கசப்பான உண்மை. இழந்தோம் ஒற்றுமையை .தவிக்கிறோம் தலைமைத்துவத்திற்காக.
உலகை சிந்தனையினால் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். வேதத்தை அல்குர்ஆனினால் முற்றுகையிட்டான். நுப்வத்தை முஹம்மத் நபி முடிவோடு முதன்மைப்படுத்தி முழுமைப் படுத்தினான். இமாமத்தை அலியினால் ஆரம்பித்து அழியும் வரை பாதுகாப்பதே அவனது தெய்வீக கணக்கு
சிந்திப்பவருக்கே அவன் நேர்வழி காட்டுவான். நிந்திப்பவருக்கல்ல. உண்மையாளரோடு இருப்பவரையே நேசிப்பான். பொய்யர்களுடன் அல்ல.
பிறந்தவர்கள் மரணிப்பது இறை நியதி.உலகில் வாழ்ந்த பெறியார்களும் அறிவு மேதைகளும் கண்டு பிடிப்பாளர்களும் இதற்கு அடிமைப்பட்டே ஆக வேண்டும். இந்தப்பார்வையினூடாக நபிகளார் அவர்களும் விடுபட்டவர்கள் அல்ல. இவ்வாறு வாழ்ந்து உலகை விட்டு பிரியும் அறிவு மேதைகளும் ஞானிகளும் தனது இறுதி செய்தியை தான் வாழ்ந்த சமூகத்திற்கு விட்டுச் செல்வதே அறிவியல். இந்த உபதேசத்தினூடாக தனது பாதை எதனை அடிப்படையாக கொண்டதோ அதை நிரூபித்து அல்லது நான் செய்தது தவறு என மனம் வறுந்தி செல்வதையே நாம் வரலாற்று நெடுகிலும் காண்கிறோம்.
இந்த அறிவியல் சுருக்கங்கள் அந்த சமூகங்களுக்கிடையில் தெய்வீக வாக்குகளைப் போல் நடைமுறைப்படுத்த படுகின்றது. ஆனால் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வில் இந்த உரை பெறிதாக இடம்பெற்றிருக்கின்ற போதும் தெய்வீகமாக பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமூதாயத்தில் இதன் உண்மைக்கு எங்கயோ எதிர்ப்புகள் எழும்பி இருப்பது கசப்பான உண்மை.
இன்று இந்த இறுதி சுருக்க உரை ஒன்பது குடும்ப வாழ்கை முதல் நிறுவணங்கள் வரை நடைமுறை செய்வதை அறிய முடியும். ஒரு சாதரண பிரயாணத்திற்கு தயாராகும் போது கூட தனது பொறுப்பில் உள்ளவைகளை செயற்படுத்த இன்னுமொரு பதவி நிகழ்வு இடம் பெருகின்றன.
இங்கு எழுப்பப் படுகின்ற வினா இதுதான். நபி பெருமானார் அவர்களின் ஒரே ஒரு சொத்தாக மறுமையில் பெருமைப் படுவது தனது உம்மத்தாகும். இந்த உம்மத்தின் எதிர்காலத்தை நோக்கிய வேதனைகளால்தான் கிராக் குகையில் இறையஞ்சி இந்த உம்மாவுக்கான விடிவாக நபித்துவத்தை பெற்றார்கள். இந்த உம்மத் உலகிலும் மறு உலகிலும் சிறந்து விளங்கனும் என்பதற்காகவே தனது வயிறை கட்டி பட்டினிருந்து பாலைவனச் சூட்டில் நடை நடையாக அழைந்து இறை தௌஹீதை சொன்னார்கள். இந்த உம்மத்திற்காகவே பல வறங்களை பெற்றிருந்தும் ஒரு சாதரண எளிமையான வாழ்க்கை வாழ்ந்து உதாரண புரிசராக இறைவனிடம் சென்னறார்கள். இவ்வாறான உம்மத்தின் மேல் அக்கறையும் கவனமும் கொண்ட நபிகளார் தனது உம்மத்தின் எதிர் காலத்திற்காக எதை விட்டு சென்றார்கள். யாரை தனது உம்மத்திற்காக தலைவனாக நியமித்து சென்றார்கள்.
• ஒரு சாதரண மனிதன் செய்கின்ற அறிவில் விடயத்தை நபிகளார் செய்யாமல் இந்த உம்மத்தை நடுத்தெருவில் விட்டு விட்டு சென்றார்களா?
• எனது கடமை முடிந்து விட்டது நான் குர்ஆனை கொண்டு வந்தேன் அதன் ஏவல்களை கட்டளை நடை முறை செய்து காட்டிருக்கிறேன் உங்களுக்கு தேவை என்றால் தேடி பின் பற்றுங்கள் என்று சொல்லாமல் சொல்லி விட்டு போய் விட்டார்களா?
• இல்லை நான் மரணித்து விட்டால் நீங்கள் உங்களுக்குள் தலைவரை நியமத்து ஒருவர் கழுத்தை ஒருவர் வெட்டிக் கொள்ளுங்கள் என்று விட்டு விட்டு போய் விட்டார்களா?
இவ்வாறான பல வினாக்களுக்கும் விடையாகவே நபிகளாரின் இறுதி ஹஜ் இஸ்லாமிய வரலாற்றி நிகழ்ந்தது. ஆனால் அதன் உண்மைகள் பின் பற்ற நுளைகையில் சமூகத்திற்குள் பிரிவு ஏற்பகின்றது. இதன் முக்கியங்கள் ஏன் முதன்மை படுத்த படுவதில்லை சிலரால் என்பதை சிந்திக்க அவசியம் இருக்கிறது.
இஸ்லாமி வரலாற்று நிகழ்வில் கூடுதலான எதிர்பார்ப்புகளும் எதிர்ப்புகள் தோன்றியது இங்கேதானா என்று எண்ணத்தோன்றுகின்ற நிகழ்வே ஹஜ்ஜதுல் வாதா என்றும் இன்னும் பல பெயர்கள் கொண்டும் அழைக்கப்படுகின்ற இந்த நபிகளாரின் இறுதியுரையினை இஸ்லாமிய சமூதாயம் ஒற்றுமையாக நடைமுறை படுத்திருந்தால் முஸ்லிம்களின் சக்தி பெரும் வல்லரசாக உருவாகி இருக்கும். எனவே நபிகளாரின் இறுதி உரை மறு பரீசீலனை செய்து பின்பற்ற பட வேண்டிய இக்கட்டான நிலை இஸ்லாமிய சமூதாயத்திற்கு கடமையாக இருப்பதினை யாரும் மறுக்க முடியாது. நபிகளாரின் இறுதி உரை முக்கியப்படுத்தபடும் விடயமாக இரண்டை குறிப்பிடலாம்.
I. ஒற்றுமை II. தலைமைத்துவம்.
நபிகளாரின் இறுதியுரையின் முக்கிய சாரம்சமாக இதனையே மற்ற ஏனைய விடயங்கள் குறிப்பிடுவதை நாம் காணமுடியும். நாம் இங்கு அந்த தலைமைத்துவத்தை நியமிக்கும் நிகழ்வையே குறிப்பிடுகின்றோம். இந்த முக்கிய பகுதியை விட்டு நாம் எதனை எடுத்துக் கொண்டாலும் நாம் இறைவனுக்கு நபிகளாருக்கு மாறு செய்தவர்களாகவே கருதப்படுவோம்.
இங்கு முக்கியமாக சிலதை குறிப்பிட வேண்டும். நபிகளார் நீங்கள் இவரையே தங்களது தலைவர்களாக எடுத்து கொள்ளுங்கள் என்ற கட்டளையை ஏற்பவராகவே இருக்கனும். அவர் தகுதி இல்லை இவர் தகுதி இல்லை என்று கூறுவதை விட்டு விட்டு நபிகளார் தகுதி கண்டவர்களை பின்பற்றுவதே கடமை. அவ்வாறு தகுதி பார்க்கபட்டாலும் அது நபிகளார் யாரை நியமித்தாரோ அவருக்கே அதிக தகுதி இருப்பதை வரலாற்றில் காண்கிறோம். சுருக்கமாக சொல்வதாயின் நாமாக யாரையும் தகுதி குறைக்க வில்லை தகுதியானவரை நியமித்தும் தட்டி கழிக்கப்பட்டது ஏன் என்ற வினாவே பல ஆய்வுகளை தேடவைக்கின்றது. அந்த நேரத்தில்தான் சில கசப்பான உண்மைகள் வெளியாவதை தவிர்க்க முடியாது.
இதற்காக எம்மை வீண் பழி செலுத்துவதை விட்டு .நியாயம் அநியாயம் எங்கு இருக்கிறதோ அதற்கு ஏற்றவாறு எம்மை பக்குவப்படுத்தி கொள்வதே சரியான விட்டுக் கொடுப்பான அறிவாக இருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக