إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا
(36: 9).الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவைஇ இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்இ இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).
இந்த உரை நீங்கள் வாசிக்கும்போது நடுநிலையாக இறைவனை நேசித்தவாறும், நபிகளாரை நேசித்தவாறும் இருப்பதை விரும்புங்கள். சிந்தனையை அல்லாஹ் கொடுத்திருப்பது மனிதனின் முதல் அருள். குர்ஆனாக இருந்தாலும் தெளிவான சுன்னாவாக இருந்தாலும் அதை எப்படி யாரிடம் இருந்து பெற்று கொள்ளனும் என்பதோடு அது சிந்தனை உடையவர்களுக்கு மட்டுமே நேர்வழி காட்டும்
எனவே சிந்தியுங்கள் உங்களால் முடியும் நிச்சயமாக முடியும் அவரால் முடியும் என்றால் எம்மால் ஏன் முடியாது. நிச்சயமாக அமைதியான சிந்தனையே ஆறுதல் ஆண்மீகத்திற்கு வழிகாட்டும்.
இஸ்லாத்தின் கோட்பாடுகளையும்,விதிமுறைகளும் மனிதன் பின்பற்றி வாழும்போதே ஒரு பூரணமான மூஃமீனாக வாழ முடியும். இந்த கோட்பாடுகளை அடிப்படை விதிமுறைகளை எந்த சந்தர்ப்பத்திலும் யாரும் மீற முடியாது.
இஸ்லாத்தின் கோட்பாடுகளின் பிண்ணணியில் நான்கு மாதங்களை சிறப்பித்து அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த மாதங்களில் முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை மறுப்பதற்கில்லை. இஸ்லாமிய புதுவருடத்தின் வருகைக்கு முன் சென்றவர்களே அதனை உதாசீனப்படுத்தி அட்டூலியம் செய்து விட்டார்கள். அத்தனை சிறப்புகள் இருந்தும் இந்த மாதத்தில் நடந்த ஒரு கொடூரச் செயல் அதன் தனித்துவத்தை அலட்சியப்படுத்தியதை நாம் விளங்க முடியும். மேற் குறிப்பிடுகின்ற வசனம் இந்த மாதங்களின் தனிச் சிறப்பாக கொடூரங்களை அநியாயங்களை மீறிட வேண்டாம் என்பதை சுட்டிக் காட்டுகிறது. இந்த முஹர்ரம் மாத்தத்திற்கு இஸ்லாத்தில் நீண்ட புராதனங்களும் தடையங்களும் இருப்பதை யாரும் ஒரு போதும் மறுப்பதில்லை.
எனவே தெளிவாக குறிப்பிடுகிறோம் முஹர்ரம் மாதம் சிறப்புக்குறிய மகிழ்ச்சிக்குறிய மாதம். இந்த சிறப்பும்,மகிழ்ச்சியும் இமாம் ஹ{ஸைனுடைய விடயத்தில் எங்கே போனது? நபிகளாருடைய குடும்பத்தினருக்கு கண்ணியப்படுத்துவதில் ஏன் முஹர்ரம் மாதம் கௌரவிக்கப்பட வில்லை. நபிகளாருடை குடும்பத்திற்கு கொடுப்படாத மகிழ்ச்சியை விட அவர்களை தாகிக்க விட்டு தலை துண்டாடுவதில்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி இருந்ததா? கர்பலா களத்தில் குழந்தை பெண்கள் என்று இரக்கம் கருணை காட்டாமல் கொடுமை செய்வதில்தான் அந்த உமையாக்கள் அன்று முஹர்ரம் மாதத்தின் புதுவருட நிகழ்வை கொண்டாடினார்களா? இமாம் ஹ{ஸைன் அரசியலுக்காகவோ ஆண்மீகத்திற்காகவோ கொலை செய்யப்ட்டார்கள் என்றது போக அநீயாயமாக கொலை செய்யப்பட்டார்கள் என்பதை மறுக்கின்றீர்களா? அவ்வாறென்னறால் எதுதான் நீதி என்று சொல்லுகிறீர்கள்.?
அதற்காக நாம் அந்த துக்கத்தையே வாழ்நாள் முழுவதும் சுமந்திருக்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. அந்த தியாக குர்பான் எதற்காக நடந்ததோ நினைவு படுத்தி அதன் புரட்சியை எமது உம்மாக்காக கொடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு இமாம் ஹ{ஸைனை சுவனத்து தலைவராக ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. இமாம் ஹ{ஸைன் அனுபவித்த கொடுமைகளுக்காக நாம் எம்மை அடித்து கொள்வதில் தீர்வு நிச்சயம் இல்லை. அவர் இறைவனுக்காக, தனது பாட்டனாருக்காக, இஸ்லாத்தின் எழுற்சிக்காக அந்த கர்பலா களத்தில் எத்தனை துயரங்களை அனுபவித்தார்கள் என்பதை நாம் எமது சிந்தனைகளை கர்பலா களத்திற்கு கொண்டு சென்றால் மாத்திரமே உணர முடியும்.
நபி இப்றாஹீம் அன்னை ஹாஜரா நாயாகி கண்ட துன்பங்களை நினைவு படுத்தவே அல்லாஹ் ஹஜ்ஜை கடமையாக்கினான். அதே கடமை போல் இது இல்லா விட்டாலும். இஸ்லாத்தை காப்பாற்றி எமது கைகளில் தந்த இமாம் ஹ{ஸைனின் துயர நிலையில் எவ்வாறு பங்கெடுத்து இருக்கிறோம்.? மூன்று நாட்களாக தாகித்து தாகித்து குழந்தைகள் குடும்பத்தினர் என்று இறைபாதையில் கொடுத்து தானும் 73 வெட்டுகளாலும்,52 ஈட்டி முனைகளாலும் தனது உடலால் தாங்கி இஸ்லாத்தை காப்பாற்றி அந்த தியாகத்தை நாம் எவ்வாறு நினைத்து பார்க்க முடியும்.? ஏழைகளின் பசியையும் இறையச்சமுடையவராகவும் இருப்பதற்காகவே அல்லாஹ் நோன்பை கடமையாக்கினான். இதே கடமை பொறுப்பு இமாம் ஹ{ஸைனின் ஷஹாதத்துக்கு இல்லா விட்டாலும.; பிரிந்து உரிமைகளை வெல்ல முடியாதும், சர்வதிகாரிகளால் ஒடுக்கப்ட்டும் இருக்கும் எம் சமூதாயத்திற்கு மறுமலர்ச்சி கொடுக்க வேண்டிய பொறுப்பு கர்பலா புரட்சியில் பாடம் கற்பிக்கிறது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரத்தம் ஓட்டி மார்படித்து கொள்வதை நாமும் எதிர்கிறோம்.அவர்களுடைய அறியாமைக்கு அல்லாஹ்வை தவிர வேறு யாரும் தெளிவு படுத்தி நேர்வழி காட்ட முடியாது. இவர்களின் தவறுக்காக நாம் இமாம் புரட்சித் தியாயகத்தை மறுத்திடவோ மறந்திடவோ முடியாது. துரதிஷ்வசமாக அவர்களையும் ஷீஆக்களே என்று குறிப்பிடப்படுவது அர்த்தமற்றது.
நபி பொருமானாரின் குதைபியா உடன்படிக்கை எப்படி எதிர்காலத்தில் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் வெற்றியாக அமைந்ததோ அவ்வாரே இமாம் ஹ{ஸைன் அவர்களின் கொடூரக் கொலைகள் ஷ{ஹதாவாக பிரதிபழித்தது முஸ்லிம் உம்மாவுக்கு. அந்த குதைபியா உடன் படிக்கையை செய்தபோது நபிகளாரை எத்தனை பேர் மறுப்பளித்தார்கள். முஸ்லிம்களுக்கு பாதமாக உள்ள போது நபிகளார் அதில் கைசாத்திட்டார்கள் என்பதாக. அதே நிலை இமாம் ஹ{ஸைனுடைய எழுற்சி நேரத்தில் குறிக்கிட்டது. ஆனால் தூர நோக்கும் ஞானங்கள் கூடிய ரிஸாலத் விட்டில் இஸ்லாத்தினதும் உம்மாவினதும் எதிர்காலத்தையே இமாமவர்களும் எதிர் பார்த்தார்கள்.
அநீயாயம் அட்டூலியம், வாக்கு மீறுதல் கொடூரம், கொடுமை, பெண்களை துன்புறுத்துதல், சிறுவர்களுக்கு கருணை காட்டாமை இவையெல்லாம் இஸ்லாத்தின் நல்லொழுக்கங்களா? நபி பொருமானார் அவர்கள் ஒரு யுத்தம் ஒன்று செல்லும் போது பெண்களை குழந்தைகளை கொடுமைப்படுத்துங்கள் என்றார்களா? இவையெல்லாம் இந்த கர்பலா யுத்தத்தில் நடந்திருந்து எவ்வாறு சிலரின் உள்ளங்கள் அரசியல் காரணி அரசியல் யுத்தமென்று சொல்ல முடிகிறது.? நன்மையை ஏவி தீமையை அழிக்கவே நாட்டவே செல்கின்றேன் என்ற இமாமவர்களின் வாக்குதலுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லுகிறீர்கள்.?
ஆரம்பத்திலிருந்தே இமாம் யசீதின் நிட்பந்தமாய் வந்த ஆட்சியை ஆதரிக்க வில்லை. ஆனாலும் தனது குடும்பத்தின் இமாமத் பணியை திறன்பட செய்தே வந்தார்கள். மக்கள் யசீதின் ஆட்சியில் விரக்தியடைந்து இஸ்லாத்தின் மீது பற்று கொண்டு இதனை தட்டிக் கேட்கும் கடமை உங்களுக்கே இருக்கிறது என்ற இலட்சக் கணக்கான மக்களின் வேண்டுதலுக்கு பின்னரே தனது போராட்டத்தை(யசீதை) வெளிப்படையாக எதிர்ப்பதற்கு களமிறங்கினார்கள். ஆனால் அந்த மக்களே யசீதின் அடக்கு முறைக்கு நிட்பந்திக்கப்ட்டு தங்களது துரோகச் செயலை காட்டினார்கள். இதனை அரசியல் யுத்தம் என்று சொல்ல முடியுமா?
நபிகளாரின் குடும்பத்தில் யார் ஆட்சிக் கதிரையில் அமர்ந்து அதை தனது சுய நலச் சொத்தாக பயன்படுத்தி ஆட்சி செய்ததை யாரால் காட்ட முடியுமா? அவர்கள் ஏதாவது தவறு செய்தாக யாராலும் நிரூபிக்க முடியுமா? ஆனால் நபிகளாரின் குடுபத்தினரை எதிர்த்து நின்றவர்கள் கூடுதலான தவறுகளாலும் அறியாமையினாலும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கு அவப் பெயர் ஏற்படுத்தியதை வரலாற்றில் இருப்பதை நிரூபிக்க முடியும்.
நபிகளார் அவர்கள் எதற்காக யுத்தம் செய்தார்கள்? ஆட்சிக் கதிரையில் அமர்ந்து ஆட்சி செலுத்துவதற்காகவா? இல்லை இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் கெடுதியாக துரோகம் செய்தவர்களோடுதான். அதைத்தான் இமாம் ஹ{ஸைனும் செய்தார்கள் அதை எப்படி வாய் கூசாமல் அரசியல் யுத்தம் என்றும், யசீதின் படைகள் செய்தது என்று நியாயப் படுத்த நினைப்பது.? அறிவுள்ள சிந்திக்கத் தெரிந்த எந்த மனிதனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். இமாம் ஹ{ஸைனின் புரட்சியின் எழுற்சியை முடி மறைத்து அதன் பிண்ணனி வீழ்ச்சி என்று நீங்கள் சொல்ல நினைப்பது மகா தவறு.
இன்று உலகிலே கூடுதலான உயிரழிவுகள் அரசின் பெயரை வைத்துதான் நடக்கிறது. உரிமைகளை சரியாக கொடுக்கப்படாத போது எழுகின்ற கோஷங்களுக்கு பதில் கொடுக்கப்படுகிறது யுத்தத்தினால். தங்கள் அரசுக்கெதிராக எவர் கேள்வி எழுப்பினாலும் அவர்களுக்கு இறுதி முடிவு சதிதிட்டமிடப்பட்ட கொலையாகவே இருக்கிறது. இப்படி அரசு பெயரை வைத்து உரிமைகளை கேட்பவர்களை அழிப்பது நியாயம் என்று சொல்கிறீர்களா? இந்த உரிமையத்தான் இமாம் ஹ{ஸைனும் கேட்டார்கள்.
இன்று உலகில் சர்வதிகாரிகள் அரசு பெயரை வைத்தே ஆப்கான்,ஈராக் போன்ற நாடுகளில் நுளைந்தார்கள். நாளுக்கு நாள் தங்களால் முடியுமான அழிவுகளையெல்லாம் ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு அரசுக்கு எதிராக நடந்து விட்டால் அவைகளையெல்லாம் நியாயம் என்று சொல்ல முடியுமா?
யசீத் ஹராத்தை ஹலாக்கி ஹலாலை ஹராமக்கி மது சூது என்ற பெரும் பாவங்களை தனது மாலிகையில் வெளிப்படையாகவே செய்து வந்தான். இஸ்லாத்தில் வெறுக்கபட்ட நாயோடும்,மிருகங்களோடும் விளையாடி மகிழும் கொடுங்கோலனாக இருந்தான். இதையெல்லாம் அல்லாஹ்வையும் தனது தூதரை உயிராக நேசிக்கும் மனிதர்கள் நிச்சயம் பொருந்திக் கொள்ள மாட்டார்கள். அதைத்தான் இமாம் யசீதுக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொன்னார்கள். இஸ்லாத்தின் கடைமைகளை பேணுமாறு பணித்தார்கள் இவையெல்லாம் அலட்சியம் செய்யப்பட்டது. சழுதாயத்தின் நலன் ஒதுக்கப்பட்டன இஸ்லாத்தின் கண்ணியம் சிறுது சிறுதாக மாற்றபட்டு அவை அழிந்து போய் விடும் என்ற அச்ச உண்hவு உருவாகியது. இந் நேரத்தில்தான் இமாம் தனது தெய்வீகப் புரட்சியை அரம்பித்தார்கள். இமாம் ஹ{ஸைன் தனது சிறு பலத்தை வைத்து அந்த அநாச்சார அரசியல் பலத்தை உடைத்து விடலாம் என்று நினைக்க வில்லை. அவருடைய போராட்டம் உம்மாவை இஸ்லாத்தை நோக்கிய தூர நோக்கு போராட்டமாக இருந்ததை வரலாற்றில் காண முடிந்தது.
இந்த பேராட்டத்தை யார் அரசியல் போராட்டம் என சித்தரிக்கின்றீர்களோ நிச்சயமக அல்லாஹ்வின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள். இவைகளையெல்லாம் அரசியல் போராட்டம் என்கின்ற இந்த அரபு நாடுகளே இன்று இஸ்லாமிய உம்மாவின் உரிமை எந்நதளவு பெற்றுக் கொடுக்கிறார்கள் என்பதை தெளிவாக விளங்க முடியும். பலஸ்தீன பூமி பல வருடமாக அந்தியனின் கையில் சிக்கி உயிர்கள் நாளுக்கு நாள் எந்த பெருமதியுமில்லாமல் புதை குழிகளுக்குள் செல்கின்றது. இதையெல்லாம் இந்த அரபிய அமீரங்கள் பார்த்து பார்க்காதவாறு இன்னும் இன்னும் அந்நிய கலாசாரத்திலும் ஆடம்பரத்திலும் வாழ்கிறார்கள். இதை நீங்கள் சரியென்று சொல்கிறீர்களா? ஜனநாயகமில்லாத மன்னர் கதிரையில் அமர்ந்து இஸ்லாமிய சமூதாயத்திற்கு எதனை இவர்கள் தந்திருக்கிறார்கள்? இதற்கு பின்னரும் எதனை தரப்போகிறார்கள்? தங்களுக்கும் தங்களுடைய குடும்பத்திற்கும் எவை எப்படி சொகுசாக வாழ வேண்டுமோ அவை அனைத்தும் அவர்களிடம் வைத்திருக்கிறார்கள். எத்தனை நாடுகளில் பட்டினியால் உயிரிழக்கும் மக்கள் வாழ்கிறார்கள். இஸ்லாத்தின் அழகான கலாசாரங்களை விட்டு விட்டு அந்நிய காலசாரத்தில் வாழும் இவர்களை சிரி என்று சொல்கிறீர்களா? இதை விட மோசமான நிலை உருவான போதே இமாம் ஹ{ஸைன் தனது உயிரை தியாகம் செய்தார்கள். இதை அரசியல் யுத்தம் என்று சொல்ல முடியுமா?.
இதை அரசியல் யுத்தமென்று மக்களுக்கு காட்டி அதை சந்தர்ப்பமாக பயன்படுத்தியே சில இஸ்லாமிய ஆட்சியாளர்களும் அரபு நாடுகளும் நாற்களை நகர்த்துகின்றன. இதனால் இஸ்லாமிய உம்மாவின் உரிமைகளை ஒரு காலத்திலும் வென்று எடுக்க முடியாது. இதை நாம் இன்று எமது நாடு உட்பட உலகலாவிய முஸ்லிம்கள் வரை தெளிவாக காணமுடியும்.
சிலர் இந்த குற்றச் சாட்டை சொல்வார்கள் யசீதுக்கு பைத் செய்து விட்டு எவ்வாறு ஒரு இஸ்லாமிய ஆட்சியை அவமதிக்க முடியும். என்றும் மேலும் பல தோழர்களும் யசீதை எதிர்ப்பதில் பின் முதுகு காட்டினார்கள் என்றும் உண்மைதான். இஸ்லாமிய ஆட்சி நடந்திருந்தால் இமாமவர்களுக்கு இந்த புரட்சிக்கு தேவை இருந்திருக்காது. ஆண்மீக வழிகாட்டலை வழங்கி அந்த அறிவுப் பணியை மேலும் வளர்த்திருப்பார்கள். எளிமையாக வாழ்வதையே நேசித்தவர்கள் நபிகளாரின் குடும்பம். தனது பாட்டனாரிடமும் தந்தையிடமும் அதை அவர்கள் பக்குவப்பட்டு வளர்ந்தார்கள். ஆட்சியையோ அதிகாரத்தை பணம் பலங்களையோ கொண்டிருக்க வேண்டும் என்ற ஆசை அவர்களிடம் அரவே இருக்க வில்லை என்பதை வரலாற்று உண்மைகளால் நிரூபிக்க முடியும்.
பதவி மோகம் பிடித்த யசீதுக்கு பின்னால்; முக்கிய படைத் தளபதிகள் யசீதின் அரச கவர்ணர் பதவிக்கும் அவனது கூலிகளுக்கும் விலை போகி இருந்தார்கள். இதனால் இமாம் ஹ{ஸைனுக்கு எதிராக வருவதில் பலர் யசீதிக்கு பின்ன்னால் நின்றார்கள். இமாம் ஹ_ஸைன் அவர்கள் தங்களது குடும்ப இமாமத்தை வழி நாடாத்தி சென்றார்கள். இஸ்லாமிய உம்மத்தின் ஒற்றுமைக்காக அரசின் பக்கம் தனது கவனத்தை கூடுதலாக செலுத்த வில்லை. எப்போது அந்த அரசு இஸ்லாத்திற்கெதிராக எல்லை மீறி சென்றுபோதே அதனை வினா எழுப்ப வேண்டிய கடமையான நிட்பந்த நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
அல்லாஹ்வுடைய அருள் எதுவாக இருந்தாலும் அவை சோதனைக்காவே அதனை யார் சரியாக பயன்படுத்த விட்டாலும் அவர்களை அல்லாஹ் தண்டிப்பான். நிச்சயமாக தலைவன் என்பவன் தாழ்வு பனப்பான்மை, விட்டு கொடுப்பு போன்ற நற்பண்புகள் உடையவனாகவே இருக்கனும். இவ்வாறு இருப்பரை தமைத்துவம் தேடி வரும். அதற்காக ஆசைப்படுவன், அதற்காக தனக்கு ஒரு கூட்டத்தை சேர்த்து கொள்பவன் ஒரு தலைவனுக்கு தகுதியற்றவன். இதை நபிகளார் வாழ்வில் உணர முடியும். நபிகளாரின் பணிவுத்தன்மை திறமை தகுதி என்பவைகளை மக்களே உணர்ந்து தங்களது தலைவர்களாக வைத்திருந்தார்கள். அல்லாஹ் நபிகளாரை தூதுப்பணியின் தலைவராக தூதராகவே அனுப்பினான். பொருமானார் தனது பணியை திறன்பட செய்த போது மக்களின் ஏனைய விடயங்களிலும் நபிகளாருக்கு அதிகாரத்தை வழங்கிருந்தார்கள். இந்த சந்தர்பத்தினால் பெருமனார்(ஸல்) அவர்களால் எவ்வித குறையுமின்ற இஸ்லாத்தின் ஆண்மீக அரசுப் பொறுப்புகள் வரை சிறப்பாக செய்ய முடிந்தது. இந்த ஆண்மீக அரசு வழிகாட்டலுக்கே தனது பிரதி நிதியாக இமாம் அலியை நியமித்தார்கள். அவை நபிகளாரின் மறைவின் பின்னர் கைநலுவி ஆண்மீக பணிமட்டும் கிடைத்திருந்தது. அதனால் இமாம் அலி அவர்கள் தனது முக்கிய பாதையில் சமூகத்தை வழி நடாத்துவதில் இருந்தார்கள். அரச பதவிக்காக போராடி வெற்றி தோல்வி நடப்பதை அவர்கள் விரும்ப வில்லை. சிலரின் விருப்பு வெறுப்புகளை அறிந்தவராக மௌனியாகி அதிலிருந்து ஒதிங்கிருந்தார்கள். இதுவே ஒரு இஸ்லாமிய தலைவன் பதவிக்கு ஆசையற்றவன் என்பதை இமாம் நிரூபித்து காட்டினார்கள். இதையே இமாம் ஹ{ஸைனும் பின்பற்றினார்கள். ஆனால் அந்த மௌனிப்பை இஸ்லாத்தின் கண்ணியம் இழக்கின்ற போதே உடைத்தெறிந்து யசீதை எதிர்த்து போராடினார்கள்.
உலகில் சில சந்தர்ப்பங்களில் இவைகள் நமக்குள்ளே நடக்கும் என்பதை கொஞ்சம் சிந்திப்போமா?
• நாம் ஒரு தலைவரை நியமித்து விட்டால் அவர் அதனை சரியாக செய்யாத நிலையில் வாய் மூடி மௌனியாக இருப்பதுதான் இஸ்லாம் காட்டிய வழியா?
• இல்லை அவரை விட்டு விட்டு அதற்கு சரியான பொருத்தமான ஒருவரை நியமிப்பது தவறா?
• தகுதியுள்ள தலைவர் ஒருவர் உள்ள நிலையில் தகுதியற்ற ஒருவரை நியமித்து சமூகத்தில் இழிவு நிலை உருவாக காரணமாக இருப்பவரை பற்றி அல்லாஹ் எவ்வாறு எச்சரித்திருக்கிறான்.
• ஏன் நாம் கண் முன்னால் தவறு நடக்கின்ற போது எம்மால் தாங்கிக் கொள்ள முடியாதும், இதனை தட்டிக் கேட்க ஒருவர் வர மாட்டரா என்று ஏங்குவது எமது மனித உணர்வில்லையா? பொறுமை காத்து நாமே நம்மையறியாது அதனை எதிர்க்கும் ஒரு வீரராக உருவாகுதை போராட்டம் என்று சொல்ல முடியாதா?
• ஒரு மூஃமீன் ஒரு தவறைக் கண்டால் அதனை கையினால் தடுப்பான் வாயினால் தடுப்பான் மனதினால் தடுப்பான் என்பதெல்லாம் நபி வழியாக தெரிவதில்லையா?
• புரட்சி என்று தலை தெரிக்க கத்துகிறோமே புரட்சி என்றால் அதன் உண்மை கருத்து என்ன? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அத்தூமீறும் அட்டூலியங்களை எதிர்த்து தங்களது, தன்வாழும் சமூதாயத்தின் உரிமைக்காக போராடுவதை தவிர வேறு ஏதும் கருத்து இருக்கிறதா? இது இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வுக்காகவும் அவனது தீனுக்காகவும் மிகப் பொரும் கடமையாக ஒவ்வொரு மனிதனின் தோலிலும் சுமத்தப்படும்.
மேற் குறிப்பிட்ட விடயங்களில் இமாம் ஹ{ஸைன் யசீதை நியமித்து எதிர்க்க வில்லை என்பதை தவிர மற்ற ஏனைய விடயங்களில் அவருக்கு தார்மீக பொறுப்பு இருந்தது. அதனால்தான் தனது போராட்டத்தை ஆரம்பித்தார்கள் இதை அரசியல் யுத்தம்என்று வேறு படுத்த நினைப்பது அறியாமை,பிடிவாதம் தவிர வேறு ஏதுமில்லை. எல்லாவற்றிருக்கும் மேலாக இஸ்லாத்தில் ஒரு தலைமைத் துவத்திற்கு அரசியல் ஆண்மீகம் என்பது இரண்டு கைகள் போன்றது அது இரண்டும் சரியாக உள்ள போதே ஒவ்வொரு செயலிலும் இஸ்லாத்தையும் அல்லாஹ் ரஸ{லின் பற்றுதியை சுமக்க முடியும். ஹஸனுல்ல பன்னா,அப+ அஃலா மௌதுதீ போன்றவர்களின் போராட்டம் என்கின்றோம். இவர்கள் ஒரு சாதரன நல்ல மனிதர்கள். நபிகளாரின் பேரர் அலியின் மகனார், பாத்திமாவின் வாரிசு இமாம் ஹ{ஸைனின் போராட்டம் எவ்வளவு உயிரோட்டமுள்ளது. ஏந்த போராட்டம் இமாம் ஹ{ஸைனின் போராட்டத்திற்கு உயரோட்டம் கொடுக்க வில்லையோ நிச்சயமாக அந்த போராட்டம் தோல்வியையே சந்திக்கும். ஏந்த போராட்டம் கர்பலாவுக்கு உயிரோட்டம் கொடுக்கிறதோ அது புhர்வையில் தோற்றாலும் அதன் வளர்ச்சி நாளை வெற்றி நிச்சயம். இவைகளுக்கு நல்லதொரு உதராமாக ஈரானின் புரட்சி ,ஹிஸ்புல்லாக்களின் வெற்றியை குறிப்பிடலாம். சிந்தித்தால் புரியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக