன் ஏழையாகவோ சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள்போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு உங்கள்மீது வெறுப்பை உருவாக்கும்).

































36. ஏழைகள் உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.





















37. தன்னம்பிக்கையும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.









38. உலக விஷயத்திலேயே மூழ்கிவிடவேண்டாம். இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களைக் கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும் என்பதே.









39. இஸ்லாம் அனுமதித்தவாறு கணவன் அழைக்கும் அனைத்து இடங்களுக்கும் செல்லுங்கள்.நீங்கள் செல்ல விருப்பமில்லாத இடத்தை தெளிவான காரணத்தை சொல்லுங்கள்









40. உங்கள் கணவரின் செலவைக் குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும் ஏழைகளுக்கும் தேவைப்படும் மக்களுக்கும் கொடுக்க ஆர்வம் ஊட்டுங்கள்









41. அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை தொந்தரவு செய்யாதீர்கள் (உங்கள் பெற்றோர் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).









42. பொருட்செல்வமும் பிள்ளைச் செலவமும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும் எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46).





















43. இனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே









44. திருமணத்தில் இணையும் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்கையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபி (ஸல்) அவர்கள் உணர்த்தினார்கள்





















45. "கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து அவள் காரணமின்றி மறுத்து அதனால் கணவன் அவள்மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால். விடியும்வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள்" என நபி (ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள்

































46. நபி (ஸல்) அவர்கள் தெளிவாக்கினார்கள்: "கணவன் ஊரிலிருக்கும்போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது"





















47. (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது: "அனைவரையும் விடச் சிறந்த பெண் (மனைவி) யார்?" அண்ணலார் (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: "எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ தன் விஷயத்திலும் தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே அனைவரையும் விடச்சிறந்தவள்"









48. அவர் ஏதும் தவறு செய்தால் சரியான நேரத்தில் அமைதியாக எடுத்துச் சொல்லுங்கள். மேலும் அதனை மன்னியுங்கள். அதை மீண்டும் மீண்டும் குறை கூறி குத்தி பேசாதீர்கள்.





















49. ஏனைய பெண்களின் கணவரோடு உங்கள் கணவனை ஒப்பிட்டு பேசாதீர்கள்









50. கணவனின் வருமானத்தை கொண்டு திருப்தி பட்டு அதனுல் வாழ்க்கை செலவை சமாளிக்க பாருங்கள். அவருடைய வருமனத்திற்கு ஏற்றது போல் அவர் தரும் கவனிப்புகளை மனம் பொறுந்தி திருப்தி படுங்கள்.









51. ஏழைகள் உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள் ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்குக் கீழாக உள்ளவர்களைப் பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.





















52. அவர் தரும் சிறு அற்ப அன்பளிப்பானாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள். மேலும் அதற்காக நன்றி சொல்லுங்கள்.









53. உங்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு கணவரின் வருமானத்தை விட அதிக தேவையிருப்பின் அதனை அவரிடம் தெளிவாக சொல்லி அதனை நிவர்த்தி செய்ய என்ன செய்யலாம் என்று அவரோடு ஆலோசனை செய்யுங்கள்.









54. புpள்ளை வளர்ப்பில் மிக கவனாமாக இருங்கள். கனவரிடமே எல்லா சுமைகளையும் சொல்லி அவரை சேர்வடையச் செய்யாதீர்கள். குடும்ப வாழ்க்கையில் வெறுத்திடுவார்.









55. கணவனுடைய பணத்தை அவருடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால் உங்கள் கணவர் உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்).





















56. குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகள் இஸ்லாமிய அறிவு நபிமார்களின் சரித்திரங்கள் தியாகங்கள் ஆகியவற்றையும் போதியுங்கள்.

































57. பாதுகாப்பது (கணவர் வீட்டில் இல்லாத போது)









58. "இன்னும் முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அலங்காரத்தை அதினின்று (இயல்பாக வெளியில்) தெரியக் கூடிய(கைகள்இ முகத்)தைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும்" (அல்குர்ஆன்: 24:31).





















59. மேலும் அல்லாஹ் கூறுகிறான்: "நல்லொழுக்கமுள்ள மனைவியர் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும் பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம் உடைமை மானம் மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்)" (அல்குர்ஆன்: 4:34).





















60. புpள்ளைகளின் தேவைகளை உரிய நேரத்தில் தெளிவாக சொல்லுங்கள்.









61. உங்கள் கணவர் நீங்கள் விரும்பாத இஸ்லாம்; விரும்பாத செயலை செய்தால் அவரை அழைத்து இதன் வபரீதம் என்ன நன்மை என்ன என்று தெளிவு படுத்துங்கள்.









62. உங்கள் கணவர் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தால் உங்களுக்கு அவரோடு மனக்கசப்பு ஏற்பட்டால் தெளிவாக சொல்லுங்கள். இதற்கு பின்னரும் அவர் திருந்தாத போது நீங்கள் என்ன மாற்றீடு செய்வது என்று தெளிவாக சிந்தியுங்கள்.





















63. கட்டுப்படுதல்"ஒரு பெண் தனது தொழுகையை(செம்மையாக)த் தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால் 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழையலாம்" என அவளிடம் (மறுமையில்) கூறப்படும்" என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்





















64. "ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென அனுமதி இருந்தால் மனைவியைக் கணவனுக்குத் தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன்" என ரசூல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்









65. கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் - அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது









66. ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.









67. அழகிய வீட்டுப் பராமரிப்பு









68. வீட்டை சுத்தமாகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்









69. பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள். உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).









70. தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.









71. அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.









72. குழந்தைகளை எப்படி இஸ்லாமிய வழியில் வளர்ப்பது பராமரிப்பது என்பதைக் கற்றுக்கொண்டு செயல்வடிவத்தில் வெளிப்படுத்துங்கள்.









73. ஏந்த நேரம் பார்த்தாலும் தூக்கத்தில் நேரத்தை கழிக்காதீர்கள்









74. கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்).









75. கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.





















76. "ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள்" என நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்





















இதை வாழ்வில் ஒரு நடைமுறைப்படுத்தினால் பிரச்சனை நிச்சயமாக வருவதற்கு இடமில்லை. இவ்வாறான வாழ்க்கையில்தான் சந்தோஷமும் இருக்கும். இவ்வாறான பெற்றோர்களின் வாழ்க்கையில்தான் பிள்ளைகளின் நாளைய எதிர் காலம் சிறப்பாக அமையும். மாறாக எதற்கு எடுத்தாலும் சண்டையும் பிரச்சனையும் என்றால் அதே வாழ்க்கைதான் உங்களது பிள்ளைகளின் மனதில் குடி கொண்டிருக்கும். அவர்களுடைய கல்வி எதிர்காலம் இலக்கு என்பதில் கவனம் செலுத்த பிள்ளைகளால் முடியாது போய் விடும்.









எனவே இந்த வாழ்க்கையினூடாக வாழ்ந்து இறைவனதும் கணவனதும் திருப்தியை பெற்று நாளையும் சுவனத்தில் திருப்தி படுவோமாக







கருத்துகள் இல்லை: